ராக்கெட் விஞ்ஞானியின் நம்பிக்கை மொழி …

dr.mayilsamy annadurai

சாதாரண மனிதர்கள் ஒரு விஷயத்தைப்பற்றி கருத்து
சொல்லும்போது ஏற்படாத ஒரு நம்பிக்கை,
எதாவது ஒரு துறையில் சாதனை புரிந்தவர்கள் சொல்லும்போது
கிடைக்கிறது. அதுவும் ஒரு பெரிய சாதனையாளர்,
தான் புரிந்த சாதனைகளுக்கான அடித்தளமே இது தான்
என்று சொல்லும்போது, இதுவரை ஏற்றுக்கொள்ளாத
மக்களைக் கூட அந்த கருத்தைப்பற்றி யோசிக்க வைக்கிறது.

பள்ளியளவில், தாய்மொழியில் படிப்பது தான் சிறந்த முறை
என்று எவ்வளவு அழுத்தமாகச் சொன்னாலும் நம் மக்கள்
அதை சரியான அழுத்தத்தில்எடுத்துக் கொள்வதில்லை.
புகழ்பெற்ற விஞ்ஞானி, இந்திய விண்வெளி செயற்கைக்கோள்
ஆய்வுமையத்தின் (இஸ்ரோ) தலைமை திட்ட இயக்குநர்
திரு.மயில்சாமி அண்ணாதுரை சொல்லி இருக்கும்
கருத்துக்கள் கீழே –

( நண்பர்களை, ” தாய்மொழியில் அடிப்படைக்கல்வி ”
என்கிற இந்த கருத்துக்கு தங்கள் தங்கள் சொந்த தளங்களின்
மூலம் அழுத்தம் கொடுக்க கேட்டுக் கொள்கிறேன் …)

———-

டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் உரையிலிருந்து –

isro

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to ராக்கெட் விஞ்ஞானியின் நம்பிக்கை மொழி …

 1. K. Rajagopalan சொல்கிறார்:

  காவிரிமைந்தன்,

  நல்ல நல்ல கருத்துக்களை தொடர்ந்து
  விதைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
  உங்கள் பணி சிறப்பாகத் தொடர
  இறைவனை வேண்டுகிறேன்.

 2. thiruvengadam சொல்கிறார்:

  தற்கால வாழ்க்கைமுறை நமக்கு எது ஏற்பானது என்பதைவிட அடுத்தவர் நம்மை உயர்வாக பார்க்கவேண்டுமென்ற முயற்சிகளில் ஒன்றுதான் தாய்மொழிக்கல்வி தவிர்த்தல். மதிப்பெண்களே தரநிர்ணய அளவுகோல் என்ற நிலையில் புரிந்துபடித்தல் நீங்கி மனப்பாடமே முன் நிற்பது அறிவுவளர்ச்சியை மழுங்கச்செய்கிறது. Let us hope for this immensly required change in medium of instruction ( opted by Parents themselves ) in comimg years.

 3. appannaswamy சொல்கிறார்:

  தென்னக விவேகானந்தர் திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவன நிறுவனர் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்களுடைய மிக ஆழமான எண்ணமும் போதனா மொழி தாய்மொழியில் இருக்கவேண்டும் என்பதுதான். இன்றும் திருப்பராய்த்துறை ஸ்ரீ விவேகானந்த வித்யாவன குருகுலத்தில் போதனாமொழி நம் தாய்மொழியான தமிழ்மொழிதான். இன்றளவில்,சுமார் 60,000 மாணாக்கர்கள் தமிழ்நாடு முழுவதும் ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் கண்காணிப்பில் உள்ள பள்ளிகளிலிருந்து ஆண்டுதோறும் வெளிவருகிறார்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப அப்பண்ணஸ்வாமி,

   நான் திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்திற்கு
   பல ஆண்டுகள் முன்பாக வந்திருக்கிறேன். அங்கு நடைபெறும்
   அருமையான சமுதாயப்பணிகளைப் பற்றி ஓரளவு அறிவேன்.
   நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. தபோவனத்தின் பணி
   அற்புதமானது… பாராட்டுதலுக்குரியது.

   நீங்கள் அங்கே தான் இருக்கிறீர்களா …?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • appannaswamy சொல்கிறார்:

    சுவாமி சித்பவானந்தரின் வெளிக்கொணர்வுகளில் (output) நானும் ஒருவன். நான்காம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்புவரை அவருடைய குருகுலத்தில் அவர் பயிற்பித்த கல்வியானது (அந்த வயதில் உணரவில்லை என்றாலும்), வாழ்நாள் முழுவதும் மிகத் தெளிவுடனும், பயமின்றியும், சுதந்திரமாகவும் , சுயநலமின்றியும் இருக்க உதவுகிறது. இனி ஒருவர் அந்தத் தியாகிபோல் பிறந்து , குழந்தைகளுக்காகவும், மக்களுக்காகவும் அவரவர் மனதில் தோன்றுகின்ற முறையற்ற எண்ணங்களை முறைப்படுத்த முயற்சி செய்யப் பிறப்பது கடினம்.

    அடுத்து என் தொழிற்கல்விப் படிப்பு முடிவடைந்தவுடன், கோயம்புத்தூரிலுள்ள சாந்தி கியர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிறுவனர் திரு.சுப்பிரமணியம் அவர்களிடத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தற்போது சாந்தி சோசியல் சர்விஸ் என்ற அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின் அவருடைய பங்குகளை வேறு நிறுவனத்திற்கு விற்றுவிட்டு, அதன்மூலம் கிடைத்த கோடிக்கணக்கான (என்னுடைய மதிப்பு சுமார் 200 கோடி) தொகையை அவருடைய வாரிசுகளுக்கு அளிக்காமல், “இந்தச் செல்வம் அனைத்தும் உலகத்திலிருந்து எனக்குக் கிடைத்தது. அதை உலகுக்கே திருப்பித் தருகிறேன்” என்று சாந்தி சோசியல் நிறுவனத்தைத் தொடங்கி மிக அற்புதமான சேவையை அளித்து வருகிறார். கோயம்புத்தூரிலுள்ள சிங்காநல்லூரைச் சுற்றியுள்ள சுமார் 100 அரசு தொடக்க, நடுநிலை, மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு எந்தவித சுயநலமின்றியும், எதிர்பார்ப்பின்றியும், தன்னுடைய புகைப்படமோ, அல்லது நிறுவனத்திற்கு நன்றி அறிவிப்புப் பெயர்ப்பலகையோ , திறப்பு விழாவோ கூடாது என்று அன்புக்கட்டளையுடன் பல உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அந்த நிறுவத்தின் சேவைகளை அறிய, http://www.shanthisocialservices.org என்ற வலைத்தளத்தைக் காண்க.

    (தங்களின் அரசியல் சார்ந்த இடுகைகளைப் படித்தபோதெல்லாம், அந்தமாதிரியான இடுகைகளைத் தவிர்த்து, இந்தமாதிரி மக்களுக்கு சேவை செய்யும் நல்லுள்ளங்களைப் பற்றி இடுகையில் எழுதினால், மக்களுடைய எண்ணங்கள் முறைப்படும் என்று ஒருசில முறை கருத்துத் தெரிவிக்க நேரிட்டது.)

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்ப அப்பண்ணஸ்வாமி,

     உங்களது விரிவான கடிதத்திற்கு மிக்க நன்றி.

     எதேச்சையாக நான் எழுதிய ஒரு இடுகையின் மூலம்
     உங்களைப் பற்றியும்,
     இத்தனை அற்புதமான நிறுவனத்தை பற்றியும்,
     நிறுவனரைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு
     கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

     நீங்கள் கூறுவது போல், நல்ல விஷயங்களைப் பற்றி
     நிறைய எழுத எனக்கும் ஆசை தான். ஆனால்,
     இன்று சமுதாயம் இருக்கும் நிலையில் –
     அதை மட்டுமே எழுதினால் அதைப்படிக்க நீங்களும்
     நானும் மட்டும் தான் இந்த வலைத்தளத்தில் மிஞ்சுவோம்….!!!
     கூட்டம் இருந்தால் தானே நாம் கருத்து பரிமாற்றம்
     செய்து கொள்ள முடியும் …?

     அவசியம் நல்ல கருத்துக்களை அடிக்கடி பரிமாறிக் கொள்ளலாம்.
     நீங்கள் கூட இந்த வலைத்தளத்தின் மூலமாக கருத்து
     கூற விரும்பினால் அதை நான் நிச்சயம் வரவேற்பேன்.

     நாம் தொடர்ந்து தொடர்பில் இருப்போம்.
     நல்லவர்களின், சமுதாயத்திற்கு உதவியாக இருப்பவர்களின்
     தொடர்பு எனக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுக்கிறது.

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

 4. LVISS சொல்கிறார்:

  Soon after the accomplishment of one of the missions (I think it is Mangalyan) the scientists involved in the mission inter acted with audience consisting mostly of students and answered their queries -Each scientist was asked about his part in the mission -Some very intricate things about the mission were explained to the students –Such shows inspire the students to study this science — This was the best talk show I have seen in TV in years —

 5. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  முகநூலில் திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் கருத்தை நான் பகிர்ந்து இருந்தேன், இங்கு ” பெரிய சாதனையாளர்,தான் புரிந்த சாதனைகளுக்கான அடித்தளமே இது தான்” என்று சொல்லும் உங்களின் கருத்தும்,மற்றும் நண்பர் திருவேங்கடம் சொல்வது போல ”அடுத்தவர் நம்மை உயர்வாக பார்க்க வேண்டு மென்பதற்காக”, என்பது நூறு சதம்உண்மைதான் .

 6. செல்வக்குமார் சொல்கிறார்:

  மிக நல்ல பதிவு.. தாய்மொழிக்கல்வி தாய்ப்பால் போன்றதே …

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.