தங்களைச் சேர்ந்த குஜராத்தியர்களையே காக்க இயலாதவர்கள் …..

.

.
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னால், குஜராத்தைப் பற்றிய
ஒரு மாய பிம்பம் ஏற்படுத்தப்பட்டது. வண்ண வண்ண
தோற்றங்கள் உருவாக்கப்பட்டன. குஜராத் ஒரு பூலோக
சொர்க்கம் என்று வர்ணிக்கப்பட்டது.

கடந்த ஓராண்டு காலமாக, அடிக்கடி வெளிவரும்
பல செய்திகள், அந்த கனவுத்தோற்றத்தை கொஞ்சம்
கொஞ்சமாக கலைக்கின்றன.
உண்மைத் தோற்றம் கொஞ்சம் கொஞ்சமாக
வெளியே தெரிய ஆரம்பித்தது….

நேற்று முன்தினம் வெளிவந்திருக்கும் ஒரு செய்தி
உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது….

fishermen

இங்கே தமிழக மீனவர்கள் இலங்கையால் படும் துன்பம்
என்றும் முடியாத தொடர்கதையாக நீடிக்கிறது.

கிரிக்கெட் ஸ்கோர் சொல்வது போல் அன்றாடம்
தமிழகத்திலிருந்து பிரதமருக்கு கடிதம் போகிறது.
இத்தனை படகுகள், இத்தனை மீனவர்கள் இன்று
சிறை பிடிக்கப்பட்டார்கள். இத்துடன் சேர்ந்து மொத்தம்
எவ்வளவு …etc. etc…

இதில் பிடிக்கப்பட்டு திரும்ப கொடுக்கப்படாத படகுகளின்
ஸ்கோர் மட்டும் ஏறிக்கொண்டே போகும்.
– லேடஸ்ட் – இன்றைய ஸ்கோர் – 82.

கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கையோ –
அவ்வப்போது ஏறும், இறங்கும்…
எப்போதாவது, பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் என்று
வரும்போது மட்டும் ஒன்றிரண்டு நாட்களுக்கு
nil balance வரும்…

அவ்வப்போது தமிழக பாஜக தலைவர்கள் மட்டும்,
மன்மோகன்சிங் ஆட்சியில் சுட்டார்களே –
மோடிஜி ஆட்சியில் மீனவர்கள் சுடப்படுகிறார்களா ?

கைது செய்யப்பட்டாலும், அவ்வப்போது விடுவிக்கப்பட்டுக்
கொண்டும் இருக்கிறார்கள் பார்த்தீர்களா என்று
மார்தட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

நேற்று முன் தின செய்திக்கு வருகிறேன்…

———-

குஜராத்தைச் சேர்ந்த 86 மீனவர்கள்,
பல ஆண்டுகள் பாகிஸ்தான் சிறையில் அடைபட்டுக்
கிடந்த பிறகு கடந்த சனிக்கிழமை
நாடு திரும்பி இருக்கிறார்கள்.

சர்வதேச கடல் எல்லையை மீறியதற்காக, பாகிஸ்தானிய
எல்லைக்காவல் படையினரால் கைது செய்யப்பட்டு
கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில்
அடைத்து வைக்கப்பட்டிருந்தனர் அவர்கள்.

அதிர்ச்சி தரும் செய்தியின் இன்னொரு பக்கம் –
இன்னமும் சுமார் 500 இந்திய ( குஜராத்திய ..? ) மீனவர்கள்
கடந்த பல ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில்
இருக்கிறார்களாம்.

இன்றைய கணக்குப்படி மொத்தம் 891 ( எண்ணூற்றி
தொண்ணூற்று ஒன்று ) மீன்பிடி படகுகள் வேறு
பாகிஸ்தானால் மடக்கி வைக்கப்பட்டிருக்கின்றனவாம்.

இவர்கள் எல்லாரும் பாகிஸ்தானில் உளவு பார்க்க
உள்ளே நுழைந்த இந்திய ஒற்றர்கள் அல்ல…
படையெடுத்து வந்த இந்திய ராணுவ வீரர்களும் அல்ல…

ஒன்றும் தெரியாத அப்பாவி மீனவர்கள்….
கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது
எல்லை தெரியாமல் அந்தப்பக்கம் சென்று விட்ட,
அப்பாவி மீனவர்கள்.

நூற்றுக்கணக்கில் குஜராத்திய மீனவர்களும்,
891 மீன்பிடி படகுகளும், பல ஆண்டுகளாக
இன்னமும் பாகிஸ்தான் வசம்
இருக்கும் நிலையில் –

டெல்லியில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எப்படி
ஊண் கொள்கிறது – உறக்கம் வருகிறது ….?
சகஜமாக இருக்க முடிகிறது …?

பாகிஸ்தான் பிரதமர் நவாப் ஷெரிபின் வீட்டுத் திருமணத்தில்
கலந்து கொள்ளும்போது,
விருந்து சாப்பிடும்போது –
இதெல்லாம் மனதில் உருத்தி இருக்காதா …?

 

தங்கள் சொந்த மாநிலத்து மனிதர்களைப் பற்றியே
கவலைப்படாதவர்கள்,
தமிழக மீனவர்களைப்பற்றியா கவலைப்படப் போகிறார்கள்..?

இருந்தாலும் பரவாயில்லை –
தமிழகம் தொடர்ந்து கடிதங்களை அனுப்பிக் கொண்டே
இருப்பது, என்றாவது ஒரு நாள் “கின்னஸ்” புத்தகத்தில்
பதிவு பெறவாவது உதவும்….

 

tamil fishermen

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to தங்களைச் சேர்ந்த குஜராத்தியர்களையே காக்க இயலாதவர்கள் …..

 1. Natarajan.K. சொல்கிறார்:

  நீங்களும் தான் செவிட்டில் அறைந்த மாதிரி
  சொல்கிறீர்கள்.
  இருந்தும் யாருக்காவது உறைக்கும்
  என்று நினைக்கிறீர்களா ?
  அத்தனையும் சொரணை கெட்ட ஜென்மங்கள்;
  சுயநல அரசியல்வாதிகள்.

 2. Antony சொல்கிறார்:

  I read in some other blog that you are an ADMK fan. This article proves them wrong. Keep up the good work.

 3. CHANDRAA சொல்கிறார்:

  All countries all governments have prescribed certain norms rules for their
  countries fishermen while fishing near their border zones…
  but the sad part is that no fishermen observe or adhere the rules
  even in tamilnadu srilankan fishermen are being arrested for crossing the border….
  in gujerat also there are hundreds of pakistan fishermen are in jail….
  we also see reports that tamil nadu fishermen who had gone to dubai for livelihood are being arrested while fishing illegally in other countries border
  areas…….now tell me who is to be blamed……

 4. LVISS சொல்கிறார்:

  Mr KM In a comment in an earlier blog I gave the details of our countrymen languishing in jails in various countries — In the case of Gujarat and Tamil Nadu they are mostly fishermen– What we are not seeing is that we also arrest people who cross our maritime borders — The problem is the unlike in land the borders in water cannot be clearly defined –We cannot expect the fishermen to know where our borders end and their borders begin– This is the same with fishermen from other countries–

  http://www.atuna.com/NewsArchive/ViewArticle.asp?ID=7523

  What one could infer from the response of the Gujarat govt to this issue of their fishermen being arrested by Pakistan is that they are seeing it as something that cannot be dealt by shouting but only thro some exchange arrangement – Exchange of these people take place quite often -We have also released Pakistan nationals lodged in our jails –Srilanka is arresting one set of fishermen and releasing another set after a few days or months —
  There are about 6000 of our people in other countries –

  http://timesofindia.indiatimes.com/nri/other-news/About-6300-Indians-languishing-in-foreign-jails/articleshow/46627127.cms

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நீங்கள் எங்கெங்கோ பயணித்து, உலகம் பூராவும்
  வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு நாடுகளில்
  சிறையில் இருக்கும் இந்தியர்களைப் பற்றி
  எடுத்துக் காட்டி, விஷயத்தை திசை திருப்புகிறீர்கள்.

  இந்த இடுகையின் மையக்கருத்து,
  மீனவர்கள் விஷயத்தில்
  மத்திய அரசின்
  அலட்சியப் போக்கு அல்லது
  கையாலாகாதத்தனம் பற்றி மட்டுமே.

  ஷார்க் நாடுகளுடன் ஒப்பற்ற நல்லுறவு
  பேணப்படுபவதாக
  சொல்லிக் கொள்ளும் மத்திய அரசு,
  அந்த நாடுகளில் – ஏன்,

  குறைந்த பட்சம் பாகிஸ்தான் மற்றும் இலங்கை
  சிறைகளில் வாடும் இந்திய மீனவர்களை
  மீட்டெடுக்காமல் இருப்பது ஏன் ..?

  நூற்றுக் கணக்கில் மீனவர்களின் படகுகளை
  அவர்கள் வசம் பிடித்து வைத்திருக்கிறார்கள்.
  இந்த படகுகளை மீட்க இயலாமல் இருப்பது
  அலட்சியம் அல்லது கையாலாகாதத்தனம் தானே…?

  தேர்தலுக்கு முன் மோடிஜி பொதுக்கூட்டங்களில்
  பேசும்போது,
  பலவீனமான (மன்மோகன் சிங்) அரசு மத்தியில்
  இருப்பதால் தான் அண்டை நாடுகள் கூட ஆட்டம்
  போடுகின்றன. பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன்
  பாருங்கள் என்ன நடக்கின்றது என்று – என்றார்.

  தேர்தலுக்கு முன்னால் –
  அப்படி சவால் விடும்போதெல்லாம் –
  “கடல் தாமரை” மாநாடு நடத்தியபோதெல்லாம் –
  எல்லை தாண்டிப் போனால், மீனவர்கள்
  சிறைபிடிக்கப் படத்தான் செய்வார்கள் என்பது தெரியாதா ?
  ஓட்டுக்காக சொல்லப்பட்ட பொய் தானே …?

  வந்து விட்டது பாஜக அரசு.
  அதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
  காங்கிரஸ் ஆட்சிக்கும் – பாஜக ஆட்சிக்கும்
  என்ன வித்தியாசம் …?
  அவர்கள் “கையாலாகாதவர்கள்” என்றால் –
  இவர்கள் கவனம், அக்கரை எல்லாம் “வேறு எதிலோ ”

  ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும்,
  பாகிஸ்தான் சிறையில் இருக்கும் மீனவர்களை
  இன்னமும் விடுவிக்க முடியவில்லை என்றால்,

  திரும்பத்திரும்ப, தமிழக மீனவர்களை இலங்கை
  சிறைப்பிடிக்கும் அவலம் தொடர்கிறது என்றால்

  பாகிஸ்தானில் 891-ம் இலங்கையில் 82-ம் ஆக
  பிடிக்கப்பட்ட படகுகளை இரண்டு ஆண்டுகளாகியும்
  மீட்கப்பட முடியவில்லை என்றால்
  அதற்கு என்ன பொருள்….?

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 6. Natarajan.K. சொல்கிறார்:

  This news item is from tamil.the hindu.com

  இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்பட்டு வரும் விவகாரம் குறித்து இன்று மாநிலங்களவையில் தமிழக எம்பிக்கள் பிரச்சினை எழுப்பினர். அப்போது இந்த விவகாரம் குறித்து பேசிய அதிமுக எம்பி எஸ்.முத்துகருப்பன், ‘‘தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். எனவே மீனவர்களை காப்பாற்ற இலங்கை கடற்படையினர் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்த வேண்டும்’’ என்றார்.

  திமுக எம்பி திருச்சி சிவாவும் இதே கருத்தை வலியுறுத்தி பேசினார். இம்மாதத்தில் மட்டும் நான்கு முறை இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்றும் எனவே, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.