சஞ்சய் காந்தியை பார்த்திருக்கிறீர்களா …? ( அவர் சம்பந்தப்பட்ட ஒரு வீடியோ….)

Sanjay_Gandhi

திருமதி இந்திரா காந்தியின் இளைய மகன்
( ராஜீவ் காந்தியின் தம்பி ) சஞ்சய் காந்தி –
இன்றைய தலைமுறையினருக்கு அவரை தெரிந்திருக்க
வாய்ப்பில்லை.

டிசம்பர், 1946-ல் பிறந்து, ஜூன் 1980-ல் – 33 வயதிலேயே
அகால மரணம் அடைந்த ஒரு மிக மிக வித்தியாசமான
இளஞர் சஞ்சய் காந்தி.

அவரது அகால மரணத்திற்கு காரணம் – அவரே தான்.
டெல்லியின் வானப்பிரதேசத்தில், சிறு விமானம் ஒன்றை
அவரே ஓட்டிச்சென்று, சில சாகசங்களில் ஈடுபட முயன்றபோது,
கட்டுப்பாட்டை இழந்து விமானம் விபத்திற்குள்ளானதன்
விளைவாக உயிரிழந்தார் சஞ்சய் காந்தி.

( சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்துபோன நாளில்,
நான் டெல்லியை ஒட்டிய ஒரு இடத்தில் தான் பணிபுரிந்து
கொண்டிருந்தேன்… அந்த பழைய நினைவுகள் இன்னமும்
ஊசலாடிக் கொண்டிருக்கின்றன ….)

சர்வ அதிகாரம் பொருந்திய பிரதமராக திருமதி இந்திரா காந்தி
ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் – அவரது மகன்
என்கிற ஒரே பின்னணிய வைத்துக் கொண்டு –

1971-ல் துவங்கி அடுத்த பத்து ஆண்டுகளுக்கு டெல்லியில்,
காங்கிரஸ் கட்சியையும், மத்திய அரசையும் –
எந்தவித அதிகாரபூர்வமான பதவியில் இல்லாதபோதும்,
ஆட்டிப்படைத்தவர் சஞ்சய்…

பல மூத்த காங்கிரஸ் தலைவர்களே சஞ்சய் காந்தியை
கண்டு நடுநடுங்கினார்கள். சஞ்சய் டெல்லியில் படுத்திய பாடு
கொஞ்சம் நஞ்சமல்ல. ஒரு சமயத்தில், இந்திரா காந்தியையே
மிரட்டி தன் வழிக்கு கொண்டு வர முயற்சித்தவர் சஞ்சய்.

எமெர்ஜென்சிக்கு முன்னரும், எமெர்ஜென்சியின்போதும் –
அவரது கொடூர முகம் வெளிப்பட்டது.
டெல்லியில் – கட்டாய குடும்ப கட்டுப்பாடு,
டர்க்மான் கேட்டில் அராஜகம், போலீஸ் துப்பாக்கிச்சூட்டில்
150 பேர் இறந்தது, தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து –
டெல்லியை டெர்ரரைஸ் செய்தது….
என்று பல அட்வென்சர்கள்…..
அந்தக்கால மனிதர்களுக்கு சஞ்சய்காந்தியை
பற்றிய செய்திகள் இன்னமும் நினைவில் இருக்கலாம்.

நேற்று, எதேச்சையாக சஞ்சய் காந்தி சம்பந்தப்பட்ட
ஒரு குறு வீடியோவை பார்த்தேன். இந்தி நடிகர் திலீப்குமார்
நிகழ்த்தும் – பிரபல இந்தி திரைப்பட இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மனின் ஆர்கெஸ்டிரா நிகழ்ச்சியில்

சஞ்சய் காந்தியும் கலந்து கொண்டு ஒரு நிமிடம் பேசுகிறார்.

அந்த காலத்தில் வீடியோ, டெலிவிஷன் போன்றவை
இந்தியாவில் பரவவில்லை. டெல்லியிலும், இன்னும்
ஒன்றிரண்டு நகரங்களிலும் மட்டுமே வந்திருந்தது.
எனவே சஞ்சய் காந்தி சம்பந்தப்பட்ட வீடியோக்கள்
இருப்பது அபூர்வமே.

எனவே, இந்த வீடியோவை கண்டவுடன் நண்பர்களுடன்
பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. சஞ்சய் காந்தி
சம்பந்தப்பட்ட வேறு எதாவது வீடியோ இருக்கிறதா என்று
தேடினேன்….

சஞ்சய் காந்தியின் இறப்பு குறித்த ஒரு வீடியோ கிடைத்தது.
கிடைத்ததை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்….

மிகவும் அபூர்வமான வீடியோ கீழே இருப்பது.
சில விஷயங்களை தெரிந்து கொண்ட பிறகு இந்த
வீடியோவை பார்ப்பது உதவியாக இருக்கும் –

சஞ்சய் காந்தியின் சிதைக்கு தீ வைப்பது அவரது
அண்ணன் ராஜீவ் காந்தி.( அந்த சமயத்தில், கருப்பு தாடி,
மீசையுடன் ராஜீவின் கூடவே இருப்பவர் தான் திருமதி
இந்திரா காந்தியின் ராஜகுரு என்றழைக்கப்பட்ட-
தீரேந்திர பிரம்மச்சாரி. எம்ஜிஆரும், நெடுஞ்செழியனும்
கூட மரியாதை செலுத்த வந்திருந்தார்கள். )
பரிதாபமான நிலையில், இந்திராவின் அருகே
அமர்ந்திருப்பவர் 24 வயது கூட நிரம்பாத,
சஞ்சய் காந்தியின் மனைவியும், மூன்று மாத
குழந்தையான வருண் காந்தியின் தாயுமான –
மேனகா காந்தி…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to சஞ்சய் காந்தியை பார்த்திருக்கிறீர்களா …? ( அவர் சம்பந்தப்பட்ட ஒரு வீடியோ….)

 1. LVISS சொல்கிறார்:

  Rare video – —

 2. புது வசந்தம் சொல்கிறார்:

  நல்ல வேளை அந்த வித்தியாசமான இளைஞரிடம் இருந்து இந்தியா தப்பியது.

 3. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  சஞ்சய் காந்தி இறந்ததை ரேடியோ மதியம் ஒலிபரப்பியபோது, நான் 12ம் வகுப்பு, ஹாஸ்டலில் உணவருந்திக்கொண்டிருந்தோம். அப்போது, என் நண்பன் (காங்கிரஸ் அனுதாபி) வருத்தப்பட்டுக் கண்ணீர் உகுத்தது ஞாபகம் வருகிறது. சஞ்சய் காந்தியின் aggressive nature, அதிகாரம் அவரின் மூளையில் ஆட்சி செலுத்திக்கொண்டிருந்த நேரம். (அவரின் கொலைக்கு இந்திரா காரணம் என்னும் வதந்தியும் வெளிவந்தது). சஞ்சய் இந்திராவின் aggressive natureஐயும், ராஜீவ் காந்தி, soft natureஐயும் கொண்டிருந்தனர்.

 4. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  விதிதான் எப்படி சோனியா, ராஜீவ் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது? அதிகாரமிக்க பதவியில் இருந்தாலும், எத்தனை சோதனைகளை இந்திரா அம்மையார் சந்திக்க வேண்டி இருந்தது? எந்த அதிகாரமும், புலியின்மேல் சவாரி செய்வது போன்றது. இன்றைக்கும், தன் உடல் நிலை சரியாக இல்லாவிட்டாலும், காங்கிரஸின் வேலைப் பளுவை சோனியா அவர்கள் கடந்த 6-7 வருடங்களாகச் சுமந்துகொண்டிருக்கிறார்கள். இது அவரின் கடமையாகிவிட்டது. ராகுல் முழுமையாக அந்தக் கடமையை ஏற்றுக்கொள்ளும் காலம் வரை, சோனியா கஷ்டப்படத்தான் வேண்டும்… வெளியே இருந்து பார்ப்பதற்கு தலைமை, அதிகாரத்தில் இருப்பவர்கள் சௌகரியமாகவும், சந்தோஷமாகவும் இருப்பதாக நாம் நினைத்தாலும், அவர்களும் நம்மைப்போலவே, எல்லாக் கஷ்டங்களையும், துக்கங்களையும், பயத்தையும் அனுபவிக்கிறார்கள். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. அதிலும் அரசியலில், சொந்த உறவினர்களிடமும் அரசியல் செய்வதைத் தவிர்க்க இயலாது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.