தேமுதிக “இரண்டு” பழமாகிறது… ஒன்று கலைஞருக்கு – மற்றொன்று ம.ந.கூட்டணிக்கு ….!!!

karunanithi

செந்தில் கவுண்டமணி “வாழைப்பழ கதை”
இங்கு ” உல்டா ” ஆகிறது. அங்கு இரண்டு ஒன்றானது.
இங்கு ஒன்று இரண்டாகிறது.

கலைஞர் – தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்…
சிறந்த ராஜதந்திரி …என்பதை விட
சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்பதை நினைவில்
கொண்டு இந்த கதையை அணுக வேண்டும்.

“பழம் வரும்” என்கிற வார்த்தையை பொய்யாக்க
கலைஞர் விடுவாரா …? தேமுதிக என்ற பழம் ஒன்றாக
இருந்தால் வராது என்கிற நிலை ஏற்பட்டவுடன்,
அதை ” இரண்டு ” ஆக்க ஏற்பாடுகள் நடந்து விட்டன.

விஜய்காந்த் தன்னுடைய கூட்டணி முடிவை
என்று அறிவிக்கிறாரோ – அன்றே தேமுதிகவில் புதிய பழம்
ஒன்று தோன்றி அது கலைஞர் வைத்திருக்கும்
பால் டம்ளரில் விழும் என்று தெரிகிறது.

அந்த பழத்தின் அளவு, தாக்கம், விளைவு எப்படி இருக்கும்
என்பது போகப்போகவே தெரியும்.

விஜய்காந்த் சீக்கிரம் முடிவெடுத்தால்,
பாதிப்பு குறைவாக இருக்கும் என்றும் தாமதிக்க தாமதிக்க,
அடுத்த பழம் பெரிதாகவே உருவாகும் என்று தெரிகிறது.

ஆக – கலைஞரின் “பழம்” ( மைனஸ் விஜய்காந்த் ..)
அவரிடம் சேர்வதை காணக்கூடிய வாய்ப்பு
விரைவில் கிடைக்கலாம்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to தேமுதிக “இரண்டு” பழமாகிறது… ஒன்று கலைஞருக்கு – மற்றொன்று ம.ந.கூட்டணிக்கு ….!!!

 1. எழில் சொல்கிறார்:

  முழு பழமாக கருணாநிதியிடம் போனாலும் தேர்தலுக்கு பின் பழம் இரண்டாகும் (ஜெயலலிதாவிடம் பட்டது சீக்கிரம் மறக்காது) என்பதும் விஜயகாந்துக்கு தெரியும். அதனால் தான் ஆட்சியில் பங்கு என்பதில் தெளிவாக இருப்பது போல் தெரிகிறது.

  திருமா கலைஞரை விட்டு விலகி வர காரணங்களில் ஒன்றாக கூறப்படுவது, விசி தொண்டர்கள் கூட்டணிக்காக வேலை செய்தது போல் விசி வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் திமுக தொண்டர்கள் வேலை செய்யவில்லை என்பதாகும். விளைவு ‘விசி’யினர் தோல்வியை தழுவினர். இது போன்ற உள்ளடி வேலைகளுக்கு கருணாநிதி பேர் போனவர் என்பது இப்போதுள்ள சகல அரசியல் தலைவர்களுக்கும் தெரியும்.

  அதனால் தான் தலைவர் பால் சொம்போடு காத்துக்கிடந்தாலும் பழங்கள் விரும்பி விழுவதில்லை.

  • எழில் சொல்கிறார்:

   மேலுள்ள பின்னூடம் விஜயகாந்த் – மக்கள் கூட்டணியினர் சந்திப்பு என்ற செய்தி வருமுன் எழுதப்பட்டது.

 2. today.and.me சொல்கிறார்:

  மநகூ – 110… தேமுதிக – 124
  முதலமைச்சர் வேட்பாளர் விஜயகாந்த்.

 3. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  தே திமுக ஓட்டு விஜயகாந்தை வைத்துத்தான். அதனால் யார் கட்சி மாறினாலும் தேதிமுக பாதிக்கப்படாது. டு டே & மி – ரொம்ப வேகமாக ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ளார். திமுக அழுத்தத்தினால் விரைவாக விஜயகாந்த் இதைச் செய்திருக்கிறார் என்று தோன்றுகிறது. திமுகவுடன் விஜயகாந்த் சேர்ந்தால், எந்த நியாயமும் கற்பிக்க முடியாது என்று விஜயகாந்துக்குத் தெரியும். “மதச்சார்பு” என்ற வார்த்தையும் இந்தத் தேர்தலில் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நேரடியாக ஜெ மீது கிறித்துவர்களுக்கோ இஸ்லாமியர்களுக்கோ வெறுப்பு இந்தத் தேர்தலில் 2006 போல் இருக்காது. தமிழ்னாட்டில் “இந்துத்வா” என்று சொல்லி வாக்கு பெற முடியாது என்பது ஜெவுக்கு நன்றாகத் தெரியும். (பெரியாரின் தாக்கம் அப்படி). தேதிமுகவிடமிருந்த வரும் பழ.கருப்பையாக்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு மதிப்பும் இருக்காது. பிரேமலதா பிரிந்து திமுகவில் சேர்ந்தால் மிகக் கொஞ்சம் தாக்கம் இருக்கலாம். அவரைத் தவிர, தேமுதிகவில் தெரிந்த புள்ளிகள் யாரும் இல்லை.

  • ravi சொல்கிறார்:

   நல்ல நகைச்சுவை !!
   தமிழ்னாட்டில் “இந்துத்வா” என்று சொல்லி வாக்கு பெற முடியாது என்பது ஜெவுக்கு நன்றாகத் தெரியும். (பெரியாரின் தாக்கம் அப்படி).
   உடுமலை சம்பவத்திற்கு எல்லாம் அப்புறமும் , இந்த உலகம் நம்மை நம்புகிறது !!
   இடத்திற்கு தகுந்த மாதிரி,ஊருக்கு எத்த மாதிரி ஜாதி, இந்துத்வா, இஸ்லாம் ,கிருஸ்துவ அரசியல் செய்வதில் நம் இரண்டு கழகங்களும் கெட்டி…

  • Antony சொல்கிறார்:

   Agreeing it..

 4. selvarajan சொல்கிறார்:

  மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது தேமுதிக
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/vijayakanth-announce-his-alliance-decision-today-249586.html ….. மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளரானார் விஜயகாந்த்: தேமுதிகவுக்கு 124 தொகுதிகள் ஒதுக்கீடு
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/people-s-welfare-meet-leaders-meet-vijayakant-249595.html …..ஒரு வழியா இந்த கூட்டணி உருவாகிவிட்டது ….! பாவம் கலைஞர் : பழம் என்றார் — பால் என்றார் — அப்புறம் புது சொம்பில் புது பால் என்றார் — கடைசியில் அவருக்கு — பே … பே .. காட்டிவிவிட்டு ம.ந.கூட்டணியில் ஐய்க்கியமாகி விட்டார் வி.காந்த் … !!இனி கட்சிகள் மற்றும் தேர்தலின் போக்கு எப்படி இருக்கும் …. ?

 5. selvarajan சொல்கிறார்:

  இவ்வாறு பல பழங்களை தின்று கொட்டை போட்டவர்தானே இவர் … ! இருந்தாலும் — ” .பாம்பிற்குப் பல்லில் விஷம்.
  விஷப் பூச்சிக்கு அதன்
  தலையில் விஷம்.
  தேளுக்கு அதன் வாலில் விஷம்.
  கெட்ட குணம் படைத்த
  மனிதனுக்கு
  உடல் பூரா விஷம் —- மனிதன் தனியாகவே
  இந்த உலகத்திற்கு
  வருகிறான்.
  தனியாகவே உலகத்தை
  விட்டுச் செல்கிறான்.
  தனியாகவே தான் செய்த
  நல்லது- கெட்டது காரியங்களின்
  பயனை அனுபவிக்கிறான்.
  தனியாகவே தனக்கு உண்டான
  முடிவான நிலையை அடைகிறான் ” —- என்ற சாணக்கியரின் நீதிகளில் : இந்த சிலவற்றையாவது தற்கால ” சாணக்கியர் ” படித்து இருப்பாரா … ? அதிலும் ” தனியாகவே ” — என்கிற வார்த்தையின் கனம் என்ன என்றாவது சிந்த்தித்து இருப்பாரா … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   “எப்படியாவது” – 6வது தடவையாக முதலமைச்சர் …
   இந்த நினைப்பு இருக்கையில்
   வேறு எந்த சிந்தனையும்
   உள்ளே குடிபுக முடியாது நண்பரே.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  பழம் கனிந்து பாழாய் போய்விட்டது… பொன் ரா

  • ravi சொல்கிறார்:

   பழம் கனிந்து பாலில் விழுந்ததா..? பால் புளித்துப் போய்விட்டது.
   பொன்.ரா வுக்கு அல்ல. தாத்தாவுக்கு தான் …

 7. LVISS சொல்கிறார்:

  A section of the cadre who wanted to ally with the DMK or those who were not satisfied with the way Vijayakanth was running the party may switch their support to the DMK–Vaiko has agreed to Vijayakant as CM —

 8. வெ.க.சந்திரசேகரன் சொல்கிறார்:

  இந்த தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் நான் 92 வயது வாழ்ந்து ஒரு பிரயோசனமும் இல்லை என்கிறார் சீனியர் அதை விரும்பாத ஜூனியர் கேப்டனை முன்நிறுத்திதான் தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்கிறார். இதற்கிடையில் பழம் மநகூ சொம்பில் விழுந்து விட்டது பார்ப்போம் சீனியரின் தந்திரமா,ஜூனியரி்ன் வீராப்பா எது வெற்றியடைய போகிறது என்று.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.