திரு.சுரேஷ் பிரபுவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்…..!!!

Suresh prabhu railways

பாஜக அமைச்சரவையில், சில அமைச்சர்களின் செயல்
திறமையில் மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையும், எதிர்பார்ப்பும்
இருக்கிறது. இன்றைய தினம் ரெயில்வே அமைச்சர்
திரு.சுரேஷ் பிரபு அவர்கள் தாக்கல் செய்துள்ள ரெயில்வே
பட்ஜெட் அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக
இருக்கிறது.

முழு பட்ஜெட் விவரங்களும் அடுத்து தனியே
செய்தித்தாள்களிலும், வலைத்தளங்களிலும்
முழு விவரங்களுடன் வெளி வரும்.

இவற்றில் உடனடியாக கண்ணுக்குத் தெரியும் பாராட்டத்தக்க
அம்சங்களாக முக்கியமான சிலவற்றை குறிப்பிடலாம்.

——————————

பயணிகள் கட்டணத்தை தொடவில்லை.

475 ரயில் நிலையங்களில் 17,000 பயோ-மெட்ரிக் கழிவறைகள்.

முன்பதிவில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு.

மூத்த குடிமக்களுக்கான கீழ் படுக்கை எண்ணிக்கை
மேலும் 50 % உயர்த்தப்படுவது …

நீண்ட தூர ரயில்களில், முன்பதிவு செய்யாத
2 முதல் 4 பெட்டிகளை இணைப்பது –

எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் ரயில் பெட்டிகளை
சுத்தப்படுத்தும் வசதி ஏற்படுத்துவது….

தொலை தூர விரைவு தடங்களில் –
சாமான்ய மக்களுக்காக
ரிசர்வ் செய்யப்படாத பெட்டிகளை மட்டும்
கொண்ட புதிய ரெயில்கள்…

முன்பதிவு செய்யாத பெட்டிகளிலும் செல்போன் சார்ஜ்
செய்ய வசதி –

ரயில் பயணிகளின் பொழுது போக்குக்காக பெட்டிகளில்
பண்பலை வானொலி வசதி –

ரயில் நிலையங்களில் தேவையான
பயணிகளுக்கு அருந்த வெந்நீர் –

ரயில் நிலைய ஓய்வறைகளை முன்கூட்டியே
ஆன்லைனிலேயே புக் செய்யும் வசதி –

நடப்பாண்டில் 100 ரயில் நிலையங்களில் வை-ஃபை வசதி

ரயில்வே ஊழியர்களின் திறன் மேம்பாட்டுக்காக ரயில்வே
பல்கலைக்கழகம் –

95 சதவிகித ரயில்கள் சரியான நேரத்தில்
இயக்கப்பட்டு வருவது –

எல்.ஐ.சி. மூலமாக ரெயில்வே துறைக்கு
ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் புதிய
ப்ராஜெக்ட்கள் –

40 ஆயிரம் கோடியில் புதிய ரயில் பெட்டித் தயாரிக்கும்
தொழிற்சாலை அமைக்கப்படும்-

கூட்டம் நிறைந்த தடங்களில் அதிக இருக்கை வசதிகளுடன்
இரட்டை அடுக்கு ( டபுள் டக்கர் ) ரெயில்கள்…

மாநில அரசுகளுடன் இணைந்து புதிய தடங்கள்,
திட்டங்கள்….

———————————————

அமைச்சரின் சிறப்பான செயல்பாடுகளுக்கு அடிப்படையாக
இரண்டு முக்கியமான விஷயங்களை சொல்லலாம்…

– வலைத்தளங்களின் மூலம் சாதாரண பொது மக்களை
தொடர்பு கொண்டு, அவர்களின் தேவையை அறிந்து,
முனைப்புடன் அவற்றை செயல்படுத்த முயன்றது…

– நவீன தொழில்நுட்பங்களை, ரெயில்வே துறையில்
கொண்டு வரவேண்டும் என்பதில் அவருக்கு உள்ள ஈடுபாடு.

– திரு சுரேஷ் பிரபுவை மட்டும் பாராட்டி விட்டு போவது,
எனது மனசாட்சிக்கு சரியாகத் தெரியவில்லை.

அவருக்கு முழு சுதந்திரம் அளித்து,
தனிப்பட்ட முறையில்
சிறப்பாகச் செயல்பட அனுமதித்த
பிரதமர் மோடிஜி அவர்களையும் சேர்த்து பாராட்டுவதன்
மூலமே இது நிறைவடையும் என்று நினைக்கிறேன்.

பாராட்டுக்கள் மோடிஜி… 😀 😀

பாராட்டுக்கள் சுரேஷ் பிரபுஜி…

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to திரு.சுரேஷ் பிரபுவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்…..!!!

 1. today.and.me சொல்கிறார்:

  • LVISS சொல்கிறார்:

   Mr Today.and.me The video does not play in my browser-Why is this video in this blog about railways-

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்ப எல்விஸ்,

    பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர்
    திருமதி ஸ்மிருதி இரானி அவர்கள், தற்போது
    பல்கலைக்கழகங்களில் நிலவும் பிரச்சினைகளை
    பற்றி பேசும் நிகழ்வு இந்த வீடியோ.

    இது இந்த தளத்தில் இரண்டு-மூன்று தினங்களுக்கு
    முன்னர் எழுதப்பட்டு, விவாதிக்கப்பட்ட
    ” JNU குறித்து திரு.மோகன்லால் கருத்து – தொடர்ச்சி….”
    இடுகைக்கு தொடர்பு உடையது.

    அங்கு பதிப்பிட்டால், மற்றவர்களின் கவனத்திற்கு
    வராமல் போகக்கூடும் என்கிற காரணத்தால்
    நண்பர் டுடேஅண்ட்மீ அவர்கள் இங்கு பதிவிட்டிருக்கிறார்
    என்று நினைக்கிறேன்.

    ஆங்கிலத்திலும், இந்தியிலுமாக கலந்து நிகழ்த்தப்பட்டுள்ள
    இந்த உரை – இறுதியில் நாம் கூறும் அதே முடிவிற்கு தான்
    வருகிறது.

    “பல்கலைக்கழகங்களிலிருந்து அரசியலை
    ஒதுக்கி வையுங்கள்.”

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 2. LVISS சொல்கிறார்:

  What is of interest to us is that the minister has approved two projects for our state –He is also popular among people because he comes to aid of passengers in distress–I have read a few articles where he took personal interest to help passengers -I am just putting two such news which I came across —

  http://www.newsroompost.com/276108/prabhu-responds-distress-tweet-teaches-bribe-seeker-tte-lesson/

  http://zeenews.india.com/news/india/when-prabhu-himself-jumped-into-action-to-help-hungry-kids_1832046.html

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இந்த வலைத்தளத்தில் –

  நண்பர்கள் பயனுள்ள முறையில், தங்கள் கருத்துக்களை
  தெரிவிக்கவும், பண்பான முறையில் விவாதங்கள்
  நிகழ்த்தவும் வசதி செய்ய வேண்டும் என்பது என் அவா.

  சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி, தங்களுக்கு
  பிடிக்காத, எதிரான கருத்துக்கள் இங்கு இடம் பெறுவதை
  விரும்பாமல், வேண்டுமென்றே தடங்கல்களை
  ஏற்படுத்துவதிலும், விதண்டாவாதங்களில் ஈடுபடுவதுமாக
  சில நபர்கள் இங்கு உருவெடுத்திருக்கிறார்கள்.
  ஓரளவிற்கு நான் அவர்களை அனுமதித்தால் – எல்லை
  மீறுகிறார்கள்.

  மீண்டும் மீண்டும் பலமுறை கூறி விட்டேன்.
  இது நான் உருவாக்கியுள்ள தளம். இந்த தளத்தை எந்த
  முறையில் கொண்டு செல்ல வேண்டும் என்பது
  என் விருப்பம். சில கட்சிக்காரர்கள் விரும்புகிறார்கள்
  அல்லது விரும்பவில்லை என்பதற்காக நான் எனது
  செயல்பாட்டை மாற்றிக் கொள்ள முடியாது.

  இனி இந்த தளத்தில், வீண் வம்பு வளர்ப்பதற்காகவும்,
  விதண்டாவாதங்களில் ஈடுபடுவதற்காகவும் வரும்
  நபர்களின் பின்னூட்டங்களை அனுமதிப்பதாக இல்லை.
  அவர்கள் எவ்வளவு முறை, எந்தெந்த பெயர்களுடன்
  வந்தாலும் – அவை நீக்கப்படும்.

  அவர்களுக்கு ஒரு யோசனை. இங்கு வந்து
  தங்கள் நேரத்தை வீணடிப்பதற்கு பதிலாக, அவர்கள்
  தங்களுக்கு சொந்தமாக வலைத்தளங்களை ஒன்றுக்கு
  பத்தாக உருவாக்கி, தங்கள் விருப்பம் போல் அவற்றை
  வளர்த்துக் கொள்ளலாம்.

  எனது அன்பிற்குரிய விமரிசனம் தள நண்பர்களுக்கு,

  இடையிடையில் இதுபோல் ஏற்படும் தடங்கல்கள்
  சிலரால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்படுகின்றன.
  நம்மால் இயன்ற வரை அவற்றை தவிர்க்க
  முயற்சிப்போம். நண்பர்கள் ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • Kamal before leaving சொல்கிறார்:

   Let it be my last comment in this blog. But be a Man to answer this.
   //பண்பான முறையில் விவாதங்கள்
   நிகழ்த்தவும் வசதி செய்ய வேண்டும் என்பது என் அவா//
   What do you mean by ‘விவாதங்கள்’?
   Does not it mean different angles of opinions?
   What are the comments that were not comply with’ பண்பான’ in your previous post?

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    கமல்…….

    நீங்கள் வாந்தி எடுத்ததில் இரண்டை மட்டும் கீழே
    தந்திருக்கிறேன். அதுவும் உங்களுக்காக அல்ல –
    உங்கள் ” தரத்தை ” இங்குள்ள மற்ற நண்பர்கள்
    புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக…

    ” Intha vayasila intha aalukku ethukku intha
    soranai kedda pulappu? Sinna vayasula
    “Amma padam” parthu valanthirupparo? ”

    ” Unmayave unkalukku suranai irukka?
    Ethukku intha kevalam kedda jalra pulaippu?”

    ( இவற்றை இல்லையென்று நீங்கள் மறுக்க முடியாது –
    உங்கள் மெயில்களை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் )

    – இதற்கு மேலும் உங்களை இந்த தளத்தில் பார்க்க,
    நான் மட்டுமல்ல, என் நண்பர்கள் யாருமே விரும்ப
    மாட்டார்கள்.

    go away and never show your
    face again here.

    -காவிரிமைந்தன்

  • Sharron சொல்கிறார்:

   Very good decision sir. Recently I happened to go to oneindia tamil news and the comments were so disgusting.

 4. selvarajan சொல்கிறார்:

  ” மானமிகு … ? ” சமூக நீதி காக்கும் செயலா .? பகுத்தறிவு மறைந்து — பக்தி பரவசத்தில் மூழ்கிய கலைஞர் அவர்களுக்குமீண்டும் ஆட்சி கிடைக்க நன்றிகடனா .? இந்த செய்தி :–http://www.dinamalar.com/news_detail.asp?id=1465440…. !!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.