திரு.ஜவடேகருக்கு அல்வா கொடுத்தார் திருவாளர் விஜய்காந்த் …..!!!

vijaykanth

திருவாளர் விஜய்காந்த் என்ன நினைக்கிறார்…
என்ன பேசுகிறார்.. என்பதை புரிந்துகொள்ளக்கூடிய
அளவிற்கு நமக்கு அறிவுத்திறன் போதாது என்பதால்,
செய்திகளில் வந்ததை மட்டும் கீழே தருகிறேன்.

நேற்றைய தினம் திருவாளர் விஜய்காந்த் அவர்களை
சந்திக்க மத்திய அமைச்சரும், பாஜக மேலிட பிரதிநிதியுமான
திரு.ஜவடேகர் – விஜய்காந்த்தின் சாலிக்கிராம இல்லத்திற்கு
சென்றபோது,

மத்திய அமைச்சர் ஒருவரை தான் வாசலில் வந்து வரவேற்பது அவருக்கு (எவருக்கு…? ) கௌரவக்குறைச்சலாக இருக்கும் என்று கருதியதாலோ என்னவோ, விஜய்காந்த் வாசலுக்கு வரவில்லை. அவர் சார்பாக அவரது மெய்க்காப்பாளர்களே (இதில் திரு.பார்த்தசாரதியும் அடக்கம் ) வரவேற்று, உள்ளே அமரச்செய்திருக்கின்றனர்.

பின்னர், திரு.ஜவடேகருக்கும், அவருடன் வந்தவர்களுக்கு,
விஜய்காந்த் சார்பாக –

2 மசால் வடை,
ஒரு ப்ளேட் காரட் அல்வா,
மற்றும் ஒரு கப் மசாலா டீ
– தரப்பட்டிருக்கிறது.

அவர்கள் அதை சாப்பிட்டு முடித்து
ஐந்து நிமிடங்கள் ஆன பிறகு,
விஜய்காந்த் அந்த அறைக்குள் பிரவேசம் செய்திருக்கிறார்…
எல்லாரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர்.

ஜவடேகரைப் பார்த்து கைகூப்பிய விஜய்காந்த், “வாழ்த்துக்கள்,”
“வாழ்த்துக்கள்” ( congratulations ….) என்று இரண்டு முறை
கூறி இருக்கிறார்…

புரியாத ஜவடேகர் எதற்காக வாழ்த்துகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு விஜய்காந்த் –

” இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி,
சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து மிகவும்
பலமான கூட்டணி அமைத்திருக்கிறீர்களே … அதற்குத்தான்…!!!”
என்று கூறி இருக்கிறார்…

பின்னர் இரு தரப்பினரும் சுமார் ஒரு மணி நேரம் பேசி
இருக்கின்றனர். ( எது பற்றி என்பது பற்றி தான்
கொஞ்சம் குழப்பம் நிலவுகிறது….!!!)

வெளியே வந்த ஜவடேகர் – “கூட்டணி பற்றி பேசினோம்.
விஜய்காந்த் சில விஷயங்கள் கூறி இருக்கிறார்… இதுகுறித்து
கட்சித்தலைவர் அமீத் ஷா மற்றும் பிரதமரிடம்
எடுத்துச் சொல்வேன்…” என்று கூறி விட்டு கிளம்பி இருக்கிறார்.

அவர் சென்ற அரை மணி நேரம் கழித்து தேமுதிக தலைமை
அலுவலகத்திலிருந்து ( என்றும் இல்லாத வழக்கமாக ) செய்தியாளர்களுக்கு ஒரு குறிப்பு வருகிறது.

” மரியாதை (….! ) நிமித்தமாக, திரு.பிரகாஷ் ஜவடேகர்,
தலைவரை சந்தித்து விட்டு சென்றார்..”
( அவ்வளவே…..!!!)

இந்த முறை திரு.விஜய்காந்த் கொடுத்த “அல்வா”விலேயே
திருப்தி அடைந்து விட்டால், திரு.ஜவடேகர் மீண்டும்
விஜய்காந்தை பார்க்க வர மாட்டார் என்றும்,

ஒருவேளை அவரது பசி அடங்காமல் –
மீண்டும் சாப்பிட வேண்டுமென்று ஆவல்
தோன்றினால் அடுத்த வாரமும் மீண்டும் வந்து பார்ப்பார்
என்றும் செய்திகள் கூறுகின்றன.

பின் குறிப்பு –

திரு.விஜய்காந்த் கிண்டி வைத்திருக்கும் “அல்வா”
இன்னமும் மீதி இருப்பதாகவும், அதை “கலைஞருக்கு”
கொடுப்பதா அல்லது ” மக்கள் நலக் கூட்டணி
தலைவர்களுக்கு” – கொடுப்பதா என்று இன்னமும்
அவர் தீர்மானிக்கவில்லை என்றும் கோயம்மேடு தகவல்கள்
சொல்கின்றன…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to திரு.ஜவடேகருக்கு அல்வா கொடுத்தார் திருவாளர் விஜய்காந்த் …..!!!

 1. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  6 சதவிகித வாக்குகள் இருக்கின்றன என்பதற்காக, விஜயகாந்த் நடந்துகொள்ளும் முறை சரியானதாக இல்லை. பாமக போல் 4 சதவிகித ரேஞ்சிலேயும், வடதமிழ்னாடு மட்டும் ஆதரவாகவும் இருந்திருக்குமானால், விஜயகாந்துக்கு இவ்வளவு மௌஸ் வந்திருக்காது.

  அவரும், 40 வயதிலேயே அரசியலுக்கு வந்திருந்தால் நல்லா பிரகாசிச்சிருக்கலாம். இப்போது பேச்சு குழற ஆரம்பித்துவிட்டது.

 2. gopalasamy சொல்கிறார்:

  “மயங்கினேன் சொல்ல தயங்கினேன்” என்கிற பாடலை கலைஞருக்கு டேடிகாட் செய்கிறேன் .

 3. selvarajan சொல்கிறார்:

  அய்யா … நீங்கள் கூறியதை போலவே ” போன தடவை வந்தப்ப — சாப்பிட கொடுத்த மீதி அல்வாவை ” இந்தமுறை சாப்பிடாமல் வாங்கி செல்ல …. // கூட்டணி பேச்சுவார்த்தை… மீண்டும் சென்னை வருகிறார் ஜவடேகர்…. http://tamil.oneindia.com/news/tamilnadu/javadekar-visit-chennai-tomorrow-248007.html //
  ” கொடுத்த காரட் அல்வாவில் ” மீதி கொஞ்சம் இருக்கிறது — மசால்வடையும் கூட நூல் உட்டு சூப்பரா இருக்கிறது — டீ கூட ஆறாமல் சூடாகவே இருக்கு — அதை அமித்ஷாவின் உதவியோடு — ” தக்க – கேட்கும் காசை — வியாபாரம் செய்யும் கடைக்காரரின் மனைவி – மற்றும் மச்சானிடம் ” கொடுத்து வாங்கி செல்ல மீண்டும் வருகிறார் … இந்த முறையும் வியாபாரம் படியவில்லை என்றால் — ! அடுத்து ” ஆல்இன் ஆல் கட்சி தலைவர் ” வந்து கண்டிப்பா வாங்கிடுவாரா — ? ஏனென்றால் ரெடியா இருக்கிற ” தானைத்தலைவர் ” கூட்டம் வாங்குவதற்குள் — ? மக்கள் விரலை நன்கு சூப்பி — மை வைத்து கொண்டு ஓட்டு பட்டனை அழுத்திடுவாங்கோ …. என்று நினைகின்ற — பேரம் பேசும் கூட்டங்களின் செயல்களுக்கு எப்போது தான் முடிவு ஏற்படும் …. ? இதனுடைய பின் விளைவுகள் வேறுவிதமாக மாற வாய்ப்புள்ளது என்பதை இவர்கள்மறந்தது ஏனோ … !!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   இவ்வளவு நாட்கள் பொறுத்திருந்தோம்…
   இன்னமும் கொஞ்சம் பொறுப்போமே….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. CHANDRAA சொல்கிறார்:

  Vkanth would have welcomed prakash ji manmohan ji and his wife welcomed modi ji at their doorsteps many times so also other leaders but v kanth………….
  Kushboo is abundantly confident about v kanths entry into dmk congresss alliance………
  Let us witness these DRAMATIC DEVELOPMENTS…..ji

 5. selvarajan சொல்கிறார்:

  // கார்த்தி சிதம்பரத்தின் வெளிநாட்டு சாம்ராஜ்ஜியம்: பல்வேறு நாடுகளில் பல லட்சம் கோடி முதலீடு ….. http://www.dinamani.com/india/2016/03/01/… // பிடி இருகுமா … ? அடுத்து … // ப.சிதம்பரம் விவகாரம்: மாநிலங்களைவையை முடக்கியது அதிமுக…. http://www.dinamani.com/india/2016/03/01/…. //

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப செல்வராஜன்,

   தனியே இடுகை போடுகிறேன்.
   விவரமாக விவாதிக்கலாம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.