k.d., p.c., k.c.- ஆகியோர் பிறந்த மண்ணில் தான் இப்படியும் ஒரு அதிசயம்….!!!

pic7

.

சில நாட்களாக தொடர்ந்து எதிர்மறையான செய்திகளையே
படித்து நொந்து கொண்டிருந்ததற்கு மாற்றாக இன்று ஒரு
நல்ல தகவலை பரிமாறிக்கொள்ள நினைக்கிறேன்.
( நன்றி – நண்பர் திரு.அப்பண்ணசுவாமி…! )

k.d., p.c., k.c. ஆகியோர் பிறந்த இதே தமிழ் மண்ணில்
பிறந்த ஒரு அதிசய மனிதரைப்பற்றியும், அவரது
பணிகளைப் பற்றியும் இங்கு ஒரு சிறிய அறிமுகம் செய்ய
விரும்புகிறேன்.

இந்த விளம்பரத்தை அந்த வள்ளல் விரும்ப மாட்டார் என்றாலும்,
இதைப்பற்றி எல்லாம் தெரிந்து கொள்வதன் மூலம் –

அவரளவிற்கு முடியாதென்றாலும்,

தங்களால் இயன்ற அளவில் சிறிய உதவிகளையாவது
பிறருக்கு செய்ய வேண்டும், செய்ய முடியும் – என்கிற
எண்ணமும், நம்பிக்கையும், ஆர்வமும் – இதைப் படிக்கும் நண்பர்களுக்கு உருவாகும் என்பதால் தான் இந்த இடுகை –

தன் வாழ்நாள் முழுவதும், உழைத்து உருவாக்கிய ஒரு
தொழில் நிறுவனத்தில் தன் பங்குகளை விற்று, அதன் மூலம்
கிடைத்த தொகையை ( தோராயமாக – இருநூறு கோடி –
ஆமாம் இருநூறு கோடி தான்…! ) கொண்டு ஒரு
தொண்டு நிறுவனத்தை, அறக்கட்டளையை – உருவாக்கி,
கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தன்னாலியன்ற
வகையில் உதவி வருகிறார் அந்த வள்ளல்

அவரது தொண்டு நிறுவனத்தின் மூலம், வசதியற்ற –
ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக அவர் உருவாக்கியுள்ள
சில வசதிகள் –

கோவையைச் சுற்றியுள்ள சுமார் 100 அரசு பள்ளிகளின்
infrastructure பணிகளை தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டு
செய்து தந்தது – தொடர்ந்து தருவது….

ஒரு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, மற்றும் ஒரு ஆண்கள்
உயர்நிலைப்பள்ளியை முற்றிலுமாக தத்து எடுத்துக்கொண்டு,
அவற்றிற்கு தேவையான அனைத்தையும் செய்து தருவது –

மேலும் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் –

விசேஷமாக, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பூங்கா –
விசேஷ மருத்துவ பரிசோதனை வசதிகள் –
மருந்துக்கடை –
ரேடியோலஜி சர்வீஸ் –
டயலிஸிஸ் –
ரத்த வங்கி –
கண் பரிசோதனை – கண் கண்ணாடி –
உணவு விடுதி –
முதியோருக்கும் ஆதரவற்றோருக்கும் இலவச உணவு –
தரமான, லாப நோக்கில்லாத பெட்ரோல் பங்க் –
இறுதியாக –
அமைதியாக போய்ச்சேர – LPG மயான வசதி –

கீழ்க்கண்ட புகைப்படங்கள் அவற்றின் தரத்தை
உங்களுக்கு உறுதி செய்யும் –

 

 

medicalcenterbanner

 

 

pic3

 

 

pic4sss-2

sss-3

 

 

pic9

sss-canteen

crematorium

lpg mayanam

lpg mayanam-2

இதில் முக்கியமான விசேஷம் என்னவென்றால் –
இத்தனை உதவிகளைச் செய்யும் அவர், எந்த இடத்திலும்
தன் பெயரையோ, புகைப்படத்தையோ போடக்கூடாது
என்றும் – தன் தொண்டு நிறுவனம் வெளியார் யாரிடமும்
எந்தவித பண உதவியையும் (நன்கொடையை) ஏற்காது
என்றும் ( அனைத்து செலவையும் தாமே ஏற்பதாகவும் )
அறிவித்திருப்பது தான்.

இந்த வள்ளல் நீண்ட நெடுங்காலம் நல்ல உடல்நலத்துடனும்,
மனநிறைவோடும் வாழ வேண்டும் என்றும்,
இவரைப் பார்த்து, இவரைப்போல் இன்னும் பல தொண்டு
உள்ளங்கள் உருவாக வேண்டும் என்றும்
இறைவனை வேண்டுவோம்.

—————–

பின் குறிப்பு – அவர் என்ன தான் விளம்பரத்தை
வேண்டாதவராக இருந்தாலும் கூட, நாம் பிறந்ததன் அர்த்தம் என்ன என்று நமக்கு சொல்லிக் கொடுக்கும்-

கோவை சாந்தி கியர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின்
நிறுவனர் திரு.சுப்பிரமணியம் அவர்களை –
உங்களுக்கு அறிமுகப்படுத்தாமலிருக்க என் மனம்
இடம் கொடுக்கவில்லை.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to k.d., p.c., k.c.- ஆகியோர் பிறந்த மண்ணில் தான் இப்படியும் ஒரு அதிசயம்….!!!

 1. Nagendra Bharathi சொல்கிறார்:

  அருமை

 2. thiruvengadam சொல்கிறார்:

  அங்கு பேணப்படும் சுகாதாரமும் , சேவையில் ஒழுங்கும் அதை ஒத்த எந்த பெரிய நிறுவனத்துக்கும் நிகரானவை. இருபது ரூ.ல் வயிறார சாப்பிட்டு வெளிவரும் நபர்களின் திருப்தியில் காணலாம்.

 3. புது வசந்தம் சொல்கிறார்:

  நாம் வாழும் காலத்தில் சில நல்ல மனிதர்களுடன் நாமும் வாழ்கிறோம். உதவிகள் பரவட்டும்….

 4. CHANDRAA சொல்கிறார்:

  Some are born great…….
  some achieve greatness
  to some greatness is thrust upon them….
  this gentleman belongs to the second category
  let us emulate his great services ji

 5. nparamasivam1951 சொல்கிறார்:

  Great Man! I salute him! A living example!

 6. appannaswamy சொல்கிறார்:

  பழுக்கக் காய்ச்சிய இரும்புத்துண்டை அடித்து அடித்து கூர்மையாக்குவது போல, இம்மாதிரியான நல்ல செய்திகளை இடுகை மூலம் திரும்பத் திரும்ப வெளியிடுவதன்மூலம், படிப்போரின் எண்ணங்கள் திரும்பத் திரும்பப் படிப்பதின் மூலம் முறையான எண்ணங்களாக மாறும் என்பதில் மாற்றமில்லை.

 7. Senthil Kumar சொல்கிறார்:

  Did you know it or not… Because of the many political issues… recently Murugappa groups accrued Shanthi Gears…

 8. appannaswamy சொல்கிறார்:

  கடிகாரம் நேரத்தைக் காட்டும்; கைகாட்டி ஊரைக்காட்டும்; நம் செயல்களோ நம் எண்ணத்தைக் காட்டும்….– சுவாமி சித்பவானந்தர்.

 9. selvarajan சொல்கிறார்:

  ” இருந்தாலும் – மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் — இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் ” கண்டிப்பா ” சாந்தி கியர்ஸ் லிமிடெட் நிறுவனர் திரு மிகு .சுப்பிரமணியம் அவர்களுக்கு இந்தவரிகள் கண்டிப்பா பொருந்துமல்லவா … ? அடுத்து அய்யா … ! விகடனில் ஒரு செய்தி : — // கோபால் கோட்சேவுக்கு ஒரு நீதி… பேரறிவாளனுக்கு ஒரு நீதியா…? ….. http://www.vikatan.com/news/coverstory/59960-all-are-equal-before-the-law-but-is-the-law-equal.art?utm_source=newsletter&utm_medium=content&utm_campaign=2679 // ….இந்த இன்றைய தமிழகத்தின் ” ஹாட் நியூஸ் ” பற்றி … ?”

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   இது குறித்து தனியே இடுகை
   எழுதிக்கொண்டிருக்கிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 10. செந்தில் சொல்கிறார்:

  அந்த நல்ல மனிதர் வாழ்வாங்கு வாழ்க.

 11. gopalasamy சொல்கிறார்:

  Thanks for publishing this.”nallaar oruvar ularel”

 12. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  Great man,Salutations,good role model

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.