திரு.சுப்ரமணியன் சுவாமியும் – மத தீவிரவாதமும் …!

.

.

யார் தேசத்துரோகி ? நம் கண்களுக்கு இருவர்
புலப்படுகிறார்கள்…..!!! –
– என்கிற தலைப்பில் நேற்று ( பிப்ரவரி 26, 2016 )
எழுதியிருந்த இடுகைக்கு நண்பர் ஒருவர் சில சந்தேகங்களை
எழுப்பி இருந்தார்.

அவருக்கு விளக்கமாக ஒரு பதில் பின்னூட்டம் எழுதினேன்.
அதையொட்டி மற்றொரு நண்பர் அந்த விளக்கத்தையே ஒரு
தனி இடுகையாகப் போடுங்களேன் என்று ஆலோசனை
கூறி இருக்கிறார்.

நான் எழுதி இருந்த பின்னூட்டத்தை திரும்பத் திரும்ப
படித்துப் பார்த்தேன். முன் தயாரிப்பு எதுவும் இன்றி,
நேரடியாக கணிணியில் அமர்ந்து மனதில் தோன்றியதை
அப்படியே தட்டச்சு செய்த
பதில் அது. ஓரளவு நன்றாக இருப்பதாகவே தோன்றுகிறது.
இந்த வலைத்தள நண்பர்கள் அனைவரின் பார்வைக்கும்
அது செல்வது நல்லது என்றே எனக்கும் தோன்றியது.

படித்தால் – அதில் கூறப்பட்டிருக்கும் நிலையை நமது
நண்பர்கள் நிச்சயம் ஏற்பார்கள் என்றே தோன்றுகிறது.

நண்பர்களின் மூலம் மற்றவர்களுக்கும், சமுதாய
ஒற்றுமைக்கு உதவக்கூடிய இந்த சிந்தனை
பரவட்டுமே…. இதைப் படிக்கும் நண்பர்கள் தயவுசெய்து
இதை தங்கள் வலைத்தளங்கள் / முகநூல் பக்கங்கள்
மூலம் அதிக அளவு நண்பர்களை சென்று சேர உதவிட
வேண்டுகிறேன்…..

——————————————————-

god-3

 

நண்ப கோபாலசாமி,
நான் எந்த சூழ்நிலையில் இந்த இடுகையை
எழுதி இருக்கிறேன் என்பதை நீங்கள் கருத்தில்
கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

பரஸ்பர துவேஷம், சந்தேகம், விரோதம், போட்டி,
வன்முறை, பலப்பிரயோகம் –
ஆகியவற்றை முன்வைப்பதால், சமுதாயத்தில்
எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அமைதி
வராது. ( உதாரணம் – ஈராக்-அமெரிக்கா …. )

ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைப்பது,
மற்றவரின் பயத்தையும், சந்தேகத்தையும்,
பாதுகாப்பின்மை உணர்வையும் நீக்குவது
நல்லெண்ணங்களை போற்றிப் பாதுகாப்பது,
ஒருவருக்கொருவர் உதவுவது ஆகியவற்றின் மூலமே
நீடித்த அமைதியையும், நிரந்தர சந்தோஷத்தையும்
அனைவரும் பெற முடியும்.

நீங்கள் நினைப்பது போல், ஆயுத பலத்தாலும், அரசியல்
வெற்றிகளாலும் இந்து மதம் தழைக்கவில்லை.

அன்பு, கருணை, இரக்கம், தியாகம் –
தன்னலமற்ற தொண்டு,
போன்றவற்றால் உயரிய பண்புகளை இந்து
சமுதாயத்தில் விளைத்த சங்கரர் உள்ளிட்ட புராதன
காலத்து சந்நியாசிகளும், ராமகிருஷ்ணர், விவேகாநந்தர்,
அரவிந்தர், ரமண மகரிஷி, சின்மயானந்தர் போன்ற
அண்மைய காலத்திய துறவிகளும் தான் நமது இன்றைய
உன்னதத்திற்கு காரணம்.

god-1

அவர்களால், போற்றி வளர்க்கப்பட்ட, நமது
மேம்பட்ட பண்பாடு, சு.சுவாமி போன்ற
போலி ஆன்மிகவாதிகளால் நாசமாகி விடக்கூடாதே என்கிற
கவலையில் எழுதப்பட்டது தான் அந்த இடுகை.

என்னுடைய நோக்கில் – இந்து மத வளர்ப்பு என்கிற
விஷயத்தில் சு.சுவாமிக்கும், நித்யானந்தாவுக்கும் அதிக
வித்தியாசமில்லை. இரண்டுமே போலிகள். ஒருவருக்கு
அரசியல்-அதிகாரம் குறிக்கோள். இன்னொருவருக்கு
போலி-புகழ், பணம்,வசதிகள் – குறிக்கோள்.

சு.சு. உண்மையிலேயே இந்து மதத்தில் அவ்வளவு
தீவிர பற்று கொண்டிருப்பவராக இருந்தால் –
ஒரு இந்து அல்லாதவரை எப்படி
திருமணம் செய்து கொண்டார்…?
இந்து அல்லாத ஒருவருக்கு எப்படி தன் மகளை
திருமணம் செய்து கொடுத்தார்…?
அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருக்கையில் –
அவர் ஆட்சியைக் கவிழ்த்து – அதுவரை இத்தாலிக்காரர்
என்று கூறி வந்த திருமதி சோனியாவை எப்படி
பிரதமர் ஆக்கத் துணிந்தார்…?

மனசாட்சியே இல்லாத, ஒரு கடைந்தெடுத்த சுயநலவாதி…
unfortunately, மிகச்சிறந்த மூளைக்கு சொந்தக்காரராக
இருக்கிறார்…..
அதன் மூலம் படித்த இளைஞர்களையும், மதப்பற்று உள்ள
நடுத்தர மக்களையும் தன் பேச்சாற்றலால் கவர்கிறார்.

அத்தனையும் அரசியல் நாடகங்கள்….
சந்தர்ப்பவாதங்கள்… நீங்களே பார்க்கலாம் –
நாளை, இவருக்கு ஆதாயம் ஏற்படும் என்றால் –
பிரதமரையும், பாஜகவையும் கூட கழட்டிவிட தயங்க
மாட்டார்.

உலகில் இறைவன் ஒருவரே இருக்க முடியும்
என்பதை ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.
ஒவ்வொரு நாட்டிற்கு
ஒவ்வொரு பிரதமர், ஜனாதிபதி – போல
ஒவ்வொரு மதத்திற்கென்றும் தனித்தனியே
ஒரு இறைவன் இருக்க முடியாது.

 

அந்த ஒரே இறைவன் அனைத்து சக்திகளையும் உடையவன் –
எந்த பெயர் சொல்லி அழைத்தாலும் அவனுக்கு புரியும்….
எந்த மொழியில் அழைத்தாலும் அவனுக்கு புரியும்….
அவரவர் விரும்பும் பெயரில் அவரவர் அழைக்கிறார்கள்…
அவரவருக்கு தெரிந்த மொழியில் – அழைக்கிறார்கள்.
அவரவர் விரும்பும் விதத்தில் கொண்டாடுகிறார்கள்.
தாராளமாகச் செய்யட்டுமே…!

நமக்குள் இதில் ஏன் விரோதம் இருக்க வேண்டும்.
எல்லாரும் அவரவர் வழியில் செல்லலாமே ..!
இறுதியில் சேரப்போவது ஒரே இடத்தை தானே….?

-புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

( ஒரு வேளை மீண்டும் வாதிட விரும்பினால் –
தயவுசெய்து வேண்டாம் என்று கேட்டுக் கொள்வேன்.
இந்த தளத்தை மத நல்லிணக்கத்திற்கு மட்டுமே
பயன்படுத்த விரும்புகிறேன்….
விரோதத்தை வளர்க்க அல்ல…)

.

-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்

 

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to திரு.சுப்ரமணியன் சுவாமியும் – மத தீவிரவாதமும் …!

 1. gopalasamy சொல்கிறார்:

  நியாயம், உண்மை, நடுநிலைமை இவை மூன்றும் வெவ்வேறு தளத்தில் இயங்குபவையோ என்று எனக்கு தோன்றுகிறது. விவாதம் செய்வதினால் என்ன பயன் ? எனக்கு பதில் சொல்ல ஒரு பதிவு வெளியிட்டதற்கு நன்றி .

 2. gopalasamy சொல்கிறார்:

  Sorry to come again. All political parties did not react to P.C’s statement. BJP also did not raise their voice much. All famous five English channels kept “distance” like congress party did. Why there was no reaction? Did People think, parliament attack is like a fire in Australian forest?

  • Jayakumar சொல்கிறார்:

   What is the connection between Pariament attack and JNUSU president? He was in his shorts and attending school when Parliament was attacked. As like the wolf in Aesops fables BJP is following Mccarthysim “If you do not support us you are country’s enemey”.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.