இரண்டுமே தீவிரவாதம் தான் – மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வெளிப்படுத்தும் சிந்தனைகள் ..

.

.

இரண்டு நாட்களாக முனைந்து ஒரு இடுகை எழுதிக்
கொண்டிருந்தேன். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக
மோதல்களும், அதன் விளைவுகளும் குறித்து. அந்த இடுகை
இன்னமும் முடிவடையவில்லை.

அதற்குள்ளாக இன்று காலை மலையாள நடிகர் மோகன்லால்
அவர்கள் தனது முகனூலில் வெளியிட்டிருக்கும் சில
கருத்துக்கள், நான் எழுதிக்கொண்டிருக்கும் இடுகையை விட
சிறப்பாக அமைந்திருப்பதை கண்டேன்.

mohanlal facebook

அந்த கருத்துக்களை இந்த இடுகையின் மூலம் வெளியிடுகிறேன்.
அவரது அரசியல் ஈடுபாடுகள் எப்படி வேண்டுமானாலும்
இருக்கலாம். ஆனால், இந்த விஷயத்தில் மோகன்லால்
அவர்களின் கருத்துக்களை நான் நூற்றுக்கு நூறு வரவேற்கிறேன்..
ஏற்கிறேன்.

நமது நண்பர்களின் சிந்தனைக்காக மோகன்லால் மலையாளத்தில் எழுதியிருப்பவற்றின் தமிழ்ச்சுருக்கம் கீழே –

( இந்த இடுகையில் வெளியிடும் கருத்துக்களை தனது
சொந்தக்குரலில் பதிவும் செய்திருக்கிறார் மோகன்லால்.
அதைக் கேட்க, காண விரும்புவோர் கீழ்க்காணும் தளத்திற்கு
செல்லலாம்.

http://www.thecompleteactor.com/
articles2/2016/02/respect-freedom-
respect-its-price-too/ )

இனி மோகன்லால் –

சமீபத்தில், ஜம்மு – காஷ்மீர் மாநிலம் சியாச்சினில்,
பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த
ராணுவ வீரர், ‘லான்ஸ் நாயக்’ சுதீஷின்,
நான்கு மாத குழந்தைக்கு, அவரது தந்தையின் சடலத்தை, குடும்பத்தினர்

காட்டும் புகைப்படம், பத்திரிகை ஒன்றில்
வெளியாகி இருந்ததை பார்க்க நேர்ந்தது. அந்த பிஞ்சு முகத்தை,
ஒரு முறை கூட பார்க்காமலேயே, சுதீஷ் கண் மூடியது
பெரும் சோகம்.

அதே பத்திரிகையில், நேரு பல்கலையில், ‘எது தேசபக்தி’
என்ற பெயரில், இருதரப்புக்கு இடையே நடந்து வரும்
மோதல்களையும் படித்தேன்.
சட்டசபையில் நடக்கும் மோதல்கள், மதுக்கடை பார்களில்
நடக்கும் ஊழல் போன்ற இன்னபிற செய்திகளையும் படிக்க
நேர்ந்த போது, வருத்தமும், அவமானமும் மேலிட்டது.

எல்லையில், நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள
ராணுவ வீரர்கள், எதிரிகளின் தாக்குதலில் மடியும் போது,
நாம் சுதந்திரம் பற்றியும், தேசபக்தி பற்றி விவாதம் நடத்துவது
எவ்வளவு மடத்தனமானது. அதுவும், உறை பனியில் சிக்கி
உயிர் துறக்கும் பாதுகாப்பு படையினரை பரிகாசம் செய்தபடி, சொகுசு அறையில் அமர்ந்து, தேசபக்தி பற்றி
பேசுவது எவ்வளவு போலித்தனமானது.


குளிர் அடிக்கிறது என்று உணர்ந்ததுமே,
இழுத்து போர்த்திக் கொள்கிறோம்; வெதுவெதுப்பான நீரில் பல்
துலக்குகிறோம்; ஆவி பறக்கும் வெந்நீரில் குளிக்கிறோம்.

இப்படி எல்லா சுகங்களையும் அனுபவித்தபடி, பல்கலைகளுக்கும்,
அலுவலகங்களுக்கும் சென்று, அங்கு
தேசபக்தி பற்றி கேள்வி எழுப்பவும், பாதுகாப்பு படையினரை
விமர்சிக்கவும் செய்கிறோம்.

ராணுவ வீரர்கள், தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை
அபாயகரமான இடங்களில் கழித்தபடி, குடும்பத்தினரையும்,
குழந்தைகளையும் நினைத்தபடி, வேதனையுடன் காலத்தை
கழித்து வருகின்றனர். தன் குழந்தையின் முகத்தை கூட
பார்க்காமல், உயிரை விட்ட முப்படையினர் ஏராளம்.

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கிய இந்திய வீரர்களை மீட்க
பாகிஸ்தானும் முன்வந்தது பற்றி படித்தேன். ஆனால், நாம் அந்த
அளவுக்கு, அவர்களைப் பற்றி கவலைப்பட்டு இருப்போமா?


நாம் வாழும் மண், பருகும் நீர், சுவாசிக்கும் காற்று,
செத்த பிறகு புதையூட்டப்படும் இடம், இவை எல்லாமே
நம் தாய்நாடு தான். வயதான தாய், தகப்பனை, பிள்ளைகள்
எப்படி கைவிட முடியாதோ, அதுபோல, தாய் நாடான இந்தியாவை நாம் தவிக்கவிட முடியாது.

நேரு பல்கலையில், தற்போது நடந்து வரும் கருத்து மோதலில்,
மூக்கை நுழைக்க விருப்பம் இல்லை. ஆனால், சில
மாணவர்களின் மனநிலையை பார்த்தால் மிக வருத்தமாக உள்ளது.
தேசம் என்றால் என்ன; தேசபக்தி என்றால் என்ன;
நம் கலாசாரத்தின் சிறப்பு ஆகியவை பற்றி, அவர்களுக்கு,
அவர்களின் பெற்றோர் எடுத்துரைக்க வேண்டியது அவசியம்.

நாட்டில், கருத்து மோதல்கள், விவாதங்கள் இருக்க வேண்டியது
அவசியம் தான். ஆனால், அவை எல்லாம், ஜனநாயகத்துக்கு
வலுவூட்டுவதாக இருக்க வேண்டும்.

நம் முன்னோர்கள் போராடி பெற்ற சுதந்திரத்துக்கு வலுவூட்டாத,
எந்த ஒரு விவாதமும் அர்த்தமற்றது. அது, தேசத்துக்கு
அவமானத்தை ஏற்படுத்துவதாகும்.

வன்முறையில் ஈடுபடுவோரின் பாதுகாப்புக்கு
கவலைப்படுவதை விட்டு, தேசத்தைப் பற்றி கவலைப்படத் துவங்குவோம்.

——————————————————————-

நண்பர்களுக்கு முக்கியமான ஒரு வேண்டுகோள் –

நான் புதிதாக இடுகைகள் எழுதும்போதெல்லாம்,
உடனடியாக தமிழ்மணத்தில் –
http://tamilmanam.net/
பதிவேற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கிறேன்.

எனவே, நிறைய நண்பர்கள்
இந்த வலைத்தளத்திற்கு

( https://vimarisanam.wordpress.com/ )

நேரடியாக வந்தாலும், பலர் தமிழ்மணத்தில்
என் இடுகைகள் புதிதாக வருகின்றதா என்று
பார்த்துக் கொண்டு பின் இங்கு வரும் வழக்கத்தை
மேற்கொண்டிருக்கிறார்கள்.

அண்மைக்காலமாக, தமிழ்மணம் வலைத்தளத்தில்
சில தொழில் நுட்பக்கோளாறுகள் காரணமாக
இடுகைகள் உடனுக்குடன் வெளிவருவதில் சிக்கல்கள்
ஏற்படுகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு
காத்திருக்கும் இடுகைகள் அனைத்தும் ஒரே சமயத்தில்
( அநேகமாக – நடு இரவில் ) வெளிவருகின்றன.

இந்த தளத்தை சுடச்சுட பார்க்கவும், உடனடியாக
பின்னூட்டங்களை பதிவு செய்யவும் / பார்க்கவும்
விரும்பும் நண்பர்களுக்கு பதிவுகள் வெளிவருவது
தெரிவதில்லை அல்லது மிகவும் தாமதமாக தெரிகிறது.

தமிழ்மணம் வலைத்தளத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப
கோளாறை அதன் நிர்வாகிகள் விரைவில் சரி செய்து
விடுவார்கள் என்று நம்புகிறேன்.

அதே சமயம், உடனுக்குடன் இடுகைகள் அனைத்து
நண்பர்களையும் சென்றடைய வேண்டும் என்கிற
விருப்பம் நிறைவேற வேண்டுமானால் நண்பர்கள்
ஒரு உதவி செய்ய வேண்டும். இடுகையின் வலது
ஓரமாக கீழே காணப்படும் follow வை click செய்து
உங்களை பதிவு செய்து கொள்ளுமாறு
கேட்டுக் கொள்கிறேன்.

(நிறைய நண்பர்கள் ஏற்கெனவே இந்த ஏற்பாட்டை
செய்து கொண்டிருக்கிறார்கள்…)

இது உங்களுக்கும், எனக்கும் – ஒரே சமயத்தில்
உதவியாக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பை
வேண்டுகிறேன்.

-நன்றி, வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to இரண்டுமே தீவிரவாதம் தான் – மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வெளிப்படுத்தும் சிந்தனைகள் ..

 1. B.Venkatasubramanian சொல்கிறார்:

  கே.எம்.ஜி,

  மனசாட்சியுள்ள எவருமே இந்த விதத்தில் தான்
  re-act செய்ய முடியும். மோகன்லால் திரையுலக
  நட்சத்திரம் என்பதைத் தாண்டி தமக்குள்ள
  சமூகப் பொறுப்பினை, இந்த கருத்தை வெளிப்படையாக
  சொல்வதன் மூலம் நிறைவேற்றி இருக்கிறார்.
  இவரது கருத்துக்களை ஓங்கிச் சொல்ல முற்பட்ட
  உங்களது முயற்சியை நான் வரவேற்கிறேன்.

 2. புது வசந்தம் சொல்கிறார்:

  எல்லை வீரர்களுக்கு நடந்த விபத்து குறித்து வழக்கம் போல ஒரு வாரம் பேசி விட்டு மறுவாரம் அவரவர் வேலையை பார்க்க போய்விடுவர். இன்று பல்கலையில் நடப்பதும் அது போலத்தான். தீவரவாதத்திற்கு எதிரான போர் என்று அமெரிக்காவின் புஷ் சொன்னது போல “எங்களோடு இருந்தால் நல்லவர்கள், இல்லையேல் தீவிரவாதி” என்பது போல அரசுக்கும் இரண்டு நிலைப்பாடு உள்ளது.

  மாணவர் தலைவருக்கு எதிரான வீடியோ ஆதாரம் இப்போது பல்லை காட்டுகிறது. இப்போது எல்லாவற்றிற்கும் photoshop/video editing மிக தீவிரமாக பயன்படுகிறது.

  அந்த மாணவர்களுக்கு ஆதரவாக அவர்களது ஆசிரியர்களே களத்தில் உள்ளனர். உண்மை இன்னமும் முழுதும் வெளி வரவில்லை.

  http://tamil.thehindu.com/opinion/editorial/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE/article8270643.ece?homepage=true&theme=true

  இவ்வளவு கீழ்த்தரமான எண்ணங்களை கொண்ட நம் பாராளுமன்ற உறுப்பினர், நம் இந்திய மாணவர்களை இதை விட மோசமாக பேச முடியாது.
  http://tamil.oneindia.com/news/india/students-dance-nude-jnu-use-3-000-condoms-everyday-alleges-247518.html#slide188780

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப புதுவசந்தம் அன்பு,

   தயவுசெய்து எனது அடுத்த இடுகை வரையில்
   காத்திருக்க வேண்டுகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. gopalasamy சொல்கிறார்:

  JNU: Jihadi Naxal University. We need not support bad people, even though they are students.

 4. gopalasamy சொல்கிறார்:

  Dear Sri KMji please enlighten us in the following. In JNU maximum how many years allowed to get PhD ? What is the mode of admission? Can anybody join without left parties concurrence? Is it almost govt aided terror camp? Injecting left ideology is to be welcomed? Why people condemning saffronization not condemning Injecting left ideology?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் கோபாலசாமி,

   மன்னிக்கவும்.
   நான் இரண்டு extreme- களையுமே எதிர்க்கிறேன்.
   இது ஒரு விதத்தில் உணர்வுகளைத் தூண்டுகிறது….
   அது இன்னொரு விதத்தில் உணர்வுகளைத் தூண்டுகிறது.

   இதில் முழுக்க முழுக்க அரசியல் தான் கோலோச்சுகிறது.
   மாணவர்கள் வெறும் பகடைக்காய்களே.
   சுயநல அரசியல்வாதிகளால் –
   பிஞ்சிலேயே பழுக்க வைக்கப்பட்டு,
   வெம்பிப் போகிறார்கள்.

   அத்தனை அரசியல்வாதிகளையும் கூண்டோடு
   வெளியேற்றினால் தான் பல்கலைக்கழகம் உருப்படும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • LVISS சொல்கிறார்:

    Mr K M you are right –There is an entrenched ideology that does not want to yield space to the other ideology — The parties are fighting thro their student wings — I dont know how it is possible to remove all politically connected persons — In the pre television days the student protests did not get publicised to the extent that is being done now —

 5. LVISS சொல்கிறார்:

  Mohanlal ,if I am not wrong is holding the rank of honorary of Lt Col in the Territorial Army. in the army
  What is happening in JNU is deplorable – An attempt is being made to dilute the seriousness by diverting the issue as nationalism v/s – — The students are being made to look like great leaders —Some leaders want to have it both ways –They say” we dont support the statements made by the students but——-” and they go into buts and ifs to support the action of the students calling it freedom of expression –The Jadavpur Univ students have gone further and shouted more dangerous slogans —
  The war veterans also took out a march condemning the slogans raised in the campus —
  We are breathing free because of our jawans guarding the borders —Can you imagine an demonstration going on near the place where the army is fighting with the terrorists in Kashmir —

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   இந்த விஷயத்தில் நான் சொல்ல வருவது –

   இது குறித்து என் கருத்துக்களை
   ” JNU குறித்து திரு.மோகன்லால் கருத்து – தொடர்ச்சி….”

   என்கிற தலைப்பில் தனியே ஒரு இடுகையாகவே பதிந்து விட்டேன்.

   எனவே, தொடர்ந்து கருத்து சொல்லும் நண்பர்கள்
   அந்த இடுகையிலேயே தங்கள் கருத்துக்களை
   பதியும்படி கேட்டுக் கொள்கிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. suren சொல்கிறார்:

  ஒருவேளை திரு மோகன்லாலுக்கு வேற்றுமாநில வீரர் இறந்திருந்தால் இந்த அளவுக்கு அவருக்கு மனவருத்தம் வந்திருக்காது என எண்ணுகிறேன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே,

   தயவுசெய்து இந்த விஷயத்தை கொச்சைப்படுத்தாதீர்கள்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.