திமுக விளம்பரம் – இது நான் எழுதியது அல்ல…!!!

.

.

விளம்பரத்துக்கு ரூ.40 கோடி செலவு ?:
‘உடன்பிறப்பே மாலையாக வராதே…
பணமாக வா…’ அழைப்பு வரும்!

தமிழக அரசியலை பொறுத்தவரை, இரு பெரும் திராவிடக்
கட்சிகளும் சகட்டு மேனிக்கு திட்டிக் கொள்ளும் தேர்தல்
வரப் போகிறது. ஒருவரை ஒருவர் திட்டும் வேலையை
முதலில் தொடங்கி வைத்தது திமுகதான்.

அனைத்து தமிழ் பத்திரிகைகளிலும் முதல்வர்
ஜெயலலிலதாவை கிண்டலடித்து ‘என்னம்மா இப்படி
பண்றீங்களேமா?’ என்ற வார்த்தையை பயன்படுத்தி திமுக
நேற்று ஒரு விளம்பரம் வெளியிட்டது. அதற்கே ஒரே நாளில்
திமுகவை வறுத்தெடுக்கும் வகையில் நெட்டிசன்கள் திமுகவை

கிண்டலடித்து விதம் விதமாக மீம்ஸ்களை
தெறிக்க விட்டு விட்டனர்.

அதற்கெல்லாம் அசராத திமுக இன்றும் அனைத்து
பத்திரிகைகளிலும் மீண்டும் அதே போன்று ஒரு விளம்பரத்தை

வெளியிட்டுள்ளது.
பத்திரிகை இன்டஸ்ட்ரியில் ஒரு நாள் விளம்பரத்துக்கே
18 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இரு நாட்கள் விளம்பர கணக்கையும் சேர்த்தால்
ரூ.40 கோடிக்கும் மேல் செலவாகியிருக்கும் எனவும்
கூறப்படுகிறது.

இந்த தேர்தலை பொறுத்த வரை, திமுக எப்பாடு பட்டாவது
ஆட்சியை பிடித்து விட வேண்டுமென்ற எண்ணத்தில்தான் இப்போதே பணத்தை வாரி இறைக்கத் தொடங்கியிருக்கிறதாம்.

வழக்கமாக திமுக அதிமுகவினர்’ நாங்கள் இதை செய்வோம்
அதை செய்வோம் ‘என்று கூறி விளம்பரம் செய்வார்கள்.
இப்போது முதன் முறையாக -ஒருவரை ஒருவர் மீது சேற்றை வாரி இறைக்கும் வேலையை
கச்சிதமாக செய்யத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

இந்த விளம்பரங்களுக்கு பின்னால் ஸ்டாலினின் மருமகன்
சபரீசன் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தாத்தாவை முதல்வராக்குவதை விட மாமனாரை
முதல்வராக்கி அழகு பார்க்க வேண்டுமென்ற உத்வேகத்தில் அவர்
கடுமையாக பணியாற்றிக் கொண்டிருக்கிறாராம்.
அவரது ஆலோசனையிலும் அறிவுரையின் பேரிலும்தான்
இது போன்ற கிரியேட்டிவிட்டியாக விளம்பரங்கள்
வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கிறதாம்.
இனியும் வெளியிடப்படுமாம்.

ஆனால் திமுக அளித்த இந்த விளம்பரங்கள் எந்த அளவுக்கு
பலனளிக்கும் என்பது தெரியவில்லை. பத்திரிகைகளில்
நேற்று வெளிவந்த விளம்பரங்களுக்கு ஒரே நாளில்
அதிமுக ஐ.டி. விங் பலமடங்கு பதிலடி கொடுத்து விட்டதாக
சொல்லப்படுகிறது.

கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, ராசாத்தி அம்மாள்
மொத்தத்தில் பெரிய குடும்பத்தில் உள்ள யரையும்
விட்டு வைக்காமல் மீம்ஸ்களை அதிமுக ஐ.டி விங்
பறக்க விட்டுக் கொண்டு இருக்கிறது. இன்று வரை அந்த மீம்ஸ்கள்
அடங்கவில்லை. தொடர்ந்து பரவிக் கொண்டு தான் இருக்கின்றன.

சொல்லப் போனால், திமுக கொடுத்த விளம்பரம்
அவர்களுக்கே வினையாகிப் போனது என்றே சொல்ல
வேண்டும்.

திமுகவினருக்கு அதிமுகவின் ஐ.டி. விங் மட்டும் பதிலடி
கொடுக்கவில்லை. திமுக மீது கடும் கோபத்துடன் உள்ள
நெட்டிசன்களும் – அங்க பாத்துருக்கிறீங்களா… இங்க பாத்துருக்கிறீங்களா?னு மீம்ஸ்களை
தட்டி எறிந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

meems - mk

5 வருஷத்துல பாத்திருக்கீங்களா?
விளம்பரத்துக்கு பறந்த மீம்ஸ்கள் தொகுப்பை காண க்ளிக் செய்க…

http://www.vikatan.com/news/
album.php?&a_id=5284

கடந்த மழை வெள்ளத்தின் போது திமுக ஒரு கோடி
நிதியளித்தது. தற்போது பத்திரிகை விளம்பரத்துக்காகவே
ரூ. 40 கோடி ரூபாய் வரை செலவழித்தால் அந்த கட்சியிடம்
எவ்வளவு பணம் கொட்டி கிடக்கும். அத்தனையும் தமிழக மக்களை சுரண்டி சம்பாதித்த பணம்
என்று தேர்தல் நேரத்தில் அதிமுக பிரசாரத்தை
மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாம்.

இப்படி விளம்பரம் கொடுக்கும் கட்சியின் தலைவர்தான்
இன்னும் கொஞ்சம் நாளில்
‘‘உடன் பிறப்பே தேர்தல் நிதி கொண்டு வா…
மாலையாக வராதே பணமாக வா…‘‘
என்றெல்லாம் கூடிய விரைவில் கடிதம் எழுதுவார் என்று
அதிமுகவினர் கிண்டலடிப்பதோடு,

பல கோடி கொட்டிக் கொடுத்து திட்டு வாங்கிய
ஒரே கட்சி திமுகதான்
என்றும் சிரிப்பாய் சிரிக்கின்றனர்.

நன்றி –
http://www.vikatan.com/news/tamilnadu/
59551-dmk-advt-in-dailies-cost-rs-40-crore.art

——————————————————————

பின் குறிப்பு – இது நான் எழுதியது –

நண்பர்களுக்கு முக்கியமான ஒரு வேண்டுகோள் –

நான் புதிதாக இடுகைகள் எழுதும்போதெல்லாம்,
உடனடியாக தமிழ்மணத்தில் –
http://tamilmanam.net/
பதிவேற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கிறேன்.

எனவே, நிறைய நண்பர்கள்
இந்த வலைத்தளத்திற்கு

( https://vimarisanam.wordpress.com/ )

நேரடியாக வந்தாலும், பலர் தமிழ்மணத்தில்
என் இடுகைகள் புதிதாக வருகின்றதா என்று
பார்த்துக் கொண்டு பின் இங்கு வரும் வழக்கத்தை
மேற்கொண்டிருக்கிறார்கள்.

அண்மைக்காலமாக, தமிழ்மணம் வலைத்தளத்தில்
சில தொழில் நுட்பக்கோளாறுகள் காரணமாக
இடுகைகள் உடனுக்குடன் வெளிவருவதில் சிக்கல்கள்
ஏற்படுகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு
காத்திருக்கும் இடுகைகள் அனைத்தும் ஒரே சமயத்தில்
( அநேகமாக – நடு இரவில் ) வெளிவருகின்றன.

இந்த தளத்தை சுடச்சுட பார்க்கவும், உடனடியாக
பின்னூட்டங்களை பதிவு செய்யவும் / பார்க்கவும்
விரும்பும் நண்பர்களுக்கு பதிவுகள் வெளிவருவது
தெரிவதில்லை அல்லது மிகவும் தாமதமாக தெரிகிறது.

தமிழ்மணம் வலைத்தளத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப
கோளாறை அதன் நிர்வாகிகள் விரைவில் சரி செய்து
விடுவார்கள் என்று நம்புகிறேன்.

அதே சமயம், உடனுக்குடன் இடுகைகள் அனைத்து
நண்பர்களையும் சென்றடைய வேண்டும் என்கிற
விருப்பம் நிறைவேற வேண்டுமானால் நண்பர்கள்
ஒரு உதவி செய்ய வேண்டும். இடுகையின் வலது
ஓரமாக கீழே காணப்படும் follow வை click செய்து
உங்களை பதிவு செய்து கொள்ளுமாறு
கேட்டுக் கொள்கிறேன்.

(நிறைய நண்பர்கள் ஏற்கெனவே இந்த ஏற்பாட்டை
செய்து கொண்டிருக்கிறார்கள்…)

இது உங்களுக்கும், எனக்கும் – ஒரே சமயத்தில்
உதவியாக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பை
வேண்டுகிறேன்.

-நன்றி, வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்

பின் குறிப்பு –

தங்கள் சொந்த வலைத்தளங்களில், பல நண்பர்கள்
விமரிசனம் வலைத்தளத்திற்கு link கொடுத்திருக்கிறார்கள்.
இந்த சமயத்தில் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றியை
தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to திமுக விளம்பரம் – இது நான் எழுதியது அல்ல…!!!

 1. Antony சொல்கிறார்:

  //ஒருவரை ஒருவர் திட்டும் வேலையை
  முதலில் தொடங்கி வைத்தது திமுகதான்.//
  மனசாட்சியோட எழுதுங்க ப்ரோ…
  கதை எழுதி வாசிச்சு கருணாநிதியிடம் வாங்கி கட்டிகிட்டது முதல் நடந்திச்சா?
  போஸ்டர் முதல் வந்திச்சா ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப அந்தோனி,

   அவசரமும் ஆத்திரமும் கண்ணை மறைக்குதுங்க ப்ரோ….!
   இடுகை தலைப்பை மொதல்ல பாருங்க ப்ரோ….!
   இந்த இடுகையை எழுதினது நான் இல்லீங்க ப்ரோ…!

   -வாழ்த்துக்கள் ப்ரோ,
   காவிரிமைந்தன்

 2. CHANDRAA சொல்கிறார்:

  WELL
  This is a do or die situation in dmk
  and dmk is very desperate
  Let us enjoy these things tilll election……

 3. மீரா செல்வக்குமார் சொல்கிறார்:

  மிக நல்ல பதிவு…..என்ன செய்ய தமிழ்நாட்டின் சாபக்கேடு …

 4. அரசு சொல்கிறார்:

  எதிர் கட்சியான திமுக வை நீங்கள் தொடர்ந்து உத்வேகத்தோடு விமரிசித்து வருகிறீர்கள். திமுகவை விமரிசித்து செய்திகள், கட்டுரைகள் எந்த பத்திரிக்கையில் வந்தாலும் தேடி எடுத்து பகிர்ந்துகொள்கிறீர்கள். அதில் ஆயிரத்தில் ஒரு பங்காவதுஅ.தி.மு க குறைகளையும் விமர்சிக்கலாமே.

  அம்மா பெயரை பச்சைகுத்திக்கொள்வது, மண்சோறு சாப்பிடுவது,, எதற்கெடுத்தாலும் “அம்மா” பெயரையும் படத்தையும் போட்டுக்கொள்வது, Sticker ஒட்டிக்கொள்வது இவைபோன்றவற்றையெல்லாம் நீங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதன் காரணம் என்னவோ?

  உங்களின் ஒருதலை விமரிசனம் உங்கள் உரிமை. ஆனால் பாவம் பாரதி படத்தை போட்டு அவரையுமா அரசியலில் இழுக்கவேண்டும்? பாரதியின் குறைகள் இணையத்தில் அலசி ஆராயப்படும் இக்காலகட்டத்தில், பாரதி படத்தைப்போட்டுக்கொண்டு ஒரு தலைப்பட்ட விமர்சனங்களை தொடர்ந்து முன்வைப்பது அவர் பெயருக்கு நல்லது என எண்ணுகிறீர்களா?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப அரசு,

   திடீரென்று இங்கு வந்து பாரதியின் மீது
   உங்களுக்கு இருக்கும் அக்கரையை தெரிவிப்பது கண்டு
   வியக்கிறேன். பாரதிக்கு தமிழகத்தில் உரிய இடமும்
   புகழும் கிடைக்காமல் இருப்பதற்கு திமுக வும் ஒரு
   முக்கிய காரணம்.

   திமுகவை விமரிசனம் செய்வது கூட ஒரு விதத்தில்
   பாரதிக்கு செய்யும் தொண்டு என்று தான் நினைக்கிறேன்.

   திமுக இந்த தேர்தலில் மீண்டும் தலையெடுக்க கூடாது –
   இந்த தேர்தலுடன் திமுகவின் செல்வாக்கு அழிந்து,
   அந்த இடத்திற்கு வேறு ஒரு புதிய சக்தி வர வேண்டும்
   என்பது தான் என் விருப்பம். இதை நான் வெளிப்படையாக
   ஏற்கெனவே கூறி இருக்கிறேன். என் விருப்பத்திற்கு ஏற்ப
   தான் இங்கு இடுகைகள் அமையும்.
   இந்த விளக்கம் உங்களுக்கு போதுமானது என்று நினைக்கிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. selvarajan சொல்கிறார்:

  தினமலர் விறுவிறுப்பு — என்கிற தலைப்பில் உள்ள பெட்டி செய்தி : // கட்சி சாராதவர்கள் தி.மு.க., – அ.தி.மு.க., விளம்பரங்களை இணைத்து கீழே மக்கள் என போட்டு ‘எங்களை மாதிரி இளிச்சவாயன எங்கேயாவது பார்த்திருக்கீங்களா?’ ‘உண்மையை பேசுறவங்க தெய்வத்திற்கு சமம்னு சொல்லுவாங்க. இந்த ரெண்டு தெய்வங்களும் மாறி மாறி உண்மையை பேசுறாங்க…’ என பதிவிட்டு உள்ளனர் // — இந்த கட்சிகளின் [ பா.ம.க .வும் இணைந்தது ] விளம்பரங்களை பார்த்து ” நொந்து — நூடுல்ஸான ” பொதுமக்களின் கருத்து …. இதுவும் ” நல்லாத்தான் இருக்கு ” ….. !!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.