கேப்டன் கூட்டணிக்கு வரவேற்பும் / எதிர்ப்பும் ….!!!

pancha pandavar

இந்த படம் வலையில் கிடைத்தது. சுவையாக இருந்ததால் இங்கு பதிவு செய்கிறேன். “ஆக்கியவர்களுக்கு” நன்றி….!!!

நேற்றைய தினம் மக்கள் நல கூட்டணி தலைவர்களும்,
திரு.விஜய்காந்த்தும் சந்தித்து, புதிய கூட்டணியை
( கூட்டணி இல்லையோ ? வெறும்
தொகுதி உடன்பாடு மட்டும் தானோ ….? )
அறிவித்த பிறகு தமிழகத்தில் பல அரசியல் தலைவர்களும்,
பல்வேறு அமைப்புகளும், ஊடகங்களும் விதம்விதமான
கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.

அவ்வாறு முன்வைக்கப்பட்ட பல கருத்துக்களோடு,
நமது கருத்துக்களும் சேர்ந்து இங்கு ஒரு அலசல்…..

இந்த கூட்டணி என்றோ முடிவு செய்யப்பட்ட ஒன்று
என்று ம.ந.கூ. தலைவர்கள் இப்போது கூறுகிறார்கள்.

இதை இரண்டு மாதங்களுக்கு முன்னர், ம.ந.கூட்டணி
தலைவர்கள், விஜய்காந்தை நேரடியாக சந்தித்து அழைப்பு
விடுத்தவுடன் சொல்லி இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்.
இடையில் ஏன் இந்த இடைவெளி……?
விஜய்காந்த் அப்போதே இந்த கூட்டணியை ஏன் ஏற்கவில்லை…?

இடையில் என்னவெல்லாம் நடந்தது….?
தேமுதிக வுக்கு – திமுகவுடன் கூட்டணிக்கு
பேச்சுவார்த்தையே நடக்கவில்லை
என்று விஜய்காந்த் கூறுவதை உண்மை தானென்று
ம.ந.கூ. தலைவர்களால் வெளிப்படையாக கூற முடியுமா ?
வி.காந்த்தின் மைத்துனர் சுதீஷ் – சபரீசன் குழுவினருடன்
பேசவே இல்லை என்று வைகோவால் உறுதிகூற முடியுமா …?

பாஜக தலைவர்களுடன் வி.காந்த் கூட்டணி குறித்து
பேச்சு வார்த்தையே நடத்தவில்லையா …?
தன்னை முதலமைச்சர் வேட்பாளர்களாக அறிவித்து,
தான் கேட்கும் இதர சலுகைகளையும் ( ரா.சபா உறுப்பினர்
உட்பட ) அளிப்பதாக இருந்தால் கூட்டணி பேசலாம்
என்று வி.கா. கூறவில்லையா …? பாஜக தலைமையுடன்
திருமதி பிரேமலதா பேசியதே இல்லையா ?

மக்கள் நல கூட்டணி தலைவர்களுடனே கூட, வி.காந்த் –
பல முன் நிபந்தனைகளை முன்வைத்து, முன்னதாகவே
பேச்சு வார்த்தை நடத்தவில்லையா ?

வேறு எந்த கட்சியும் அவரது “பேரங்களுக்கு” இணங்கி
வராத நிலையில், வேறு வழியின்றி, இவர்களின்
அமைப்புடன் கூட்டு சேர்ந்தால் – அது ஒரு சாதனையா ?

இப்போதும் கூட – அது ஏன் தொகுதி உடன்பாடு மட்டும் ..?
ஏன் கூட்டணி இல்லை …? ஏன் தனித்தனியாக பிரச்சாரம்..?

ம.ந. கூட்டணியின் கொள்கைகளை வி.கா. ஏற்றுக்
கொள்ளவில்லையா …?

மக்கள் நலக் கூட்டணியின் மிகப் பெரிய பலமே
அவர்கள் மாற்று அரசியலை முன்வைத்ததுதான்.

இப்போது வி.காந்தை முன் நிறுத்துவதன் மூலம் அவர்கள்
எந்தவித மாற்று அரசியலை முன்வைக்கிறார்கள்…?

கருணாநிதி குடும்ப ஆட்சி போய் –
விஜய்காந்த் குடும்பம் ஆட்சிக்கு வரும் என்பதையா …?

கருணாநிதி, மற்றும் ஜெயலலிதாவை விட மேம்பட்டவர்
என்று எந்தவிதத்திலாவது விஜயகாந்த் தன்னை
நிரூபித்திருக்கிறாரா ….?

வரம்பற்ற தனிநபர் துதி,
ஒற்றை நபரை மையமாகக் கொண்ட அதிகார அரசியல்,
ஆகியவற்றை தானே இப்போது மீண்டும்
ம.ந.கூட்டணி தலைவர்கள் முன்வைக்கிறார்கள்… ?

இந்த வகையில் ஆட்சி மாறினால்
” வாலு போச்சு கத்தி வந்தது –
டும் டும் டும் “
என்று கோஷம் போடுவதை விட
வேறு எந்த வகையில் வரவேற்க முடியும் …?

அடுத்து ஒரு மிக முக்கியமான விஷயம்…
நான் சென்ற இடுகையிலேயே எழுதி இருந்தேன்…
ஏனோ தெரியவில்லை – யாரும் அதைக்குறித்து இதுவரை
எந்த கருத்தும் கூறவில்லை….

இவர்களது இணைப்பை அறிவிக்கும் நிகழ்ச்சியின்போது,
திருமதி பிரேமலதா ஒளித்து வைக்கப்பட்டதேன்…?
அவர் அங்கு இருப்பதை தங்களுக்கு பலவீனம் என்று
இரு தரப்பினரும் நினைத்தார்களா …?
வி.காந்த் இந்த முடிவிற்கு வர யார் காரணம் என்பதை
பொதுமக்களிடமிருந்து மறைக்கிறார்களா ?
இது வி.கா. சுயநினைவுடன் எடுத்த முடிவு என்று
காட்ட நினைக்கிறார்களா …?

இன்னும் ஒரு முக்கியமான குற்றச்சாட்டு –
ம.ந.கூ. தனது கொள்கைகளை மட்டும் பலி கொடுக்கவில்லை….
“மக்கள் நலம்” என்பதையே இந்த கூட்டணி
அமைவதற்கான விலையாக கொடுத்து விட்டது…!!!

மக்கள் நல கூட்டணி போய் விஜய்காந்த் நல கூட்டணி
வந்து விட்டதே…! வைகோ-வே பெருமிதத்துடன் இதை
அறிவித்தாரே…!

நால்வர் இருந்த அணியே – திமுக, அதிமுக இரண்டு
கட்சிகளையும் தோற்கடிக்கும் அளவிற்கு பலம் வாய்ந்தது
என்று கூறிக்கொண்டிருந்தவர்கள் – வி.காந்த்திடம்
ஜூனியர் பார்ட்னராக போய்ச்சேர்ந்தது ஏன்…?

ஒரு வேளை வி.கா. -திமுக, அதிமுக ஆகிய இரண்டையும் விட
பலம் வாய்ந்த சக்தி என்று கருதுகின்றனரோ ..?

சரி – இவ்வளவு கஷ்டப்பட்டு, இவர்கள் பெருமையுடன்
அறிவித்திருக்கும் முதல்வர் வேட்பாளரின் தகுதி, பெருமைகள்
என்ன….?

– அன்றாடம் செய்தித்தாள் படிப்பதில்லை. ஒரு மாத
இடைவெளி ஆனாலும் கூட நாட்டு நடப்புகளை தெரிந்து
வைத்துக் கொள்வதில்லை என்பதா…?

– பக்கத்தில் நிற்கும் கட்சித்தொண்டர், தலைவர்களை யாராக
இருந்தாலும், அடித்து விடுவதா ..?

– போதையோ – இல்லையோ – எப்போதும் தள்ளாடிக் கொண்டே பொது நிகழ்ச்சிகளுக்கு வருவதா…?

– என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல், நிதானம் இல்லாமல்
உளறுவதா…? சொன்னதையே திரும்பதிரும்ப சொல்வதா ..?

நான்கு கட்சிகளைச் சேர்ந்த சீனியர் தலைவர்கள் ஒன்று
சேர்ந்து முதல்முதலாக இவரை முதல்வர் வேட்பாளராக
அறிவிக்கும்போது அதற்கு இவர் அளித்த பதில்/ஏற்புரையில்
இருந்து சில பகுதிகள் கீழே –

————————

எப்போதும் எங்கள் கட்சி கூட்டத்திலேயே நான் பேசியதால், மேடைகளில் இதுவரை யாருடைய பெயரையும்
சொன்னதில்லை…..!
இப்போது முதன்முறையாக கூட்டணி முடிவாகிவிட்டதால்
எல்லோரின் பெயரையும் சொல்கிறேன்…….
……

மக்கள் நலக்கூட்டணியுடன் என்னை ஐக்கியப்படுத்திக்
கொண்டதால், என்னை மாற்றிக்கொள்ள முழுமையாக
முயற்சி செய்கிறேன். யாருடைய பெயராவது விட்டுப் போயிருந்தால் தயவு செய்து வருத்தப்படாதீர்கள். அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் நலக்கூட்டணியினர் நால்வரும் வந்து,
“நீங்கள் கிங்காக இருங்கள்; நாங்கள் கிங் மேக்கராக
இருக்கிறோம்” என்றார்கள். உடனே கையெழுத்து போட்டு
கொடுத்துவிட்டேன்.

…….
……

நான் சினிமாவில் நடித்திருப்பதால், அங்கு வசனங்களை
எனக்குப்பின்னால் ஒருவர் கூறிக்கொண்டே இருப்பார்.
அதை நான் கேட்டுக் கொண்டே இருப்பேன்…..!
அதனால் என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியும்….????

அதனாலேயே நான் ஒரு பக்கம் பார்த்துப் பேச மாட்டேன்.
பல பக்கம் பார்த்துப் பேசுவேன்….?
எழுதி வைத்துப் பேசுவது எனக்குப் பிடிக்காது. பேப்பரைக் கீழே பார்த்து படிக்க வேண்டிய நேரத்தில்,
எல்லோரும் கத்துவார்கள்.

கத்தினால் எனக்குப் பிடிக்காது.
அது என் இயற்கையான குணம்.
அவர்களுக்கு கேப்டன் பேச்சை நிறுத்திவிட்டாரே என்ற கோபம்.

… …..

———————–

மிகச்சுருக்கமாக இந்த இடுகையையின் உட்கருத்தை
கூற வேண்டுமானால் –

விஜய்காந்த் என்கிற சினிமா நடிகரின் பின்னால்
இருக்கும் அவரது பாமர ரசிகர் கூட்டத்தின் 5 முதல் 8 %
வரையிலான ஓட்டுக்கள் கிடைத்தால் –

தாங்கள் ஒரு பத்து இடங்களிலாவது ஜெயிக்க முடியுமே
என்கிற நூற்றுக்கு நூறு சுயநல எண்ணம் தான்
திருவாளர்கள் வைகோவும், திருமாவும் இந்த முயற்சியில்
ஈடுபட்டிருப்பதற்கான முக்கிய காரணம்.

அதனால், தங்கள் ம.ந.கூட்டணிக்கு, இதுவரை ஏற்பட்டிருந்த
ஒரு நல்ல இமேஜ் சரிந்தாலும் பரவாயில்லை என்று
தெரிந்தே மேற்கொள்ளும் ஒரு முயற்சி.
கம்யூனிஸ்டு தோழர்கள் – இடையில் சிக்கிக் கொண்டு
விட்டார்கள்…. வேறு வழியின்றி தொடர்கிறார்கள்…

எந்த கட்சியையும் சாராத பொதுமக்களிடையே,
ம.ந.கூட்டணியைப்பற்றி ஓரளவு எதிர்பார்ப்புகள்
உருவாகி இருந்தன.
இந்த கூட்டணியால் இந்த தேர்தலில்
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இயலாவிட்டாலும் கூட,
எதிர்காலத்தைப் பற்றிய ஒரு நம்பிக்கையை சில
படித்த, நடுத்தர மக்களிடையே இது ஏற்படுத்தி இருந்தது.
அது இப்போது “சே – இவர்களும் இவ்வளவு தானா ? ”
என்று வெறுப்பாகவும், எரிச்சலாகவும் மாறி விட்டது.

எது எப்படி இருந்தாலும், இந்த கூட்டணி இணைப்பால்
இரண்டு நல்ல விஷயங்கள் நடக்கின்றன…

1) திமுக கூட்டணி கூடுதல் பலம் பெறுவது
தவிர்க்கப்பட்டிருக்கிறது.

2) தகுதிக்கு மீறி ஆட்டம் போட்ட/ போடும், தமிழக பாஜக
தலைமைக்கு தனித்து நின்று தனது உண்மையான பலம்
அல்லது பலவீனம் என்ன என்பதை மக்களுக்கு
வெளிப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி
இருக்கிறது.

பின் குறிப்பு – வழக்கம்போல் நண்பர்களின் கருத்துக்களை
பின்னூட்டங்களில் எதிர்பார்க்கிறேன்..

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

கேப்டன் கூட்டணிக்கு வரவேற்பும் / எதிர்ப்பும் ….!!! க்கு 33 பதில்கள்

  1. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

    A severe setback to D.M.K &B.J.P.Mr v.kanth could have gained maturity by attending the assembly properly.He had not done his duty as opposition leader.Leadership quality is absent.He is unfit to b a CM.B.J.P. is limping…….

  2. today.and.me சொல்கிறார்:

    மநகூவின் நால்வர் தூக்கும் பாடைக்கு இன்னொரு சசிபெருமாள் ரெடி.
    இதில் சொல்வதற்கு வேறு இல்லை.

  3. today.and.me சொல்கிறார்:

    //1) திமுக கூட்டணி கூடுதல் பலம் பெறுவது
    தவிர்க்கப்பட்டிருக்கிறது.//

    கூட்டணியாக வெளியிலிருந்து ஆள்பிடிப்பதற்குப் பதிலாக அழகிரியையே கூட்டணிக்குள் கொண்டுவந்துவிடலாம், அதே வேளையில் நமக்கு நாமமேயின் க்ளைமேக்ஸ் சீன்-ஐ மாற்றி எழுதி தனக்கு பாதுகாப்பைத் தேடிக்கொள்ளலாம் என்று முக முடிவு. அழகிரி இன்று மதியம் கோபாலபுரம் வந்து முகவைச் சந்தித்திருக்கிறார்.

    இதுகுறித்து ஸ்டாலின் பேசும்போது, “அழகிரி தனது தந்தையையும் தாயையும் சந்தித்திருப்பதாக கேள்விப்படுகிறேன். இது அரசியல் – கட்சி சம்பந்தப்பட்டதல்ல” என்கிறார்.

    ஆமாம், தெரியாமல்தான் கேட்கிறேன், அவர் தனது தந்தையையும் தாயையும் என்றால், இவருக்கு யார் தந்தை தாய்? இதைக்கூட அனுமானித்து ஒழுங்காகப் பேசத்தெரியாதவர்… முதல்வர் வேட்பாளர் ஆகக்கூட ஆசைப்படலாமா?

    மொத்தத்தில் நமக்கு நாமே, நடத்தியவர்களுக்கு நாமமே.

  4. today.and.me சொல்கிறார்:

    //2) தகுதிக்கு மீறி ஆட்டம் போட்ட/ போடும், தமிழக பாஜக
    தலைமைக்கு தனித்து நின்று தனது உண்மையான பலம்
    அல்லது பலவீனம் என்ன என்பதை மக்களுக்கு
    வெளிப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி
    இருக்கிறது.//

    தபாஜக இந்தத் தேர்தலை கடைசிநேரத்திலாவது புறக்கணித்துவிடும் என்றே நம்புகிறேன்.

  5. today.and.me சொல்கிறார்:

    மு. கருணாநிதி நிலைமையை இந்தக் மீம்ஸ் படம் சிறப்பாக விளக்குவதாக நினைக்கிறேன்.

    https://scontent.fdel1-2.fna.fbcdn.net/hphotos-xpl1/v/t1.0-0/p200x200/12801260_785317398279958_2568465434903116140_n.jpg?oh=87394fe09115856bbdbc0dcbac33eb99&oe=577F9CC5

    • today.and.me சொல்கிறார்:

      அவன் உனக்கு மட்டும் தான் விபூதி அடிகிறான்னு பாத்தன்.. ஆனா நம்ப எல்லாருக்குமே விபூதி அடிக்க பாக்குறான்டா..
      நன்றி : ஆனந்த்.

  6. today.and.me சொல்கிறார்:

    //4 சுற்று பிரச்சாரத்தை முடித்து, தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளோம். தேமுதிக இணைந்துள்ளதால் அதில் எவை சாத்தியம் என்பதன் அடிப்படையில் அடுத்த தேர்தல் அறிக்கை வெளியிடுவோம். இலவசங்களைக் கொடுத்து வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்பதை அனுமதிக்கக்கூடாது. ரூ.29 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது என்பதற்காக மதுவை ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார் நல்லக்கண்ணு.//

    விஜயகாந்த் வந்து சேர்ந்த எபக்ட் அறிக்கையில் நன்றாகவே தெரிகிறது மிஸ்டர் கெட்டகண்ணு.😀

  7. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    “தாங்கள் ஒரு பத்து இடங்களிலாவது ஜெயிக்க முடியுமே என்கிற நூற்றுக்கு நூறு சுயநல எண்ணம் தான் திருவாளர்கள் வைகோவும், திருமாவும் இந்த முயற்சியில்
    ஈடுபட்டிருப்பதற்கான முக்கிய காரணம்.” – இந்த எண்ணம் நிச்சயமாக வைகோவிடம் இருக்காது. அவர் எப்போதுமே, எப்படித் தோற்கலாம் என்றுதான் திட்டமிடுவார். மானமிழந்து திமுகாவுடன் சேர்ந்து 10 சீட்டுக்களைப் பெற்று, அவருக்கு 3-4 எம்.எல்.ஏ கிடைத்திருக்கலாம். (ஸ்டாலின் குழி தோண்டாமலிருந்தால்). எனக்குத் தோன்றுவது.. இந்தத் தேர்தலில் ஸ்டாலின் எதிர்ப்பு, கெடுதல் என்ற ஒற்றை அஜெண்டாதான் வைகோவிடம் வெளிப்படுகிறது. மற்றபடி, கொள்கை, மக்கள் நலம் போன்றவற்றிர்க்கும் ‘நால்வருக்கும் (இப்போது ஐவர்) கொஞ்சம்கூடச் சம்பந்தம் கிடையாது.

    “கம்யூனிஸ்டு தோழர்கள் – இடையில் சிக்கிக் கொண்டு விட்டார்கள்…. வேறு வழியின்றி தொடர்கிறார்கள்…” – இப்படி நான் எண்ணவில்லை. மார்க்ஸிஸ்ட் தலைவர்கள் விஜயகாந்துடன் ஏற்கனவே (போன தேர்தல் உள்பட) தொடர்பில் இருந்தார்கள். வைகோவின் கரைபுரண்டோடும் மகிழ்ச்சிக்குக் காரணம், எனக்கு ஒரு கண் போனாலும் (மக்கள் நலக் கூட்டணியின் கிரெடிபிலிட்டி), ஸ்டாலினுக்கு இரண்டு கண் போய்விட்டதே (தேதிமுக சேரவில்லையே) என்ற மகிழ்ச்சிதான்.

    ஸ்டாலினுக்கு, எந்த வித ஸ்டாரையும் அனுமதிப்பதில் விருப்பமில்லை. அது குஷ்புவாகட்டும், வைகோவாகட்டும், அழகிரியாகட்டும். அவருடைய ஒரே அஜெண்டா, திமுக சிந்தாமல் சிதறாமல் தன்னிடத்தில் வந்துவிடவேண்டும், தனக்குப் போட்டியாக யாரும் இருக்கக்கூடாது என்பதுதான். திமுகாவை விட்டு யார் பிரிந்துபோனாலும், கம்பெனி ஸ்டாலின் கையில்தான் இருக்கும். அதனால்தான் அழகிரியை அவர் அனுமதிக்க மறுக்கிறார்.

    • today.and.me சொல்கிறார்:

      //.. திமுகாவை விட்டு யார் பிரிந்துபோனாலும், கம்பெனி ஸ்டாலின் கையில்தான் இருக்கும். அதனால்தான் அழகிரியை அவர் அனுமதிக்க மறுக்கிறார்.// அவர் என்ன அனுமதிப்பது? இன்று கருணாநிதியும் அழகிரியும் சந்தித்திருக்கிறார்களே. இப்போதைக்கு அழகிரியை தனது பாதுகாப்பிற்காக அழைத்ததே கருணாநிதிதான் என்று திமுகவினரே பேசுகிறார்களே!

  8. today.and.me சொல்கிறார்:

    திருமாவின் போன மாச முகம்

  9. today.and.me சொல்கிறார்:

    இந்தக் கூட்டணியைப் பற்றி விளக்கி விளாச வேண்டிய பத்திரிகைகளுள் ஒன்றான திஇந்துவின் காமெடி மீம்

  10. selvarajan சொல்கிறார்:

    // இவர்களது இணைப்பை அறிவிக்கும் நிகழ்ச்சியின்போது,
    திருமதி பிரேமலதா ஒளித்து வைக்கப்பட்டதேன்…?
    அவர் அங்கு இருப்பதை தங்களுக்கு பலவீனம் என்று
    இரு தரப்பினரும் நினைத்தார்களா …?
    வி.காந்த் இந்த முடிவிற்கு வர யார் காரணம் என்பதை
    பொதுமக்களிடமிருந்து மறைக்கிறார்களா ?
    இது வி.கா. சுயநினைவுடன் எடுத்த முடிவு என்று
    காட்ட நினைக்கிறார்களா …? // அய்யா … தங்களின் இந்த பதிவை படிக்கும் போது —- ” நெனச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு
    அதனாலே முழிக்குதே அம்மாப் பொண்ணு — ஹோய்
    கணக்கும் தவறாகிப் போனதனாலே
    கவலை கொள்ளுதே தனியா நின்னு ” — என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது … !!!

  11. VS Balajee சொல்கிறார்:

    Sir,long time reader and fan of your blog (our blog -interactive) ..I feel Mr Kanth health is not in good shape and he was not able walk and his action brings smiles.How far he is going to campaign in the election.. let us wait and see

    VS Balajee

    • today.and.me சொல்கிறார்:

      That is due to Thyroid problem, Mrs Premalatha said.
      ROFL.

      • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

        நண்ப டுடேஅண்ட்மீ,

        உங்கள் ரசனையையும், ஆர்வத்தையும், உழைப்பையும்
        மனதார பாராட்டுகிறேன்… வரவேற்கிறேன்.

        உங்களுக்கான, தனி ட்ரீட்மெண்ட் அடுத்த இடுகையில்
        வருகிறது…. 🙂 🙂

        -வாழ்த்துக்களுடன்,
        காவிரிமைந்தன்

    • chandramouly venkatasubramanian சொல்கிறார்:

      Communists(india)-They themselves will not do anything &will not allow others also to do it. Mr Vkanth-kettavan kettidil kittidum RAJA YOGAM-Sidhar vakku!

  12. Vicky சொல்கிறார்:

    தற்போது வி கா வை விட்டால் பத்திரிக்கைகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் வேறு விஷயங்களே இல்லை என்றாகிவிட்டது. நாமாவது வேறு விஷயங்களை அலசலாமே? இது அவ்வளவு தகுதியானது அல்ல என்பது என் கருத்து.

  13. today.and.me சொல்கிறார்:

    KM ji,

    //இடையில் என்னவெல்லாம் நடந்தது….?
    தேமுதிக வுக்கு – திமுகவுடன் கூட்டணிக்கு
    பேச்சுவார்த்தையே நடக்கவில்லை
    என்று விஜய்காந்த் கூறுவதை உண்மை தானென்று
    ம.ந.கூ. தலைவர்களால் வெளிப்படையாக கூற முடியுமா ?
    வி.காந்த்தின் மைத்துனர் சுதீஷ் – சபரீசன் குழுவினருடன்
    பேசவே இல்லை என்று வைகோவால் உறுதிகூற முடியுமா …?////

    திமுக கூட்டணியில் சேர்வதற்காக தேமுதிகவிற்கு 80 தொகுதிகளும், ரூ.500 கோடியும் கொடுப்பது என்று பேரம் பேசப்பட்டது உண்மைதான் : வைகோ.(Thanthi TV, 24/3/2016)

  14. today.and.me சொல்கிறார்:

    KMji,

    Please add these questions too :-

    ————
    விஜயகாந்த்கிட்ட
    💥கெயில்ன்னா என்னனு கேளு.
    💥டெல்டா மாவட்டங்கள்னா எந்த எந்த மாவட்டம்னு கேளு.
    💥கூடங்குளம் அனுமின்நிலையம் வேணுமா வேணாமானு கேளு.
    💥பென்னிகுயிக் எந்த அணைய கட்டுனார்னு கேளு.
    💥தமிழ்நாட்ல மொத்தம் எத்தனை மாவட்டம்னு கேளு.
    💥அதில் புதுசா எந்த மாவட்டம் உருவாகி இருக்குனு கேளு.
    💥பெருச்சித்தனரார்னா யாருனு கேளு.
    💥நியூட்ரினோனா என்னனு கேளு.
    💥திராவிடம்னா என்னனு கேளு.
    💥அது யாரு உருவாக்கினானு கேளு.
    💥தமிழ் முத்திரையில் இருக்கிற கோபுரம் எந்த ஊர்னு கேளு.
    💥தமிழ் நாடுனு யார் பெயர் வச்சதுனு கேளு.
    💥அஞ்சு திருக்குறள் பார்க்காம சொல்ல சொல்லி கேளு.
    💥அதுக்கு அர்த்தம் என்னனு கேளு.
    💥பாரதியார் எந்த ஊர்னு கேளு.
    💥சோழன் கொடி என்னனு கேளு.
    💥விவசாயம் அழிந்து போனதுக்கு காரணம் என்னனு கேளு.
    💥நாட்டு மாடு எப்படி இருக்கும்னு கேளு.
    💥தமிழ்நாட்டுக்கு அடிப்படை வசதி இப்போ என்னனு கேளு.
    💥நீர் மேலாண்மைனா என்னனு கேளு.
    💥தமிழ்நாடில் எத்தனை ஏரி இருக்குனு கேளு.
    💥எதிர்கட்சி தலைவரா இருந்து சட்டமன்றத்தில் ஒரு கேள்விகூட கேட்காத தலைவர்
    💥இவரு தமிழக முதல்வரானால் ………..
    💥மக்கழே ……..
    —————-
    courtesy: Nagulan.

    • Narasimhan சொல்கிறார்:

      யாரைப்பார்த்து என்ன கேட்கிறீங்க . இது நடிகர் தனுஷ் ஒரு படத்தில் பேசுவதுபோல் பேசவேண்டும் .

  15. gopalasamy சொல்கிறார்:

    “கம்யூனிஸ்டு தோழர்கள் – இடையில் சிக்கிக் கொண்டு
    விட்டார்கள்….”. Totally wrong. communists will always be ready to align with anybody. Absolutely no policy for communists. V.P singh govt was supported by communists and BJP. In W.B, they are with congress. They may be ready to align with ISIS also, if 10 seats given.

  16. Hindustani சொல்கிறார்:

    Its shamefull to
    Lord Sri Rama and Seetha Maa,
    pl. delete such photos of a Drunk as Rama.

    -Indian

  17. Thiruvengadam (@veluran) சொல்கிறார்:

    தமிழகத்தில் பலரும் விரும்பும் பிரபலம் ஒருவரின் கருத்து. என்னைப்போலவே இதை பலரும் ஊடகங்களில் பார்த்திருக்கலாம்

    விஜயகாந்தை பல பெரிய மனிதர்கள் காரணமின்றி தூற்றுகிறார்கள்.
    கம்யூனிஸ்டுகள் அவரோடு சேர்ந்தது தவறு என்கிறார்கள். தமிழ்நாடு கமயூனிஸ்டுகளுக்கு எந்த அடையாளமும் இல்லை. எந்த தேர்தலிலும் போட்டியிடுகின்ற வலுவு இல்லை.
    சென்னை மாநகராட்சியின் திமுக கைப்பற்றிய முதல் வெற்றியின் போது பொறுக்கிகள் ரெளடிகள் சில்லுண்டிகள என விமர்சிக்கப்பட்டாரகள். பேரறிஞர்் மூதறிஞர் இனமானக் காவலர் என்பது பிற்பாடு கண்ட வளர்ச்சி. விஜயகாந்த் வளரமுடியாதா? எமஜியாரை அட்டைக் கத்தி டோபா தலையன் என்று தமிழ் நாடு வரணித்ததை நான் அறிவேன். இன்று அவர் லெஜண்ட். தெய்வம். எம்ஜியார் உளறவில்லையா எச்சல் வழிய பேசவில்லையா. தமிழகம் பரிதாப்ப்பட்டது. இழிவு படுத்தவில்லை.
    மது அருந்துதல் சாதாரணமாகி விட்டது. குடிப்போர் சதவிகிதம உயர்ந்து விட்டது. இது குணக்கேடாகி விடாது..
    இன்றைய விஜயகாந்த் வளர்ச்சியே அபாரமானது. இந்த டிமாண்ட் அவருக்கு இருப்பதே ஆச்சரயமானது.
    இந்தக் கூட்டணியில் அவர் இருப்பதும் தனித்து நிற்பது போன்றதே. இது தில். போனமுறை அம்மா எடுத்த முடிவு போன்றது.
    இன்று பரிதாபப் பதற்றம் திமுகாவில் மட்டும் காண்கிறேன். வெற்றியோ தோலவியோ ஸ்டாலினை முன்னிருத்திருக்க வேண்டும். கனிமொழிக்கு சிறப்பான இடம் தந்திருக்க வேண்டும். அடுத்தது தலைமுறையை உறசாகப் படுத்தியிருக்க வேண்டும். அதிமுக வில் கடைசி க்ளினிங் ஆக இது துவங்கி விட்டது. ஆக
    எல்லாம் சரியாதான் போய்கிட்டுருக்கு . நீங்கள் விஜயகாந்தை கேலி செய்யும அளவு அதிகம். அன்பு அண்ணன் விஜயகாந்த் ……என்று நீங்களே கூவுவீர்கள்.
    நான் அரசியல் அறிஞன் அல்ல. எந்தக் கட்சியிலும உறுப்பினர் இல்லை. பொதுஜனமாய் பேசுகிறேன் அவ்வளவே.
    விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டுபகிர்

    • today.and.me சொல்கிறார்:

      பரவாயில்லை திருவேங்கடம்ஜி,

      எழுத்தாளர் பாலமுருகன் அவர்களின் எழுத்திற்கான இணைப்பை தந்திருந்தீர்களானால் நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த கருத்துககுறித்து அவரிடம் கேட்க எனக்கு சில கேள்விகளுண்டு.

      அது இல்லாததால் இங்கேயே சிலவற்றைத் தருகிறேன். உங்களால் முடியுமானால் பாலமுருகனுக்காக விடையளிக்கலாம்.

      1. =//விஜயகாந்தை பல பெரிய மனிதர்கள் காரணமின்றி தூற்றுகிறார்கள்.//
      விஜயகாந்தின் அரசியல் வீடியோக்கள் பலவ்ற்றைப் பார்த்திருப்பீர்கள். ஏன்? இந்த விமரிசனம் இடுகையிலேயே அவருடைய குணாதியசங்களைப் (!) படித்திருப்பீர்கள். அவற்றுள் ஒரு காரணம்கூடவா அவரைத் தூற்றுவதற்கு அடிப்படையில்லாமல் இருக்கிறது?

      அப்படி இல்லவே இல்லை என்று துண்டுபோட்டுத தாண்டுவீர்களானால் உங்களுக்கும் தண்ணியிலேயே மிதக்கும் வி…காந்துக்கும் என்ன வித்தியாசம்?

      2. //சென்னை மாநகராட்சியின் திமுக கைப்பற்றிய முதல் வெற்றியின் போது பொறுக்கிகள் ரெளடிகள் சில்லுண்டிகள என விமர்சிக்கப்பட்டாரகள்.//

      அது அப்போது மட்டுமில்லை, சென்ற உள்ளாட்சித்தேர்தல் வரை அப்படித்தான் என்பது நான் இருக்கும் பகுதியில் உள்ள ஓட்டளிக்கும் மையத்தில் நேரில் கண்ட உண்மை. அவர்களை மீற கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம், காவல்துறை உட்பட யாராலும் முடியவில்லை. இப்போதும் அப்படியேதான் விமரிசிக்கப்படுகிறார்கள். அது உங்களுக்குத் தெரியவில்லை என்றால் நீங்களும் அவர்களோடு ஐக்கியமாகியிருக்கிறீர்கள் என்றுதான் பொருள்… என்ன? சில்லுண்டி வேலைகளுக்குப் பதிலாக பெரியளவில் இப்போதும் வளர்ந்திருக்கும் நிலைக்கேற்ற பெரிய-சின்ன-உண்டி வேலைகளைச் செய்கிறார்கள்.

      3. //கருணாநிதியே வளரும்போது விஜயகாந்த் வளரமுடியாதா? // கருணாநிதி என்னும் தெலுங்கரை இந்தநிலைக்கு வளரவிட்ட முட்டாள் தமிழர்களைப் பார்த்து ஆசைப்படும் நியாயமான ஆசை.தான்.

      முன்னர் 20/30 வருடங்களாக நிகழ்ந்த தவறு மீண்டும் நிகழ்ந்துவிடா வண்ணம் தமிழர்களை அறிவுறுத்த நினைப்பது தவறு என்று ஏன் குதிக்கவேண்டும்?

      4. //இது தில். // இது தில் என்றால், மகளிரணிக் கூட்டத்தில் ‘விஜயகாந்த் தனியாத்தான் நிக்கிறேன்’ ன்னு உளறினாரே அதை ஏன் தில்லாகக் கடைப்பிடிக்க முடியவில்லை?

      பாஜகவுடன் திமுகவுடன் பேரம் பேசியது ஏன்? அப்போது தில் எங்கே போய் ஒளிந்துகொண்டது?

      5, //வெற்றியோ தோலவியோ ஸ்டாலினை முன்னிருத்திருக்க வேண்டும். கனிமொழிக்கு சிறப்பான இடம் தந்திருக்க வேண்டும். அடுத்தது தலைமுறையை உறசாகப் படுத்தியிருக்க வேண்டும். // இங்குதான் உங்கள் உண்மைமுகம் வெளிப்படுகிறது. ஸ்டாலினுக்கு ஆதரவான உங்கள் நிலை, அழகிரியை வெறுத்தொக்கும் உங்கள் நிலை, கனிமொழியை ஊறுகாயாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என நினைக்கும் ஆணாதிக்க நிலை உங்களை மீறியும் வெளிப்படுகிறது.

      6..//. நீங்கள் விஜயகாந்தை கேலி செய்யும அளவு அதிகம். அன்பு அண்ணன் விஜயகாந்த் ……என்று நீங்களே கூவுவீர்கள்.//
      அப்படிக் கூவும் நிலை தமிழர்களுக்கு வந்துவிடவேண்டாம் என்றுதான் அவரது உண்மைநிலையை வெளிச்சம் போட முயல்கிறோம்.

      7. //எந்தக் கட்சியிலும உறுப்பினர் இல்லை. // கட்சிகளை விமரிசிக்க கட்சிக்கு உறுப்பினராக இருக்கவேண்டும் என்று இல்லை.
      நோட்டாவாவது போடும் அளவிற்கு ஓட்டுரிமை இருக்கவேண்டும் என்று கூட பொருளில்லை. அட்லீஸ்ட் தான் பிறந்த தமிழ்நாடு நன்றாக இருக்கவேண்டும் தமிழன் வளர்ச்சி பெறவேண்டும் என்ற நினைப்பு இருக்கவேண்டும் ஒரே தகுதி போதும்.

      பி.கு. நீங்கள் என்னுமிடத்தில் பாலமுருகனை நிறுத்தி, கூடுமானால் உங்களுடைய கருத்துகளையும் வைக்க வேண்டுகிறேன்.

  18. செல்வ பாண்டியன் சொல்கிறார்:

    திருவேங்கடம்,

    // தமிழகத்தில் பலரும் விரும்பும் பிரபலம் ஒருவரின் கருத்து. //

    எந்த பிரபலம் சொன்னார் இதை ?
    உங்கள் கருத்து என்று சொல்வதை விட்டு விட்டு,
    யாரோ பிரபலம் ஒருவரின் கருத்து என்று ஏன் இல்லாத ஒருவரின் பின்னால்
    ஒளிந்து கொள்கிறீர்கள் ?

    உண்மையாகவே பிரபலம் யாராவது சொல்லி இருந்தால்
    அவரது பெயரையும், எந்த தளத்தில் சொன்னார் என்பதையும் வெளியிடுங்கள்
    பார்க்கலாம்

    • thiruvengadam சொல்கிறார்:

      Don’t act ravishly. If I say who that was as usual it will be looked in another angle & automatically the substance may loose its credibility. You pl note my initial ref that some friends would have already seen this. You may have missed that in another social media. There is no need to name others for my thought. You can get the name in KM Sir’s next blog’ s comment.

    • today.and.me சொல்கிறார்:

      வதந்திகளுக்கு இடமளிக்காமல்
      இது என் கருத்து என்றோ
      அல்லது
      இது இன்னாருடைய கருத்து
      என்று அவருக்குரிய courtesy-க் கொடுப்பதுதான் முறை.
      இது பெரும்பான்மையான கருத்துத் திருடர்களுக்குக் கிடையாது.

      கிருபானந்த வாரியாரின்
      நான் நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, நாம் என்று சொன்னால்தான் உதடுகள்கூட ஒட்டும்

      என்ற பிரபலமான கருத்தையே தான் சொன்னதாகச் சொன்ன தானைத்தலைவனின் வழிவந்தவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்கமுடியும்?

      இதையெல்லாம் யார்யாரிடம் எதிர்பார்க்கலாம் என்றும் ஒரு வரைமுறை இருக்கிறது நண்ப செல்வபாண்டியன். 🙂

      உங்களுடைய இந்தக் கேள்விக்கு பதிலாக இன்னொரு காரசாரமான பதில்வரும் பாருங்கள்.😀

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.