நடந்தது அத்தனையும் நாடகம் – திருமதி பிரேமலதா வி.காந்த் அவர்களின் கதை, வசனம் இயக்கத்தில்….!!!

mrs.v.k.-2

மகளிர் தின விழாவில் நிகழ்த்தப்பட்டது ஒரு திட்டமிடப்பட்ட நாடகம் – இதன் கூட்டு தயாரிப்பாளர்கள் பாஜக மற்றும் தேமுதிக தலைமை என்று தெரிய வருகிறது.
கதையை உருவாக்கியது கூட்டுத்தலைமை என்றாலும்,

வசனம், நடிப்பு, இயக்கம் -அரங்கேற்றம் ஆகிய அத்தனை
பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டது திருமதி பிரேமலதா வி.கா.
என்றும் தெரிகிறது. ( இந்த இடுகைக்கு அடிப்படை தமிழக
பாஜகவில் உள்ள சில நண்பர்களிடமிருந்து
கிடைத்த feed …)

தேசிய ஜனநாயக் கூட்டணி (NDA ) தலைமையில்
கூட்டணி என்று சொல்லி விட்டு, திரு.விஜய்காந்தை முதல்வர்
வேட்பாளராக அறிவிப்பது – மற்ற மாநிலங்களில் தங்களுக்கு
சில அசௌகரியமான சூழ்நிலைகளை உருவாக்கும் என்பதால்,
தேமுதிக வுடனான நீண்ட கலந்தாலோசிப்புக்குப் பிறகு,
கீழ்க்கண்ட யோசனையை பாஜக தலைமையே கூறி இருக்கிறது.

வி.கா. தலைமையில் தமிழகத்தில்
ஒரு கூட்டணியை தேமுதிக அறிவிப்பது.

பாஜக (NDA ) தலைமையில் ஏற்கெனவே
சேர்ந்திருக்கும் +சேர முன்வந்திருக்கும் கட்சிகளை
ஒன்றிணைத்துக் கொண்டு,
NDA சார்பாக தேமுதிகவிடமிருந்து
இடங்களை ஒதுக்கிக்கொண்டு,
தங்களுக்குள் பகிர்ந்து கொள்வது.

தேமுதிக -விற்கு பாதிக்கு குறையாமல் சீட்டுகள் என்றும்
மற்றவற்றை NDA தலைமையிலான கட்சிகள்
தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் என்பதும்
தற்போதைய உடன்பாடு.

NDA வில் தற்போதைக்கு இருக்கும், பாரி வேந்தர்
மற்றும் ஏ.சி.ஷண்முகம், ஒரு இஸ்லாமிய கட்சி
ஆகியவற்றுடன் கொங்கு கட்சியையும்,
டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகத்தையும்
இணைத்துக் கொள்வது.
( திரு.சரத்குமாரை பாஜக சேர்க்கக்கூடாது என்பது
தேமுதிகவின் முன் நிபந்தனை….!)

மற்ற கூட்டணிகளிலிருந்து உடனடியாக வரக்கூடிய
தாக்குதல்களை தவிர்க்க, இப்போதைக்கு இந்த வியூகம்
வெளிப்படையாக சொல்லப்படாமல், படிப்படியாக
(in stages) நடைமுறைப்படுத்தப்படும்.

இதன் விளைவே – விஜய்காந்த் தனித்துப் போட்டி
என்றும், அவர் தலைமையில் கூட்டணியில் இணைய
விருப்பப்படும் கட்சிகள் தொடர்பு கொள்ளலாம் என்றும்
அறிவிக்கப்பட்டது.

இது நாடகம் என்று தெரியாமல் – அனைத்து கட்சிகளும்,
விஜய்காந்தின் முடிவை வரவேற்பதாக அவசர அவசரமாக
கூறின. திமுகவுடன் வி.கா. சேரவில்லை என்பதால்
அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியின் உடனடி விளைவு அது.

ஆனால், பாஜகவுடன் வி.காந்த் சேருகிறார் என்பதும்
அப்போதே தெரிந்திருந்தால், இத்தனை வரவேற்பு
இருந்திருக்காது என்பதோடு – உடனடியாக தாக்குதல்களும்
துவங்கி இருக்கும்.

மக்கள் நல கூட்டணியை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே,
அவர்களுக்கு தனிப்பட எந்தவித அழைப்பும் விடுக்காமல்,
கூட்டணியில் சேர விரும்புவோர், வி.காந்தின் மைத்துனர்
சுதீஷிடம் பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று
அறிவிக்கப்பட்டது.

சுதீஷுடன் – கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேசவேண்டும்
என்று சொன்னாலே – ம.ந.கூட்டணி தானாகவே
பின்வாங்கிவிடும் என்பது தேமுதிக+பாஜகவின் எதிர்பார்ப்பு.
இப்போது, கிட்டத்தட்ட அது தான் நடந்து கொண்டிருக்கிறது.

அடுத்த கட்டமாக, சிறு கட்சிகளை எல்லாம்
NDA கூட்டணியில் இணைத்துக் கொண்டு,
மொத்தமாக NDA வுக்கும்,
தேமுதிக வுக்கும் உடன்படிக்கை அறிவிக்கப்படும்.

முழு வியூகத்தையும் மற்ற கட்சிகள் உணராமல் இருக்க
இது மிகவும் நிதானமாகவே செயல்படுத்தப்படும் என்று
எதிர்பார்க்கலாம்.

( தேமுதிக கட்சியை இப்போது முழுக்க முழுக்க
திருமதி பிரேமலதா வி.காந்த் அவர்கள் தான்,
தன் தம்பியின் உதவியுடன் இயக்கிக் கொண்டிருக்கிறார்…..

தேவைப்படும் நேரங்களில் மட்டும் திருவாளர் வி.கா.
வெளியே “காட்டப்படுவார்” )

இந்த நிமிடம் வரை நாடகம் திட்டமிட்ட விதத்திலேயே
பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்த உண்மைகளை மற்ற கட்சிகள் உணற ஆரம்பிக்கும்போது அடுத்த சுவாரஸ்யமான திருப்பங்கள் உருவாகலாம்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to நடந்தது அத்தனையும் நாடகம் – திருமதி பிரேமலதா வி.காந்த் அவர்களின் கதை, வசனம் இயக்கத்தில்….!!!

 1. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  indha natakam andha medaiyil ethanai nalamma innum ethanai nalamma?

 2. srinivasanmurugesan சொல்கிறார்:

  அய்யா ஆதார் அட்டை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதே அது குறித்து தங்களின் கருத்தை அறிய ஆவல்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஸ்ரீநிவாசன்முருகேசன்,

   துவக்கத்தில் காங்கிரஸ் கட்சி தான் ஆதார் திட்டத்தை
   கொண்டு வந்தது. அப்போது எல்லாருமே – பாஜக உட்பட –
   இதை எதிர்த்தனர். குடிமக்களின் தனிப்பட்ட தகவல்கள்
   தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது என்று
   சொல்லப்பட்டது.

   நம்மைப் போன்ற சாதாரண மக்கள் இதை எதிர்த்ததற்கு
   காரணம், கொஞ்சம் கொஞ்சமாக எல்லா மானியங்களையும் (subsidy)
   ஒழித்துவிடுவது இதன் அடிப்படை நோக்கமாக இருந்ததே…!

   துவக்கத்தில் தீவிரமாக எதிர்த்த பாஜகவே இப்போது இதை
   சட்டபூர்வமாக்குகிறது. தவறாக பயன்படுத்த முடியாதபடி
   சில (முழுவதுமாக அல்ல ) பாதுகாப்பு விதிகளை ஏற்படுத்துகிறது.

   ஆனால் – அடிப்படையில் நாம் எந்த காரணத்தை நினைத்து
   பயந்தோமோ, எதிர்த்தோமோ – அதே காரணத்திற்காகவே
   பாஜக அரசு அதை இப்போது சட்டபூர்வமாக்குகிறது.

   இனி படிப்படியாக மான்யங்களை ஒழித்துக்கட்ட மத்திய பாஜக அரசு
   இதை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
   ஆக, காங்கிரஸ் சொல்லாமல் செய்ய நினைத்ததையே –
   இப்போது பாஜகவும் செய்யப்போகிறது.

   நாம் ….?
   எப்போதும் போல் புலம்பிவிட்டு, அடுத்த வேலையைப்
   பார்க்க வேண்டியது தான்… வேறு வழி …?

   சில விஷயங்களில் – ஏன் நிறைய விஷயங்களில் –
   பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் வித்தியாசமே இல்லை…!!!
   சரி தானே நண்பரே…?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. CHANDRAA சொல்கிறார்:

  Whatever criticisms could be levelled against v kanth and premalatha
  the well wishers of tamil nadu are grateful to them
  for their stand against DMK
  All in dmk are perplexed bewildered and in utter shock
  A HISTORIC DECEISION BY V KANTH AND PREMALATHA

  • Tamilian சொல்கிறார்:

   இந்த முடிவுக்காக விஜயகாந்த் அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.இந்த முடிவில் தன் கட்சி பற்றிய அக்கறை இருந்தாலும் மீண்டும் தி மு க வலிமை பெற உதவக்கூடாது என்கிற பொது நலம் தெரிகிறது. அது தமிழக மக்களின் பால் உள்ள அக்கறையை காட்டுகிறது. வாழ்த்துக்கள்.

   அப்பா , தமிழில் பதிவு செய்துவிட்டேன்.

 4. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  இப்படி இருக்கலாம் என்று நான் நினைத்தேன்.. விஜயகாந்துக்கும் இதுதான் சரியான வழி. தன் கூட்டணியில் மற்றவர்கள் சேருவதுதான் அவருக்கு மரியாதை. மக்கள் நலக் கூட்டணி அவரை அப்ரோச் பண்ணினால், நினைக்க முடியாத கண்டிஷன்’களையெல்லாம் விஜயகாந்த் முன்வைப்பார். பாஜக விஜயகாந்துடன் சேர்ந்ததும், தேதிமுகமேல் யார் விமரிசனம் வைத்தாலும் அதனால் விஜயகாந்த் பாதிப்படைய மாட்டார்கள். விமரிசனம் வைப்பவர்கள், இதுனாள் வரை விஜயகாந்த் தரிசனத்திற்காகக் காத்திருந்ததால் அசடு வழிவதுமட்டுமல்ல, மக்களின் நற்பெயரையும் இழப்பார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.