ம.ந.கூட்டணியை – தேமுதிக சேர்த்துக் கொள்ள விரும்பவில்லையா …?

vk and pvk

“நான் தனித்து தேர்தலில் நிற்கிறேன் ” – இது தான்
திரு.விஜய்காந்த்தின் அறிவிப்பு. “வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க
சுதீஷ் தலைமையில் 7 பேர் குழு ஒன்றை அமைத்திருக்கிறேன்”
-இது கூடுதல் அறிவிப்பு.

விஜய்காந்த் பேசி அமர்ந்த பிறகு, கிட்டத்தட்ட கூட்டம்
முடிந்த பிறகு, திடீரென்று திருமதி பிரேமலதா விஜய்காந்த்
அறிவித்தார் –

” விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள்
எங்களுடன் வரலாம்; அதிமுக, திமுகவுக்கு மாற்று தேவை
என விரும்பும் கட்சிகள் வந்து பேசலாம் – தே.மு.தி.க.
கூட்டணியில் சேர விரும்பும் கட்சிகள் எங்களது 7 பேர்
குழுவினருடன் பேசலாம். “

மக்கள் நல கூட்டணியைச் சேர்ந்த 4 தலைவர்களும்,
குறைந்த பட்சம் 3 முறை, தனித்தனியேயும், சேர்ந்தும் வந்து
விஜய்காந்தை சந்தித்து, ம.ந.கூட்டணியுடன் இணையுமாறு
வேண்டுகோள் விடுத்தனர். அப்படி வரும் பட்சத்தில்,
விஜய்காந்த்தையே முதல்வர் வேட்பாளராக
அறிவிப்பது குறித்து கலந்தாலோசித்து முடிவெடுப்பதாகவும்
கூறினர். அவர்களிடம் விஜய்காந்த் தன் முடிவு என்று
எதையும் இதுவரை கூறவில்லை.

ஆனால், திடீரென்று பொதுக்கூட்டத்தில், தான் தனியே
போட்டியிடுவதாக தீர்மானம் செய்து விட்டதாக வி.காந்த்
அறிவிக்கிறார். அதன் பின்னர், அவரது மனைவி, வி.காந்தை
முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள், தாங்கள்
அமைத்திருக்கும் – தன் தம்பி சுதீஷின் தலைமையிலான
குழுவுடன் வந்து பேசலாம் என்றும் கூறுகிறார்…..

வி.காந்தை பலமுறை நேரில் சந்தித்து கூட்டணிக்கு
அழைப்பு விடுத்த மக்கள் நல கூட்டணி தலைவர்களுக்கு
வி.காந்த்தும், அவரது மனைவியும் கொஞ்சம் கூட
மதிப்போ, மரியாதையோ கொடுத்ததாகத் தெரியவில்லை.

பத்தோடு, பதினொன்றாக – ம.ந.கூட்டணியை சேர்ப்பது –
இணைந்து பணியாற்றத் தேவையான நல்ல சூழ்நிலையை
உருவாக்காது – என்பது திரு.மற்றும் திருமதி வி.கா.விற்கு
தெரியாதா …? அவர்களுக்கு தனியே வேண்டுகோள்
விட வேண்டாமா…?

இதில் அடுத்த சிக்கல், திமுக, அதிமுக, பாமக – தவிர
வேறு எந்த கட்சிகள் வேண்டுமானாலும் தங்களுடன்
கூட்டு சேர வரலாம் என்று அழைத்திருப்பது…..!

உடனடியாக தபாஜக தலைவர் திருமதி.தமிழிசை
வி.கா. கோரிக்கையை ஏற்று – அவருடைய கூட்டணியில்
இணைவது குறித்து தலைமையுடன் கலந்தாலோசித்து
முடிவெடுக்கப்படும் என்று வேறு அறிவித்து விட்டார்.

அப்படி பாஜக சேரும் பட்சத்தில் – வைகோவோ,
திருமாவோ அல்லது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களோ
பாஜக உள்ள கூட்டணியில் சேர்ந்து பணியாற்ற முடியுமா…?

இவ்வளவு மாதங்களாக யோசித்து – ஒரே சமயத்தில்
கூட்டணி அமைக்க மூன்று வெவ்வெறு அணியுடனும்
பேரம் / பேச்சு வார்த்தை நடத்தியவர்களுக்கு –
இந்த அவசியம் தெரியாமல் போக வாய்ப்பில்லை….

வேண்டுமென்றே செய்யப்படும் விஷமம் இது.
ஒருவேளை பாஜக வும், அத்துடன் இணைந்த மற்ற
சிறு கட்சிகளும் – தங்களுடன் கூட்டணி அமைப்பதையே
விஜய்காந்த் விரும்புகிறாரோ என்கிற ஐயத்தையே
இது உண்டாக்குகிறது.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ம.ந.கூட்டணியை – தேமுதிக சேர்த்துக் கொள்ள விரும்பவில்லையா …?

 1. CHANDRAA சொல்கிறார்:

  V kanth acts as per the high command of bjp
  In a day or two tamizhisai
  Might come with a proposal to vkanths liking
  Ji who can afford to ignore
  The huge benefits that bjp could offer till 2019

 2. ராமச்சந்திரன்.ஆர். சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  உங்கள் கணிப்பு சரியே.
  இது பிஜேபியும் திரு அண்ட் திருமதி விஜய்காந்த்
  சேர்ந்து போட்ட திட்டம் என்றே தெரிகிறது.
  பாவம் வைகோவும், திருமாவும் இதை உணராமல்
  வரவேற்கிறார்கள்.
  இதற்கு மேலும் தொடர்ந்தால் பின்னர் வருந்துவார்கள்.

 3. selvarajan சொல்கிறார்:

  இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம் – ஒரு
  கண்ணா யிருக்கணும் அண்ணாச்சி …என்கிற ” பதிபக்தி ” பட பாடலில் வரும் ” எந்நாளும் உலகில்
  ஏமாற்றும் வழிகள்
  இல்லாத நன்னாளை
  உண்டாக்கணும்.
  பொது நலம் பேசும் புண்யவான்களின்
  போக்கினில் அநேக வித்யாசம்.
  புதுப் புது வகையில் புலம்புவ தெல்லாம்
  புத்தியை மயக்கும் வெளி வேஷம்
  பொல்லாத மனிதர்
  சொல்லாமல் திருந்த
  நல்லோரை எல்லோரும்
  கொண்டாட ணும் ” —– இந்த ” பட்டுக்கோட்டையார் ” வரிகளை பற்றி ….?

 4. LVISS சொல்கிறார்:

  There is a rumour that MDMK is opening a line of communication with BJP — Joining with BJP would shut out the possibility of a AIADMK BJP alliance which would be very strong and unbeatable – –

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் எல்விஸ்,

   எதை வைத்து நீங்கள் பாஜக+அதிமுக கூட்டணி வருமென்று
   நினைக்கிறீர்கள்…?

   நூற்றுக்கு நூற்று பத்து சதவீதம் அத்தகைய வாய்ப்பு
   எதுவும் இல்லை என்பது தான் நிதரிசனமான உண்மை.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. CHANDRAA சொல்கிறார்:

  As tamizharuvi manian used to quote let us remove the PROMINENT EVIL
  dmk first
  All know that AIADMK the lesser evil
  will have to be removed in subsequent
  elections

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.