மூஞ்சியை பார்த்தாலே தெரியவில்லையா – மோசடி பேர்வழி என்று …?

vm-5

vm-4

vm-3

vm-2

vm yatch -450 crore

இந்த உல்லாசப்படகின் விலை – உங்கள் பணம் – 450 கோடி ரூபாய்

vm bungalow in goa

இந்த ஆடம்பர பங்களா கோவா கடற்கரையில் இருக்கிறது – நமது பணத்தில் வாங்கப்பட்டது….!

மூஞ்சியை பார்த்தாலே தெரியவில்லையா –
மோசடி பேர்வழி என்று …?

சிண்டிகேட் வங்கி – 1000 கோடி
பாங்க் ஆப் பரோடா – 6000 கோடி
யுகோ வங்கி -3800 கோடி
பாங்க் ஆப் மஹாராஷ்டிரா -800 கோடி
செண்டிரல் பாங்க் ஆப் இந்தியா -212 கோடி
இந்திய ஓவர்சீஸ் வங்கி – 84 கோடி

எதை நம்பி இந்த ஆசாமிக்கு 11,000 கோடி ரூபாய்க்கு
மேலும் கடன் கொடுத்தார்கள் ?
வங்கி உயர் அதிகாரிகளைத் தவிர,
இதன் பின்னணியில் இருந்த அரசியல்வாதிகள் யார் யார்
என்று அலசியதில் கிடைத்த பெயர்கள் –

2010-ல் இவரது வங்கிக்கடன் 8000 கோடி அளவில்
இருந்தபோது, அதை சீரமைத்து, ஒன்பது வருடங்களில்
நிதானமாக – சுலபமான தவணைகளில் திரும்பக் கொடுக்கும்
வண்ணம் மாற்றியமைக்க உதவியாக இருந்தாராம் –

கல்கத்தாவைச் சேர்ந்தவரான,
முன்னாள் மத்திய நிதியமைச்சரும்,
இன்று மிக உயர்ந்த பதவியில் இருப்பவருமான ஒருவர்.
இந்த ஆசாமி தனது இளமைக்காலத்தில்
கல்கத்தாவில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே
இருவருக்கும் அறிமுகம் உண்டாம்…

துவக்க காலத்திலிருந்தே, இவரது விமான கம்பெனியை
பல சட்டவிதிகளை வளைத்து, விலக்கி,
சலுகைகளுடன் துவக்க
அனுமதி அளித்ததில் ஆரம்பித்து
தொடர்ந்து உதவியாக இருந்தனராம்
தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர்களான –
சரத்பவார், மற்றும் பிரபுல் படேல் ….

2003 முதல் 2010 வரை கர்நாடகவில் தனது ஜனதா கட்சியின்
செயல் தலைவராக வைத்திருந்ததன் மூலம்
அவரது அரசியல் செல்வாக்கை உயர்த்தி வங்கிக்கடன்கள்
பெறுவதிலும், பதிலுக்கு அவரது
செல்வத்தையும் -செல்வாக்கையும் தனக்கு பயன்படுத்திக்கொண்டு
பரஸ்பர உதவியோடு இருந்தாராம் அறிஞர் சு.சுவாமி.

தொடர்ந்து பெரிய அளவில் ஆதரவை அளித்த
கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள்
மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா …

இன்றும் தீவிரமாக ஆதரித்து வக்காலத்து வாங்கும்
கர்நாடகா ஜனதா தள தலைவரும், முன்னாள்
பிரதமருமான தேவகவுடா….

இவர்கள் அனைவருமே, இந்த தறுதலையை வளர்த்துவிட்டு,
அதன் மூலம் தாங்களும் வளம் பெற்றிருக்கிறார்கள்…

கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு
உடைத்த கதையாக, தேசிய மயமாக்கப்பட்ட
வங்கிகளிலிருந்து, உங்களுக்கும் எனக்கும் சொந்தமான
பணத்தை எடுத்து 11,000 கோடிக்கு மேல் இந்த ஆசாமிக்கு
தத்தம் செய்ததில், மேற்கண்டவர்களைத்தவிர
இன்னமும் எத்தனையோ பேருக்கு பங்கிருக்கிறது….
தோண்டத் தோண்ட நிறைய பேர்கள் கிடைக்கலாம்…!

இவனைப்போன்ற தறுதலைகளுக்கு கொடுத்த –
திரும்ப வராத கடன்களை சரிக்கட்ட அரசு வங்கிகளுக்கு,
அண்மைய பட்ஜெட் மூலம் நிதியமைச்சர் தாரை
வார்த்திருப்பது 25,000 கோடி ரூபாய்.

இது எந்தப்பணத்திலிருந்து என்று நினைக்கிறீர்கள்…?
நீங்களும், நானும், நாமெல்லாரும் –
சர்வீஸ் டேக்ஸ் என்று கட்டிக் கொண்டிருக்கிறோமே –
ஒவ்வொரு சேவை ( ? )க்கும் – 14% வரி –
அதைப்போன்ற வரிப்பணத்திலிருந்து தான்….

இவனைப் போன்றவர்களை எல்லாம்
எந்த சட்டமும் தண்டிக்காது….!
தண்டிக்கவும் முடியாது.
மேலே இருந்து எல்லாவற்றையும் பார்த்துக்
கொண்டிருக்கிறாரே ஒருவர் –
அவராக இறங்கி வந்து தண்டித்தால் தான் உண்டு….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to மூஞ்சியை பார்த்தாலே தெரியவில்லையா – மோசடி பேர்வழி என்று …?

 1. selvarajan சொல்கிறார்:

  // மனசாட்சி சுடுகிறது –
  யார் காரணம் இந்த இழி நிலைக்கு ?
  சற்றும் தகுதி அற்றவர்களுக்கு எப்படி
  இத்தனை பணம், பதவி, புகழ், செல்வாக்கு ?
  நம் சமூகம் ஏன் போலிகளைத் தாங்குகிறது –
  கொண்டாடுகிறது ? // … இது நீங்க எழுதியது தான் …. ! எதுல என்றால் : — ” ” பணக்கார பரத்தைகளும், சாராய வியாபாரிகளும் சமூகத்தில் பெறும் மரியாதை ………Posted on மே 29, 2011 by vimarisanam – kavirimainthan ” — ” தறுதலையை ” பற்றி ஐந்து வருடங்களுக்கு முன்பு பதிவிட்ட இடுக்கையில் தான் …. !! என்ன முன்னேற்றம் நடந்திருக்கிறது — ஆட்சி மாறி இருக்கிறது — தறுதலை ” தப்பி ” நாடு மாறியிருக்கிறது — அவ்வளவு தானே — ஆமா … அய்யா … ! அந்த இடுக்கையில் இருந்த காரம் …? இந்தஇடுக்கையில் கொஞ்சம் குறைவு — அப்படித்தானே …. ?

  • thiruvengadam சொல்கிறார்:

   தேன்கூட்டில் கைவைக்க முயற்சி ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   உண்மை தான். குறையை சரி செய்து விடுகிறேன்.
   அந்த இடுகையை எழுதி ஐந்து வருடங்களாகி விட்டன.

   ஆட்சி மாறினால், காட்சி மாறும் என்று நினைத்தோம்.
   ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. என்ன செய்யலாம்….?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. today.and.me சொல்கிறார்:

  உன் நண்பன் யார் என்று சொல்லு
  நான் உன்னைப் பற்றி நான் சொல்லுவேன்

  • Ganpat சொல்கிறார்:

   திருக்குவளைக்கு முன்னே இருக்கும் இரண்டு குவளைகளில் ஒன்றில் பாதம்; இன்னொன்றில் முந்திரி.ஆமாம்! மூன்றாவது குவளை எங்கே காணோம்?

 3. Devarajan. D. சொல்கிறார்:

  குவளைகளைப் பார்த்தால் தெரிகிறது
  93 வயதிலும் தாக்குப் பிடிக்கும் ரகசியம் .

 4. selvarajan சொல்கிறார்:

  என்னளவுக்கு உன்னால ” முடியாது ” என்றாலும் — இந்த” ஸ்பரிச தீட்சை ” மூலம் சார்ஜ் ஏத்தறேன் … ” நல்லா வருவே நீ ” …!!!

 5. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  vijay Mallaiya asking the Bankers “Neengal athanaiperum uthamar thana sollungal,aasai nenjai thottup parthu sollungal”

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.