திரு.விஜய்காந்த்தின் முடிவு – உடனடி விளைவுகள் என்னவாக இருக்கும்….?

v.k.

நீண்ட கால காக்க வைத்தலுக்குப் பிறகு ஒருவழியாக தமிழக அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களின் மீது கருணை வைத்து ஒருவழியாக விஜய்காந்த் – ” தனித்து நிற்பது ” என்கிற
அவரது முடிவை அறிவித்து விட்டார்…!

இந்த முடிவு, தமிழக தேர்தலைப் பொருத்த வரையில்,
மற்ற கட்சிகளை எந்த அளவிற்கு பாதிக்கும்…?

நண்பர்களின் கருத்துக்களை பின்னூட்டங்களில் வரவேற்கும்
அதே வேளையில், என்னுடைய எதிர்பார்ப்புகளையும்
சொல்லி விடுகிறேன்….

முதலாவதாக ஒரு விஷயம் –
” நான் யாரிடமும் பேரம் பேசவில்லை ” –
என்று விஜய்காந்த் கூறியது வடிகட்டிய பொய்
என்பதில் எந்தவித சந்தேகமும் தேவையில்லை..
“எந்த பேரமும் படியவில்லை ” என்பது தான் நிஜமாக
இருக்க முடியும்.

திமுக மற்றும் பாஜக – தேமுதிக-வின்
தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்பதால்
கூட்டணி முயற்சி தோற்று விட்டது என்று சொல்லலாம்.

ஆனால், மக்கள் நல கூட்டணியை பொருத்த வரை –
அங்கு பேரங்கள் எதுவும் இல்லை.
” தான் ” – போய் இன்னொரு கூட்டணியில் சேர்வதை விட,
“அவர்கள் ” வந்து தன்னுடன் கூட்டு சேர்ந்தால்,
பிற்காலத்தில், தன்னுடைய தலைமை- எந்த விதத்திலும்
கேள்விகளுக்கோ, சந்தேகங்களுக்கோ –
உட்பட வேண்டியதில்லை என்பது விஜய்காந்தின்
(அதாவது திருமதி விஜய்காந்த்தின்….! )
சிந்தனையாக இருக்கலாம்…!!!

1 ) இதனால், மிக மிக மோசமாக பாதிப்படையக்கூடியவர்
கலைஞராகத்தான் இருக்க முடியும். ( அடுத்தபடியாக
திருவாளர் ஸ்டாலின்…). திமுகவின் வெற்றி வாய்ப்பு
நிச்சயமாக இதனால் பாதிக்கப்படும்.
உடனடியாக தேமுதிக-வை உடைத்து, மாவட்ட தலைவர்களை
தன்னிடம் இழுக்க கலைஞர் அதி தீவிரமாக முயற்சி
செய்வார்…. இதன் விளைவுகள் நாளையே தெரியத்
துவங்கலாம்…!

2) பாஜக-வைப் பொருத்த வரையில், கடைசி கட்ட
பேச்சு வார்த்தைகளின் போது – ஓரளவு விஜய்காந்த்தின்
போக்கை அவர்கள் புரிந்து கொண்டு விட்டபடியால் –
ஓரளவு ஏமாற்றமாக இருந்தாலும், அதிர்ச்சியாக
இருக்காது.

இனி, பாஜக-வின் பார்வை பாமக பக்கம் திரும்பும்.
சரத்குமார் மற்றும் சில ஜாதிக்கட்சிகள்,
மற்றும் பாமக- வோடு சேர்ந்து
பாஜக ஒரு கூட்டணியை உருவாக்க தீவிரமாக
முயற்சி மேற்கொள்ளும்….
பாமக-விற்கும் இதில் ஏற்கெனவே ஓரளவு ஆர்வம் உண்டு
என்பதால் – இது சாத்தியமாகலாம்.

3) முக்கியமான ஒரு திருப்பமாக, நான்கு கட்சிகளைக்
கொண்ட, மக்கள் நல கூட்டணி – விஜய்காந்தின் தலைமையை
ஏற்றுக் கொண்டு, தேமுதிக வுடன் பெரிய அளவில்
கூட்டணி அமைக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
இப்படி ஒரு கூட்டணி அமைந்தால், அது ஓரளவு
மக்கள் மத்தியில் செல்வாக்கையும், கணிசமான அளவில்
வாக்குகளையும் பெறக்கூடும்….

4) விஜய்காந்தின் இந்த முடிவால்- அதிகம் மகிழ்ச்சி
அடையக்கூடிய கட்சி, அதிமுக-வாக தான் இருக்க முடியும்.
அநேகமாக, தமாகா -அதிமுக அணியில் சேரக்கூடும்.

ஆக இறுதியாக, தமிழகம் நான்கு முக்கியமான
கூட்டணிகளை –

1) அதிமுக (+சிறிய கட்சிகள் உள்ளடக்கிய) கூட்டணி,

2) திமுக-காங்கிரஸ் (+சிறிய கட்சிகள் ) கூட்டணி,

3) தேமுதிக தலைமையிலான
(ம.ந.கூ. உள்ளடக்கிய) கூட்டணி,

4) பாஜக தலைமையிலான –
( பாமக +சிறிய கட்சிகள் உள்ளடங்கிய ) கூட்டணி

– இதைத்தவிர திரு.சீமான் அவர்களின் தலைமையில்
நாம் தமிழர் கட்சி அனைத்து இடங்களில் போட்டியிட்டாலும்,
அது கடுமையான விளைவுகளை களத்தில் உருவாக்காது
என்றே தோன்றுகிறது..

விளைவுகள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று
துணிச்சலாக, தனியே போட்டியிடும் ஒரே கட்சியாக
இந்த தேர்தலில் திகழும் –
நாம் தமிழர் கட்சி நிறுவனர் திரு.சீமான் அவர்களுக்கு
வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ –
நமது வாழ்த்துக்களும், பாராட்டுகளும் நிச்சயம் உண்டு.

நண்பர்களின் கருத்துக்களை பின்னூட்டங்களில்
எதிர்பார்க்கிறேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to திரு.விஜய்காந்த்தின் முடிவு – உடனடி விளைவுகள் என்னவாக இருக்கும்….?

 1. Antony சொல்கிறார்:

  /விளைவுகள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று
  துணிச்சலாக, தனியே போட்டியிடும் ஒரே கட்சியாக
  இந்த தேர்தலில் திகழும் –
  நாம் தமிழர் கட்சி நிறுவனர் திரு.சீமான் அவர்களுக்கு
  வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ –
  நமது வாழ்த்துக்களும், பாராட்டுகளும் நிச்சயம் உண்டு/
  Absolutely. He seems to be having some valid arguments. hope he will not become another Vijayakanth…

 2. srinivasanmurugesan சொல்கிறார்:

  இந்த விஷயத்தில், விஜயகாந்த்துக்கும் பிரேமலதாவிற்கும் இடையேயே ஏதோ குழப்பம் இன்னும் இருப்பதாக தோன்றுகிறது..!விசயம் முடிவுக்கு வந்து விட்டதாக தோன்றவில்லை..! பார்ப்போம்…! வெயிட் பண்ணிப் பார்த்து, அவர் முடிவில் நிலையாய் இருந்தால் பாராட்டுவோம்..!

 3. thiruvengadam சொல்கிறார்:

  சீனிவாசமுருகன் கருத்து நிதர்சனம். வேட்புமனு திரும்பபெறும் தேதிவரை இந்த ஆட்டம் தொடரும். கணிசமான அளவு கட்சி வேட்பாளர்களே டெபாசிட் இழப்பு தேர்தலாக இருக்கலாம். Vikadan’s TTV Dinakaran the possible successor news may also make a slight impact if he contest.

 4. CHANDRAA சொல்கிறார்:

  No doubt v>kanths image has improved after this announcement
  Dmk would soon spit venom against v kanth premalatha in all
  directions…..
  Let us appreciate v>kanth for having taken efforts
  to remove dmk in 2016
  And dmk has no scope of forming the ministry
  in 2016

 5. LVISS சொல்கிறார்:

  At last Vijayakant has taken a stand — It appears that his madam’s views has prevailed over his preferences — Given the anxiety he gave to many parties ==His only course where he would not have to face any criticism is to reassert his alliance with NDA — For some reason he chose not to–
  Now the BJP will be free to ally with other parties which are looking for allies —I wonder whether PMK will be willing to go with BJP– They are keen to put Mr Anbumani at the top — The only party which looks unfruffled in all this tamasha is the AIADMK –This calm approach itself may win them more votes –

 6. வெ.க.சந்திரசேகரன் சொல்கிறார்:

  ஒருவழியாக எலி கட்டுசாதத்திலிருந்து வெளியே வந்து விட்டது.காமையின் கணக்கு படி நான்குமுனை போட்டியாக இருந்தாலும் அல்லது அதிமுகா,திமுகா,தேமுதிக,மநகூ,பாமக பாஜக மற்றும் நாம் தமிழர் என்று ஏழு முனை போட்டியாக இருந்தாலும் மகிழ்ச்சியே. ஏன் என்றால் இது ஒருவிதத்தில் அரசியல் கட்சிகளின் மக்களுக்கு உள்ளது உள்ளபடியே காட்டும் கண்னாடியாக அமையும். பல முனை போட்டியாக அமையும் பட்சத்தில் கட்சி சாராத வாக்காளர்களின் பங்கே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் என்பதால் வாக்காளிரின் பொறுப்பு பல மடங்காகும் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கும் என்பதை.

 7. Narasimhan சொல்கிறார்:

  I bet very few saw this coming

 8. Tamilian சொல்கிறார்:

  There was an article in Tamil Hindu some days ago which analysed parties alliances and stated that Vijayakanth will be losing his edge by aligning with DMK and that they will be like MDMK. Vijayakanth probably avoided and saved the prestige by this decision. But we will have to wait if he sticks to it.
  After seeing his Kanchipuram meeting speech, one can definitely draw that he is not CM material nor even ministry material. It must be his wife who stands as a rock behind him.
  I suspect Jaya’s health.
  Otherwise TN has become leaderless as all others do not seem to be CM material.We do not see presently light at the end of the tunnel. But DMK should not under any circumstances capture power ,even under a coalition

 9. gopalasamy சொல்கிறார்:

  It will help vijayakanth in next election. It may not be in 2021.

 10. balachandar ganesan சொல்கிறார்:

  Dear Sir,
  1. ADMK will get it’s own share of votes as always.
  2. Makkal Nala Koottani, DMDK,BJP -> Among 3 all of them might join or two of them might join
  3. ADMK might include Tamil Manila Congress as well
  4. PMK +BJP might join provided DMDK does not join BJP
  5. In the worst case, ADMK,DMK,BJP,PMK,DMDK,Makkal nala Koottani will be contesting alliances and in that order only they will win seats
  6. All parties rejecting DMK is a big drawback to DMK to regain power. Such diversity will heavily boost ADMK’s chances of winning.

 11. today.and.me சொல்கிறார்:

  KMji

  //ஒருவழியாக விஜய்காந்த் – ” தனித்து நிற்பது ” என்கிற
  அவரது முடிவை அறிவித்து விட்டார்…!//

  முடிவெல்லாம் சரிதான்
  முதலில் அவரை தனியாக நிற்கச் சொல்லுங்கள்
  இவரெல்லாம் தலைவராக ஆசைப்பட்டால்
  அது மக்கள் தவறு அல்ல
  இவரையும் ஊடகங்களில் முன்னிறுத்தி காசு பார்க்கும் ஊடக வேசிகளின் தவறு தான்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப டுடேஅண்ட்மீ,

   //முதலில் அவரை தனியாக நிற்கச் சொல்லுங்கள்
   இவரெல்லாம் தலைவராக ஆசைப்பட்டால்
   அது மக்கள் தவறு அல்ல.
   இவரையும் ஊடகங்களில் முன்னிறுத்தி காசு பார்க்கும்
   ஊடக வேசிகளின் தவறு தான்.//

   நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி.

   நீங்கள் இணைத்திருக்கும் கார்ட்டூன்கள், க்ளிப்பிங்-கள்
   அனைத்துமே பிரமாதம் – மிகப்பொருத்தம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 12. Ganesan சொல்கிறார்:

  ஜவேட்கரின் இரகசிய சந்திப்பிற்குப்பின்னே அறிவிப்பு வந்ததது. அவர் பிரேமலதாவையும் சந்தித்தது முக்கியம். தமிழக பி ஜே பிக்குக் கூட தெரியாதபடி.

  பிஜேபியின் கணக்கின் படி – தி மு க வரவேண்டும் கூடாதென்பதில் உறுதியில்லை. ஏனெனில் கருநாநிதி பிஜேபியின் எதிரியன்று. ஜயலலிதாவே முதல்வாராக இருந்தால் மோடிக்கு நல்லது எனபதே பிஜேபியின் ஆசை. பாராளுமன்றத்தில் பி ஜே பியின் அனைத்துக்கொள்கைகளையும் ஆதரித்து வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள்.

  எங்களோடு இணையாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், தி மு கவோடு இணைந்தால் ஜயலலிதாவின் வெற்றி பாதிக்கப்படுமென்பதே கோரிக்கை. அக்கோரிக்கைக்கு இணைந்தால், எது வேண்டுமோ அதைத்தருகிறோம் என்பதாக பேச்சு இருந்திருக்கும். இல்லாவிட்டால் ஏன் இறுதி முடிவு அதன்பின்னரே எடுத்தார்?

  பி ஜே பி, பா ம காவுடன் செல்லும். அன்புமணியை முதல்வராக ஏற்பதில் பெரும் பிரச்சினையில்லை. மேலும், பி ஜே பி ஓரிரு விகதவாக்குக்களைத்தவர இத்தேர்தலில் முன் செல்லப்போவதில்லை. அவர்கள் ஆசை முன் சொன்னதுவே. பா ம க என்றால் தே தி மு க இல்லை. தே தி மு க என்றால் பா ம க இல்லை எனபதே பி ஜே பிக்கு.

  வி ஜய காந்த் தன் சொந்த நலனுக்காக ஜயலலிதாவை வெற்றி பெற வைக்கிறார். அவர் ஜயலலிதாவைப்பற்றி செய்யும் விமர்சனம் பொதுமக்களுக்கு. திரை மறைவில் பி ஜே பி என்ன ஆசைப்படுகிறதோ அதை நிறைவேற்றுவதுதான் நோக்கம்.

  இங்கொருவர் சுட்டியது போல, விஜய்காந்த் ஒரு ப்ரோக்ஸி மட்டுமே. திருமதி விஜ்யகாந்தே ஆட்டக்காரர் என்பதை அறிய பெரிய அரசியலறிவு தேவையில்லை. பொதுமக்களே புரிந்துகொண்டார்கள் தற்போது.

  இனி எல்லாருமே திருமதியுடந்தான் பேசுவார்கள். திருமதியை திருப்தியாக வைத்துக்கொள்ள தி மு க தவறி விட்டது. பின்னாளில் எல்லாருக்குமே இதே நிலைதான்.

  இனி தே மு தி கவைப்பொறுத்தவரை, திருமதிதான் ஆராயப்படுவார்.

  அவர் பேச்சுக்களிலிருந்து கணித்தால், அவரின் அரசியல திறன் ஒரு காலி டப்பா மட்டுமன்று, தன் வாயாலே கெடுவார்.

  வி ஜய காந்தின் கட்சி கீழே இறங்கி இறங்கி காணமல் போய்விடும். அந்த அழிவு திருமதியால் வரும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.