இன்று மட்டும் தானா மகளிர் தினம் ….?

archana

இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
மகளிரை ஆண்டுக்கு ஒரு நாள் கொண்டாடினால் போதுமா ?

பேச்சுக்காகச் சொல்லவில்லை…
உண்மையாகவே, திறந்த மனதுடன் சொல்கிறேன் –
என் குடும்பத்திலும் சரி, வெளியிலும் சரி –
என்னைப் பொருத்தவரை பெண்களுக்கென்று
எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு.
நான் எந்த நிலையில் இருந்தாலும்,
அவர்கள் மீதான என் அக்கரை எப்போதும் குறையாது.
வீட்டிலும் சரி, பணியில் இருந்த வரை அலுவலகத்திலும் சரி,
வெளியுலகிலும் சரி – நான் பெண்களுடன் எந்த நாளும்
சண்டை போட்டதில்லை.. வம்புக்கு இழுத்ததில்லை…
முடிந்த வரையில் எப்போதும் உதவியாகவே,
அனுசரணையாகவே இருந்திருக்கிறேன்.
இருக்க விரும்புவேன்…!

பெண்கள் பத்திரமாகப் போற்றிப் பாதுகாக்கப்பட
வேண்டியவர்கள்…நாம் வாழும் இந்த உலகத்தின்
நிம்மதிக்கும், சந்தோஷத்திற்கும், இனிமைக்கும்
அவர்களே காரணமானவர்கள். ஒவ்வொரு பெண்ணின்
பாதுகாப்பையும், கௌரவத்தையும் உறுதி செய்வது
எல்லா ஆண்களின் தலையாய கடமையாகும்.

தாயோ, சகோதரியோ, மனைவியோ, மகளோ,
பிறரோ – பெண்களின் கவனிப்பும், அக்கரையும் –
இல்லாமல் வளர்ந்த எந்த ஒரு மனிதரையும்
இந்த உலகில் பார்க்கவே முடியாது.
தப்பித்தவறி யாராவது இருந்தால் –
அவர்கள் காட்டுமிராண்டிகளாகவே வளர்ந்திருப்பார்கள்.

இந்த வலைத்தளத்திற்கு பல மகளிர் வழக்கமாக விஜயம்
செய்வது எனக்குத் தெரியும். ஆனால், பொதுவாக அவர்கள்
இங்கு விவாதங்களில் கலந்து கொள்வதில்லை….
இங்கு எழுதப்படுவது பெரும்பாலும் அரசியல்
சம்பந்தமுடையதாகவே இருப்பது காரணமாக இருக்கலாம்.

அனைவருக்கும் இந்த வலைத்தளத்தின் சார்பில்
நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.
– இந்த நாட்டில் பெண்கள் அனைவரும் நிம்மதியாகவும்,
ஆனந்தமாகவும், பாதுகாப்பாகவும் வாழ வேண்டுவோம்..

-அன்புடன்
காவிரிமைந்தன்
மார்ச் 8, 2016

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to இன்று மட்டும் தானா மகளிர் தினம் ….?

 1. selvarajan சொல்கிறார்:

  பாரதியை விட பெண்ணியம் பேணிய சான்றோர் யார் இருக்கிறார்கள் … ! “பெண்ணுக்கு விடுதலையென்றிங்கோர் நீதி,
  பிறப்பித்தேன் அதற்குரிய பெற்றி கேளீர்
  மண்ணுக்குள்ளெவ்வுயிருந்த தெய்வமென்றால்
  மனையாளுந் தெய்வமன்றோ? மதிகெட்டீரே!
  விண்ணுக்குப் பறப்பது போற் கதைகள் சொல்வீர்!
  விடுதலையென்பீர் கருணை வெள்ளமென்பீர்!
  பெண்ணுக்கு விடுதலை நீரில்லை யென்றால்
  பின்னிந்த வுலகினிலே வாழ்க்கையில்லை” — இது பாரதி – அறுபத்தாறு எனும் பகுதியில்
  ” பெண்களுக்கு விடுதலை ” இல்லையென்றால் இந்த உலக வாழ்க்கைச் சிறக்காது என்பது பாரதியின் அழுத்தமான கருத்தாக வெளிப்படுகிறது….. இதோடு கூட தங்களின் பழைய இடுக்கை ஒன்றில் தங்களின் ” ஐந்து தலைமுறை சுதந்திர வாழ்க்கையை பற்றி ” வெளிவந்ததை இன்று ” மகளிரை போற்றும் விதமாக ” மீண்டும் …. : // பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி …
  Posted on மார்ச் 7, 2014 by vimarisanam – kavirimainthan .//

 2. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  நீங்கள் சொல்லியிருப்பது உண்மை. நீங்கள் அப்படி நடக்கிறீர்கள் என்றறிய பொறாமையாக உள்ளது. அவர்களைப்போல் அக்கறை உள்ளவர்களும், மெச்சூரிட்டி உள்ளவர்களும் ஆண்கள் அல்லர். நிறைய பொறுமை உள்ளவர்கள். எதனுடைய அருமையும், கை தவறும்போதுதானே தெரியும். நல்ல இடுகை.

 3. gopalasamy சொல்கிறார்:

  Today English channels criticized Hemamalini for her speech about women in parliament .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.