திரு.கார்த்தி சிதம்பரம் கம்பெனிகள் பற்றி திரு.ப.சிதம்பரம் 2012-ல் பேசியது ….!!!

.

.

கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு முன்னரே இன்று கூறப்படும்
வெளிநாடுகளில் கருப்புப்பண முதலீடு குறித்த விவகாரம்
பற்றிய விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்றிருக்கிறது.

அன்று, திரு.ப.சி. அவர்கள் மத்தியில் ஆளும் காங்கிரஸ்
கூட்டணியின் கேபினட் அமைச்சராக இருந்திருக்கிறார்.
தன் மகன் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி அன்று
அவர் பேசியது குறித்த பழைய
விமரிசனம் தள இடுகை ஒன்றை, சுவாரஸ்யம் மற்றும்
முக்கியத்துவம் கருதி இன்று மீண்டும் கீழே பதிப்பிக்கிறேன்.
அத்துடன் கூடவே, தொடர்புடைய இன்னொரு
பழைய இடுகையும் கூட…..!!!

——————————————

பாராளுமன்றத்தில் இரண்டு மிகத்திறமையான வக்கீல்கள் –

திருவாளர்கள் ப.சி.யும் அருண் ஜெட்லியும் – ஜெயித்தது யார் ?
Posted on மே 15, 2012 -by vimarisanam –
kavirimainthan

நேற்றைய தினம் பாராளுமன்றம் ஒரு கோர்ட் ஹாலாகவே
மாறியது. வாத, பிரதிவாதங்கள் பிரமாதம். இரண்டு
மிகத்திறமையான வக்கீல்கள் திரு ப.சிதம்பரமும், திரு அருண்
ஜெட்லியும் – அவர்களின் சிறப்பான வாதத் திறமையை நேரடி
ஒளிபரப்பில் நேற்று கண்கூடாகப் பார்க்க முடிந்தது.

விவாதப் பொருளும், செய்தியும் அனைத்து செய்தித்தாள்களிலும்
வந்திருக்கின்றன. எனவே நான் செய்திகளின் உள்ளே விவரமாகப்
போகவில்லை.

இது ஒரு அலசல் மட்டுமே –

இரண்டு கம்பெனிகள் – ஆஸ்ப்ரிட்ஜ் ஹோல்டிங்ஸ் அண்ட்
இன்வெஸ்ட்மென்ட்ஸ் – அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் –

முன்னால் கூறப்பட்டுள்ள கம்பெனிக்கும் ஏர்செல் கம்பெனிக்கும்
தொடர்பு இருந்தது என்றும் முன்னால் உள்ள கம்பெனிக்கும்
இரண்டாவதாக கூறப்பட்டுள்ள கம்பெனியின் சொந்தக்காரரான
கார்த்தி ப சிதம்பரத்திற்கும் தொடர்பு இருந்தது என்பது
ஜெட்லியின் குற்றச்சாட்டில் கூறப்பட்ட விஷயங்களில் ஒன்று.

தனது மிகத்திறமையான வாதத்தால் இந்த குற்றச்சாட்டை
தகர்க்க முயன்றார் நம் பெரியவர்.

முதல் கம்பெனி இரண்டு லட்ச ரூபாய் முதலில்
துவங்கப்பட்டிருக்கிறது. கம்பெனியின் சொந்தக்காரர் வெறும்
இருபதாயிரம் ரூபாய் முதலீடு செய்திருக்கிறார்.
அடுத்தவர் மீதி ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய்
கொடுத்திருக்கிறார். ஆனால் இது வெறும் கடன் தான் –
பங்கு அல்ல – எனவே அவரை பங்குதாரராக கருதக்கூடாது
என்பது ஒரு வாதம். (பத்து பெர்சன்ட் போட்டவர் முதலாளி –
தொண்ணூறு பெர்சன்ட் போட்டவர் வெறும்
கடன் கொடுத்தவர் !)

இரண்டு இளைஞர்கள் தாங்கள் விரும்பும் தொழிலை நடத்த
உரிமை இல்லையா என்பது அடுத்த வாதம். இது மிக நீண்ட
நாட்களுக்கு முன்னர் -சஞ்சய் காந்தி ( பல மறைமுகமான
அரசு உதவிகளுடன் ) மாருதி கார் கம்பெனியை
துவங்கியபோது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி –
என் மகன் என்பதால் சஞ்சய் அவன் விரும்பும் தொழிலில்
ஈடுபடக்கூடிய உரிமையை ஏன் இழக்க வேண்டும் ? என்று
கேட்டதை நினைவு படுத்துகிறது !!

முதல் கம்பெனிக்கும் – இரண்டாவது கம்பெனிக்கும் 2011 ஆம்
ஆண்டு வரை எந்தவித சம்பந்தமும் கிடையாது என்பது
அடுத்த வாதம்.

அதே சமயம் – பாதுகாப்பாக – இரண்டு கம்பெனியையும்
சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் முன்பின் அறியாதவர்கள்
அல்ல என்று யாரும் கூறவில்லையே ! இருவரும்
சென்னையை சேர்ந்தவர்கள் – ஒரு காலத்தில் ஒன்றாகப்
படித்தவர்கள் – எனவே ஒருவருக்கொருவர் உதவியாக
இருந்திருந்தால் அதில் அதிசயம் ஒன்றும் இல்லையே –
என்பது இன்னொரு வாதம் !

ஆனால் இறுதியில் – அருண் ஜெட்லி இறக்கியது
தான் துருப்புச்சீட்டு –

2011 ஆம் ஆண்டு வரை இரண்டு
கம்பெனிகளுக்கும் தொடர்பு இல்லை என்றால் –
இரண்டும் தனித்தனி கம்பெனிகள் தான் –
தனித்தனி உரிமையாளர்கள் தான் என்றால் –
2006 ஆம் ஆண்டுக்கான தகவல் அறிக்கைகளில் இரண்டு
கம்பெனிகளுக்கும் ஒரே ஈ மெயில் ஐடி
கொடுக்கப்பட்டிருப்பது எப்படி ? இரண்டு கம்பெனிகளுக்கும்
சென்னையில் ஒரே விலாசம் கொடுக்கப்பட்டிருப்பது எப்படி ?

அருண் ஜெட்லி இறக்கிய இந்த துருப்புச்சீட்டுக்கு
இன்னும் பதில் சீட்டு இறங்கவில்லை ! விரைவில்
இதற்கும் பதில் வரும் என்று எதிர்பார்க்கலாம் !

போன பணம் எப்படியும் திரும்ப வரப்போவதில்லை –
என்ன தான் சொல்கிறார்கள் என்றாவது பார்ப்போமே !

————————————————–

திரு ப. சிதம்பரம் கூறுகிறார் -“தேவனே –
இன்னதென்றுதெரியாமல் இவர்கள் செய்யும் தவறுக்காக
இவர்களை மன்னித்து விடும்” !!

Posted on மே 11, 2012 -by vimarisanam –
kavirimainthan

———-

இன்றைய செய்திகளில் படித்திருப்பீர்கள் – நேற்று
பாராளுமன்றத்தில் ரகளை. திரு ப.சிதம்பரம் மற்றும்
அவரது மகன் குறித்து பிஜேபி உறுப்பினர் எஸ்வந்த் சின்ஹா
சில குற்றச்சாட்டுகளை கூறி, அவை முன்னவர்
திரு பிரணாப் முகர்ஜி அது குறித்து விளக்கம் அளிக்க
வேண்டும் என்று கோரினார்.

இதைத் தொடர்ந்து ஏற்பட்ட ரகளையின் ஊடே
திரு ப.சிதம்பரம் அவர்கள் தன் தரப்பு விளக்கத்தை கூறினார்.

முடிக்கின்ற சமயத்தில், தன் மீது புகார் கிளப்புபவர்களைப்பற்றி
ஒரு பைபிள வாசகத்தையும் கூறினார் !

“இவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே
தவறு செய்கிறார்கள் – தேவனே இவர்களை மன்னித்து விடும் ”

அருமையான ஒரு கொட்டேஷனை பயன்படுத்தி
இருக்கிறார் திரு ப.சி.அவர்கள் . அவருக்கு நம் பாராட்டுகள் !

அதே சமயம் நமக்கு எழும் ஒரு சின்ன சந்தேகத்தையும்
திரு ப.சி. அவர்கள் தீர்த்து வைக்க வேண்டுமென்று
வேண்டுகிறோம்.

தெரியாமல் செய்கிறவர்களை மன்னித்து விடலாம் – சரி !

ஆனால் –

தெரிந்தே பாதகம் செய்கின்றவர்களை –
மக்களை ஏமாற்றி கொள்ளை அடிக்கின்றவர்களை –

தெரிந்தே லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகக்
காரணமாக இருந்தவர்களை –

ஆயிரக்கணக்கான விதவைகள், அனாதைச் சிறுவர்கள் –
உருவாகக் காரணமாக இருந்தவர்களை –

தெரிந்தே லட்சக்கணக்கான மக்கள் நாடோடிகளாக
உலகம் பூராவும் அலையக் காரணமாக இருப்பவர்களை –

என்ன செய்யலாம் ?

————————————————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to திரு.கார்த்தி சிதம்பரம் கம்பெனிகள் பற்றி திரு.ப.சிதம்பரம் 2012-ல் பேசியது ….!!!

 1. thiruvengadam சொல்கிறார்:

  தேர்தல் சூறாவளி கேள்வி கேட்டவர் , இதில் நடவடிக்கை தாமதத்திற்கு பொறுப்பாகிவிட்ட நிலை காண்கிறோம். மேலும் ப.சி. கூற்று இப்போது நாம் ” அவர் தெரியாமல் ( ? ) செய்த தவறை ………..

 2. selvarajan சொல்கிறார்:

  BBC தொலைக்காட்சிக்கு ப.சி.அவர்கள் கொடுத்த இண்டர்வியூ… !
  Posted on ஒக்ரோபர் 12, 2012 by vimarisanam – kavirimainthan … இடுக்கையில் ” பி.பி.சி செய்தியாளர் ” கேட்ட கேள்விக்கு — “பெரும்பாலான அமைச்சர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்ற கருத்தே முட்டாள்தனமானது.
  இந்தியாவிலிருந்தோ அல்லது உலகத்தில் வேறு எந்த
  மூலையிலிருந்து வேண்டுமானாலும் உள்ள யாராவது
  ஒரு ஆளை என் முன் கொண்டு வந்து நிறுத்தி
  அவரை, எனக்கு (ப.சி.க்கு)ஒரு ரூபாயாவது லஞ்சம்
  கொடுத்தேன் என்று என் முகத்தைப் பார்த்து சொல்லச்
  சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றிருக்கிறார் காட்டமாக !
  BBC நியூஸ் ரிப்போர்ட்டிலிருந்து இது தொடர்பான
  ஒரு பகுதி கீழே –
  The finance minister denied
  receiving a bribe himself
  and said claims that most ministers
  took such inducements
  were “utter rubbish”…. என்று பதில் கூறியது எவ்வளவு பெரிய யோக்கியர் இவர்… என்று இன்றைய நிகழ்வுகளை படிக்கும் பி.பி.சி. செய்தியாளர் நினைப்பாரோ ….. ? ஆனால் : — ” மிகவும் புத்திசாலியானவர் ப.சிதம்பரம். அவருக்கு இருக்கிற புத்திகூர்மை சாதாரணமானது அல்ல.” என்று சோ அவர்கள் கூறியதுபோல் — புத்திசாலி — திறமைசாலி — தொடர்ந்து 25 — வருடங்களுக்கு மேலாக மத்தியில் பல துறைகளில் மந்திரியாக இருந்தவர் — எப்படி ” வெறுங்கையோடு ” வேலை பார்ப்பார் … ? ” தேனை எடுப்பவன் – புறங்கையை நக்கத்தான் செய்வான் ” என்று — கலைஞர் அடிக்கடி கூறுவதை போல .. ஏதோ கொஞ்சம் ————– அப்படி தானே … ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.