” அன்புள்ள குகனோடு ஐவரானோம் ” – வைகோ ஏமாற்றி விட்டார்.

puthiya koottani-2

இலக்கிய நயத்தோடு பேசுவதில் –
வைகோவுக்கு இணை யார் ..?
ஆனாலும் வைகோ இன்று ஏமாற்றி விட்டார்…!!!

மக்கள் நல கூட்டணியும், தேமுதிகவும் இணைவது குறித்த
தகவல் நேற்றிரவே கிடைத்தது. அப்போதே நான்
எழுதிய இடுகை தான் “தேமுதிக இரண்டு பழமாகிறது”….

இன்று காலை தொலைக்காட்சி செய்திகளை பார்த்துக்
கொண்டிருந்தபோது, எந்த நிமிடமும் வைகோ –

கம்பன் தனது ராமகாதையில் –
ராமன் – ஏற்கெனவே தனக்கு உள்ள 3 சகோதரர்களைச்
சேர்த்து நால்வராக இருந்தபோது,
கங்கைக்கரையில் புதிதாக சேர்ந்து கொண்ட குகனின்
அன்பையும், பாசத்தையும் பார்த்து, கனிவோடு-
“அன்புள்ள குகனோடு ஐவரானோம் ” என்று சொல்வார்.

கம்பனின் அந்த மறக்க முடியாத சொற்களான
“அன்புள்ள குகனோடு ஐவரானோம் ” – என்கிற வார்த்தையை
உபயோகித்து, ஏற்கெனவே ம.ந.கூட்டணியில் உள்ள
நாங்கள் நால்வரும் இன்று விஜய்காந்துடன் இணைந்து
“அன்புள்ள விஜய்காந்தோடு, ஐவராகிறோம்” என்று
சொல்வார் என்று காத்திருந்தேன்……

ஹூம்……
எல்லாம் வணிகம்… சுயநல அரசியல்…
இதில் அன்பு எங்கே, சகோதரத்துவம் எங்கே…?
திருமா சொன்னது போல் –
இவர்கள் கூட்டாளிகள் அல்ல –
“பங்காளி” கள் மட்டுமே –
பங்குகளை பிரித்துக் கொள்பவர்கள் தானே பங்காளிகள்….!
இது வெறும் தொகுதி உடன்பாடு மட்டுமே…!!!

இதில் யாருக்குமே குற்ற உணர்வு இல்லை….
இங்கு “இணைதல்” என்கிற பேச்சே முற்றிலுமாக இல்லை…வெறும் தொகுதி உடன்பாடு மட்டுமே.

தேர்தல் முடிந்த பிறகு, ஆட்சியைப் பிடிக்க
வாய்ப்பு கிடைத்தால், தொடர்ந்து இன்னொரு உடன்படிக்கை
போட்டுக்கொள்ளலாம்… இலாகாக்களை பிரித்துக் கொள்ளலாம்.

இல்லையென்றால், வேறு கட்சி எதாவது குற்றுயிராக
பத்து இருபது உறுப்பினர்கள் சேர்ந்தால், ஆட்சியமைக்கும்
நிலையில் இருந்தால் – அவர்களுடன் வேண்டுமானாலும்
சேர்ந்து கொள்ளலாம்.
இவர்களின் உடன்படிக்கை தேர்தல் வரை தான்…!

வைகோ மிகத்திறமையாக, தானே எல்லா கேள்விகளையும்
எழுப்பி, தானாகவே பதில் சொல்லிக்கொண்டு – சமாளித்தார்.
இருந்தாலும் பல கேள்விகள் எழுகின்றன –

-திருமதி பிரேமலதா விஜய்காந்த் இன்று
ஒளித்து வைக்கப்பட்டது ஏன்…?
இன்று ஒரு நாள் வேண்டுமானால் ஒளித்து விடலாம்….
தொடர்ந்து திருமதி பிரேமலதா விஜய்காந்த் அவர்களின்
ஆலோசனைகளுக்கு கட்டுப்பட்டு தான் வைகோ
ஒருங்கிணைப்பாளராக பயணிக்க வேண்டும்…
வைகோவின் தன்மானம் இடம் கொடுக்குமா ……?

– கூட்டணிக்கு ஒரு பெயர் வைப்பதில் கூட இவர்களால்
ஒன்றுபட முடியவில்லையா…? அதென்ன கேப்டன் அணி…?
இவர்கள் என்ன வாலிபால், புட்பால் ஆடுகிறார்களா ?

– விஜய்காந்த் எந்த சமயத்தில் உளறி விடுவாரோ
என்கிற அச்சத்தை வைகோவின் முகத்தில் நன்றாகவே
பார்க்க முடிந்தது.

அதன் விளைவாகத்தானே – ” தருமரை ( விஜய்காந்தை ) தனியே வெளியே விட மாட்டோம். இரண்டு பக்கமும்
பீமன் (திருமா), அர்ச்சுனனாக (வைகோ) இருந்து யாரும்
அண்ட விடாமல் பார்த்துக் கொள்வோம் ” என்று
வைகோ அசடு வழியச் சொன்னது…?

– -சமீபத்தில், மக்கள் நலக் கூட்டணி தேமுதிகவுடன்
இணைந்து விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக
அறிவித்து போட்டியிடுமா என்ற கேள்விக்கு,
இது டேக் ஆப் ஆகி பறக்க ஆரம்பித்து விட்ட விமானம்.
தேமுதிக வேண்டுமானால் எங்களுடன் இணையலாம்.
தேமுதிக தலைமையில் மக்கள் நலக் கூட்டணி செயல்படாது
என்றார் வைகோ. ஆனால் இன்று கோயம்பேட்டில்
தரையிறங்கி விஜயகாந்த்தை பிக்கப் செய்துள்ளது
இந்த விமானம்..

-என்று ஒரு நாளிதழ் அதற்குள்ளாகவே விமரிசிக்கிறதே…!

– முதல்வர் பதவியைத்தான் விஜயகாந்த் முக்கியமாக
நினைக்கிறார் என்பதால், அவரை குஷிப்படுத்தவும்,
சந்தோஷப்படுத்தவும், அவரை கூட்டணிக்குள் இழுக்க
வேறு வழியே இல்லாததாலும், முதல்வர் வேட்பாளர்
விஜயகாந்த் என்று சொல்ல மக்கள் நலக் கூட்டணித்
தலைவர்கள் முன்வந்தனை –

என்று இன்னொரு நாளிதழ் சொல்கிறதே…!

– விஜய்காந்த்தின் 5-6 % ஓட்டுக்காக, ம.ந.கூட்டணி
தன் கொள்கைகளை விட்டுக் கொடுத்து விட்டதா …?

– என்கிறதே இன்னொரு நாளிதழ்…?

கம்யூனிஸ்ட் தோழர்கள் எத்தனை பேர், இதனை
வரவேற்று ஏற்றுக் கொள்வார்கள்…?

அதற்குள்ளாகவே தோழர் பாலபாரதியின் முகநூலில் –
‘நல்லதோர் வீணை செய்து…!’ என்ற பாரதியின்
வரிகளுடன் –
‘விஜயகாந்த் என்ற புழுதியிடம் சேர்த்தாச்சு’,- என்கிற
கமெண்ட் வந்திருப்பது எதைக் குறிக்கிறது….?


– இவையெல்லாமே உடனடி re-action தான்.
என்னுடைய இப்போதைய பார்வையில் –

” மக்கள் நல கூட்டணி தனியாக பயணம் செய்யத்
துவங்கியபோது இருந்த மதிப்பும், மரியாதையும்,
விஜய்காந்துடன் சேர்ந்தவுடன் குறைந்து விட்டது….”

Anyway – போகப் போக கருத்தும், பார்வையும்
மாறக்கூடும்… பார்ப்போம்…!!!

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to ” அன்புள்ள குகனோடு ஐவரானோம் ” – வைகோ ஏமாற்றி விட்டார்.

 1. LVISS சொல்கிறார்:

  Mr. Vaiko has been an MP and has been in politics for so many years –The same goes with CPI leader -How did they reconcile to this arrangement of playing second fiddle to Mr.Vijayakanth —

 2. வெ.க.சந்திரசேகரன் சொல்கிறார்:

  யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்…….

 3. Prakash சொல்கிறார்:

  This is much better alliance than any other…

 4. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  இது கொஞ்சம் தேவலையான கூட்டணி. ம.ந.கூ க்கும், தேதிமுகவுக்கும் வேறு என்ன சௌகரியமான முடிவு இருக்க முடியும்? தே.தி.முகவுக்கு 234 தொகுதிக்கும் ஆட்கள் கண்டுபிடிப்பது தேவையில்லை. என்னோடது கொஞ்சம் உன்னோடது கொஞ்சம் என்று கௌரவமாக வாக்குகள் வாங்கலாம். மற்றபடி, கொள்கை அது இது என்று யாரும் தேடி நேரத்தை வீணடிக்கவேண்டாம்.

  நிஜமாகவே, வைகோ இன்னொரு நாஞ்சில் சம்பத் (வருத்தப்பட்டாலும் இதுதான் உண்மை. பேச்சு வியாபாரி). அவரை ஸ்டாலின் அவமானப்படுத்தியதால், அவரால் திமுகவுடன் சேர இயலாது போயிற்று. திருமாவுக்கு என்ன காரணம் என்று பிடிபடவில்லை. (ஒருவேளை திமுக அவரையும் பாமகாவுக்காக மதிக்கவில்லையோ தெரியவில்லை). இதில், தேதிமுக, திருமா (சில பகுதிகளில்), அப்புறம் தொழில் பகுதிகளில் கம்யூனிஸ்டுகள், கொஞ்சம் மதிமுகவுக்கு வாக்கு இருக்கிறது (இதே வரிசையில்). இதில் பயன் பெறப்போகிறவர்கள் யார் என்று பார்த்தால், 5 தொகுதிகளில் தேதிமுக, 5 தொகுதிகளில் திருமா. இதைத் தவிர அவர்கள் தொகுதிகள் வெற்றி பெற்றால், தமிழ்னாட்டிற்கு வெளியே இருப்பதால், தற்போதைய நிஜ கள நிலவரம் எனக்குத் தெரியவில்லை.. வெறும் அரசியல் செய்திகள் மட்டும் படித்தால் போதாது என்று அர்த்தம். அதேபோல், தன் வெற்றித் தொகுதிகளுடன் திருமா எலெக்ஷனுக்குப் பிறகு அணியைவிட்டு வெளியேறாவிட்டால், அவரைப் புரிந்துகொள்ளவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

  நியூசி-இந்தியா மேட்ச் போல், கருணானிதி, எதிர்பாராமல் அதிகத் தொகுதிகள் வெற்றி பெற்றால் (70+) ஆச்சரியப்படுவதற்கில்லை.

  இதில், 68 செயல்படாத முதல்வர். 93 செயல்திறன் உள்ளவர் என்ற ஜால்ராதான் சகிக்கலை.

  வெள்ளத்தில் ஒதுங்கிய மரங்களெல்லாம் சேர்ந்து ஒரு பூங்காவை உருவாக்க முடியுமா? வெந்த புண்ணில் கா.மை சார் வேல் பாய்ச்சலாமா? நாஞ்சில் பேச்சும் வைகோ பேச்சும் ஒரே மாதிரிதான். அப்போ (அன்று) என்ன நிலையோ அதுக்கு ஏத்தமாதிரி பேச்சு தயாரித்து வெளியிடப்படும். ஆவேசம், கோபம், உணர்ச்சி, கொந்தளிப்பு எல்லாம், அவரவர் நடிப்புத் திறமையைப் பொறுத்து.

 5. Sanmath AK சொல்கிறார்:

  Though this alliance is not going win more seats, this alliance should be encouraged…… All DMK biased bloggers, writers and the party-men create more sound about Makkal Nala Koottany – calling them ADMK B team…… Their worry is about splitting of anti-incumbency votes…… Internally the core-party is not interested in a third alliance…… Though JJ too doesnt like that third formation, for this election it is an advantage to her……. Both DMK & ADMK does not want a third man in the race…… They both dont want to cut their share out to one more guy…… If this alliance wins 10 seats and more it would be a big victory – reality is – 5 seats would be a decent win……. They should be aiming 2021 election to negotiate with two major parties basis the votes they cultivate(in elections) from now on……. Let us see how things proceed……

 6. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  ஒன்றை விட்டுவிட்டேன். தேதிமுக, விசி – இந்தக் கூட்டணியால், சாதி விசுவாசத்தால் (தலித் எதிர்ப்பு மன’நிலை) பாமகா அதிக வாக்குகள் வாங்கி அதிமுக/திமுகவை வட தமிழக பெல்ட்டில் பின் தள்ளுமா அல்லது காற்று தேதிமுக-விசிக்குச் செல்லுமா என்று கணிக்க முடியவில்லை. இன்னும் இரண்டு மாதங்களுக்கு, இளவரசன்-திவ்யா likes (இதுமாதிரித் திருமணம் செய்துகொண்டவர்கள்) should stay away from Tamilnadu. Beware… Election is nearing.

 7. Antony சொல்கிறார்:

  I feel, instead of allying with DMK, Vijayakantha has got some hope from neutral public by joining with Vaiko and co. But, as you suggested some Vaiko and co might loose some hope from another set of public. But unlike DMK or ADMK, I feel Vaiko will not try to split the DMDK. And if Seeman succeeds in this election , there are much more possibilities for him also to support them to form government at least to avoid both big parties to come in to authority.

 8. selvarajan சொல்கிறார்:

  சவலைக் குழந்தைகள்’ கூட்டணியில் இணைந்துள்ளார் விஜயகாந்த்: என்று தமிழிசையும் — தனித்தா இல்லை பா.ஜ.க.வோடு கூட்டணியா என்று பா.ம.க .வும் — பேரம் பிளஸ் பெட்டி போச்சே என்று பிரேமலதாவும் — அதிருப்தி தே .மு.தி.க. மாவட்ட செயலார்களை இழுக்க கலைஞர் அவர்களும் — அப்பாடா ஒரு வழியா போய் சேர்ந்துட்டார் என்று ஜெயாவும் — இதுவா இல்லை அதுவா என்று வாசனும் — எது நடந்தாலும் நமக்கென்ன என்று கூடிய நட்பு காங்கிரசும் — என்னய்யா இவுங்க ” பாண்டவர் கூட்டணி ” என்கிறார்கள் – ஒருவேளை வனவாசம் போய் விடுவார்களோ என்று மக்களும் — ஆளாளுக்கு ஒவ்வொன்றை நினைத்துகொண்டு இன்னும் ஒரு ஐம்பது நாட்களை ஓட்டவேண்டியது தானே … ?

 9. gopalmohan சொல்கிறார்:

  this is powergame let them play it.medias in a fix,try to write comments in favour of ammma

 10. s.Justine சொல்கிறார்:

  /வைகோவின் தன்மானம் இடம் கொடுக்குமா ……?/ # great joke.

 11. LVISS சொல்கிறார்:

  People are silently watching the parties changing their stance to get maximum seats from any possible alliance – — In this scenario the AIADMK did not go after any party for alliance –The parties are approaching them –This itself will create a good impression about the party —

 12. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  கூட்டணிக்கு ஒரு பெயர் வைப்பதில் கூட இவர்களால்
  ஒன்றுபட முடியவில்லையா…அதென்ன கேப்டன் அணி…?
  இவர்கள் என்ன வாலிபால், புட்பால் ஆடுகிறார்களா ?

  இது நேற்றில் இருந்து எனக்குள் தோன்றிய கேள்விதான் …

 13. Tamilian சொல்கிறார்:

  Initially I was surprised when Vijayakanth started DMDK and went alone. He got a respectable 9% which made him the 3rd big party after AIADMK &DMK. His later moves and speches and tantrums in public clearly showed him as a misfit for any political office leave alone CM. He archived ‘nil’ as opposition leader, nor spoke cogently. The surprise is that he still has 5-6% votes which s larger than the other leaders. Pity is that the long time political parties and leaders go behind him. That we discuss him and his party is an enigma to many given his record. TN Politics!

 14. today.and.me சொல்கிறார்:

  கேப்டன் என்ற பெயருக்காக

  தண்ணியில மெதக்குற கப்பல ஓட்டுறவனுக்குப் பேருதான்யா கேப்டனு
  எந்நேரமும தண்ணில மெதக்குறவனுக்குப் பேரு கேப்டன் இல்லைடா என் சிப்ஸூ
  – இது வடிவேலு, மு கருணாநிதி தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில்.

  இந்தப் பேச்சின் இடையில் விஜயகாந்த்தைக் கிண்டலடித்து வடிவேலு பேசும்போது

  இப்போதைய கேநகூவின் நால்வரில் ஒருவரான திருமாவளவனின் சிரிப்பைப் பார்க்கக் கண் கோடி வேண்டும்.. என்ன ஒரு தெய்வீகச் சிரிப்பையா அது.

  அடத் தூ த்தூ

  இவர்களுக்கெல்லாம் மக்கள் நலம் என்ற ஒன்று இருக்கிறதா என்ன?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.