அற்புதம் அம்மாளின் கண்ணீரைத் துடைக்க முடியாதா என்ன….?

arputham ammaal

தமிழக அரசாங்கம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது
இரண்டு-மூன்று காரணங்களுக்காக இருக்கலாம் –

1) துவக்கப்பட்ட ஒரு விஷயத்தை அதன்
logical conclusion வரை
கொண்டு சென்று விடலாம் என்பதற்காக –
( 2014 -ல் தமிழக அரசு முந்தைய காங்கிரஸ் அரசுக்கு
எழுதியதற்கு அதிகாரபூர்வமாக இன்னமும் பதில் ஏதும்
மத்திய அரசிடமிருந்து வரவில்லை….
தமிழகத்திற்கு பதில் அளிப்பதற்கு பதிலாக,
மத்திய காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்திற்கு போயிருந்தது….! )

2) தமிழக மக்களின் உணர்வுகளை தேசிய கட்சிகள் என்றுமே மதிப்பதில்லை…. என்பதை மீண்டுமொரு முறை தெளிவாக வெளிப்படுத்துவதற்காக இருக்கலாம்…

இந்த வழக்கைப் பொருத்த வரையில் –
காங்கிரஸ் அரசும், பாஜக அரசும் ஒரே மாதிரி தான்….
என்பதை உறுதிப்படுத்துவதற்காகவும் இருக்கலாம்.

3) காங்கிரஸ் கட்சியுடனும், பாஜக கட்சியுடனும்
கூட்டணி வைத்துக் கொள்ளும் – மற்ற
தமிழக கட்சிகளையும் சேர்த்து expose செய்வதற்காகவும்
இருக்கலாம். இந்த விஷயத்தில் தாங்கள் எடுக்கும் நிலைக்காக
அவர்கள் கொடுக்க வேண்டிய விலை அது….

———-

– மற்றபடி, மத்திய பாஜக அரசு தமிழகத்தின் கடிதத்தில்
கூறிய விஷயங்களுக்கு ஒப்புதல் கொடுக்காது என்பது
தமிழக அரசுக்கும் நன்றாகவே தெரிந்து தான் இருக்கும்.

– இனி என்ன நடக்க வாய்ப்பு இருக்கிறது …?

– ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் – பாஜக அரசு எடுத்துள்ள
நிலையையும், நேற்றைய தினம் பாராளுமன்றத்தில்,
உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்கள் பேசியதையும்
அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் –
சாதகமான முடிவை எடுக்கும் நிலையில் அது இல்லை.

பாதகமான முடிவைத்தான் எடுக்க வேண்டி இருக்கும்.
ஆனால் அந்த முடிவை உடனடியாக தெரிவித்தால் –
அது தமிழக சட்டமன்ற தேர்தலில், பாஜக பெறக்கூடிய
கொஞ்சநஞ்ச வாய்ப்புகளையும் கெடுப்பதாகவே அமையும்
என்பது பாஜக மேலிடம் உணராததல்ல.

எனவே – மத்திய அரசு இப்போதைக்கு முடிவு எதையும்
எடுக்காது. குறைந்த பட்சம் தமிழக தேர்தல்கள் முடியும் வரை
விஷயம் பரிசீலனையில் இருப்பதாகவே காட்டிக்கொள்ளும்….!

—————–

இந்த வழக்கில், மத்திய காங்கிரஸ் அரசின் அப்பீலின் மீது
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம் –
மாநில அரசின் உரிமைகள் பாதிக்கப்பட்டிருப்பதை பற்றி
எந்த தமிழக அரசியல் கட்சியும் கவலைப்பட்டதாக
தெரியவில்லை.

Section 435 of the Criminal Procedure Code
என்ன கூறுகிறது…. ?

The powers conferred by sections 432 and 433
upon the State Government to remit or commute
a sentence, in any case where the sentence is
for an offence –
………
………
-shall not be exercised by the State Government
except after consultation with the Central
Government.

இதில் –

” consultation means concurrence ”

என்று நீதிமன்றம் இப்போது தீர்ப்பு கூறி இருக்கிறது.

இது ஒரிஜினல் சட்டத்தில் இல்லை.
நீதிமன்றம் கொடுக்கும் விளக்கம் தான்.
ஒரிஜினல் சட்டத்தில் குழப்பம் இருந்தால் தானே
வியாக்கியானம் தேவைப்படும்.
ஒரிஜினல் சட்டத்தை இயற்றியவர்கள் ஆங்கிலம் நன்கு
தெரிந்தவர்கள் தானே…? அவசியம் என்று கருதி இருந்தால்,
அவர்களே அங்கு ” except after concurrence of the
Central Government ” என்று போட்டிருக்க மாட்டார்களா?

சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளைப் பற்றிய
முடிவுகளை எடுக்கும் முழு உரிமையும் மாநில அரசுகளைச்
சார்ந்தவை என்கிற பொருளில் தான் சட்டத்தின் இந்தப் பிரிவு
இயற்றப்பட்டிருக்க வேண்டும்…

எனவே, இந்த தீர்ப்பு நிச்சயம் கேள்விக்குரியது…
அது அப்பீலின் மூலம் தான் நடக்கக்கூடும்.
உச்சநீதிமன்றத்தின், இன்னொரு அரசியல் சட்டப்பிரிவு தான்
அதை விசாரிக்க முடியும். இதெல்லாம் இப்போதைக்கு
நடக்கக்கூடிய காரியமா …? இப்படி ஒரு அப்பீல் போடப்பட்டால்
அதில் தீர்ப்பு வர 5 வருடமும் ஆகலாம் – 10 வருடமும்
ஆகலாம்…

——————-

தமிழக அரசின் கடந்தகால செயல்பாடுகளை வைத்துப்பார்த்தால் –
நீதிமன்ற தீர்ப்புகள் அதற்கு பாதகமாக வரும்போதெல்லாம் –
அப்பீல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.
எனவே, இந்த வழக்கிலும் உச்சநீதிமன்ற அரசியல் சட்ட பிரிவு
கொடுத்த –

” consultation means concurrence ”

என்கிற தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யவே விரும்பும்…
அதைத்தான் தமிழக தலைமைச்செயலர், மத்திய உள்துறை
செயலருக்கு எழுதிய கடிதத்திலும் தெரிவித்திருக்கிறார்…

“We would like to clarify that this communication
is being sent to you without prejudice to our right
to move the Supreme Court to review its
judgement dated December 2, 2015 wherein
the Constitution Bench had taken the view that
the word ‘consultation’ used in Section 435 of CrPc
means ‘concurrence’ and without prejudice
to our rights and contentions in the writ plea,”

– இருந்தாலும் –

மீண்டும் செய்யப்போகும் அப்பீலில் முடிவு தெரிவதற்கு
ஆண்டுகள் பல ஆகலாம் என்பதாலும்,
தமிழகத்தின் வேண்டுகோளுக்கு மத்திய அரசு
ஒப்புதல் கொடுக்கப்போவதில்லை என்பதாலும், –

சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அப்பீலையும் சமர்ப்பித்து விட்டு –

தானே ஒரு முடிவிற்கு வந்து –
அரசியல் சாசன பிரிவு 161-ல் மாநில அரசுக்கு
கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி,
சிறையில் இருப்பவர்களை
விடுவிக்க தமிழக அரசு முடிவெடுக்கலாம்.

– இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் அறிவிப்புகள் வெளியாகி விடும் என்கிற நிலையில் தமிழக அரசு
மிக விரைந்து செயல்பட வேண்டியிருக்கும்.

24 ஆண்டுகளாக வெஞ்சிறையில் வாடுபவர்களை
விடுவிப்பதில் தமிழக அரசு உண்மையாகவே அக்கரை
கொண்டிருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

எப்படியும் நல்ல முடிவு விரைவில் வரும்…
வர வேண்டும் என்று நாம் விரும்புவோம் –
வேண்டுவோம்.

அற்புதம் அம்மாளின் கண்ணீர்
துடைக்கப்பட வேண்டும் –
அவர் முகத்தில் ஆனந்தச் சிரிப்பை காண வேண்டும்
அது தான் நம் எல்லாருடைய விருப்பமும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to அற்புதம் அம்மாளின் கண்ணீரைத் துடைக்க முடியாதா என்ன….?

 1. Antony சொல்கிறார்:

  //24 ஆண்டுகளாக வெஞ்சிறையில் வாடுபவர்களை
  விடுவிப்பதில் தமிழக அரசு உண்மையாகவே அக்கரை
  கொண்டிருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்//

  Unkal nampikkai unmai aakaddum…

 2. selvarajan சொல்கிறார்:

  ராஜீவ் கொலை வழக்கு – கலைஞரால் தீர்ப்பை ஒத்திவைக்கத்தானே முடியும் ? மாற்றி விடவும் கூடுமோ …?
  Posted on ஏப்ரல் 24, 2014 by vimarisanam – kavirimainthan … என்ற இடுக்கையில் பாராளுமன்ற // தேர்தல் நேரத்தில் தீர்ப்பை வெளியிடுவது முறையாக இருக்குமா
  என்று உச்சநீதிமன்றம் பரிசீலிக்க வேண்டுமென்றும், “நீதிபதி
  சதாசிவம் அவர்கள் எனக்கும் வேண்டப்பட்டவர் தான்” என்றும்
  கலைஞர் பகிரங்கமாகப் பொதுக்கூட்டத்தில் பேசியது —- பாதிக்கப்பட்டவர்கள்
  மனதில் வருத்தத்தையும் அச்சத்தையும் தோற்றுவிக்காதா ?இதற்கெல்லாம் இந்த முதியவர் நிச்சயம் ஒரு நாள்
  “ஒருவர்” முன்னால் பதில் சொல்ல வேண்டியிருக்கும்…
  அப்போது இவருடன் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்…
  இவர் செய்த வினைகள் தான் துணை இருக்கும்…
  முடிந்தால், கலைஞர் அங்கு தனக்கு கிடைக்கக்கூடிய
  தீர்ப்பை மாற்ற முயற்சிப்பது நல்லது. // என்று பதிவிட்டு இருப்பிர்கள் — அது இபோதைய தேர்தல் நேரத்திலும் பொருந்தும் போல தெரிகிறது — ஏனென்றால் தற்போதைய ஜெயாவின் ஏழு பேரின் விடுதலை குறித்த நடவடிக்கைக்கு இதுவரை ” வாய் திறக்காமல் ” இருக்கிறாரே — கலைஞர் — அவர் தற்போது ” கூடிய நட்புடன் ” காங்கிரசோடு கை கோர்த்து இருப்பதால் வாய் திறந்து பழைய பாராளுமன்ற தேர்தலின் போது சொன்னதை போல எதையாவது கூறி முட்டுக்கட்டை போடாமல் இருந்தால் நல்லது தானே

 3. வெ.க.சந்திரசேகரன் சொல்கிறார்:

  அற்புதம்மாளின் கண்ணீர் எவ்வாறு துடைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்,பிதாவே இவர்கள் செய்தது இன்னதென்று அறியாமல் செய்தது எனவே இவர்களை மண்னியும் என்ற ரீதியிலா அல்லது நாங்க ஒருத்தர கொன்னோம் அதுக்கு தா 24 வருடங்கள் வெஞ்சிறையில் இருந்து விட்டோமே இதுக்குமேலேயும் உள்ள இருக்கனுமா என்ற கேள்வியி்ன் அடிப்படையிலா என்பதை தெளிவுபடுத்தினால் நல்லது. இன்னமும் ராஜீவ் கொலையாளிகளுக்கு கரு்ணை கூடாது என்று சொல்ல கூடிய தமிழர்கள் இருக்கின்றனர் இந்த சூழ்நிலையில் அவர்களெல்லாம் தமிழின விரோதிகளாக பார்க்கப்பட வேண்டியவர்களா? தேர்தலுக்கு தேர்தல் மட்டுமே இதை அரசியல் பிரச்சனையாக்கும் தமிழக அரசியல்வாதிகள் அற்புதம்மாளின் கண்ணீரை துடைப்பதில் உண்மையாகவே அக்கறையுடன் உள்ளனரா அல்லது அவரது கண்ணீரை வாக்காக்கும் அரசியல் ராஜ தந்திரமாக பயன்படுத்தப்போகின்றனரா.ராஜீவ் கொலையாளிகளுக்கான மண்னிப்பும் விடுதலையும் கசாப்,அப்சல்குரு மற்றும் யாகூப் மேமன் போன்றோரை நிம்மதியாக தூங்கவிடுமா அல்லது ராஜீவுடன் சேர்ந்து பலியானோரை தான் தூங்கவிடுமா. நளினிக்கு தண்டனை குறைப்பு பற்றி சோனியாவின் கருத்துகள் செவிமடுக்கப்பட்ட அளவு அவருடன் பலியாகிய ஏனைய காவல்துறை,கட்சியினர் குடும்பத்தினரின் கருத்துகள் செவிமடுக்கப்பட்டனவா.

  • Tamilian சொல்கிறார்:

   What you have stated is true. This matter is not the poll issue. If it is so, then MDMK would have been the ruling party on TN. Mr K M said he was agreeing with Mr Cho on political issues mostly. I feel Mr. Cho would not have agreed with Jaya government stand on 7 convicts. Majority may be against their release or not bothered if they remain incarcerated or. Released because that does not affect our day to day lives.

   • thiruvengadam சொல்கிறார்:

    Now fight is going to harvest the Credit on this. After tha Apex court shown green signal , if interested to do them best , a smooth approach with centre by State would have settled long back.Pl note the Ultimatam as 3 days to respond by State to Centre. Will the State govt ok if a municipolity wrote like this ? Even now why this govt atleast inform the detail to not possible to release on other rule which many say. The action by State govt is to get Credit if they come out if otherwise clean their hands by pointing others. In this situation a special feasibility of granting Bail Release by State govt itself to atleast Indian Citizens of the 7 may be consulted with legal experts.

 4. selvarajan சொல்கிறார்:

  // ‘ஜெயலலிதாவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த ஓ.பி.எஸ்.’! …….. http://www.vikatan.com/news/tamilnadu/60015-ops-overtake-jayalalitha-in-google-trends.art?utm_source=newsletter&utm_medium=content&utm_campaign=2679 // ….. எப்படியெல்லாம் செய்திகளை போட்டு — கலைஞர் குடும்ப ஆட்சிக்கு வழி தேடுகிறார்கள் … ! வாட்ஸ்அப் — டிவிட்டர் போன்றவற்றிலும் ஓ. பி . எஸ் . சை பல விதங்களில் தனிக்கட்சி தொடங்குங்கள் போன்றவற்றை பரப்பி — ஜெயாவிடம் இருந்து பிரிக்க முயலும் ” கயவர்கள் ” யார் என்று ஓரளவு சூசகமாக அறியலாம் தானே … ?

 5. selvarajan சொல்கிறார்:

  தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, ஏழு பேரை விடுதலை செய்ய — மாநில அரசின் நடவடிக்கையில் பின்னடைவு ஏற்படுமா … ? தேர்தல் நடத்தை விதிகளின்படி விடுதலை என்பது சாத்தியமா … ? தேர்தல் ஆணையத்திடம் முன்னனுமதியை பெற்று விடுதலை செய்ய முடியுமா … ? திடிரென்று தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்தது — இவர்களை விடுதலை செய்து தமிழக ஆளும் கட்சி பெயர் வாங்கி விட கூடாது என்பதில் மத்திய அரசின் தலையீடு இருந்திருக்குமா … ? ஏகப்பட்ட சந்தேகங்கள் — என்ன செய்வது …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   இனி இது இறைவனின் கரங்களில் ….!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. Ns raman சொல்கிறார்:

  Our great leaders while framing constitution never envisaged powers given to authorities will be used for political gain by our present day cheap politicians by way of supporting the convicted hard core Criminals. In the name of “Tamil branding” supporting these criminals is a shame on us.

  This case was thrice dealt by Supreme Court and never said these criminals are innocents. Their involvement in crime is proved beyond doubts and accepted by the SC. By honoring these terrorists as innocents, we are insulting our judiciary which is a last recourse for the common man who died with Rajiv Gandhi.

  Supreme Court overruled special powers granted to President of India for the reasons due to delay in taking decision on mercy petition also not envisaged by our constitution experts. When the State government is taking hurried decision for gaining political mileage, it is a responsibility of SC to stop such things and provide right direction and interpretation to constitution.

  This is a matter involving terrorism and it should be better dealt by Judiciary not by the Cheap Politicians for their election vote bank.

 7. Sampathkumar.K. சொல்கிறார்:

  Mr.N.S.Raman,

  Will you please say how and why
  Gopal Gotse, who was part and parcel of
  Gandhiji”s killers and imposed with life sentence
  was released by the
  then Maharashtra Congress Govt. ?

  • Ns raman சொல்கிறார்:

   Dear Sir
   I am not supporter of Gotse or any criminals release by the State for political gain.
   As a common man believing judiciary, even though some deficiency in our judicial system. As per constitution even hard core terrorists got an opportunity to present their case. My point is once judiciary is functioning there should not be a political intervention for cheap vote politics. Convicted party in the subject case have got all the right to approach for SC for appeal and seeking clarification. But State should not spend tax payers money for SC appeal for helping terrorist in this case.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்ப ராமன்,

    உங்களைப் பொருத்த வரை –
    மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி -ஜியை விட
    ராஜீவ் காந்தி-ஜி உயர்ந்தவரோ …?

    காந்திஜியின் கொலையில் நேரடியாக
    சம்பந்தப்பட்டிருந்தேன்
    என்று பெருமையோடு ஒப்புதல்
    வாக்குமூலம் அளித்தவரே
    15 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை
    செய்யப்பட முடியுமானால்,

    நேரடியாக கொலையில் சம்பந்தப்படாத,
    24 ஆண்டுகளை
    ஏற்கெனவே கொடுஞ்சிறையில் கழித்து விட்ட
    சிலரை விடுவிப்பது எந்த விதத்தில்
    உங்களை பாதிக்கிறது என்பதை
    என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை…!

    நீதிமன்ற தீர்ப்பைப் பற்றி இவ்வளவு
    கவலைப்படுகிறவர் –
    அரசியல் சட்ட விதிகளைப்
    புரிந்துகொள்ள மறுப்பது எப்படி …?

    இவர்களை விடுவிக்க வேண்டும் என்று
    யோசிப்பதும், முடிவெடுப்பதும் –
    முழுக்க முழுக்க அரசியல் சட்டமும்,
    கிரிமினல் ப்ரொசீஜர் கோட் சொல்லும்
    விதிகளின்படியும் தான்.

    சட்டம் அனுமதிக்காத, அரசியல் சாசனம் தராத –
    எந்த அதிகாரத்தையும் –
    மாநில அரசோ, மத்திய அரசோ
    பயன்படுத்த முடியாது என்கிற நிலையில் –
    இவர்களின் விடுதலையை நீங்கள் இவ்வளவு
    அதிதீவிரமாக எதிர்ப்பது எப்படி என்று என்னால்
    புரிந்து கொள்ள முடியவில்லை….

    முழுக்க முழுக்க மனிதாபிமான
    அடிப்படையில் யோசிக்கப்படும்
    இந்த விஷயத்தை,
    அரசியல் சட்டம் அனுமதிக்கும் இந்த விஷயத்தை –

    இவ்வளவு மூர்க்கமாக எதிர்ப்பவர்களிடம்
    இருக்கும் “மனிதம்” பற்றியே
    சந்தேகம் தான் எழுகிறது….

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • Ns raman சொல்கிறார்:

     Dear Mr KM
     humanity for human beings not for terrorists. I do not have any personal enimity with terrorists and supporting a terrorist is no way being human.

     Direct or indirect involvement of convinced already analysed by highest judiciary not by you and me. All human life’s are same Gandhi rajiv and other 15 people killed.

     Already they got a reduction from death to life sentence by judiciary so let them also decide about release not by the politicians.

 8. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  தர்க்கபூர்வமாக விவாதிக்க விரும்பாமல்,
  பிடிவாதமாக தங்கள் கருத்தையே சொல்லிக் கொண்டிருப்பவர்களுடன்
  தொடர்ந்து விவாதம் நடத்தி பயன் ஏதும் இல்லை என்பதால்,
  நான் இனி ஏதும் சொல்ல விரும்பவில்லை.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.