தந்தையும் மகனும் கொள்ளையில் கூட்டணியா ..? கிரிமினல் வக்கீலே – கிரிமினல் ஆனால்….?

black money

யார் யாரோ, எது எதற்கோ கூட்டணி சேருகிறார்கள்…
ஆனால் இது மாதிரி ஒரு அதிர்ச்சி தரும் ஒரு தந்தை-மகன்
கூட்டணியை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை தான்.

வில்லன்கள் என்றால் – பி.எஸ்.வீரப்பா,
எம்.என்.நம்பியார் தோற்றங்கள் நினைவிற்கு வருவது போய் –

கேள்விப்படும் விஷயங்களை எல்லாம் பார்த்தால் –
எம்.ஏ., பி.எல்., எம்.பி.ஏ. என்று ஹார்வர்டு யுனிவர்சிடிக்கும்,
ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடிக்கும் போய் படித்து விட்டு
வெள்ளை வெளேரென்று வேட்டி, சட்டையுடன்,
நம்மூரில் அரசியல்வாதிகளாக வலம் வருபவர்கள் தான்
பெரிய வில்லன்கள் என்றாகி விட்டது.

வெளிநாடுகளுக்கு போய் உயர்படிப்பு படித்துவிட்டு வருவது –
மாட்டிக் கொள்ளாமல் தப்பு செய்வது எப்படி என்று
கற்றுக் கொள்ளத்தானோ ?

இல்லாதவன் திருடினால் உதை வாங்குகிறான்…
பஸ்ஸில் 500 ரூபாய் பிக்பாக்கெட் பண்ணி ஒருவன்
மாட்டினால் எவ்வளவு பேர் தர்ம அடி போடுகிறார்கள்…?

ஆனால், கோடிக்கணக்கில், ஆயிரக்கணக்கான கோடிகளில் –
ஊழல் செய்பவர்களை, மக்கள் பணத்தை கொள்ளை
அடிப்பவர்களை யாராலாவது தண்டிக்க முடிகிறதா …?

அடேயப்பா – London, Dubai, South Africa,
Philippines, Thailand, Singapore, Malaysia,
Sri Lanka, British Virgin Island,
France, USA, Switzerland, Greece and Spain –

இவர்கள் வியாபாரம் துவங்காத நாடுகளே இல்லை
என்று சொல்கிற நிலை வந்து விடும் போலிருக்கிறதே.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று சொல்லப்பட்டது
உண்மை தான்… ஆனால், உலகெங்கும் சென்று
கருப்புப்பணம் பதுக்கு என்று சொல்லவில்லையே…

தப்பு செய்யும்போதே, மாட்டிக்கொள்ளாமல் இருக்க
அத்தனை முன்னேற்பாடுகளையும் செய்து கொண்டு தானே
செயலில் இறங்குகிறார்கள்…?

அரசியல்வாதிகள் என்றால் ஊழல் சகஜம் தான் என்கிற
மனப்பக்குவம் நமக்கு எப்போதோ வந்து விட்டது
உண்மை தான் – ஆனாலும் இப்படியா …?

இந்த நிலைக்கு யாரை குறை சொல்வது…?

அரசியல் செல்வாக்கு உடையவர்கள் –
பண பலம் உடையவர்கள் –
உயர்ந்த இடங்களில் உள்ளவர்கள் –
இவர்களை எந்த சட்டத்தாலும் –
எந்த நீதிமன்றத்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லையே..
தப்பித்தவறி மாட்டினாலும், எதாவது ஒரு ஓட்டைக்குள்
புகுந்து வெளிவந்து விடுகிறார்களே…?

கருப்புப் பணத்தை கண்டுபிடிக்கிற இடத்தில் இருக்கும்
தந்தையே, மாட்டிக்கொள்ளாமல் கருப்புப் பணத்தை
சம்பாதிப்பது எப்படி, அதை கடத்துவது எப்படி,
முடக்குவது எப்படி – என்று சொல்லிக்கொடுக்க முனைந்தால் –
அதற்கு முடிவெங்கே – விடிவெங்கே…?

எப்போது ஆரம்பித்தது 2ஜி
ஏர்செல்-மேக்சிஸ் ஊழல் வழக்கு..?
எத்தனை ஆண்டுகள் ஆயின …?
என்ன முன்னேற்றம் ஏற்பட்டது…?
துவக்கத்திலேயே, புலனாய்வு நிறுவனமே –
இருக்கின்ற சாட்சிகளை வைத்துக் கொண்டு குற்றச்சாட்டை
நிரூபிக்க முடியாது; எனவே வழக்கு தொடர்வதில் பயனில்லை
என்று சொல்லி கேஸ் கட்டை மூடிவிட்ட வழக்கு தானே இது ?

– பின்னர் வற்புறுத்தல்கள் காரணமாக, தொடர நேர்ந்தபோது,
வெளிநாட்டு அரசுகளும், ஏஜென்சிக்களும் ஒத்துழைப்பு தர
மறுக்கின்றன என்று சொல்லி மீண்டும் முட்டுக்கட்டை…

பின்னர் சாட்சிகளை கலைக்க முயற்சிகள்…
ஆவணங்களை தொலைக்க முயற்சிகள்….
கடைசியாக சென்ற வாரம் வழக்கு எடுத்துக் கொண்டபோது,
அடுத்த விசாரணைக்கு – ஐந்து மாதங்களுக்குப் பிறகு
ஒரு தேதி கொடுக்கப்படுகிறது. புலனாய்வு நிறுவனத்திற்கு
இதில் எந்தவித ஈடுபாடும் இல்லை என்பது வெளிப்படையாகவே
தெரிகிறது.

சென்னையில், பி.எஸ்.என்.எல். தொலைபேசி கேபிளை
தவறாக, சட்டவிரோதமாக பயன்படுத்தி, நானூறு கோடிக்கு
மேல் ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கு …

மத்தியில் ஆளும் கட்சியில் மிகுந்த செல்வாக்கு உடையவர்
தீவிரமாக முயற்சி செய்தும்கூட – அவ்வப்போது படுத்துக்
கொள்கிறது…. நகர மறுத்து சண்டித்தனம் செய்கிறது.
ஐந்தாறு மாதங்களுக்கு முன்னதாக, கைது செய்ய
தடை பெற்ற பிறகு, வழக்கு என்ன ஆனது என்று
யாருக்காவது தெரியுமா…?

ஐந்தாறு மாதங்களுக்கு முன்னர் புகழ்பெற்ற மருத்துவ
மனைகளில், 400 கோடிக்கு மேல் கருப்புப்பண முதலீடு
கண்டுபிடிக்கப்பட்டது என்று செய்திகள் வந்தனவே…
அதற்குப் பிறகு அந்த வழக்கு என்ன ஆனது என்று
பொறுப்பில் இருப்பவர்கள் யாராவது கவலைப்பட்டார்களா …?

புலனாய்வு நிறுவனங்கள் தாமாகவே தீவிரமாக இயங்க
வேண்டும். அங்கு தாமதங்கள், தவறுகள் நிகழ்ந்தால்,
அதற்கு மேல் நிலையில் இருக்கும் விஜிலன்ஸ் கமிஷன்
விழிப்புடன் செயல்பட வைக்க வேண்டும். அங்கும்
தவறுகள், தாமதங்கள் நிகழ்ந்தால் –
நிதியமைச்சகம், உள்துறை அமைச்சகம்,
பிரதமரின் அலுவலகம் என்று எவ்வளவோ கண்காணிப்பு
அலுவலகங்கள் இருக்கின்றன…

இத்தனை இருந்தும், இது போன்ற ஊழல்கள், குற்றங்கள்
வருடக்கணக்கில் பிடிபடாமல், விசாரிக்கப்படாமல்,
தண்டிக்கப்படாமல் இருப்பது ஏன்…?

செய்தித்தாள்களில் இந்த செய்தி இப்போது
“லீக்” ஆகி இருக்கவில்லை என்றால்,
இன்னும் எத்தனை மாதங்கள், வருடங்கள் ஆனாலும் –
இந்த விஷயம் தூங்கிக்கொண்டே தானே இருந்திருக்கும்…?

எதிர்க்கட்சியாக இருக்கும்போது, இது விஷயங்களில்
தீவிரமாக செயல்படுபவர்கள், கண்குத்திப்பாம்பாக
கவனித்துக் கொண்டிருப்பவர்கள் – ஆட்சி அதிகாரத்திற்கு
வந்தபின் மெத்தனமாக இருப்பது ஏன்…?

நேற்று – நாள் முழுவதும் பாராளுமன்றம் செயல்படாமல்
ஸ்தம்பித்த நிலை வந்த பிறகும் கூட –
ஆட்சியில் இருப்பவர்கள் யாராவது நிலைமை என்ன
என்று விளக்கினார்களா..? சம்பந்தப்பட்ட புலனாய்வு
நிறுவனங்களிடமிருந்து சரியான விவரங்கள் பெறப்பட்டு
வெளியிடப்படும், விரைவாக தொடர் நடவடிக்கை
எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்களா…?

இல்லையே – ஏன்…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to தந்தையும் மகனும் கொள்ளையில் கூட்டணியா ..? கிரிமினல் வக்கீலே – கிரிமினல் ஆனால்….?

 1. thiruvengadam சொல்கிறார்:

  ” எதிர்க்கட்சியாக இருக்கும்போது, இது விஷயங்களில்
  தீவிரமாக செயல்படுபவர்கள், கண்குத்திப்பாம்பாக
  கவனித்துக் கொண்டிருப்பவர்கள் – ஆட்சி அதிகாரத்திற்கு
  வந்தபின் மெத்தனமாக இருப்பது ஏன்…? ” ———————————– பெருந்தலைவர் திராவிட கட்சிகளை பற்றி கூறிய பிரபல வாசகம் இன்று தேசிய கட்சிகளுக்கும் பொருந்தும் நிலை ?

 2. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  ஏன் என்றால் இன்று நீ நாளை நான் பாலிசிதான்..

 3. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  veliye payirai meiynda kadaithan

 4. selvarajan சொல்கிறார்:

  // திரு ப. சிதம்பரம் கூறுகிறார் -“தேவனே – இன்னதென்றுதெரியாமல் இவர்கள் செய்யும் தவறுக்காக இவர்களை மன்னித்து விடும்” !!
  Posted on மே 11, 2012 by vimarisanam – kavirimainthan …. // என்கின்ற இந்த இடுக்கை வந்து — ” மூன்றே முக்கால் வருடங்கள் ஆகிறது …. ” இன்று வாய்மூடி மெளனமாக இருக்கும் பா.ஜ. க . அரசு ….. அன்றைய இடுக்கையில் …. // பாராளுமன்றத்தில் ரகளை. திரு ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் குறித்து பிஜேபி உறுப்பினர் எஸ்வந்த் சின்ஹா சில குற்றச்சாட்டுகளை கூறி, அவை முன்னவர் திரு பிரணாப் முகர்ஜி அது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரினார்.// … விவாதத்திற்கு பின் கடைசியாக ப.சி . யோக்கியரை போல கூறிய வார்த்தைகள் தான் — அய்யா தேந்தெடுத்த மேலே உள்ள ” இடுக்கையின் தலைப்பு ” … ! — அதே சிதம்பரம் அவர்கள் — இன்று :– ” தேவனே – இன்னதென்று தெரிந்து நாங்கள் செய்த தவறுக்காக எங்களை மன்னித்து விடும்” !! என்று கோரினாலும் — கோருவாரா …. ? இவ்வாறான அரசியல்வாதிகளும் — கொள்ளையடிக்க கூட்டணி என்பதை ” கேலிகூத்தாக்கி “— சிரிப்பாய் – சிரிக்கும் கட்சிகளும் … தேவைதானா …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   சரியான நேரத்தில் நினைவு படுத்தியதற்கு நன்றி.
   இப்போது படித்தால் – எனக்கே ரசிக்கிறது..!!
   அதை மறுபதிவாகப் போடுகிறேன்.
   வக்கீலின் திறமையை அனைவரும்
   உணர இன்னொரு சந்தர்ப்பம்…!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • paamaranselvarajan சொல்கிறார்:

    அய்யா….! நேற்றிரவு தந்தி டி.வி. யில் விவாத நிகழ்சியில் ” சீமானும் … அருணனும் ” நடந்து காெண்ட விதம் பற்றி…. ?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     செல்வராஜன்,

     வடிகட்டப்படாத இத்தகைய நிகழ்ச்சிகளை நான் வரவேற்கிறேன்.
     கலந்து கொள்பவர்களின் உண்மையான உணர்வுகளை
     நாம் இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது அல்லவா …?

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

 5. seshan சொல்கிறார்:

  in Dubai- Vasan Eye center fully owned by these gentlemen. (ultra modern hospital)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.