மந்திரிகுமாரரின் ஒத்தை ரூபா சொத்து ….!!!

.

.

ஆங்கில செய்தித்தளம் ஒன்று திடீரென்று வில்லங்கமான
விவரங்களை வெளியிடுகிறது.
எந்தெந்த நாடுகளில்,
எந்தெந்த விதத்தில்,
எந்தெந்த சொத்துக்களில்,
எந்தெந்த நிறுவனங்களில்,
எவ்வளவு லட்சம் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது
என்று மிக விவரமாக தகவல்களைத் தருகிறது…. !

மறுநாள் வழக்கமான பாராளுமன்ற நடவடிக்கைகள்
நிறுத்தப்பட்டு, முன்னாள் மந்திரியின் குமாரர் சட்டவிரோதமாக
சேர்த்து வெளிநாடுகளில் முதலீடு செய்திருக்கும் சொத்துக்களை
பற்றிய அதிகாரபூர்வமான தகவல்களை வெளியிட வேண்டும்
என்றும், அதன் மீதான உடனடியாக விசாரணை நடத்தப்பட
வேண்டுமென்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

மந்திரிகுமாரர் ( இப்போது முன்னாள் மந்திரி என்றாலும்
இந்த சொத்துப் பரிமாற்றம் நடந்தபோது அவர்
முன்னாள் அல்ல – பதவியில் தான் இருந்தார்….! )
ஒத்தை வரியில் ஒரு மறுப்பு அறிக்கை வெளியிட்டார்….
“நான் செய்யும் தொழில்கள் அனைத்துமே அரசாங்கத்தின்
சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தான் செய்யப்படுகின்றன…..!”

பல வருடங்கள் மத்திய உள்துறை அமைச்சராகவும்,
நிதி அமைச்சராகவும் பதவி வகித்து –
CBI,
Central Vigilance Commission,
Income Tax Department,
Enforcement Directorate,
ஆகிய “கருப்புப் பணம்” மற்றும், “அந்நியச்செலாவணி ஊழல்”
ஆகியவற்றை விசாரிக்கும், கண்காணிக்கும் துறைகளை
நிர்வகித்து வந்த ( இப்போதைய ) – முன்னாள் அமைச்சர்
சொல்கிறார்…

” என் மகனிடம், மறைக்கப்பட்ட சொத்து ஏதும்
இருந்தால் அதுகுறித்த விவரங்களை மத்திய அரசு
தாராளமாக வெளியிடலாம். அவற்றையெல்லாம்
ஒரு ரூபாய்க்கு அரசிடம் விற்பதற்கு அவர்(மகன்)
தயாராக இருக்கிறார்…”

அத்தனைக் காலம் அமைச்சராக இருந்து நிர்வகித்த
சட்டங்களில் உள்ள ஓட்டைகளை எல்லாம்
சரியான விதத்தில் பயன்படுத்திக் கொண்டு, அதோடு
கைதேர்ந்த வக்கீலின் சிறந்த மூளைத்திறனை கலந்து –
தந்தையும் மகனுமாக சேர்ந்து செய்த முதலீடுகளை
இன்றைய அரசு நிர்வாக எந்திரங்களால் எந்த காலத்திலும்
ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியாது என்கிற தைரியம்….?

மறைக்கப்பட்ட அல்லது கணக்கில் வராத சொத்து யாரிடம்
இருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும், அதை மத்திய அரசு
கைப்பற்றுவதோடு மட்டும் அல்லாமல் சம்பந்தப்பட்டவரின்
மீது கிரிமினல் வழக்கும் தொடரும் என்பது
இத்தனை இலாகாக்களை நிர்வகித்த
இந்த முன்னாள் மந்திரிக்கு தெரியாதா என்ன …?

கணக்கில் வராத கருப்புப்பண சொத்தை
மத்திய அரசு காசு கொடுத்து வாங்கிக்கொள்ளுமா…?
இவர் பதவியில் இருந்தபோது அப்படி ஒரு சட்டம்
போட்டு வைத்திருக்கிறாரா என்ன …?

யாருக்காக இந்த கதை வசனம் எல்லாம்…?
தேர்தல் கூட்டங்களில் பேச நேர்ந்தால் –
அதற்கான “ஒத்திகை”யா….?

ஒருவேளை “கருப்புப்பண சொத்து கண்டுபிடிக்கப்பட்டால் –
கண்டுபிடிப்பவருக்கே அதை கொடுத்து விடுகிறேன்”

என்று சொன்னாலாவது –

டாக்டர் சுப்ரமணியன் சுவாமிக்கு அந்த அதிர்ஷ்டம்
அடித்தாலும் அடிக்கலாம்….!!

முன்னாள் மந்திரியின் இந்த அறிக்கைக்கு
டாக்டர் சு.சுவாமி என்ன பதில் சொல்கிறார் என்று
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to மந்திரிகுமாரரின் ஒத்தை ரூபா சொத்து ….!!!

 1. Ganpat சொல்கிறார்:

  மன்னிக்கவும் கா.மை.ஜி.The ball is in Modi’s court now.
  குற்றத்தை நிரூபிக்க வேண்டியது அரசின் வேலை.குற்றம் நிரூபிக்க படும் வரை சிதம்பரம் நிரபராதியே.இந்த இரண்டு ஆண்டுகளில் காங்கிரஸ் அமைச்சர்கள் மீது ஒரு சிறிய குற்றச்சாட்டு கூட பதிவு செய்யவில்லை இந்த அரசு.

  • Sampathkumar.K. சொல்கிறார்:

   // குற்றத்தை நிரூபிக்க வேண்டியது அரசின் வேலை.
   குற்றம் நிரூபிக்க படும் வரை சிதம்பரம் நிரபராதியே.//

   அப்புறம் ஆ.ராஜா மட்டும் என்ன பாவம் செய்தார் ?
   அவரை ஏன் உள்ளே போட்டீர்கள் ?
   இவ்வளவு பாடு படுத்தினீர்கள் ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கண்பத்,

   முதலிலேயே சொல்லி விடுகிறேன்.
   நீங்கள் இங்கே சொல்லி இருப்பது தான் உங்களின்
   நிஜமான கருத்து என்பதை என்னால் நம்ப முடியவில்லை…!

   விஷயத்திற்கு வருவோம்-

   “குற்றத்தை நிரூபிக்க வேண்டியது அரசின் வேலை” –

   -நிச்சயமாக இது அரசின் வேலை தான். ஆனால்
   நம் நாட்டின் புலனாய்வு நிறுவனங்களின் சக்தி, திறன் ஆகியவற்றையும், நீதித்துறை செயல்படும் வேகத்தையும்
   கண்கூடாகப் பார்க்கிறோம்.

   10 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட “லலித் மோடி”
   அந்நியச் செலாவணி மோசடி விவகாரம்,

   8 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட கே.டி.பிரதர்ஸ்
   BSNL கேபிள் விவகாரம்,

   5-6 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட 2ஜி வழக்குகள்,
   எல்லாம் எந்த நிலையில் இருக்கின்றன….?

   முதல் இரண்டு விஷயங்களில் இன்னமும் விசாரணையே
   முடியவில்லை. கேட்டால், சம்பந்தப்பட்ட
   வெளிநாடுகளிலிருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை
   என்று மத்திய புலனாய்வு நிறுவனமே சொல்கிறது.

   இவர்களை எல்லாம் நம்பித்தானே நமது
   கிரிமினல் வக்கீலும்
   அவர் பிள்ளையும் –
   14 வெளிநாடுகளில் முதலீடுகள் …???

   ஒரு மலேஷியாவிலிருந்தே தகவல் பெற முடியாத
   ஏஜென்சி, 14 வெளிநாடுகளிலிருந்து எந்த காலத்தில்
   ஆதாரங்களை திரட்டுவது…?
   அதன் பின்னர் நீதிமன்ற நடைமுறைகள் …!!!

   அதற்குள்ளாக இரண்டு பாராளுமன்ற தேர்தல்கள்
   வந்து சென்று விடும். நம் நாட்டு மக்கள் மீண்டும்
   காங்கிரஸைத் தேர்ந்தெடுத்தால் – இவரே மீண்டும்
   மத்திய மந்திரியும் ஆக, அதே இலாகாக்களுக்கு
   பொறுப்பாளரும் ஆக – நிறையவே வாய்ப்புகள்
   இருக்கின்றன…!

   இப்போது நம் நாட்டில் இருக்கும் நடைமுறைகளின்படி,
   என் வாழ்நாளுக்குள், இந்த வழக்கு முடிவடைய
   வாய்ப்பே இல்லை.

   எனவே, குற்றவாளிகள் என்று கூறமுடியாது
   என்பது சரி தான் என்றாலும் –

   நீங்கள் வேண்டுமானால் – குற்றம் நிரூபிக்கப்படும் வரை
   தந்தையும், மகனும் “அப்பிராணிகள்” என்று சொல்லி விட்டு
   போங்கள் –

   ஆனால், என்னை பொருத்த வரை இவர்கள் –
   லலித் மோடியைப் போல, மாறன் சகோதரர்களைப் போல,
   “சந்தேகப் பிராணிகள்” என்று தான் சொல்வேன்…

   -எப்படி இருந்தாலும்,
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Ganpat சொல்கிறார்:

    கா.மை.ஜி..

    நீங்கதான் என்னை சரியா புரிந்து கொள்ளவில்லை.

    //நிச்சயமாக இது அரசின் வேலை தான். ஆனால்
    நம் நாட்டின் புலனாய்வு நிறுவனங்களின் சக்தி, திறன் ஆகியவற்றையும், நீதித்துறை செயல்படும் வேகத்தையும்ஆகிறீர்கள்
    கண்கூடாகப் பார்க்கிறோம்.//
    So இப்படி ஒரு சட்டத்தை வைத்துக்கொண்டு என்ன செய்ய போகிறோம்?
    நம் நாட்டின் பிரச்னையே நம் Constitution & IPC யும்தான்.

    இப்படி யோசியுங்கள்.

    நீங்க ரொம்ப நல்லவர்; நேர்மையானவர்; தேசபக்தி மிக்கவர்; தைரியசாலி.
    ஒருவேளை நீங்க நாட்டின் பிரதம மந்திரியாக ஆகிறீர்கள் என வைத்துக் கொள்வோம்.உங்களால் இந்த நாட்டை திருத்த முடியுமா?ஊழலை ஒழிக்க முடியுமா? முடியும் என்றால் அதே வழிமுறையை மோடியும் பின்பற்றலாமே! முடியாது என்றால் நாம் மோடியையும் கருணாவையும் சிதம்பரத்தையும் ஏன் குறைகூற வேண்டும்?

    சராசரியாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஒரு மாநில தேர்தல் சுமார் 2 கோடி மக்கள் ஓட்டளிக்கிறார்கள் இதில் ஒன்னரை கோடி பேர் அப்பாவிகள்.வேறு என்ன எதிர்பார்க்க முடியும் இந்த நாட்டில்.??

    ரயில்வே கேட் காவலாளி வேலைக்கு நேர்முக தேர்வு,

    “இரண்டு ரயில்கள் வேகமாக ஒரே தண்டவாளத்தில் எதிரும் புதிருமாக வருகின்றன.நீ என்ன செய்வாய்?

    “நான் உடனே சிகப்பு துணி ஒன்றை கொம்பில் கட்டி வேகமாக அசைத்து அந்த ரயில்களை நிறுத்த முயற்சிப்பேன்.:

    “உன்னிடம் சிகப்பு துணி இல்லை”

    “அப்போ எதாவது துணியை பற்றவைத்து கொடியாக அசைத்து..”

    “அது பகல் வேளை!”

    “ஓடி போய் என் அம்மாவை கூட்டி வருவேன்!”

    “என்னது அம்மாவையா ? எதற்கு?”

    “அவர் இதுவரை ஒரு விபத்தைக்கூட பார்த்ததில்லை என்று சொல்லிக்கொண்டே இருப்பார்”

    யார் மனதையாவது புண் படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.அது என் நோக்கமல்ல என்னுடைய ஒரு ஓட்டை யாருக்கு போடவேண்டுமென நாம் அறிவோம்.அதை பெரும்பாலான வாக்காளர்கள் அறியும் வரை நாம் காத்திருக்க வேண்டியதுதான்.ஐம்பது ஆண்டுகளோ நூறு ஆண்டுகளோ!

    நன்றி.

    பிகு:என் நிஜமான கருத்து என்னவென்று கேட்டீர்கள்..இதோ சொல்கிறேன்..
    PC must be hanged in public.Period.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     கண்பத்,

     மோடிஜி தலைமையிலான பாஜக அரசு
     திறமையாகச் செயல்படும் என்று
     நினைத்து தான் மக்கள் அதனை தேர்ந்தெடுத்தார்கள்.

     ஆனால் –
     நடப்பது ….?

     அரசு எந்திரம் இன்னமும் திறமையாக செயல்பட
     வேண்டும்…. நிச்சயம் செயல்பட முடியும்…
     ஆனால் – அவர்கள் கவனம் இதில் இல்லை….
     வேறு எதிலெதிலோ…

     எல்லாரும் வாய்ப்பேச்சு வீரர்களாகவே இருக்கிறார்கள்..

     ஆடிட்டர் குருமூர்த்தி அவர்கள் எழுப்பிய வழக்கு கூட
     தூங்குகிறது…

     உங்களுக்கு இருக்கும் ஆதங்கம் தான் எனக்கும்…

     என்ன செய்யலாம்….?

     வயதும், சக்தியும் இருந்தால் – களத்தில் இறங்கலாம்.
     என்னிடம் இரண்டும் இல்லை.
     என்னால் முடிந்தது – எழுதுகிறேன்…

     இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறுமல்லவா …?

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • Ganpat சொல்கிறார்:

      உங்கள் ஒவ்வொரு பதிவையும் கல்வெட்டில் பொறிக்க வேண்டும்.அவ்வளவு அருமை.சமீபகாலமாக எனக்கு ஒரு குற்ற உணர்வும் தலையெடுக்கிறது.உங்கள் உழைப்பை நாங்கள் உறிஞ்சுகிறோமோ என்று!
      நாடு இருக்கும் நிலை மிக பரிதாபமாக உள்ளது.கடவுள் காப்பாற்றினால் தான் உண்டு.மோடியை பொறுத்தவரை அவர் ஆதரவாளர்கள் சொல்லி விட்டார்கள்.ஒரு பத்து வருடம் கழித்து தான் அவரை மதிப்பீடே செய்ய வேண்டுமாம்.இன்னும் எட்டு வருஷம் பாக்கி இருக்கு.

 2. thiruvengadam சொல்கிறார்:

  Recently KM sir playing safr game. Previous posts are just like Reader’s Digest method , without his usual comments. I am supporting PC , but when he challange it has to be nullified by suitable actions.Expressing he would have done all hiding efforts is just washing away hands. The investigation team can go up even with a slight thread catched. Now U mention Swamy ( of course he is initiater rightly ) . I agree with frnd Ganpat. As a sarcastic remark , why don’t take it granted all these supposed tactics might be taught by his Harward prof. himself. There shold not sparing the culprit

 3. Sampathkumar.K. சொல்கிறார்:

  // I am supporting PC , //

  இதைவிட மானக்கேடு உண்டா ?

 4. Sampathkumar.K. சொல்கிறார்:

  // I am supporting PC //

  //There shold not sparing the culprit//

  இது குழப்பமாக இல்லை ?

 5. CHANDRAA சொல்கிறார்:

  Sampath ji there is no such MANAKKEDU if one supports p c or any person

 6. CHANDRAA சொல்கிறார்:

  KM JI well atlast you have accepted DR SWAMY …….
  no other individuals name had come to your mind …..
  as a person who wages a lone battle against corruption
  Besides p c has every right to defend and his son against|
  these charges>>>>>
  let THESE BRAINY ADVOCATES IN BJP probe this case and find out the truth
  the common man in india tamilnadu will be immensely happy then.

 7. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  எந்த அரசியல்வாதியும் (பெரும்பாலான கம்யூனிஸ்டுகளைத் தவிர) கொள்ளையர்கள்தான் என்ற பெரும்பான்மை மக்களின் எண்ணம் உண்மைதான். இதற்கு இந்தியாவில் விதிவிலக்கு இருக்க முடியாது (கடந்த 30 வருடங்களாக). இது பழ.கருப்பையாவுக்கும் பொருந்தும். அளவில்தான் வேறுபாடு.

  ப.சி மகன் பல்லாயிரம்கோடி அடித்துள்ளார். இதை சட்டத்தின் பிரகாரம் (இந்தியச்) நிரூபிக்க இயலாது. ஏனென்றால், சட்டம் போடும் இடத்தில் இருக்கும் தந்தையினால் வந்த சொத்து இது. அதனால், ப.சி. நல்லவராக முடியாது. அவரும் அவர் மகனும் சட்டத்தை ஏமாற்றிவிட்டு கொள்ளையடித்துள்ளார்கள் என்று பிறர் சொன்னால் மறுப்பது கடினம்.

  இவர் நல்லவர், அவர் அந்த அளவு கொள்ளை அடிக்கவில்லை; வேண்டுமென்றால் நிரூபிக்கட்டுமே என்றெல்லாம் யார் பேசினாலும், அவர்கள், அடுத்தவர்களைக் குறை சொல்லும் யோக்கியதையை இழந்துவிடுகிறார்கள். மோடி அவர்களின் மீது எந்த விதமான குற்றங்களும் ‘நிரூபிக்கப்படவில்லை. ஜெ மீதும் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. (குன்’ஹா தீர்ப்பு பழையது. குமாரசாமி தீர்ப்புதான் இப்போது செல்லும்). கருணானிதிமீது எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. வைகோ மீது சட்டத்துக்குப் புறம்பாக அன்னிய நாட்டுக்குள் பிரவேசித்தார் என்ற குற்றம் நிரூபிக்கப்படவில்லை. வாத்தியாராக இருந்த பொன்முடியும், கிளெர்க்காக இருந்த துரைமுருகனும், ஒன்றுமில்லாமல் இருந்த தயானிதியும் உழைத்து கல்லூரி அதிபர்களானார்கள் என்றுதான் நினைக்கவேண்டும், ஏனென்றால் அவர்கள் மீது ஒரு குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. இதனாலெல்லாம் ஒருவர் மிக நல்லவராகக் கருத முடியுமா? முடியும் என்றால், ப.சியும் அவர் மகனும் நல்லவர்தான்.

 8. gopalasamy சொல்கிறார்:

  P.C has given a clear statement. He did not say that he was not having properties in these places.

 9. selvarajan சொல்கிறார்:

  // 1 . வெளிச்சத்துக்கு வராத அபூர்வ வழக்கு – தமிழகத்திற்கு எதிராக ப.சிதம்பரம் அவர்கள் வாதாடி இருக்கும் விசித்திரம் !!
  Posted on மே 1, 2012 by vimarisanam – kavirimainthan …. 2. திரு. ப.சிதம்பரம் அவர்கள் செய்தது …..
  Posted on ஜூன் 19, 2013 by vimarisanam – kavirimainthan // …. இந்த இரண்டு இடுக்கைகளையும் மீண்டும் ஒரு முறை படித்த போது ” உண்மையில் புல்லரித்து போனது ” — பாவம் … திரு ப.சிதம்பரம் அவர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அமைச்சராக பல துறைகளில் இருந்தும் — சொந்த மண்ணான தமிழகத்திற்கு ஏகப்பட்ட நல்லது செய்திருக்கிறார் — ! அவரிடம் ” கண்டிப்பாக ஒரு ரூபாய் நஷ்டம் ஆனாலும் ” பரவாயில்லை என்று அரசாங்கம் அவரிடம் இருந்து வாங்கி கொள்வது நல்லது தானே … ?

 10. செல்வதுரை சொல்கிறார்:

  “யாருக்கும் வெட்கமில்லை” என்று சொன்ன “சோ” வே மன்னார்குடி கம்பெனியில் இயக்குனராக இருந்தார் என்றால் எங்கே போய் முட்டிக்கொள்ள?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.