திரு.விஜய்காந்த்தை வழிக்கு கொண்டு வர மிரட்ட ஆரம்பித்தது பாஜக….!!!

sarat and javdekar

தன்னிடம் இருக்கும் 7-8 % ஓட்டு வங்கியை வைத்துக்கொண்டு
தமிழகத்தில் எல்லா கூட்டணிகளுக்கும் ஆசை காட்டி,
தனது டிமாண்டை செயற்கையாக ஏற்றிக் கொண்டே போன
விஜய்காந்த்தை அடக்கி ஒரு முடிவுக்கு கொண்டு வர
பாஜக டெல்லி தலைமை தீர்மானித்து விட்டதாக தெரிகிறது.

அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய திரு.சரத்குமார்
அடுத்து போக விரும்பிய இயற்கையான அணி திமுக கூட்டணி.
அதற்காக திமுக தலைமையுடன் பேச்சு வார்த்தைகளும்
நடத்தி இருக்கிறார்.

ஆனால், தான் இருக்கும் கூட்டணியில், சரத்குமார் இருப்பதை
விஜய்காந்த் விரும்ப மாட்டார் என்பதால், திமுக தலைமை
சரத்குமாருக்கு உடனே சம்மதம் தெரிவிக்காமல், விஜய்காந்த்
விஷயம் முடிவிற்கு வந்த பிறகு தீர்மானிக்கலாம் என்று
காத்திருப்பில் வைத்திருந்தது.

ஏற்கெனவே, சரத்குமாரிடமிருந்து பிரிந்து போன ஒரு குழு,
பாஜக வில் சேர்ந்து விட்டதால், பாஜக வில் சேர்வது குறித்து
சரத்குமார் ஆர்வம் காட்டவில்லை.

ஆனால், தமிழக பாஜக தேர்தல் கூட்டணியை தீர்மானிக்க
பாஜக தலைமையால் நியமிக்கப்பட்டுள்ள திரு. பிரகாஷ்
ஜவடேகர் கொஞ்சம் வித்தியாசமான மனிதர்.

தமிழகத்தில் பாஜக கூட்டணியை உறுதி செய்ய முடியாமல்
திணறுவது, விஜய்காந்த்தின் இழுத்தடிப்பால் தான் என்பதால்
விஜய்காந்தை வழிக்கு கொண்டு வர அவர் கையில் எடுத்த
ஆயுதம் சரத்குமாருக்கு அழைப்பு.

யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்றிரவு பத்து மணிக்கு
மேல் சரத்குமாரின் வீட்டிற்கு சென்று அவரை பாஜக
அணியில் சேரும்படி ஜவடேகர் அழைத்ததும், எதிர்பார்க்காமல்
தனக்கு கிடைத்த மரியாதையை கண்ட சரத்குமார் உடனடியாக
சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
சரத்குமாரிடம் – டாக்டர் அன்புமணியிடம் பேசி, அவரையும்
பாஜகவுடன் இணக்கமாக இருக்க உதவும்படியும்
கூறப்பட்டிருக்கிறது. அந்த பணியை உற்சாகமாக ஏற்றுக்கொண்ட
சரத்குமார், அதற்கான துவக்கங்களையும் செய்து விட்டார்.

இத்தோடு நில்லாமல், விஜய்காந்த்துக்கு “செக்” வைக்கவென்றே,
திரு.இல.கணெசன் மூலம் “அதிமுகவுடன, பாஜக கூட்டணி
வைக்க வாய்ப்பு இருக்கிறதா ? ” என்ற கேள்விக்கு –
“இருக்கலாம்” என்று வேண்டுமென்றே பூடகமாக பதில்
சொல்ல வைத்திருக்கிறார். நேற்று மாலை, சென்னை
விமான நிலையத்தில், செய்தியாளர்கள் அதிமுகவுடன்
பாஜக கூட்டணிக்கான வாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பியபோது,
சிரித்துக் கொண்டே மழுப்பி விட்டுப் போய் விட்டார்.

( பாஜக – அதிமுக கூட்டணி இல்லை என்கிற முடிவிற்கு
இரண்டு கட்சிகளும் ஏற்கெனவே வந்து விட்டன… இருந்தாலும்,
அந்த முடிவை வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பதால்,
இரண்டு கட்சிகளுக்குமே சில சாதகங்கள் இருப்பதால்,
இரண்டுமே வேண்டுமென்றே யூகங்களுக்கு இடம் விடுகின்றன…!)

தான் உடனடியாக ஒரு முடிவிற்கு வராவிட்டால் –
பாஜக கூட்டணியில் தனக்கான மரியாதை, வரவேற்பு,
மற்றும் வாய்ப்புகள் குறைந்து விடும் என்பதை விஜய்காந்த்
உணரச் செய்ய – பாஜக அனைத்து பணிகளையும் செய்து
முடித்து விட்டது.

இனி, திரு.பிரகாஷ் ஜவடேகர் – திரு.விஜய்காந்தை
சந்திக்கும்போது, விஜய்காந்த்தால் வழக்கம்போல்
வழ-வழாவென்று இழுத்தடிக்க முடியாது. அதிக பட்சம்
இன்னும் இரண்டு நாட்களுக்குள் விஜய்காந்த் ஒரு முடிவிற்கு
வந்தாக வேண்டும்….

இல்லையேல், மார்ச் 2- ஆம் தேதி – பாஜக தலைவர்
அமீத்ஷா சென்னை வரும்போது, விஜய்காந்த் இல்லாத
(அநேகமாக பாமகவையும் உள்ளடக்கிய ) பாஜக கூட்டணி
அறிவிக்கப்பட்டு விடும் என்றே தெரிகிறது….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to திரு.விஜய்காந்த்தை வழிக்கு கொண்டு வர மிரட்ட ஆரம்பித்தது பாஜக….!!!

 1. selvarajan சொல்கிறார்:

  தமிழக பாஜகவின் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு… இனி மேலிடத்தின் கையில்… இல.கணேசன்…
  http://tamil.oneindia.com/news/tamilnadu/tn-bjp-compelets-alliance-talks-247797.html … ஜவடேக்கருக்கு தண்ணி காட்டிய விஜயகாந்த்.. பாஜக-தேமுதிக கூட்டணி அம்பேல்?
  http://tamil.oneindia.com/news/tamilnadu/javadekar-vijayakanth-meets-fails-247911.html …. என்னதான் — நடக்கிறது .. ? கூட்டணி — பெட்டி — பேரம் என்று தான் அலைகின்றார்களே தவிர …. வாக்களிக்க போகிற மக்களை பற்றியோ — இந்த ” கோமாளி கூத்துகளை ” கூர்ந்து கவனிக்கும் தமிழகத்தை பற்றியோ ஏன் இவர்கள் கொஞ்சமும் கருத்தில் கொள்ளவில்லை … ? ஜவடேகர் டில்லியிலிருந்து வந்தது — வி.காந்த் மகிழ்ச்சியுற்று கூட்டணியில் சேரவும் — தமிழக அரசை குறை சொல்லி – ஏதாவது ஓட்டுகளை பெற முடியுமா என்றும் முயற்சிப்பது போல தெரிகிறதல்லவா … ?

 2. LVISS சொல்கிறார்:

  Interesting things are happening in T Nadfu politics –Sarath Kumar joining BJP alliance will rule out BJP/ alliance – Both Sarath Kumar and Vijayakanth broke away from DMK to form their own parties – What respect will they get in DMK –BJP can these play these games because they dont lose anything – Any gain is a big gain for them – –Where does Vasans party figure in these talks – -PMK appears determine to go it alone and try their luck –

 3. CHANDRAA சொல்கிறார்:

  Vijaykanth has the notorious history of accepting his preferred decided
  alliance when bjp would tell him that it is his final time
  to accept the alliance of bjp…..
  In 2011 also v kanth was given final ultimatum by aiadmk to accept the seats given by aiadmk…….
  DECENT PEOPLE WOULD NEVER HARASS OTHERS…….All know that……..
  v>kanth is not a decent politician

 4. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  ஆனால் பாராளுமன்ற தேர்தலில் மோடி பிரதமராக வேண்டும் என்று தீவிர பிரச்சாரம் செய்தது விஜயகாந்த் மட்டுமே, அன்புமணியின் வெற்றிக்காக மட்டுமே பாமக ராமதாஸ் பிரச்சாரம் செய்தார்..

 5. செல்வதுரை சொல்கிறார்:

  “தன்னிடம் இருக்கும் 7-8 % ஓட்டு வங்கியை வைத்துக்கொண்டு”

  எல்லோரையும் போல விவரம் மிக்க தாங்களும் எப்படி இவ்வாறு கூறுகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. மக்கள் முதலில் அவர் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளுக்கு ஒரு மாற்றாக வரக்கூடும் என நினைத்து ஒரு சிலர் ஆதரவு அளித்தார்கள். அ.தி.மு.க. உடன் கூட்டணி அமைக்கும் போதே அவர் நிலை வெட்ட வெளிச்சம் ஆகி விட்டது. எனினும் தி.மு.க.வின் மீது இருந்த அதிருப்தியாலும் கூட்டணியினாலும் இவர் எதிர்கட்சி அந்தஸ்து பெற்றார். அந்த வாய்ப்பையும் அவர் சரிவர பயன்படுத்தி மக்கள் கவனத்தை கவரவில்லை. அவருக்கு எந்த அரசியல் திறமையும் இருப்பதாக ஒருவரும் நினைக்கவில்லை. இப்போதைய நிலையில் அவருக்கு எந்த மரியாதையும் மக்கள் மனதில் இருக்க வாய்ப்பு இல்லை என்பதே நிதரிசனம். அவரது நடவடிக்கைகள் ஒரு ஜோக்கரின் நடவடிக்கையாகவே மக்கள் பார்க்கிறார்கள். அவர் யாரிடமாவது கூட்டு சேர்ந்தால் அந்த கூட்டாளியின் பலத்தைப்பொருத்தே அவருக்கு ஒட்டு விழும். அவருக்கு என்று ஒரு ஒட்டு வங்கி இல்லை. எல்லாக்கட்சிகளும் அவர் பின்னே செல்வது காலத்தின் கோலமே.

  • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

   செல்லத்துரையின் தவறான கணிப்பு. அவருக்கு என்று ஒரு ஓட்டு வங்கி உருவாகிவிட்டது. 5% நிச்சயம். பாஜக, இதைப் புரிந்துகொண்டு, அவருடைய உறவினருக்கு (சதீஷ்) ஒரு பதவி கொடுத்திருக்க வேண்டும். (இப்போ இருக்கிறவர்கள் எல்லோரும் திறமையானவர்களா?). அதுவும்தவிர, அரசியல் திறமைகளையெல்லாம் பார்த்து மக்கள் ஓட்டளித்தால், காமராஜர் எப்படித் தோல்வியடைந்திருக்கமுடியும்? விஜயகாந்த் சரியாகப் பேசாததன் காரணம் டாஸ்மாக் உள்ளே சென்றுள்ளதால்தான்.

   பாமக ராமதாஸ் செய்தது துரோகம். திமுக, எப்போதும் கூட்டணி தர்மத்தைப் பின்பற்றும். (கழிசடைகளோடு கூட்டணி சேர்ந்தாலும், பெரும்பாலும் திமுக ஓட்டு விழுந்துவிடும்). ஆனால் ராமதாஸ் செய்தது பச்சைத் துரோகம். பாமக கூட்டணி பாஜவுக்கு நல்லதல்ல.

 6. CHANDRAA சொல்கிறார்:

  Pmk is travelling in a dream world
  V kanth would cause immense trouble embarassment awkward
  situations to the parties whom he would join…..
  But it is obvious that majority of dalits
  are supporting v kanth
  DMK V.KANTH CONGRESS AND ANTI BJP
  VOTES would give very tough competition to
  aiadmk in 2016

 7. செல்வதுரை சொல்கிறார்:

  “அவருக்கு என்று ஒரு ஓட்டு வங்கி உருவாகிவிட்டது. 5% நிச்சயம்.”
  எந்த அடிப்படையில் இந்தக் கணிப்பை நெல்லைத்தமிழன் சொல்கிறார் என்று அவர்தான் விளக்கவேண்டும். தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளுக்கு மாற்று என்கின்ற அடிப்படையில் பலர் இப்போது களத்தில் இருக்கின்றனர். அவர்களைவிட இவர் தகுதி மிக்கவர் என்று விவரமறிந்தவர்கள் எண்ணுவதற்கு சாத்தியமே இல்லை. இவருக்கு எதிர்கட்சித்தலைவர் என்கின்ற அந்தஸ்து கொடுக்கப்பட்டும் அதில் முற்றிலுமாகத் தோற்றுப்போனவர் என்பதை மறுக்க இயலுமா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.