“ப்ரகாஷ்” – ஜீ – “இது” நிஜமா ..? ஒரு மத்திய மந்திரிக்கு “இது” தகுமா…?

prakashandvijaykanth

கீழே முதலில் கொடுத்திருப்பது ஒரு தமிழ் நாளிதழில்
வெளிவந்த செய்தி –

pr-1

pr-2

விஜய்காந்த்துடனான அவரது சந்திப்பும், உரையாடலும்
எந்த அளவிற்கு உண்மையோ நமக்குத் தெரியாது…
“இது நிஜமா ?” என்று அவரே சொன்னால் தான் உண்டு…!

ஆனால், அடுத்து கீழே கொடுக்கப்பட்டிருப்பது –
அவசியமான, அதிகாரபூர்வமான – நிகழ்ச்சியாக –
எதுவுமே இல்லாமல் அவர் –
சென்னை வந்தது பற்றிய செய்தியை உறுதி செய்யும் –
“ஹிந்து” நாளிதழில் ( மார்ச், 4-ந்தேதி ) வெளிவந்த செய்தி –

Later, Mr. Javadekar proceeded to attend
an event at the Anna University’s
National Centre for Sustainable Coastal Management,

funded by the
Union Environment Ministry, before leaving
for New Delhi on a 5.30 p.m. flight.

A top official of the University confirmed
that –

– the visit was unscheduled.
“He asked us to make a presentation on what the
Centre has done so far.

Both the Vice Chancellor and the Registrar
were away when he arrived in the
afternoon at 2.30 pm,”
said the official.

————————————-

ரகசியமாக “வித்தியாசமான பெயரில் ” ( ப்ரகாஷ் )
விமானப்பயணம் செய்வதும்,
பின்னர், ஒரு அதிகாரபூர்வமான பயணமாக
அதைச் சித்தரிக்க –
செயற்கையாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யச்சொல்லி
பல்கலைக்கழகத்தை பயன்படுத்துவதும் –

ஒரு மத்திய மந்திரி செய்யக்கூடிய
கௌரவமான செயல்களா …?

( விஜய்காந்த்தை துரத்திச் சென்று ரகசியமாக சந்திப்பது
அவரது சொந்த விருப்பம் மற்றும் சொரணை சம்பந்தப்பட்ட
விஷயம் என்பதால் – அதை இங்கு குறிப்பிடவில்லை…! )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to “ப்ரகாஷ்” – ஜீ – “இது” நிஜமா ..? ஒரு மத்திய மந்திரிக்கு “இது” தகுமா…?

 1. LVISS சொல்கிறார்:

  Just now a news item appeared that representatives of the DMDK are going to Delhi to meet Javdekar –Whether they will be able to meet the minister or whether Javdekar will be ready to meet them will be known in a day — We have to expect any thing on today’s calculation politics–

 2. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  ஜவடேக்கர் அவர்கள் இப்போது Task Master பொறுப்பை ஏற்றுள்ளார். பா.ஜ.க எண்ணம் தமிழ் நாட்டில் காலூன்றுவது மட்டுமல்ல, எதிர்காலத்தில் ராஜ்ஜிய சபா எம்.பிக்களைப் பெறுவதும்தான். அதனால், இந்த அளவுக்கு இறங்குவதைக் குற்றம் சொல்ல முடியாது. (‘நாளைக்கு தேதிமுக, திமுகவுடன் சேர்ந்தால், பா.ஜ.க மேலிடத்துக்கு இது பெரும் பின்னடைவைத் தரும். அதனால்தான் வெளிப்படையாகத் தெரியும்படி அமைச்சர் நடந்துகொள்ளவில்லை).

  மத்திய அமைச்சரான (‘நிதி மந்திரியாக இருந்தபோது என்று நினைக்கிறேன்) பிரணாப்பை, கருணானிதி உட்கார்ந்துகொண்டுதான் வரவேற்றார். ஜனாதிபதி ஆனபோதும், கருணானிதியை வீடு தேடித்தான் அவர் சந்தித்தார். இது காங்கிரஸ் தலைவர்களுக்கும், ப.சிக்கும் பொருந்தும்.

  நாம், தேதிமுகவுக்கு 6 சதவிகித ஆதரவு கொடுக்கும் மக்களைத்தான் ஜன’நாயகத்தில் நொந்துகொள்ளவேண்டும்.

  என்னைப் பொருத்தவரையில், மத்தியில் ஒரு பதவி வாங்கிக்கொண்டு, பாஜகவுடன் நிற்பதுதான், விஜயகாந்தின் அரசியலுக்கு நல்லது. 5 வருடங்களில், தனித்து, முதலமைச்சராக வருவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. மக்கள், திமுக அதிமுகவுக்கு மாற்றாக தேதிமுகவைத்தான் நினைப்பார்கள். அவர்கள்தான், சாதிப் பின்புலம் இல்லாதவர்கள். நடுனிலையாக ஆள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

 3. gopalasamy சொல்கிறார்:

  One more news. In running car itself Alliance talks between Vijayakandh and representatives of DMK. (Dinamalar)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.