திரு.பழ.கரு.வின் “நாடி துடிக்குதடி…!!!” “ரிலீஸ்” ஆகப்போகிறது…..!

pazha_karuppaiya_new

எல்லாரும் நினைக்கிறபடி திரு.பழ.கரு.
திமுகவில் சேர்வதாக இல்லை.

“வேறு எந்த கட்சியும் அனுமதிக்காத அளவு
பேச்சு சுதந்திரத்தை”
அன்னை சோனியா காந்தியாரின் காங்கிரஸ் கட்சி தான்
அளிக்கிறதாம். எனவே, ( அடுத்த ஜம்ப் ‘க்கான சந்தர்ப்பம்
கிடைக்கும் வரை …) தன்னை காங்கிரசில் ஐக்கியப்படுத்திக்
கொள்கிறார் அரிச்சந்திர புத்திரன்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின்
சார்பில் சென்னையில் காலஞ்சென்ற தலைவர் ஈ.வி.கே.சம்பத்
அவர்களின் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

(திருமதி குஷ்பு சுந்தர் அவர்களின்
முன்னிலையில் தான் ….
கூட்டம் சேர வேண்டுமே ..)

அங்கு திரு.பழ.கரு. பேசுவதை பார்க்கக்கூடிய ( வீடியோவில்
தான் ) பாக்கியம் கிடைத்தது. ஆஹா … ராகுல் காந்தியை
போற்றினார் போற்றினார் – அப்படிப் போற்றினார்…
விரைவில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வருத்தப்பட
வேண்டிய சூழ்நிலை தமிழ்நாடு காங்கிரசில் உருவாகலாம்…!

அதன் பிறகு தான் காங்கிரஸ், திமுக கூட்டணியின் சார்பாக –
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு, கலைஞரின்
தலைமையில் இணைந்து -ஜெ.அவர்களை பதவியிறக்கம்
செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.
ஜெ.மீண்டும் பதவிக்கு வந்தால், நஷ்டம் கருணாநிதிக்கு அல்ல – துன்பப்படப் போகிறவர் விஜய்காந்த் தான் என்று
திருமதி அண்ட் திரு.விஜய்காந்த் அவர்களை பயமுறுத்தினார் …!!!

திரு.பழ.கரு. அவர்களின் தற்போதைய நிலைக்கான
காரணம் / பின்னணி கொஞ்சம் தெரிய வந்தது.
எனக்கு தெரிய வந்ததை
உங்களுடன் கீழே பகிர்ந்து கொள்கிறேன் —

திரு.பழ.கரு… மூன்று-நான்கு வருடங்களுக்கு முன்னர்
தானே தயாரிப்பாளராக – சில அட்ரஸ் இல்லாத நடிகர் –
நடிகைகளைப் போட்டு ( சுபின், அர்ச்சனா, ஜ்யோத்சனா etc..)
“நாடி துடிக்குதடி” என்ற பெயரில்
ஒரு தமிழ் திரைப்படத்தை தயாரிக்கத் தொடங்கினார்.
படத்தின் ஒரு பகுதி “பிஜி” தீவில் எடுக்கப்பட்டது.
திரு.பழ.கரு.வும் இதில் வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார்…!
( மன்னிக்கவும் – தோன்றுகிறார்…!!! )
இளையராஜா அவர்கள் இசை அமைக்கிறார் என்பது
மட்டுமே படத்தின் ஒரே ஒரு ப்ளஸ் பாயிண்ட்..

முக்கால்வாசி படத்தை எடுத்து விட்ட திரு.பழ.கரு.வால்
படத்தை முடிக்க முடியவில்லை. நிதிப்பற்றாக்குறை
ஒரு காரணம்… எந்த விநியோகஸ்தரும் வாங்க முன்வர
வில்லை என்பது இன்னொரு காரணம்.
அதை முடிக்கவும், ஜெயா டிவியில் வாங்கிக் கொள்ளவும்
முயற்சி செய்து பார்த்திருக்கிறார் – உதவி கிடைக்கவில்லை.

எனவே, எதிர் தரப்பை தொடர்பு கொண்டிருக்கிறார்.
மீதிப் படத்தை முடிக்க தேவையான நிதி ஆதாரங்களை
தந்து உதவவும், படத்தை திரு.ஸ்டாலின் அவர்களது மகன்
திரு.உதயநிதியின் ரெட்ஜெயண்ட் பொறுப்பில் “ரிலீஸ்”
செய்யவும், “நாடி துடிக்குதடி” படத்தை தொலைக்காட்சி
திரையிடலுக்காக “கலஞர் டிவி” வாங்கிக் கொள்ளவும்
ஏற்பாடாகி விட்டதாம்…!!!

திமுகவில் சேர்வதாகச் சொன்னபோது –
சாணக்கியர் தான் “இளங்கோவன்” காங்கிரசில்
சேர்ந்து அங்கிருந்தபடியே தனக்கு உதவியாக இருக்கும்படி
ஆலோசனை ( !!! ) கூறி இருக்கிறார்.

எப்படியோ, திரு.பழ.கரு. தற்போதைக்கு “செட்டில்”ஆக
கலைஞர் உதவியதில் மிகவும் மகிழ்ந்து, அதன்
நன்றியறிதலாகவே, விஜய்காந்த் வரை சென்று “அட்வைஸ்”
கொடுக்கிறார்….!!!

அடுத்து, திமுக-காங்கிரஸ் கூட்டணியின் சார்பாக
தேர்தல் கூட்டங்கள் நடக்கும்போது அவர் காட்டும்
“திறமை”யைப் பொறுத்தே இருக்கும் – “நாடி” எவ்வளவு
சீக்கிரம் துடிக்கும் என்பது…!!!

இவ்வளவு செய்திகள் கூறிவிட்டு,
உங்களுக்கு “ரீல்” காட்டாமல் இருந்தால் எப்படி….?

திரு.பழ.கரு.வின் “நாடி துடிக்குதடி” படத்தின்
டிரைலர் கீழே –

Advertisements
Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

திரு.பழ.கரு.வின் “நாடி துடிக்குதடி…!!!” “ரிலீஸ்” ஆகப்போகிறது…..! க்கு 12 பதில்கள்

 1. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  அரசியலில் இப்படிப்பட்ட துரோகிகளுக்கு 20 நிமிட ஃபேமஸ் நேரம்தா. (குறைந்தகாலம்தான்). அதன்பின் கட்சியும் கண்டுகொள்ளாது. நடுனிலை மக்களிடையே மதிப்பும் இல்லது போகும். ‘நாஞ்சில் சம்பத், பரிதி, வைகோ கதிதான் இவருக்கும். (கொள்கையில்லாமல் வெறும் பேச்சுத் திறமையினால் ஒரு கட்சி சார்பாகப் பேசுவது).

  உங்கள் இடுகைகளில் கவர்ச்சிப் படம் இல்லாத குறையை, இந்த டிரெயிலரை வெளியிட்டதன் மூலமாகத் தீர்த்துவிட்டீர்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நெல்லைத் தமிழன்,

   டிரெயிலர் – என் கண்களுக்கு இளையராஜா தான் தெரிந்தார்.
   மற்றவர்களும் ரசிப்பார்கள் என்று நினைத்து தான் போட்டேன்…! 🙂

   ஆனால் இப்படி கவர்ச்சிப்படம் என்று ஒரு வில்லங்கம் இருப்பதே –
   நீங்கள் சொன்ன பிறகு தான் எனக்கு புரிகிறது. 🙂 🙂

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • selvarajan சொல்கிறார்:

    பழ .கரு . தான் காசு பார்க்க இளையராஜாவை ஒரு கருவியாக்கி உள்ளது கிடக்கட்டும் —- பிறவி இசை ஞானிக்கு : — // 1000 படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு ஓவியர்களின் முதல் மரியாதை!
    Read more at: http://tamil.filmibeat.com/news/artists-honour-ilaiyaraaja-039196.html …. // இந்த 100 ஓவியர்களும் இணைந்து வரையும் ஓவியப் போட்டி வருகிற மார்ச் 12-ம் தேதி சனிக்கிழமை காலை ​9.30​மணிக்கு லயோலா கல்லூரியில் நடைபெற உள்ளது. … வாழ்த்துக்கள் … !!!

   • today.and.me சொல்கிறார்:

    என் கண்ணுக்கு
    ஆஸ்காருக்குப் போட்டியாக காமரா முன் களமிறங்கும் மாஸ்ட்ரோ தெரிகிறார்.
    பிரகாஸ்ராஜ்க்கு போட்டியாக காமரா முன் களமிறங்கும் பழையகருப்பையா தெரிகிறார்.

    வேற ஒண்ணுமே தெரியலையே
    ஒருவேளை மஞ்சகாமாலையாயிருக்குமோ?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     டுடேஅண்ட்மீ,

     “லேட்” ஆக வந்தாலும் – “லேடஸ்ட்” …!

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

 2. thiruvengadam சொல்கிறார்:

  தங்களின் இடுகைக்காக உங்களுக்கு நன்றி சொல்லகடமைப்பட்டவர் நாஞ்சில் சம்பத். அநேகமாக அதேநாளிலோ , அடுத்தநாளோ பழ. கரு. கூட்ட இடங்களில் அவருடைய பே ( ஏ ) ச்சுக்கு வாய்ப்பு !

 3. செல்வதுரை சொல்கிறார்:

  திரு. பழ.கருப்பையா ஒரு கட்சியில் சேரும் முன்பு அந்தக்கட்சியைப் பற்றி சொல்வதெல்லாம் பொய். அதை விட்டு விலகும்போது அந்தக்கட்சியைப் பற்றி சொல்வதெல்லாம் உண்மை. முன்னது எதிர்பார்ப்பு என்பார், பின்னதை அனுபவம் என்பார். அவரை என்னதான் செய்யச் சொல்லுகிரீர்கள்? அவரை வாழவே விட மாட்டீர்களா?

 4. Ganpat சொல்கிறார்:

  நடக்கப்போகும் தேர்தலுக்கான “வடிவேலு” ரெடி!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கண்பத்,

   உண்மை தான். ஆனால்,
   திரு.பழ.கரு – வால்,
   வடிவேலுவை மிஞ்ச முடியுமா என்ன ?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. விவேக் காயாமொழி சொல்கிறார்:

  இவர் யார்ரென்றே சாதாரண மக்கள் யாருக்கும் தெரியாது.
  நடுநிலை யெல்லாம் இல்லை குருசேத்திரப் போரில்…
  ஒன்று என் கட்சி, இல்லை எதிரி..அவ்வளவு தான்.
  பொள்ளாச்சி போய் புளியம்பட்டி வந்தாலும், போகும் போதே புளியம்பட்டியில் இறங்கினாலும் கருப்பையா ஒரு கருப்பு ஆடு தான்.. எங்கிருந்தாலும்..

 6. selvarajan சொல்கிறார்:

  இவர் சுட்ட பழமா — சுடாத பழமா … ? ….. // கருணாநிதி என்ன கடவுளா?
  கரு.பழ கருப்பையா – தினமணி // யில் பழ . கரு . முன்பு எழுதிய கட்டுரை
  http://www.dinamani.com/edition/rtistory.aspx?SectionName=Editorial%20Articles&artid=233685&SectionID=133&MainS ….. அடுத்து // மல்லையா வெளிநாட்டுக்குப் போனது கூட தெரியாமல் தடுக்கக் கோரி வழக்குப் போட்ட 17 வங்கிகள்!
  Read more at: http://tamil.oneindia.com/news/india/vijay-mallya-already-left-india-248609.html // முன்பு அவருக்கு ” வங்கி ஏய்ப்பாளர் ” என்கிற பட்டத்தை கொடுத்து கௌரவம் செய்தார்கள் — பாராளுமன்றத்தில் நன்கு பொழுது போக்க — அடுத்த லலித் மோடி ரெடியாயிட்டார் … ! அவர் வெளிநாட்டுக்கு சென்று விட்டாரா — இல்லையா என்கிற குழப்பத்தில் உள்ள நல்ல வங்கிகள் — நல்ல அரசாங்கம் — தும்பையும் – வாலையும் சேர்த்தே விட்டு விட்டார்களோ … ? பணம் உள்ளவன் பலவான் தானே … ?

 7. LVISS சொல்கிறார்:

  The trailer looks fresh like any other we get to see these days —
  Why is Tamil Manila Congress not seen anywhere in the picture – They had a good percentage of votes -Probably Mr Vasan is not able to retain it –

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.