” எல்லாரும் கருணாநிதியை ஆதரியுங்கள் ” – சொல்வது திரு. பழ.கரு……!!!

.

.

திரு.பழ.கருப்பையா ஒரு பேட்டியில்
வெளியிட்டுள்ள செய்தி –

என்னுடைய ஒரே குறிக்கோள் ஜெயலலிதா ஆட்சி
வீழ்த்தப்பட வேண்டும் என்பதுதான்.

4 சீட் கூடுதல் வேண்டும் என்பதற்காக 40 நாள் போராடுவது
சரியாகாது என்பதை விஜய்காந்த் உணர வேண்டும்.
ஜெயலலிதா வெற்றி பெற்றால் பாதிப்பு கருணாநிதிக்கு அல்ல,

விஜயகாந்துக்குதான் என்பதை அவர் உணர வேண்டும்.
எனவே எதிர் அணி வலுப்பட வேண்டும்.

இந்த முறை வாக்குகள் சிதறாமல் இருக்க விஜயகாந்த்
சரியான முடிவு எடுக்க வேண்டும்.

ஜெயலலிதாவை வீழ்த்த கருணாநிதி தலைமையில்
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும்.

http://tamil.oneindia.com/news/tamilnadu/
vijayakanth-should-make-an-alliance-with-dmk-
pazha-karuppaiah-248453.html#slide190425

பின் குறிப்பு –

pazha.karu

2011 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக திமுக ரவுடிகள் பழ.கருப்பையா வீட்டில் தாக்குதல் நிகழ்த்திய பிறகு செய்தியாளர்களை கூப்பிட்டு அவர் காண்பிக்கும் படலம்…..!!!

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலுக்கு சற்று முன்னதாக,
” கருணாநிதி சொல்லித்தான் – திமுக ரவுடிகள் என்னையும்,
என் குடும்பத்தினரையும் வீடு புகுந்து தாக்கினார்கள் –
என்ன ஆனாலும் சரி, கருணாநிதி ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் ”
என்று திரு.பழ.கரு. சொன்னது அவருக்கு மறந்து
விட்டதோ என்னவோ –

ஆனால், நமக்கு நினைவில்
இன்னமும் இருந்து தொலைக்கிறதே –
அதை மறக்க என்ன செய்யலாம்….??? !!!

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to ” எல்லாரும் கருணாநிதியை ஆதரியுங்கள் ” – சொல்வது திரு. பழ.கரு……!!!

 1. சுப்பிரமணியம் சொல்கிறார்:

  பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது
  இதற்கு தானே ஆசைப் பட்டாய் பழ

 2. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  2 manam vendum IRAIVANIDAM ketten marandhu vazha ondru,ninaindu vada ondru———-

 3. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  இவரைப் பற்றி நல்ல எண்ணம் கொண்டிருந்தேன். (அதிமுகவைக் குறை சொல்லி வெளியே வந்தபோதும்). உங்கள் இடுகைக்கு அப்படியே கருத்திட்டிருப்பேன். எதிலேயோ, அவர் தயாரித்த படம் வெளியிடுவதற்கு அதிமுக உதவி செய்யவில்லை என்றும், சன் தொலைக்காட்சியில் உதவி செய்வார்கள் என்றும், அதற்காக அதிமுகவை எதிர்த்து சோ மீட்டிங்கில் பேசவேண்டும் என்றும், திமுக ஆதரவு நிலை எடுக்கவேண்டும் என்றும் டீல் என்று கேள்விப்பட்டேன். அரசியலில் ஒருத்தரையும் நம்பக்கூடாது போலிருக்கு. அதனால்தான், பாண்டே அவரிடம், நீங்கள் தேர்தலுக்கு எவ்வளவு செலவழித்ததாகக் கணக்கு காண்பித்தீர்கள் என்று கேட்டதற்கு அவரிடம் பதில் இல்லாமல் போனது. மோசமானவர்களை விட, நல்லவன் வேஷம் போடுகிறவர்கள் மிகவும் கேவலமானவர்கள் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டாகிவிட்டார்.

  நல்ல சமயத்தில் பழைய போட்டோவையும் வெளியிட்டிருக்கிறீர்கள். ஜெ. கருணானிதி மாதிரிக் கிடையாது. உடனடி தீர்ப்பு. துரோகத்தை எந்தக் காரணம் கொண்டும் பொறுத்துக்கொள்ள மாட்டார். தவறான செய்தியினால் ஒருவரை பதவியை விட்டுத்தூக்கியடித்தாலும், தவறு என்று தெரிந்துவிட்டால், திரும்பவும் உடனே பதவியில் உட்காரவைக்கத் தயங்கமாட்டார். அவர் யாருடைய விமரிசனத்துக்கும் பயந்தவர் இல்லை. ஒருதடவை துரோகம் செய்தால், அவரே உணர்ந்து திருந்திவிட்டேன் என்று நம்பிக்கை ஏற்படுத்தினால்தான் ஜெ. நம்புவார், மன்னிப்பார். அதனால்தான் அனிதா, நெல்லை கருப்பசாமி போன்றவர்களை அவர் திரும்பவும் ஏற்றுக்கொள்ளவில்லை… பரிதிக்கு இன்னும் பதவி கொடுக்கவில்லை.

  4 1/2 வருடம் எம்.எல்.ஏவாக ஆக்கின கட்சியை இவரால் தூக்கி எறிய முடிந்ததென்றால், இவரை யார் நம்புவார்கள்? பழ.கருப்பையா பட வெளியீடு தவிர, வேறு எந்தப் பயனையும் திமுகவில் அடைய மாட்டார். பழ. சொல்லும் அதிமுக குறைகளெல்லாம், இன்னும் பல மடங்கு திமுகவில் அதிகம். அதிமுக ஊழல் என்றால், திமுக பல மடங்கு ஊழல். பழ. கருப்பையா அசிங்கப்பட்டதுதான் மிச்சம்.

 4. Tamilian சொல்கிறார்:

  your views are mine too. He is ungrateful. She made him an MLA. He could not get his desires fructified and he is heaping slander, Thats all.

 5. today.and.me சொல்கிறார்:

  அன்பின் காமைஜி

  // இன்றைக்கு கருணாநிதி போன்ற தலைவர்கள் இளைஞர்களை பொதுவாழ்க்கைக்கு வாருங்கள் என்று அழைக்கிறார்கள், நாட்டில் உள்ள அயோக்கியனெல்லாம் நம்மைத்தான் தலைவர் அழைக்கிறார் என்று உள்ளே வந்துவிட்டான் // பழைய கருப்பையா

  இந்த வீடியோ இப்போதுதான் கிடைத்தது. பார்த்து மகிழுங்கள்.

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்ப டுடேஅண்ட்மீ,

  இந்த வீடியோவை தேடிக்கண்டுபிடித்து அனுப்பியமைக்காக
  மிக்க நன்றி நண்பரே.

  பழைய கருப்பையா இருக்க வேண்டிய இடம் இதுவல்லவே….!
  எனவே, அவருக்கு உரிய மரியாதை கொடுத்து , மேலே
  எடுத்துச் சென்று அமர்த்தி இருக்கிறேன்.
  “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ” என்கிற
  உங்களது உயர்ந்த நோக்கை பாராட்டுகிறேன்….!

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.