பணக்கார பரத்தைகளும், சாராய வியாபாரிகளும் சமூகத்தில் பெறும் மரியாதை ………

.

.

” மூஞ்சியை பார்த்தாலே தெரியவில்லையா –
மோசடி பேர்வழி என்று..?”

என்கிற தலைப்பில் நான் நேற்று எழுதிய இடுகைக்கு
பின்னூட்டமாக நண்பர் செல்வராஜன், நான் இதே ஆசாமியை
பற்றி சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் எழுதியிருந்த
ஒரு இடுகையை குறிப்பிட்டு, அதில் இருந்த சூடு
இதில் குறைந்து விட்டது போலிருக்கிறதே என்று
எழுதி இருந்தார்.

உண்மை தான். முந்தைக்கு இப்போது கொஞ்சம் சூடு
குறைந்து தான் இருக்கிறது….. ! என்ன செய்யலாம் என்று
யோசித்தேன்… அதே இடுகையை மறுபதிவு செய்வதே
சிறப்பு என்று தோன்றியது. முக்கால்வாசி நண்பர்கள் அதைப்பார்த்திருக்க மாட்டீர்கள் – அல்லது பார்த்து,
மறந்திருப்பீர்கள்…. எனவே அந்த இடுகையை கீழே
மறுபதிவு செய்திருக்கிறேன்.

ஒரு விஷயம் – ஆண்டுகள் ஐந்து ஓடிப்போய் விட்டாலும்,
ஆட்சியே மாறி விட்டாலும், இவர்களைப் பொருத்த வரையில்
மாற்றம் எதாவது ஏற்பட்டிருக்கிறதா…? காங்கிரசாவது,
பாஜக வாவது – பணக்காரர்களைப் பொருத்தவரையில்,
மன்னிக்கவும் – இப்படிப்பட்ட கொள்ளைக்காரர்களைப்
பொருத்த வரையில் யார் ஆட்சியில் இருந்தால் தான்
அவர்களுக்கென்ன ?

நீங்களே கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்…..

———————————————————–

பணக்கார பரத்தைகளும், சாராய வியாபாரிகளும்
சமூகத்தில் பெறும் மரியாதை ………

கீழே சில படங்கள்  –
அவை  எடுக்கப்பட்டது –
ஐபிஎல் கிரிக்கெட் பந்தயத்தின்போது !
அவற்றில் முக்கிய இடம் பெற்றிருப்பவர்கள் –
இந்தி நடிகை –  தீபிகா படுகோனே
“தொழில்” அதிபர் –  விஜய் மல்லையா
மற்றும்  அவர்  மகன் !

– தலைப்பிற்கு வருவோம்.

ஒரு பக்கம்  –

1)  இரவு நேரங்களில் –  சாலை  ஓரங்களில்,
பஸ்  நிலையங்களில்,  ரெயில் நிலையங்களில் –
மலிவான  லாட்ஜுகளில்,
அரை இருட்டான  இடங்களில்
தலையில் வாசனைப் பூவுடன்,
அரைகுறையாக பவுடர் பூசிய முகத்துடன்
வயிற்றுப் பிழைப்பிற்காக
உடலை விற்கும்  வேறு வழியற்ற /
வக்கற்ற பெண்கள் ….

2)  ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில்,
கிராமங்களுக்கு வெளியே – புதர் வெளிகளில்
பூச்சி பொட்டுகளுக்கு இடையில், வியர்க்க
விருவிருக்க  பயந்து பயந்து  சாராயம்   விற்கும்
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் / விற்பவர்கள் –

இவர்கள்  சந்திக்கும் இன்னல்கள் எத்தனை எத்தனை?
இடைத்தரகர்களுக்கு  காசு,
பிடிக்கும் போலீஸ்காரர்களுக்கு  மாமூல்,
காரியம் ஆவதற்காக
பலர் இவர்களை நாடினாலும்,  
காரியம் முடிந்த பிறகு பார்க்கும் பார்வை  –   
சமுதாயத்தில் இவர்கள்
பெறும்  இடம்  …….அந்தஸ்து ..

இன்னொரு பக்கம் –

1) முதலில்  கூறிய  பெண்  செய்த அதே செயலை –
ஆளை மயக்கும் அலங்காரங்களுடன்,
சொக்க வைக்கும் வாசனை பூச்சுகள் துணையுடன்
பசையுள்ள  வாலிபர்களாகத் தேடி அலைந்து,
பசை போல் ஒட்டிக்கொள்ளும்  அணங்குகளும்-

ஆயிரக்கணக்கானோர்  கூடியுள்ள  ஒரு
விளையாட்டு நிகழ்ச்சியில்,
பல கோடி மக்கள் தொலைக்காட்சியில்
நேரடியாகப்  பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்  என்று
தெரிந்தும் கோடீஸ்வர தந்தையின் குலக்கொழுந்து
என்கிற  ஒரே காரணத்திற்காக ( அவனும்
அவனது அப்பனும் எவ்வளவு அசிங்கமாக  
இருந்தாலும் கூட ) வலிய  இணைந்து கட்டிப்பிடித்து
உதடுகள் இணைய  – பலர் பார்க்க –
முத்தம் கொடுக்கும்  பணக்கார  பரத்தைகளும் –

2) இரண்டாவதாக கூறிய –
அதே  சாராயம் காய்ச்சும் தொழிலை –
அரசியல்வாதிகளுக்கு லஞ்சமும்,  
அரசுக்கு  பணமும்  கொடுத்து
லைசென்ஸ்  என்று ஒன்றை  வாங்கி –
லட்சக்கணக்கில் பேரல் பேரல்களாக தொழில் முறையில்
உற்பத்தி  செய்து விற்கும்  சாராயத் தொழிற்சாலைகளின்
உரிமையாளர்களான  “தொழில் அதிபர்” களும் –

ஆக – இரண்டு  பகுதிகளிலும் கூறப்பட்டுள்ள  நபர்கள்
செய்வது  ஒரே தொழிலைத் தான்.
ஆனால் சமுதாயத்தில் அவர்கள்  பெறும்
செல்வாக்கு,  பணம்,  அந்தஸ்து ?
எவ்வளவு பெரிய வேறுபாடு ?

வயிற்றுப் பிழைப்பிற்காக, வேறு வழி தெரியாமல்
இந்த இழி தொழிலை செய்யும் –
முதல் பகுதியில்
கூறப்பட்டிருக்கும்  பெண்ணோ, வியாபாரியோ   –
நம் சமுதாயத்தால் எவ்வளவு கேவலமாக
நினைக்கப்படுகிறார்கள்; நடத்தப்படுகிறார்கள் ?

அதே தொழிலை  பகட்டாகவும்,
வெளிப்படையாகவும்
செய்யும் இரண்டாவது பகுதியில் கூறப்பட்டிருக்கும் –
நபர்கள்  சமுதாயத்தில் பெறும் செல்வாக்கு,
பணம், அந்தஸ்து என்னென்ன ?

பணத்திற்காக  ஆறு மாதங்களுக்கு  ஒரு பணக்காரனை மாற்றிக்கொண்டே இருக்கும் அந்த
பணக்கார பரத்தைக்கு பெயர் –
புகழ்பெற்ற மாடல்,
திரை வானில் ஜொலிக்கும் நட்சத்திரம் –
அழகு தாரகை !

அந்த சாராய வியாபாரிக்கு பெயர் –
“தொழில் அதிபர்”.
வயது  அறுபதைத் தொட்டாலும்,
காதில் வளையத்தோடும், குறுந்தாடியோடும்
மைனராகத் திரிபவர்  ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வேறு.
அவர் பாக்கெட்டில் பல எம் எல்  ஏக்கள்,  எம் பி  க்கள் !
(35  எம்  எல்  ஏ க்கள்   ஓட்டு போட்டு அவரை ஒரு
ராஜ்ய சபா  சுயேச்சை  உறுப்பினராக
தேந்தெடுத்திருக்கிறார்கள் ! )

சாராயத்தில்  விளைந்த பணத்தில்,
எம்.பி. பதவி, அரசாங்கத்தில் செல்வாக்கு,
விமான கம்பெனி, தொழிலதிபர் பட்டம்.
பற்றாக்குறைக்கு –
கடைசியாக ஐபிஎல்  சூதாட்டம் வேறு !

மனசாட்சி  சுடுகிறது –
யார்  காரணம்  இந்த இழி  நிலைக்கு ?
சற்றும் தகுதி அற்றவர்களுக்கு எப்படி
இத்தனை  பணம், பதவி, புகழ், செல்வாக்கு ?
நம் சமூகம்  ஏன்  போலிகளைத் தாங்குகிறது –
கொண்டாடுகிறது ?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to பணக்கார பரத்தைகளும், சாராய வியாபாரிகளும் சமூகத்தில் பெறும் மரியாதை ………

 1. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  சிட் ஃபண்ட் கம்பெனில கணக்கு எழுதுபவரையும், கோயில்களில் கணக்கு எழுதுபவர்களையும், பலசரக்குக் கடைகளில் கணக்கு எழுதுபவர்களையும், பேங்கில் கணக்கு எழுதுபவர்களையும், (அதுலயும் இன்டர்னேஷனல் பேங்கில் கணக்கு எழுதுபவர்கள் தனி ரகம்) நாம் ஒரே மாதிரி எண்ணிப் பழகுகிறோமா? சாதாரண மனிதர்களின் மன மதிப்பீட்டில் இருக்கும் இந்த வித்யாசம்தான் தொழில் ஒன்றேயானாலும் நாம் வித்யாசப்படுத்திப்பார்ப்பதற்கான காரணம்.

  நம் பொதுப்புத்தியிலியே, பணம் இருப்பவனை உயர்வாகவும் பணம் இல்லாதவனைத் தாழ்வாகவும் கருதும் இரத்தம் உள்ளது. இதனால்தான், ‘நாம் கிராமத்தானையோ (பகட்டில்லாத எளிய மனிதர்கள்), ஏழையையோ சரியாக அணுகாத நாம், அவர்களே பகட்டான உடையுடன் ஆங்கிலத்தில் பேசினால் மரியாதை தரத்துவங்குகிறோம்.

  நீங்கள் உபயோகப்படுத்தியிருக்கும் ‘பரத்தை’ என்ற வார்த்தை சரியானதல்ல. எல்லோருக்கும், அவர்கள் எந்த நிலையிலிருந்தாலும் நிர்ப்பந்தம் இருக்கும். எல்லா மனிதர்களும், ஏழையானாலும், மிகப்பெரிய பணக்காரனானாலும், அவர்கள் செல்லும் வாழ்க்கைப் பயணம் பெரும்பாலும் துன்பங்களும் அப்போது அப்போது இன்பங்களும் நிறைந்ததாக இருக்கும். இதில் விதிவிலக்கு இருப்பது அபூர்வம். அவர்களையும் (தீபிகா போன்றவர்களையும்) இரக்கபூர்வமான மனத்தோடுதான் (ஏழைப் பெண்களைப்போன்றே) அணுகவேண்டும் என்று நினைக்கிறேன்.

  “எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் உலகே உன் செயல்தான் மாறாதோ” என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

 2. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  Naai(dog) vitha kasu(rupees) kuraikkathu?, kadan(loan) pattar nenjam pol kalanginan King Ravanan-Vijay Mallaiya worser than Ravanan.No business ethics,No banker will dare to raise voice,since they have received huge compliments+SHARE.He is having lot of properties in foreign countries.Drastic changes in political system required. without which ,no political party (National/regional)can do any miracle in India

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.