” துக்ளக் “-ல் திருவாளர் விஜய்காந்த் ….!!!

.

இன்று வெளிவந்த துக்ளக் இதழின்
அட்டைப்படத்தில் திருவாளர் விஜய்காந்த்…..!!!

vk thuglaq

இதற்கு அப்புறமும் –
கீழே –
கலைஞரின் இன்றைய பேட்டி –

” ரவுடி கட்சி “, ” திருட்டுக் குடும்பம் ”
என்றெல்லாம் 15 நாட்கள் முன்பு வரை
திமுகவை ஏசிய விஜய்காந்தின் தேமுதிக பற்றித்தான்,
இன்று கலைஞர் பேட்டியில் கூறுகிறார்….

தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி முடிவாகிவிட்டதா?

பழம் கனிந்து கொண்டிருக்கிறது;
பாலில் எப்போது விழும் என்று
இன்னும் முடிவாகவில்லை.

( யார் முடிவு செய்வார்கள்…? அல்லது
எது முடிவு செய்யப்போகிறது….? )

இழுபறிக்கு என்ன காரணம்?
அவர்களுடைய கோரிக்கை என்ன?

இழுபறி எதுவும் கிடையாது. அதற்கு மேல்
இப்போது எதுவும் சொல்வதற்கு இல்லை.

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேரும்
என்று நம்புகிறீர்களா?

நம்பிக்கை நிச்சயமாக இருக்கிறது.

——————————————————-

சுயமரியாதைச் சிங்கம்,
பகுத்தறிவுப் பகலவன் என்றெல்லாம் புகழப்பட்ட
92 வயதைத்தாண்டி விட்ட ஒரு மனிதரை,
அடடா – ஆசை என்ன பாடு படுத்துகிறது ….!!!

தமிழர்களுக்கு,
தமிழ் நாட்டு மக்களுக்கு –
தொண்டு செய்ய வேண்டும் என்கிற
த ணி யா த ஆ சை…………….!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

26 Responses to ” துக்ளக் “-ல் திருவாளர் விஜய்காந்த் ….!!!

 1. ராமராவ் சொல்கிறார்:

  92 வயதான கருணாநிதிக்கு கோட்டையை 6 வது முறையாக பிடிக்க ஆசை என்பது உண்மை. ஆனால் அப்படி ஆட்சியை பிடித்தாலும் அவர் பேருக்குத்தான் முதல் மந்திரியாக (அதுவும் கொஞ்ச நாளைக்குத்தான்) இருப்பார். ஸ்டாலினின் கட்டுப்பாட்டில்தான் அவர் இயங்குவார். சில நாட்களில் கருணாநிதி முதுமை காரணம் காட்டி ஓய்வெடுத்துக் கொள்ளுவார். ஸ்டாலினிடம் முதல் மந்திரி பொறுப்பை ஒப்படைத்து விடுவார். அவர் வெறும் கட்சித்தலைவராக மட்டும் (ஆயுள் முடியும்வரை) இருப்பார். இதுதான் நடக்கும்.

  ஆனால் இப்போதைக்கு தி.மு.க.வை விட்டால் தமிழ்நாட்டுக்கு விடிவுகாலம் இல்லவே இல்லை. எப்படியும் ஜெயலலிதாவின் ஆட்சியை அகற்றியே தீரவேண்டும். கூழைக்கும்பிடு போடும் அனைத்து அ.தி.மு.க அமைச்சர்களை வெளியேற்ற வேண்டும். அதற்கு தி.மு,க, என்று இல்லை எந்த கட்சியினரும் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். “அரசியலிலே இதெல்லாம் சகஜமப்பா “.

  ஜெயலலிதா மது விற்பனையில் வரும் பணத்தில் பல இலவசங்கள் (வேலை செய்யாத மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, சொத்தை ஆடு மாடுகள்) கொடுத்து வந்தார். அந்த பணத்தில் தான் அம்மா உணவகம், அம்மா மருந்துக்கடை, அம்மா காய்கறி, அம்மா உப்பு, அம்மா நீர், அம்மா சிமெண்ட், என்று பல வந்துள்ளன. இன்னும் கொஞ்சம் காலம் முதல் மந்திரியாக தொடர்ந்து இருந்தால், அம்மா வீடுகள், அம்மா கட்டில் மெத்தை தலையணை, அம்மா காலணிகள், அம்மா உடைகள், இன்னும் என்னென்னவோ – தமிழ் நாடு ” அம்மா நாடு ” என்று ஆகியிருக்கும். நல்லவேளை. அது நின்றுவிட்டது. இவையெல்லாம் நடக்குமுன் தமிழ்நாடு ஜெயலலிதாவிடமிருந்து விடுதலையாக வேண்டும்.

  தி.மு.க.வைப் பற்றி பேசுகையில் எல்லோரும் 2 G ஊழல், நில அபகரிப்பு ஊழல், என்று எவ்வளவோ இருக்கு. (ஆனால் இன்னும் எதுவும் நிருபணம் ஆகவில்லை).
  ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு இழுத்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் அவருடைய உறவுகளின் (உடன்பிறவா?) சொத்துக் குவிப்பு, அ.தி.மு.க அமைச்சர்களின் பல கோடி ஊழல்கள் என்று பல – நம் ஊடகங்கள் அ.தி.மு.க.வின் மெகா ஊழல்களைப் பற்றிஅவ்வளவாக வெளியிடுவதில்லை. (எல்லாம் பயம் தான் காரணம்). இவற்றை எல்லாம் பார்க்கையில், தி.மு.க.வே பரவாயில்லை என தோன்றுகிறது. ஸ்டாலின் முதல் அமைச்சர் ஆகும் பட்சத்தில், தமிழ் நாடு நிச்சயம் முன்னேறும் எனலாம். (இதுவரை அவர் மீது பெரிதாக எந்த ஊழல் குற்றமும் இல்லை).

  மக்களை சந்திக்கும் முதல் அமைச்சர் யாராக இருந்தாலும் தமிழ் நாட்டுக்கு வேண்டும். இப்போதைக்கு தமிழகத்தில் ஸ்டாலினை விட்டால் வேறு யாரும் அனுபவசாலிகள் இருப்பதாக தெரியவில்லை. . .

  • மானுடன் சொல்கிறார்:

   well said Mr. Ramarao !!

  • A Friend of K.M. சொல்கிறார்:

   Wonderful, Mr.Ramarao !
   I salute you with all my helplessness.

   Well Mr.K.M.

   This is the response you are getting after undertaking
   so much of pain
   at this age – and writing so many articles
   in this Blog with hopes on future.
   I feel Even God cannot change this soceity.

   Do you still believe in your caption –

   ” இன்றில்லா விட்டாலும்,
   நாளையாவது மாறுமல்லவா ? “

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    to – “A Friend of K.M.”

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    நான் நொந்து விட்டேன்.
    குறைந்த பட்சம், இன்றைக்கு இனிமேலும்
    என்னால் எழுத முடியாது.

    முன்பெல்லாம் – ” todayandme “- என்று
    ஒருவர் வருவார். சமயத்தில் கைகொடுக்கும்
    நண்பராக, என் சுமையைக் குறைக்க…!

    இப்போதெல்லாம் அவரைக் காணோம்…
    இதையெல்லாம் படித்துவிட்டு அவரால் வாளாயிருக்க
    முடியாது…!

    திருவாளர் ஸ்டாலின் அவர்களின் “அருமை” மற்றும்
    “பெருமை” குறித்த விவரங்களை – அறிந்த/தெரிந்த நண்பர்கள்
    யாராவது, அவற்றை திரு.ராமாராவ் அவர்களுக்கு
    எடுத்துக் கூறுமாறு கூறிவிட்டு –

    நான் விலகிக் கொள்கிறேன்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

  • எழில் சொல்கிறார்:

   //மக்களை சந்திக்கும் முதல் அமைச்சர் யாராக இருந்தாலும் தமிழ் நாட்டுக்கு வேண்டும். இப்போதைக்கு தமிழகத்தில் ஸ்டாலினை விட்டால் வேறு யாரும் அனுபவசாலிகள் இருப்பதாக தெரியவில்லை//

   இதுக்கு முன்னால் ஐந்து தடவை அமைச்சராக, (துணை முதல்வர் பதவி உட்பட) இருந்த போது எத்தனை முறை போய் மக்களை சந்தித்தார் இந்த ‘மக்களை சந்திக்கும் முதல்வர்’. அவர் துணை முதல்வராக இருக்கும் போது கையெழுத்து போட்டது தான் கெயில் குழாய் திட்டம். இந்த லட்சனத்தில் இருக்கிறது இவரின் அனுபவமும் திறமையும்.

   அப்புறம் மது விலக்கை விலக்கியது, இலவசங்களை அறிமுக படுத்தியது , ‘திருமங்கலம்’ பார்முலா என்னும் ஓட்டுக்கு காசு கொடுக்கும் நடை முறையை கொண்டுவந்தது எல்லாம் யாருங்க? இன்று முதல் கை எழுத்து மது விலக்கு என்று சொல்பவர் அவர்கள் கட்சி பிரமுகர்களுக்கு சொந்தமான தமிழகத்தில் இருக்கும் மது ஆலைகளை இப்பவே இழுத்து மூட வேண்டியது தானே.

   ராசாவின் மீது பழியை போட்டு விட்டார்கள், பிரணாப் முகர்ச்சி தான் ஈழ தமிழர் படுகொலை விஷயத்தில் எம்மை ஏமாற்றி விட்டார் என்றெல்லாம் புலம்பி போன தேர்தலுக்கு காங்கிரசின் மீது வசை பாடி விட்டு, இரண்டு வருடம் கூட முழுதாக முடியாத நிலையில் இம்முறை மீண்டும் கூட்டணி, தொகுதி பங்கீடு எல்லாம். மேடையில் இவர் தான் தமிழின காவலர், வாட்சுமேன் எல்லாம்.

   இதை விட கேவலம், திமுக தலைவர் குடும்பத்தின் அங்கத்தினர் ஒருத்தரை விடாமல் பிரேமலதா அம்மை ஒவ்வொரு கூட்டத்திலும் துவைச்சு காயப்போட்டாலும், இந்த 94 வயது மனிதர் சொல்கிறார் ‘பழம் பாலில் விழ போகுதாம்’. அதிமுக அமைச்சர்கள் அவர்கள் தலைவருக்கு கும்பிடு போடுவது கேவலம் என்றால் நேற்று முளைத்தவர்களுக்கு எல்லாம் இப்படி கும்பிடு போடும் இந்த தலைவரை என்ன என்பது.

   ஒன்று மட்டும் உறுதி. தலைவரை போல தொண்டர்களும் மக்களுக்கு ஞாபக சக்தி குறைவு என்று எண்ணி கொள்கிறார்கள். ஆனால் சோசியல் மீடியா தயவில் அவ்வளவு இலகுவாக மறக்கடிக்க படுவதில்லை என்பதை தேர்தல் முடிவு வரும் போது தெரியும்.

 2. செல்வதுரை சொல்கிறார்:

  கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக இந்த திராவிடக்கட்சிகள் தமிழ்நாட்டின் அரசியல் கலாச்சாரத்தையே சீரழித்துவிட்டன. முன்னேற்றம் என்பது நமது தகுதிக்கும் நம் மக்கள் திறமைக்கும் ஏற்றவகையில் இல்லை என்பது கண்கூடு. நாம் மற்றவர்களைவிட முன்னேற்றத்தில் தான் இருக்கிறோம் என்று எடுத்துரைக்கும் அறிவுஜீவிகள், ஒரு ஜனநாயகப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாவிட்டாலும் கூட வெறும் அரசு அலுவலர்களின் நிர்வாகத்தில் இதை விட அதிக முன்னேற்றம் இருந்திருக்கும் என்ற உண்மையை மறந்துவிடுகிறார்கள். இதற்கு அரசியல்வாதிகளின் அளவுக்கு மீறிய ஆசைகளும் அதன் விளைவான ஊழலுமே காரணம். பொதுவாழ்விற்கு வரும் அனைவருமே ஒரு சுயநலத்துடனேயே வருகிறார்கள். மக்களின் முன்னேற்றத்திற்கான ஒரு தொலைநோக்கு ஒருவரிடமும் இல்லை. இதன்படி பார்த்தோமானால் ஒரு தலைகீழான மாற்றமே தீர்வாக இருக்க முடியும். ஆனால் இந்த ஊழல் கழகங்களை வீழ்த்த வலிமைமிக்க ஒரு மாற்று சக்தி உருவாவது அவசியம். இந்த தேர்தலைப் பொருத்தமட்டில் மக்களின் விழிப்புணர்வு பெரிதும் பலப்பட்டிருக்கிறது என்பது உண்மை. களத்தில் இருக்கும் மாற்று சக்திகளில் நம்மை வழிநடத்திச் செல்பவர் இன்னார் என்கின்ற புரிதல் மிக அவசியம். தகுந்த தலைமையினை வலுப்படுத்தி ஊக்குவிக்கவேண்டும் என்பது என்னுடைய அபிப்பிராயம். களத்தில் இப்போது இருக்கும் அணிகளைப்பற்றிய ஒரு விவாதம் தொடங்கப்படுதல் நலம்.

 3. Tamilian சொல்கிறார்:

  It is true that after removal of Conrgess government from TN , the DMK and ADMK have ruined our state with undesirable political developments. Much money of public had been wasted and is looted by politicos. Ultimate result is intolerable corruption and goonda culture. We would have achieved unmatched growth under any other government with some commitment. If we are forced to choose between 2 evils I will see to it that DMK never gets back to power. It is evil personified. Our people deserve better.

 4. thiruvengadam சொல்கிறார்:

  ராமாராவ் பதிவை அனுமதித்தமைக்கு கா.மை அவர்களுக்கு நன்றி.தமிழன் கருத்துப்படி எடுகேட்டட் கருத்து தேர்தல் முடிவுகளின் பங்களிப்பு சொற்பமே. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் திராவிடக்கட்சிகளை ஒதுக்ககூடிய மாற்றுக்காண பிறை மட்டும் தெரிகிற நிலை. நான் எதிர்பார்ப்பது ஆட்சியை பிடிக்கும் திராவிடக்கட்சி தற்போதைய கேரளா போல் மிகக்குறைந்த பலத்தில் மாற்றுசக்திக்கு கட்டுப்பட்டு ஆட்சிக்கு வந்தால் சீர்கேடுகள் தொடராது.

 5. Narasimhan சொல்கிறார்:

  நிஜமாகவே திமுக இவருடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தால் ஜெயைவிட இவரை அவமதிப்பார்கள் என்பது என் கணிப்பு . இத்தனை பேசியவரை ,அலயவிட்டவரை மறப்பர்களா .

 6. எழில் சொல்கிறார்:

  கொள்கை அளவில் காங்கிரசோடு கூட்டணி போட்டு குலாவும் எந்த கட்சிக்கும் ஓட்டு போட முடியாது.

  திமுகவுக்கு வேண்டுமானால் வெட்கம் சூடு சொரணை எதுவும் இல்லாமல் இரண்டு வருடத்திற்குள் சொன்னவற்றை எல்லாம் மறந்து மீண்டும் காங்கிரசோடு உறவாடலாம். ஆனால் தன்மானம் உள்ளோர் அதை மறந்து விட மாட்டார்கள்.

 7. selvarajan சொல்கிறார்:

  உங்களிடம்
  இன்னுமொரு விஷயம்
  சொல்ல விரும்புகிறேன்….

  தமிழ்நாட்டின் தலைவிதியோ,
  தமிழர்களின் தலைவிதியோ
  தெரியவில்லை …..

  குடும்பத்தில் ஒவ்வொருவரும் கோடிக்கணக்கில்
  பணம் சேர்த்து விட்டார்கள்….

  தள்ளாத 92 வயதிலும் மீண்டும் முதலமைச்சர் பதவி
  கிடைக்குமா என்று காத்திருக்கிறார் ஒரு பெரியவர்.

  தொழில் பின்னணி எதுவுமே
  இல்லாத 80 வயது அம்மையார் ஒரு
  தொலைக்காட்சியில் 60 % பங்கு வைத்திருக்கிறார்.
  அவர் மீது இந்த வயதில் ஒரு சிபிஐ வழக்கு….
  அதில் தமக்கு எந்தவித சம்பந்தமும் இல்லாதது போல்
  தோற்றம் அளிக்கின்றனர் அவரது கணவரும், மகனும்….

  வீடியோ கடை வைத்திருந்த ஒரு மகன்
  30 கோடி ரூபாய் சொத்து காட்டி இருக்கிறார்.
  அவர் மகன் 28 வயதிலேயே கோடிக்கணக்கில் பணம் போட்டு –
  சினிமா எடுக்கிறார்… கல்லூரி துவங்குகிறார்.
  நினைவு தெரிந்த நாளிலிருந்தே – அரசியலைத்தவிர
  வேறெந்த தொழிலும் செய்யாத ஒரு மகன்
  22 கோடிக்கணக்கில் சொத்துக் கணக்கு காட்டுகிறார்.
  அவர் மகனும் 25 வயதிலேயே கோடிக்கணக்கில்
  பணம் போட்டு படங்கள் எடுக்கிறார்.
  இன்னொரு மகளோ 17 கோடி சொத்து காட்டுகிறார்.
  பேரன்களோ – கேட்கவே வேண்டாம் …
  மாநிலத்திற்கு மாநிலம் பல தொலைக்காட்சி சேனல்கள்
  வைத்திருக்கிறார்கள்…..
  அதெப்படி ஒரு குடும்பத்தில் அத்தனை பேரும்
  இப்படி பிரம்மாண்ட கோடீஸ்வரர்கள் ஆனார்கள் என்று
  கேட்பதற்கு பதிலாக –
  மீண்டும் – இவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் –
  வந்தால் தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும்
  நல்லது செய்வார்கள் என்று சிலர் நம்புகிறார்கள்….
  இவர்களைப் பற்றி –
  நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ஜோதிஜி…? [ தற்போது நண்பர் ராமாராவ் ]
  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன் …. இது தங்களின் // டி.ராஜேந்தருக்கு அவருடைய “குரு” வுடன் நிகழ்ந்த மறக்க முடியாத அனுபவங்கள்….
  Posted on மார்ச் 18, 2015 by vimarisanam – kavirimainthan ….. // என்ற இடுக்கையில் நண்பர் ஜோதிஜி அவர்களுக்கு தாங்கள் எழுதிய மறுமொழி தான் மேலே உள்ளது … இந்த விளக்கமே தற்போதைய ” எதையும் தாங்கும் இதயம் ” மற்றும் மன்னித்து மீண்டும் அவர்களிடமே ஆட்சியை ஒப்படைக்கலாம் என்கிற மனபோக்கும் கொண்டவர்களுக்கும் போதுமானது … ! பாவம் ….. ஸ்டாலின் எந்த ஊழல் குற்ற சாட்டிலும் மாட்டாதவர் — ஆனால் எந்தவொரு வேலையும் பார்க்காமல் — இப்போது நமக்கு நாமே — விளம்பரங்கள் போன்றவற்றிற்கு ஆயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்யவும் — கோடிகளில் புரளும் ஸ்டாலினின் மகன்களுக்கும் — மற்ற கலைஞர் வாரிசுகளுக்கும் பணம் எப்படி வந்தது என்று கூறும் திராணி யாருக்காவது இருக்குமா …. ? மீண்டும் // தமிழ்நாட்டின் தலைவிதியோ,
  தமிழர்களின் தலைவிதியோ
  தெரியவில்லை …..//

  • thiruvengadam சொல்கிறார்:

   வாதத்திற்காக அல்ல. சமநோக்கு பார்வையில் ஆட்சி கட்சி சார்ந்தவர்களின் ” வளமை ” ஆய்வுக்கான சூழ்நிலை இருக்கிறதா ?

 8. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  kudikaaran petchu vidhindale gone with the wind

 9. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  கருணானிதி பிறவி அரசியல்வாதி. ஏதோ அவர் முதலமைச்சர் பதவியை ஸ்டாலினிடம் ஒப்படைப்பார், கட்சித் தலைவராக மட்டும் இருப்பார் என்று சிலர் எண்ணுவது எனக்கு விசித்திரமாக இருக்கிறது. கருணானிதியால், அவரை மீறி ஒருவரை வளர அனுமதிக்க முடியாது. இதில் சந்தேகம் இருப்பவர்கள் அவரை சரியாக அவதானிக்கவில்லை என்றுதான் அர்த்தம். அவர் இருக்கும்வரை ஸ்டாலினால் மேலே வர இயலாது. “நமக்கு நாமே” மூலமாக, ஸ்டாலின் மேலெழுவதைக் கணித்த கருணானிதி, கடைசிக் கூட்டத்தில் ஸ்டாலின், கருணானிதிதான் முதல்வர் என்று பேசும் அளவிற்குச் செய்துவிட்டார். அதுமட்டுமல்ல, எல்லா நிகழ்ச்சிகளிலும், தான் தான் தலைவன் என்பதைக் காட்டியிருக்கிறார். (குலாம் வந்து சந்தித்தபோதும், கனிமொழிக்கு முக்கியத்துவம். ஸ்டாலின் ஒரு ஓரமாக இருந்தார். இப்போது கனிமொழி தென் மாவட்டங்களில் கட்சிப் பணி ஆற்றப் போயிருக்கிறார். முன்னால் அழகிரியை உபயோகப் படுத்திய மாதிரி, இப்போது கனிமொழி. அதுமட்டுமல்லாமல், வருங்காலத் தலைவரையும், மற்றவர்கள் போல, எம்.எல்.ஏ நேர்காணலுக்கு உட்படுத்தியிருக்கிறார். ஸ்டாலினை இன்டர்வியூ (எம்.எல்.ஏ வேட்பாளர் தேர்வு) செய்யும் போட்டோவை வெளியிட்டபோதே கருணானிதியின் குணம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்).

  நியாயம், நடுனிலை என்று பேச நினைப்பவர்கள், அதிமுகவுக்கு திமுக மாற்று என்று சொன்னாலே அவர்களது சாயம் பல்லிளித்துவிடும். கருணானிதி தன்மீது நேரடியாக ஊழல் proof இல்லாமல் பார்த்துக்கொண்டது மாதிரி, ஸ்டாலினையும் வைத்திருக்கிறார். கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி கடனை யாரிடம் கொடுத்தார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதே அதற்குச் சாட்சி.

  ஊடகங்கள் அதிமுகவின் மெகா ஊழல்களை பயத்தினால் வெளியிடுவதில்லை என்று எழுதுவது அறியாமை. (அல்லது ஏமாற்று). இதில் 30-40 வருடங்களுக்கு முன்பு ஏதாவது அர்த்தமாவது இருக்கும். இப்போது, சன் (50%), கலைஞர் (5%), மற்றும் நடுனிலையாகத் தெரியும் (ஆனால் சார்புள்ள) சில தொலைக்காட்சிகள் என்று திமுக பக்கம்தான் மீடியா அதிகம். இது தவிர, தினகரன் போன்று பல நாளிதழ்கள். உண்மையாக மெகா ஊழல் இருந்தால், அவை வெளியிட்டிருக்குமே!. ஜெவின் ஊழல்கள் எல்லாம் 1996ஓடு போயிற்று. ஜெவின் இப்போதைய ஆட்சியில் நிலத்தையோ, கட்டிடங்களையோ யாரும் பிடிங்கிக்கொள்ளவில்லை. ராசா, கனி, ஸ்டாலின், கார்த்தி போன்று ஆயிரம் கோடிகளை யாரும் சுருட்டவில்லை. உதயனிதி, தயானிதி அழகிரி போன்று கட்டிடங்களையும், நிலங்களையும் ஆக்கிரமிக்கவில்லை. திமுக வரவேண்டும் என்று நினைப்பவர்கள், வேலியில் போகும் நல்ல பாம்பை (ஓணானை அல்ல) மடியில் கட்டிக்கொள்ள நினைப்பவர்கள்.

 10. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  நிறைய ஃப்ரூப்கள் எழுதலாம். முழு ‘நேர அரசியல்வாதியான ஸ்டாலினிடமும், கனிமொழியிடமும், கணக்கில் காட்டுகின்ற 30 கோடி சொத்துக்கள் (ஒவ்வொருவரிடமும்) வந்தது எப்படி? வீட்டில் சமையல் வேலை மட்டும் பார்த்துக்கொண்டிருந்த தயாளு அம்மையார், 60% ஷேருக்கு அதிபதியானது எப்படி? வாத்தியார் வேலை பார்த்த பொன்முடி, சாதாரண எ.வ.வேலு, சாதாரண டி.ஆர்.பாலு, கிளெர்க் துரைமுருகன் போன்றவர்கள், சாராய, கல்லூரி சாம்ராஜ்யங்களைப் பெருக்கியது எப்படி? வண்ணான் சால் போன்று கட்டிய பழைய சட்டமன்றம் (இப்போது ஆசுபத்திரி), ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் போன்றவை யாருக்குக் கொடுக்கப்பட்டன, அதில் கருணானிதிக்கு எவ்வளவு கிடைத்தது? ஒரே நாள் இரவில், கருணானிதிக்கு ஜாமீன் (கைது செய்யப்பட்டபோது) யார் கொடுத்தது? அதன் விலை என்ன?

  If somebody says, Karu is aged, experienced politician and we should give respect, I am getting angry with that logic. He is doing his profession to loot money. That is it. ஜெ நிச்சயமாக அடுத்தவர் குடி கெடுக்கும் வேலையைச் செய்ததில்லை. நிச்சயமாக 96க்குப் பின் அவ்வாறு நடந்தது கிடையாது. 91-96ல் due to inexperience she did not realize or control certain things and her assumptions could have gone wrong.

  இன்றைய தேதியில், அதிமுக (ஜெ ஆரோக்கியமாக இருக்க வேண்டும்) சந்தேகத்துக்கிடமில்லாமல் by far better than திமுக.

 11. Sharron சொல்கிறார்:

  Go to one india tamil news and see Stalin son’s cars. He has very many luxurious cars but Stalin mentioned that he has no car and he is using only his son’s car.

  • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

   அப்பாவி ஷரோனுக்கு – சோனியா மேடம் ராகுலுக்கு பல லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளார்கள். தயானிதி, கலானிதிக்கு சொந்த கார் இல்லை. சோனியா அவர்களிடம் குறிப்பிடத்தகுந்த பணம் இல்லை. கருணானிதிக்கு கோபாலபுரம் வீடு தவிர வேறு எதுவும் கிடையாது. ஸ்டாலினுக்கு வருமானம் இல்லாததால், அவர் செலவெல்லாம் திமுக பார்த்துக்கொள்கிறது (அவரின் லண்டன் சிகிச்சை உள்பட)

 12. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்கள் –

  Tamilian,
  Sharron,
  A Friend of K.M.,
  எழில்,
  chandramouly venkatasubramanian,
  செல்வதுரை,
  Narasimhan,
  thiruvengadam
  selvarajan,
  நெல்லைத் தமிழன்,

  ( முன்பெல்லாம் நண்பர் கண்பத் மட்டும் –
  விசேஷ விருந்தினராக இருந்தார்…
  இப்போது நண்பர் டுடேஅண்ட்மீ -யும்
  அவர் வரிசையில் சேர்ந்து கொண்டார்
  போலிருக்கிறது…!!! இருவரையுமே – தொடர்ந்து
  பங்கேற்க வருக என்று அழைக்கிறேன்… )

  -சிலர் விளக்கமாக எழுதி இருக்கிறார்கள்…
  சிலர் சுருக்கமாக எழுதி இருக்கிறார்கள்…
  – கருத்து சொன்ன அத்தனை பேருக்கும்
  எனது மனமார்ந்த நன்றிகள்.

  ” நண்பர் ராமாராவ் அவர்களின் பின்னூட்டத்தை
  பார்த்து விட்டு –

  நீங்கள் இவ்வளவு இடுகைகள் எழுதியதற்கு
  இது தான் பலன் என்றால், இன்னமும் நீங்கள் –
  ” இன்றில்லா விட்டால் – நாளையாவது மாறுமல்லவா ..?”
  என்கிற உங்கள் லட்சியத்தில் நம்பிக்கை
  வைத்திருக்கிறீர்களா? ”

  என்று ஒரு நண்பர் கேட்டபோது, நேற்றிரவு,
  நான் உண்மையாகவே நொந்து தான் போயிருந்தேன்.
  ஆனால், இப்போது இத்தனை பதில்களையும்,
  விளக்கங்களையும் பார்த்த பிறகு,

  என்னால் நான் நினைத்த அளவிற்கு
  செயல்பட முடிகிறதோ இல்லையோ,
  பல நூறு நண்பர்கள் வெகு தெளிவாக
  கருத்து பரிமாற்றம் செய்து கொள்ள இந்த தளம்
  எந்த அளவிற்கு உதவியாக இருக்கிறது
  என்று நடைமுறையில் பார்க்கிறேன்…..
  மகிழ்ச்சியாக இருக்கிறது. நண்பர்களுக்கு நன்றிகள்.

  இடுகையில் கூறப்படும் மையக்கருத்தை வைத்து,
  இவ்வாறு செய்யப்படும் விவாதங்கள் பல சமயங்களில் –
  புதிய புதிய செய்திகளையும், விவரங்களையும்,
  மாறுபட்ட கோணங்களையும் நமக்கு
  அறிமுகப்படுத்துகின்றன. எனவே, இத்தகைய
  நாகரிகமான விவாதங்களை மகிழ்வுடன்
  வரவேற்கிறேன்.

  நண்பர் செல்வராஜனுக்கு விசேஷ நன்றிகள்…
  பல சமயங்களில் அவர் பழைய இடுகைகள்,
  பின்னூட்டங்களிலிருந்து மிகப்பொருத்தமான
  தகவல்களை எடுத்துத் தருகிறார்….
  பல சமயங்களில் நான் இவ்வாறெல்லாம் ஏற்கெனவே
  எழுதி இருப்பதே, அவர் எடுத்துக் காட்டிய பிறகு தான்
  தெரிய வருகிறது ..!!! 🙂 🙂
  நன்றி செல்வராஜன்.

  நண்பர் திருவேங்கடம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்
  என்பது பல நேரங்களில் புரிவதில்லை.
  தான் சொல்ல விரும்பும் கருத்தை இன்னும் கொஞ்சம்
  தெளிவாக, மற்றவர்களுக்குப் புரியும் வண்ணம் சொல்லுமாறு
  அவரை கேட்டுக் கொள்கிறேன்….

  கடைசியாக – முதன் முதலில் பின்னூட்டம் எழுதிய
  நண்பர் ராமாராவிடம் ஒன்றை
  கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் –

  நண்பரே, இந்த பின்னூட்டங்களை எல்லாம் படித்த பிறகு –
  உங்களது எண்ண ஓட்டங்களில்
  எதாவது மாறுதல் தெரிகிறதா …?
  இவை எந்த விதத்திலாவது உங்களுக்கு
  உதவி இருக்கிறதா …?

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • Ganpat சொல்கிறார்:

   கா,மை,ஜி ..என் இல்லத்திற்கு வருவதற்கு எனக்கு அழைப்பு வேண்டுமா என்ன? தொடர்ந்து வர இயலாமைக்கு சில (சொந்த)நிர்ப்பந்தங்களே காரணம்.மற்றபடி உங்கள் பதிவுகளை படிக்காமல் இருப்பதில்லை.நன்றி

  • ராமராவ் சொல்கிறார்:

   முதலில் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நான் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சார்ந்தவனல்ல. என்னைப் பொறுத்தவரை எல்லா அரசியல்வாதிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். அதில் எந்த மட்டை எந்த தருணத்தில் better என்றுதான் பார்க்கிறோம்.

   ஆனால் சிறு வயதிலிருந்தே நான் ஒரு எம்.ஜி.ஆர் ரசிகன். எம்.ஜி.ஆர். படங்களை அதிகம் ரசித்து பார்ப்பவன். அவர் படத்தில் அவரை எப்போதுமே நல்லவனாக சித்தரிப்பது எனக்கு பிடித்திருந்தது. எம். ஜி.ஆர் முதல் மந்திரியானது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் தமிழ் நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் நல்லது செய்வார் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் காலன் எம்.ஜி.ஆரை சீக்கிரம் அவனிடம் அழைத்துக் கொண்டதும், தமிழக அரசியலில் ஒரு சிறு வெற்றிடம் உண்டானது உண்மையே. பாவம் அவருக்கு ஒரு வாரிசு இல்லாமல் (அரசியல் வாரிசு பற்றி அல்ல) போய்விட்டது. அந்த சிறு வெற்றிடத்தை தனது வசம் ஆக்கிக்கொண்டு (ஜானகி, நெடுஞ்செழியன், வீரப்பன் முதலானோரை கவிழ்த்துவிட்டு( விரிவு படுத்தியது ஜெயலலிதாதான். அதில் அவரது சாதுர்யமும், சாணக்கியத்தனமும் வெளிப்பட்டது.

   இரண்டாவதாக, வாரிசு அரசியல் என்று பலர் பேசுவது ஏனோ எனக்கு சரியாக படவில்லை. ஜவஹர்லால் நேரு காலத்திலிருந்தே அது ஆரம்பமாகிவிட்டது. ஒரு டாக்டரின் மகன்கள்,மகள்கள், மருமகன்கள், மருமகள்கள் எல்லாம் டாக்டர்களாக இருப்பதைத்தான் விரும்புவர். உலகில் இதுதான் இப்போது நடக்கிறது. அரசியலும் இப்போது டாக்டர் தொழில் போல் ஒன்றாகிவிட்டது. அரசியல்வாதியின் மகன் / மகள் / உறவினர்கள் கூட அரசியல்வாதிகளாக உருவாகுவதையே விரும்புகிறார்கள். ஒரே ஒரு வித்தியாசம் டாக்டர் ஆக படிப்பு தேவை. அரசியல்வாதி ஆக ஒன்றும் தேவையில்லை.

   கருணாநிதி எப்படிப்பட்ட அரசியல்வாதி என்று எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஒரு சிலர் அவரை சாணக்கியன் என்கிறார்கள். ஆனால் அவர் ஒரு cunning அரசியல்வாதிதான். (நரிக்குணம் போல). தி.மு.க கட்சியை வளர்த்தவர்களில் முக்கிய பங்குவகித்த எம்.ஜி.ஆரையே (கணக்கு கேட்டதால்) தூக்கி விசிறியவர் ஆகையால் அவர்மேல் எனக்கு என்றுமே ஒரு நல்ல அபிப்பிராயமே இருந்ததில்லை. அவர் முதல் அமைச்சராக இருந்த சமயம் அவர் குடும்பத்தினரை நன்றாக கவனித்து!!! கொண்டதும் தெரியும். அவரது மகன் / மகள்/ உறவினர் என்று எல்லாரும் செல்வச் செழிப்பில் மிதக்கின்றனர். அவரம் அவரைச் சேர்ந்தோரும் கொள்ளையடித்த பணம் கோடிக்கணக்கில் என்பது அறிந்ததே.

   அதேதான் ஜெயலலிதாவும் செய்தார். அவரும், அவரது உடன் பிறவா சகோதரி சசிகலா, மற்றும் உறவினர்கள் இளவரசி, சுதாகரன், நடராசன், என்று பலரும் பலகோடி சொத்துக்களை சேர்த்துள்ளனர் /சேர்த்துக்கொண்டே இருக்கின்றனர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

   ஆகையால் கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். ஆகையால் அவர்களது ஆட்சியில் தமிழகம் நிச்சயம் முன்னேறப்போவதில்லை என்பது திண்ணம்.

   கருணாநிதி இல்லையென்றால், அவரது கட்சியையோ, (அல்லது தமிழக நிர்வாகத்தையோ) திறம்பட நடத்தக்கூடிய ஆள் தி.மு.கவில் உண்டு. (ஸ்டாலின்). ஆனால் ஜெயலலிதா இல்லையென்றால் அ .தி.மு.க வின் கதி? ஒரு பெரிய கேள்விக்குறி.

   கருணாநிதிக்கு வயதாகிவிட்டது. மேலும் அவரால் முதுகுவலி காரணமாக நடக்கவும் முடியாது. (இருந்தும் அவரது tenacity யை பாராட்டியே ஆகவேண்டும்.) அவரது அரசியல் வாழ்க்கை எப்படியும் இன்னும் மிகக் குறுகிய காலம்தான்.

   ஜெயலலிதாவுக்கு அப்படி ஒன்றும் வயதாகவில்லை. ஆனால் அவரது உடல்நலனைப் பற்றி யாரும் வெளிப்படையாக பேசுவதில்லை. அவரால் முன்போல் அலைய முடிகிறதில்லை என்பது அவரது நடவடிக்கைகளால் தெரிகிறது. காணொளி காட்சி மூலமே ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் மக்களைச் சந்தித்தே சில வருடங்களாகி. விட்டன. ஏன் அவரது கட்சியினரையே அவர் சந்திக்க முடிகிறதில்லை. வருடம் ஒருமுறை கொடநாட்டில் கிட்டத்தட்ட 3 மாதம் ஓய்வெடுக்க சென்றுவிடுகிறார். சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட பேரிழிவில் கூட அவரால் மக்களை சந்தித்து ஆறுதல் கூற முடியவில்லை. தப்பித் தவறி ஒருமுறை அவரது தொகுதிக்கு விஜயம் செய்து “வாக்காளப் பெருமக்களே” என்று மக்களை விமரிசித்த அவலத்தை எல்லாரும் கண்டிருக்கலாம். காரிலிருந்து கீழே இறங்கி ஒரு குடிமகனையும் பார்க்க முடியாத நிலையிலிருந்து அவரது உடல் நிலை நிச்சயமாக முன்போல் இல்லை என தெரிகிறது. மேலும் சொத்துக் குவிப்பு வழக்கில் முதலில் சிறைத்தண்டனை பெற்று பிறகு குமாரசாமி யின் திருவருளால் (எவ்வளவு பணம் கை மாறியதோ) தப்பும் தவறுமாக கணக்கைப் போட்டதன் மூலம் விடுதலையாகி, இப்போது மீண்டும் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் வேளையில் அவரது கழுத்துக்கு இன்னும் கத்தி அருகிலேயே இருக்கிறது. ஆகையால் பொதுமக்களின் வெறுப்புக்கு அவர் ஆளாகியிருக்கும் வேளையில் அவர் மீண்டும் பதவிக்கு வருவது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல.

   எம்.ஜி.ஆர் முதல் அமைச்சராக இருந்து தொடங்கி வைத்த பல திட்டங்களை, அவருக்குப் பின் வந்த கருணாநிதி பெரும்பாலும் முடக்கி வைத்ததாக தெரியவில்லை . ஆனால் கருணாநிதி தொடங்கிவைத்த திட்டங்களை முடக்கிவைப்பதுதான் ஜெயலலிதாவின் வேலையாக இருந்தது. (புதிய தலைமைச் செயலகம், மதுரவாயல்-எண்ணூர் பெருவழிச் சாலை, மக்கள் நலப் பணியாளர்கள் பற்றியது, செம்மொழிப் பூங்கா, அண்ணா நூலகம், இத்யாதி – இத்யாதி). மெட்ரோ ரயில்
   இவர்கள் இருவரை (கருணாநிதி / ஜெயலலிதா) விட்டால், வேறு எந்த அரசியல் தலைவரும் தமிழகத்தை ஆளத் திறமையற்றவராக தெரியவில்லை. விஜயகாந்த் பேசுவது அவரது கட்சியாளர் களுக்கே புரிவதில்லை. வைகோ எப்போதுமே காட்டுக்கத்தல் தான். அவர் மெதுவாக / பொறுமையாக் பேசி பார்த்ததே கிடையாது. அன்புமணிக்கு அவ்வளவு அனுபவம் இல்லை. வேறு யாரும் தற்போதைக்கு தமிழகத்தை ஆளத் தக்கவர் அல்ல.

   இப்போதுள்ள நிலைமையில் ஸ்டாலின் ஒருவர் தான் அனுபவசாலியாக (மேயர்ரக, துணை முதலமைச்சராக, பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தமையால்) இருக்கிறார். அவர் எவ்வளவு பெரிய ஊழல் பேர்வளியாக இருந்தாலும் சரி. பக்கா கிரிமினலாக இருந்தாலும் சரி. குறைந்த பட்சம் நல்ல உடல்நிலையில் இருக்கிறார். மக்களைச் சந்திக்கிறார். திமுக பதவிக்கு வந்தால் மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்கிறார். ஒவ்வொரு சட்டசபை உறுப்பினரும் அவரது தொகுதியை குறைந்தது மாதம் 2 முறை சுற்றிவந்து மக்களை சந்திக்கவேண்டும் என்றகிறார். பார்க்கலாம்.

   ” KNOWN DEVIL IS BETTER THAN UNKNOWN ANGEL “

 13. Tamilian சொல்கிறார்:

  There are controverting ideas. Stalin is not in good health.DMK should be erased and giving back power means doom for people of TN. Stalin is part of DMK corruption.

 14. செல்வதுரை சொல்கிறார்:

  “அன்புமணிக்கு அவ்வளவு அனுபவம் இல்லை”

  “ராமராவ்” அவர்களின் பின்னூட்டத்தில் மேற்கண்டவாறு சொல்கிறார். 1967 ல் தி.மு.க. பற்றியும் அனைவரும் இதைத்தான் சொன்னார்கள். மற்றபடி “ராமராவ்” அவர்கள் கருத்தில் எனக்கு பல ஒத்த அம்சங்கள் உண்டு.

  “எம். ஜி.ஆர் முதல் மந்திரியானது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.”

  ஆட்சி செய்வதில் எம். ஜி.ஆர். க்கு என்ன முன் அனுபவம் இருந்தது? அன்புமணிக்காவது மத்திய அமைச்சராயிருந்து ஒரு அனுபவம் உள்ளது. அவரின் தகுதி பற்றி அவர் தனது பரப்பரையில் நீண்ட விளக்கம் அளிக்கின்றாரே.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.