மோடிஜி அரசின் மக்கள் விரோத முடிவு –

stock-photo-stock-market

ஏழை, நடுத்தர மக்கள் நாசமாகப் போனாலும் பரவாயில்லை.
பங்கு மார்க்கெட் வளர வேண்டும். பெரும் வணிகர்கள்
மேலும் மேலும் “பெத்த வணிகர்களாக” ஆக வேண்டும் என்பது
தான் மத்திய அரசின் “மார்க்கெட்” கொள்கையாக இருக்கிறது.

பங்கு மார்க்கெட்டில் மக்களின் மொத்த சேமிப்பையும்
முதலீடு செய்ய வைக்க வேண்டும். அதற்காக என்னென்ன
செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்கிறது மத்திய அரசு.

ஏழை, நடுத்தர வர்க்க மக்கள் தங்கள் எதிர்கால
தேவைகளுக்காகவும்,

பணி ஓய்வு பெற்றோர், முதியோர் – தங்கள் ஓய்வுக் காலத்தை
நிம்மதியாக கழிக்கவும் –

நாடுவது, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும்
போஸ்ட் ஆபீஸ் சிறு சேமிப்பு திட்டங்களைத்தான்.
முதல் பத்திரமாக இருக்கும். ஓரளவு
வட்டியும் நிரந்தரமாக இருக்கும் என்பது தான் இதன்
முக்கிய காரணம்.

இந்த இரண்டு காரணங்களையும் நாசமாக்கினால், மக்கள்
வேறு வழி இல்லாமல் பங்குச்சந்தையில் தானே
தங்கள் சேமிப்பை போட வேண்டும் …?

மத்திய அரசின் இந்த முடிவைக் கண்டித்து ஒரு இடுகை
எழுதிக் கொண்டிருந்தேன். சில விவரங்களுக்காக
வலைத்தளத்திற்கு போனவன், நான் எழுதிக்கொண்டிருந்த
கிட்டத்தட்ட அதே தலைப்பில், அதே விஷயத்தைப்பற்றி
தினமணி’யில் தலையங்கமே வெளிவந்திருப்பதை
பார்த்தேன்.

நம் கருத்தை முற்றிலும் பிரதிபலிப்பதாக இருக்கவே,
தனியே நான் வேறு ஏன் எழுத வேண்டும் என்று,
நான் ஏற்கெனவே எழுதியதுடன் சேர்த்து
அந்த தலையங்கத்திலிருந்து சில பகுதிகளை மட்டும்
இணைத்துக்கொண்டு – இந்த இடுகையை
உருவாக்கி இருக்கிறேன்.

இந்த பகுதிக்கு மேல் உள்ளவை இன்றைய தினமணி
நாளிதழின் தலையங்கத்திலிருந்து –

—————————————

மக்கள் விரோத முடிவு!
By ஆசிரியர்
First Published : 21 March 2016 12:48 AM IST

பி.பி.எப்., கிஸான் விகாஸ் பத்திரம், சிறு சேமிப்புத்
திட்டங்கள், அஞ்சல்துறையின் செல்வமகள் திட்டம்
எல்லாவற்றின் வட்டி விகிதத்தையும் மத்திய அரசு
அதிரடியாகக் குறைத்துள்ளது. பி.பி.எப். (பப்ளிக் பிராவிடன்ட்
பண்ட்) திட்டத்தின் தற்போதைய 8.7% வட்டியை 8.1% ஆகவும், கிஸான் விகாஸ் பத்திரங்களின் தற்போதைய
வட்டி 8.7%-யை 7.8% ஆகவும் குறைத்துள்ளார்கள்.

தொழிலாளர் வைப்பு நிதி திட்டத்தின் (இ.பி.எப்.) தொகுப்பு
நிதியிலிருந்து 40%-க்கு அதிகமாக எடுத்தால் அதன் வட்டித்
தொகைக்கு வரி உண்டு என்ற அறிவிப்பை, எதிர்க்கட்சிகள்
ஒருங்கிணைந்து போராடி, விலக்கிக்கொள்ளுமாறு அரசை
அடிபணிய வைத்தன.
அதனால் உடனடியாக பாதிக்கப்படக் கூடியவர்கள்
பெரும்பாலானோர் அரசு ஊழியர்கள் என்பதால்தான்
அந்தப் போராட்டம். ஆனால், சாதாரண மக்கள்
பயனடைந்துவரும் சேமிப்புத் திட்டங்களில் வட்டிக்
குறைப்பு குறித்து யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதமும், மாதாந்திர
வருவாய்த் திட்டத்துக்கான வட்டி விகிதமும்கூட
இதற்கு விலக்கு அல்ல.

பல ஆயிரம் குடும்பங்கள், தங்கள் வைப்புநிதியில் கிடைக்கும்
வட்டியை, தங்கள் குடும்பத் தலைவர் சம்பாதிக்கும் சிறிய
ஊதியத்துடன் சேர்த்து குடும்பத்தை நடத்தி வருகின்றன.

இத்தகையோர் ரூ.5 லட்சம் முதலீடு செய்திருந்தால்,
தற்போதைய வட்டி விகிதத்தின்படி மாதம் சுமார் ரூ.3,800 பெற
முடியும். இது அந்த எளிய குடும்பத்தின் இதர செலவுகளை ஈடுசெய்ய உதவுகிறது. தற்போதைய அரசின்
முடிவால் உடனடியாக பாதிக்கப்படுவோர் இவர்கள்தான்.

பத்து ஆண்டுகளில் முகமதிப்பு இரட்டிப்பாகும்படியான
திட்டங்களுக்கு வட்டி விகிதத்தைக் குறைக்கலாம். ஏனென்றால்,
அவர்களது வாழ்க்கை இந்தப் பணத்தை நம்பி இல்லை.
நடுத்தரக் குடும்பத்தினரும், மூத்த குடிமக்களும் தங்களது
வாழ்வில் ஆதாரமாக இருக்கும் சேமிப்புகளுக்கான
வட்டி விகிதத்தைக் குறைப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை
மாற்றுவது என்றும், அதனை ஒவ்வொரு காலாண்டிற்கும் தீர்மானிப்பது என்றும்
பிப்ரவரி 16-ஆம் தேதியே முடிவு செய்யப்பட்டது.
ஒவ்வொரு வீட்டையும், ஒவ்வொரு சாமானிய மனிதரையும்
பாதிக்கும் இந்த வட்டிக் குறைப்பு அல்லது மறுநிர்ணயம்
குறித்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருக்கலாம்; விவாதித்திருக்கலாம்.

ஆனால், இதுபற்றி யாரும் கவலைப்படவில்லை.
இப்போது மோடி அரசு ஏழைகளைக் கசக்கிப் பிழிகிறது என்று
காங்கிரஸ் கட்சி அறிக்கை வெளியிடுகிறது. நீலிக் கண்ணீர் வடிக்கிறது.

தங்களது சேமிப்பு பத்திரமாக இருக்கும் என்று மக்கள் நம்புவது
அரசு வங்கிகளையும், அஞ்சலகங்களையும்தான். இவற்றிற்கான வட்டியைக் குறைப்பதன் மூலம், அதிக வருவாய்க்கு
ஆசைப்பட்டு அவர்கள் தங்களது சேமிப்பை உத்தரவாதம்
இல்லாத பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தூண்டுவதுதான்
இதன் பின்னணித் திட்டம். அதன் மூலம் பொருளாதாரம்
உயிர்ப்புப் பெறும் என்பது நிதியமைச்சர் அருண் ஜேட்லியின்
எதிர்பார்ப்பாக இருந்தால், அதைவிடப் பெரிய
மக்கள் விரோதப் போக்கும் தேசத் துரோகமும் வேறு எதுவும்
இருக்க முடியாது.

அதிக வட்டி என்று ஆசை வார்த்தை காட்டி, பல்வேறு
தனியார் நிதி நிறுவனங்கள் பல கோடி ஏழைகளின்
பல ஆயிரம் கோடி ரூபாய் சேமிப்பை ஏமாற்றிச் செ
ன்றிருக்கின்றன. பங்குச் சந்தையில் சூதாடிப் பணம் இழந்தவர்களின் சோகக் கதைகள் ஏராளம், ஏராளம்.

தங்கத்தில் முதலீடு செய்யலாம். ஆனால், மாதம்தோறும்
ஒரு தொகையைப் பெற்று குடும்பச் செலவை ஈடுசெய்ய
நினைப்போருக்குத் தங்கம் பயன் தராது.

பங்குச் சந்தை வணிகம் எழுச்சி, வீழ்ச்சி இரண்டுக்கும்
இடம் அளிப்பது. பங்குச் சந்தையில் திடீர் சரிவுகள் ஏற்பட்டால்,
வசதி இருப்போர் தாங்கிக்கொள்ள முடியும்; நடுத்தர மக்களால்
அது முடியாது.
ஆகவே, வட்டியின் மூலம் கிடைக்கும்
தொகையில் வாழ்க்கையை நடத்தும் முதியோர், ஆதரவற்றோர்,
நடுத்தரக் குடும்பங்களுக்கு இன்று இருக்கும் ஒரே நம்பிக்கை,

அவர்களது முதலீட்டுக்கு
அரசு உத்தரவாதமுள்ள சேமிப்புகள் மட்டும்தான்.
அதில் கை வைத்து விளையாடுவதும் ஒன்றுதான், அவர்களது
வயிற்றில் அடிப்பதும் ஒன்றுதான்.

முதியோர், ஆதரவற்றோர், தனிவாழ்க்கை நடத்தும் மகளிர் ஆகியோர் தங்கள் முதலீட்டில் அதிகபட்சம் ரூ.10 லட்சம்
வரையிலான வைப்புநிதிக்கு 10% வட்டி பெறவும்,

அதற்கு மேற்பட்ட தொகைக்கு 7% மட்டுமே வட்டி எனவும்
நிபந்தனைகள் விதிக்கலாம். இதன் மூலம், அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்த முடியும்.
இதுதான் சமூகப் பாதுகாப்பு அளிக்கும்.

தனது இப்போதைய முடிவை அரசு திரும்பப் பெற
வேண்டும். இல்லையென்றால் –

மக்கள் நரேந்திர மோடி அரசின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைத்

திரும்பப் பெறும் சூழல்
விரைவில் உருவாகும்.

( குறிப்பு – இதை நான் சொல்லவில்லை;
தினமணி தலையங்கம் சொல்கிறது… )

————————————————

பின் குறிப்பு –

தங்கள் எதிர்ப்பை, கருத்தை எடுத்துச்
சொல்லக்கூட பலமோ, சக்தியோ, திராணியோ இல்லாத
நமது சமூகத்தின் ஒரு பிரிவினரின் குறை இது.
வெளியே சொல்ல வழி தெரியாத – அந்தப் பிரிவின்
சார்பாக, இதை எழுதுவது என் தலையாய கடமையென்று
நினைக்கிறேன். ( நான் கூட இந்த முடிவால் பாதிக்கப்படுபவன்
தான் என்றாலும் கூட, என் 3 வேளை உணவிற்கு
தேவையானதை இறைவன் கருணையுடன் கொடுத்திருக்கிறான்.

அதற்கு கூட வக்கில்லாத என் தோழர்களின் நிலையைத்தான்
இந்த இடுகை பிரதிபலிக்கிறது…..)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to மோடிஜி அரசின் மக்கள் விரோத முடிவு –

 1. B.Venkatasubramanian சொல்கிறார்:

  கே.எம்.ஜி,

  நீங்கள் சொல்லும் பாதிப்புக்கு உள்ளானவர்களில்
  நானும் ஒருவன்.
  என்னைப் போன்ற இன்னும் லட்சக்கணக்கான குடும்பங்கள்
  மோடி அரசின் இந்தெ “செயற்கையான வட்டி குறைப்பு ”
  திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
  சிறு சேமிப்பு திட்டங்களில் வட்டியை குறைத்தால் மக்கள் வேறு வழி இல்லாமல் பங்குச்சந்தையில்,
  ம்யூச்சுவல் பண்டில் முதலீடு செய்வார்கள் என்பது
  மத்திய அரசின் சினிஸ்டர் திட்டம்.
  காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் இதை எதிர்க்காமல், மோடி அரசுக்கு கெட்ட பெயர் வந்தால் போதும் என்று
  மனதுக்குள் திருப்தியடைந்து கொள்கிறார்கள்.
  ஏழை மற்றும் நடுவ்த்தர மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த திட்டம் மத்திய அரசுக்கு எமனாகப் போகிற திட்டம்.
  உங்கள் அர்த்தமுள்ள கட்டுரைகளுக்கு என் பாராட்டுகள்.

  வெங்கடசுப்ரமணியன்

 2. CHANDRAA சொல்கிறார்:

  Modi reminds of the french queen who had adviced her countrymen to eat
  cakes if bread is not available during FRENCH REVOLUTION
  period
  All know what happened to the french queen…….

  • ravi சொல்கிறார்:

   chandraa,
   excellent joke …
   we tolerate thatha, amma, annai soniya,lalu,mulayam,mamta, khujliwal,
   in one way or other , these people come back again.. what are these people’s greatest achievements,,,

   amma with her huge mandate made a mess of things. still she may win in next election.after 2g,3g, all g’s, thatha still commands 25 % votes…

   middle class anger is like a bubble..
   if next two budgets give lot of benefits , middle class will flock to modi…
   simple ..

 3. LVISS சொல்கிறார்:

  Only very few of the middle class dabble in stock market — It is an unstable investment –You have to devote the whole day staring at the screen in one of the channels that run the figures as a ticker tape news — Many dont even understand how it works and many even wonder why it keeps changing when PM coughs –Only those who are willing lose money invest in stock market — it has more appeal for the rich than middle class people –Poor people cannot even go near it let alone understand it —

  If the FM has reduced PPF and other interest rates rate in the normal course without taking recourse to the other tax this would not have become a big issue —

  The first budget was really a UPA budget –Between the first and second year the relations with our neighbours and other foreign countries were firmed up – The second one gave relief to middle class( income tax relief raised ) and helped the industries also in some way — This years budget was focused entirely on agriculture leaving every thing aside –Mark my words, , the fourth and the fifth one will be budgets for the middle class and poor people and generally please all budgets in view of the elections and industries will also be taken care of –I may be wrong but my hunch is that the NDA has planned the budgets to focus on specifics this way every year at the very outset –This view was expressed by one person in a debate on the economics —

  • Bagawan சொல்கிறார்:

   This justification does not hold any water and it is not the way of governing our economics. BJP intention is very clear, rob the poor and allow the rich to loot, allowing the corrupt escape and no firm action in recovering NPA or bringing black money. Arun Jaietly single handedly taking every efforts in making BJP loose all the forth coming elections. We shall thank Arun Jaietly for his yeomen service.

 4. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  Middle class&salaried people r affected.very much.

 5. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  இதில் பாதிப்படைபவர்கள், வட்டியை நம்பி, பங்குச் சந்தையில் ஈடுபடும் திறமையோ அல்லது பொறுமையோ அல்லது ஆசையோ இல்லாமல் இருக்கும் லோயர் மிடில் கிளாஸ் மக்கள்தான். இவர்களில், வாத்தியார்கள், அரசு கிளார்க்குகள், சாதாரண வேலை பார்ப்பவர்கள் போன்றவர்கள் அடங்குவர். இவர்களது வாழ்க்கையே, வட்டிப் பணத்தை வைத்துத்தான் ஓடும். இவர்கள், கண்டிப்பாக வரிசையில் நின்று ஓட்டுப் போடும் ஜாதியினர். பெரும்பாலும் மறுமொழி இடும் நம்மைப்போன்றவர்கள் (பெரும்பான்மையர்) நம் வெறுப்பையும், கருத்தையும் பகிர்ந்துகொள்வதுடன் நம் கடமை முடிந்தது என்று நினைப்பவர்கள். ஆனால் அவர்கள் அப்படி அல்லர். மோடிஜி அவர்கள் மீண்டும் மீண்டும் பணக்காரர்களுக்காக ஆட்சி நடத்தினால், மக்கள் வெறுப்பை எதிர்கொள்ள நேரிடும். டேஞ்சிபிள் மக்கள் நலத் திட்டங்களை அவ்வப்போது அறிவிக்கவில்லை என்றால், என்ன கூவினாலும் (அதைச் செய்தோம் இதைச் செய்தோம்) அது வாக்குகளாக மாறாது. மக்களுக்கு முதலில், உணவு, உடை அப்புறம் இருப்பிடம் தேவை. அதற்குப்பின் தான், இந்துவா, முஸ்லீமா, என்ன ஜாதியா என்பது. உணவு உடை வாழ்வு போன்ற அடிப்படைத் தேவையில் கைவைத்தால், அது பெரிய எதிர்ப்பாக மாறும்.

 6. ssk சொல்கிறார்:

  அம்பானி,மிட்டல் , மற்றும் பெரும் அதிபர்கள் தொழில் நன்கு நடக்க எல்லா உதவிகளும் செய்யும். மற்றவர்கள் கடவுளை நினைத்து பஜனை செய்யலாம். சமஸ்கிருதத்தில் செய்தால் ஏதாவது பலன் கிடைக்கலாம்.

  ஒரு கூட்டத்துக்கு வலித்தால் உடனே உலகம்/தொழில் அழிய போகிறது, மக்கள் வெறுப்பு என்ற கூச்சல் வரும்.இதில் பணம் அதிக முதலீடு செய்துள்ளோர் யார் என்று பார்த்தால் உண்மை தெரியும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.