இன்று மார்ச் 23 – தேசத்துக்காக தூக்கிலேறிய அந்த மூன்று மாவீரர்களை நினைவில் கொள்வோம்…..!

தூக்கிலிடப்பட்ட அதே இடத்தில் இன்று சிலையாக நின்று கொண்டிருக்கிறார்கள் மூவரும்….!!!

இன்று – தலைவர்கள் எல்லாம் பதவிக்கு
ஆலாய் பறப்பதை பார்த்து கொண்டிருக்கும் வேளையில்
இவர்களையும் கொஞ்சம் நினைத்துக் கொள்வோமே……………….

பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகிய மூன்று பேருக்கும்
மார்ச் 24, 1931 அன்று லாகூர் சிறை வளாகத்தில்
தூக்கு தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டிருந்தது.

ஆனால் – சில பிரச்சினைகளை எதிர்நோக்கிய
பிரிட்டிஷ் அதிகாரிகள், கடைசி நாளில் தண்டனையை
11 மணி நேரங்களுக்கு முன்னதாக –
அதாவது முன்தினம் மார்ச் 23ந்தேதியே
இரவு 7.30 மணிக்கு லாகூர் சிறையில் நிறைவேற்றி
விட்டனர். தோழர்கள் மூவரும் ஒன்றாகவே,
ஒரே சிறையில், ஒரே நேரத்தில் – வீர மரணம் எய்தினர்.
இந்திய சரித்திரத்தில், இப்படி இரவு நேரத்தில்
தூக்குப் போடப்பட்டவர்கள் இவர்கள் மட்டுமே !

சட்டப்படி தூக்கு தண்டனை நிறைவேற்றலை
மேற்பார்வையிட ஹானரரி மாஜிஸ்டிரேட்கள் யாரும்
முன்வராத நிலையில்,
ஒரு வெள்ளைக்கார நீதிபதியின் முன்னிலையில் தண்டனை
நிறைவேற்றப்பட்டது.

bhagatsingh_deathcertificate-1

( BhagatSingh_DeathCertificate )

தண்டனை நிறைவேற்றப்பட்டதும், அவசர அவசரமாக –
சிறையின் பின்பக்க சுவர் ஒன்று உடைக்கப்பட்டு,
பின்பக்கமாக, ரகசியமாக உடல்கள் வெளிக் கொண்டு
செல்லப்பட்டன.

சிறையை அடுத்து இருந்த கண்டாசிங் வாலா கிராமத்தை
ஒட்டிய வனாந்திரப் பிரதேசத்தில், உடல்கள்
சிறை ஊழியர்களாலேயே எரியூட்டப்பட்டு, அவர்களது
அஸ்தி(சாம்பல்) அருகில் ஓடிக்கொண்டிருக்கும்
சட்லெஜ் ஆற்றில் உடனடியாகக் கரைக்கப்பட்டது….

————————————-

– மேலே இருப்பது –
– இரவில் தூக்கிலிடப்பட்டு -விடியும் முன்னே (part-2)
Posted on செப்ரெம்பர் 23, 2013 by vimarisanam – kavirimainthan –
பழைய இடுகையிலிருந்து ஒரு பகுதி…..

————————————————–

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to இன்று மார்ச் 23 – தேசத்துக்காக தூக்கிலேறிய அந்த மூன்று மாவீரர்களை நினைவில் கொள்வோம்…..!

 1. kalakarthik சொல்கிறார்:

  நாட்டிற்காக தம் இன்னுயிர் நீத்த அந்த மூவர்க்கும் என் வணக்கங்கள்.
  கார்த்திக் அம்மா
  கலாகார்த்திக்

 2. selvarajan சொல்கிறார்:

  அன்று அனைத்து சுக — துக்கங்களையும் இழந்து கடைசியில் உயிரையும் கொடுத்து தேசத்தை காப்பாற்றிய ” புனிதர்களை ” பற்றி — இன்றைய இரண்டு தலைமுறையை சேர்ந்தவர்களை அறியாவண்ணமே வைத்திருந்து — நாட்டுக்காக உழைத்த — உழைக்கின்ற உத்தமர்களை போல காட்டிக்கொள்ளும் ” கயமை ” சுரண்டல் அரசியல்வாதிகளை — என்ன செய்வது …. ? அவர்கள் போட்ட பிச்சை தான் இந்த ” சுதந்திரம் –ஜனநாயகம் ” — என்பதையெல்லாம் இன்றைய இளைஞர்களுக்கு கொண்டு சேர்ப்பது யார் … ?

 3. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  மன்னிக்கணும்.. இடுகை தலைப்பைப் பார்த்த உடனேயே (இன்றுதான் பார்த்தேன்), நால்வர் என்று போடாமல், மூவர் என்று போட்டுள்ளீர்களே என்று நினைத்தேன். தேசத்துக்கும் இவர்கள் முடிவுக்கும் என்ன சம்பந்தம் என்று நினைத்தேன்.

  அப்புறம்தான் இது மறக்கப்பட்ட வீரர்களைப் பற்றியது என்பதை அறிந்தேன். அவ்வப்போது தேசபக்தியைத் தூண்டும் இடுகையை எழுதுவது மகிழ்ச்சியளிக்கிறது. நியாயப்படி, இவர்களது, மற்றும் தீரத்துடன் நாட்டுக்காகப் போராடிய தலைவர்களின் சிலைதான் எல்லா இடங்களையும் ஆக்கிரமிக்கவேண்டும். இவர்களின் வரலாறுதான் புத்தகங்களில் இடம் பெற வேண்டும். அதைவிட்டுவிட்டு, அரசியல் சௌகரியத்துக்காகப் பலவற்றை வரலாறு என்ற பெயரில் திணிப்பதால் நாட்டுப்பற்று என்பது ‘நம் மக்களுக்கு, கிரிக்கெட்டுடன் முடிந்துவிடுகிறது.

 4. Antony சொல்கிறார்:

  The maturity he showed at the age of 23 is awesome. Veera vanakkankal.

  Missed this post in middle of the loads of comments in other posts..

 5. Antony சொல்கிறார்:

  Dear KM, I feel like your blog is misled by people of political stands. The difference in amount of support given to this post and your other posts show it. May be I am wrong.. Just shared my thought

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் அந்தோனி,

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
   எல்லாருக்கும் எல்லா விஷயத்திலும்
   ஆர்வம் இருக்குமென்று சொல்ல முடியாது.

   என் மனதில் தோன்றும் எல்லா விஷயங்களை
   பற்றியும், நான் இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.
   அவரவருக்கு ஈடுபாடு உள்ள விஷயங்களில்,
   அவரவர் விவாதங்களில் கலந்து கொள்கிறார்கள்.
   இதில் தவறு ஏதும் இல்லை நண்பரே.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.