யார் பொய்யர் ( பெரிய…? ) …? திருமதி வி.காந்தா அல்லது திரு வைகோவா …?

premalatha and vaiko

“பேரம்” என்றால் என்ன ?
பேரம் என்றால் என்ன அர்த்தம் என்றே தெரியாது எங்களுக்கு….
என்றெல்லாம் ஒயெம்சி திடலில் நடந்த தேமுதிக மகரணியில்
பேசினார் திருமதி பிரேமலதா விஜய்காந்த்.

கூடவே, கூட்டணிக்கு அழைப்பு விடுத்த அனைத்து கட்சிகளுக்கும்
நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறி விஷயத்திற்கு அங்கேயே முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

( திமுக தரப்பிலிருந்து, பேச்சு வார்த்தை முறிவடைந்த
பின்னர் – நடந்த கூட்டணி பேரங்களைப் பற்றி உங்கள்
தரப்பிலிருந்து எங்களைப்பற்றி எதாவது தரக்குறைவாக
பேசினீர்கள் என்றால்,
நடந்த பேச்சு வார்த்தைகள் பற்றிய முழு விவரங்களையும்
நாங்கள் வெளியிட வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை
செய்திருந்தனராம்…. அதன் விளைவே –
வெறுமனே – அனைவருக்கும் நன்றியோடு முடிந்தது….! )

ஆனால், எப்போது வைகோவை ஒருங்கிணைப்பாளர் என்று
வி.காந்த் கூறி விட்டாரோ, அப்போதே முழு சுதந்திரமும்
எடுத்துக்கொண்டு, திரு.சுதீஷ் வாயைக் கிண்டி இருக்கிறார்
வைகோ. அப்போது விளைவுகளை உணராமல்
வைகோ பற்றிய அனுபவம் இல்லாத சுதீஷ் கூறிய
சில அரைகுறை விவரங்களை வெளியே சொல்ல்ல்ல்ல்ல்லா
விட்டால், தலையே வெடித்து விடும் உணர்வுநிலை
திரு.வைகோவுக்கு….!

விளைவு –

“500 கோடி பணம், 80 சீட்டுக்கள் என்று
திமுக தரப்பிலிருந்து பேரம்…”

“ஒரு ராஜ்ய சபா உறுப்பினர்,
ஒரு மத்திய மந்திரி பதவி,
தேவைப்படும் அளவிற்கு பணம் –
என்று பாஜகவிலிருந்து பேரம்”

-என்று அவசர அவசரமாக பேட்டி கொடுத்தார் வைகோ.

திருமதி பிரேமலதா விஜய்காந்த் அவர்களுக்கு விவரங்கள்
தெரிவதற்குள், காட்டுத்தீ போன்று செய்தி பரவி விட்டது.

கடுமையான கோபத்தோடு, சென்னை விமான நிலையத்தில்
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில்
சொல்கிறார் திருமதி வி.கா. –

——

” கூட்டணிக்கு திரும்ப திரும்ப அழைப்பு விடுத்தார்கள்….
அவ்வளவு தான் ….
பேரம் எல்லாம் எதுவும் பேசவில்லை….
திரும்ப திரும்ப பேரம் என்று கூறி அசிங்கப்படுத்தாதீர்கள்.”

“வைகோ சொன்னார் என்றால் – நீங்கள் அவரிடம் தான்
கேட்க வேண்டும்”

——–

நமக்கு, இது குறித்து பின்னர்
நிறைய கேள்விகள் கேட்க வேண்டியிருக்கும் …..
கடுப்படைந்த, திமுக தரப்பிலிருந்து தேமுதிக டிமாண்ட்
பற்றிய விவரங்கள் கசிய நேர்ந்தால் ….
இன்னும் எக்கச்சக்கமாக…!!!

இப்போதைக்கு ஒரே ஒரு சிறிய கேள்வி…..

இருவரில் யார் பொய்யர் ( பெரிய…..? )
திருமதி வி.காந்தா அல்லது
திரு வைகோ அவர்களா …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to யார் பொய்யர் ( பெரிய…? ) …? திருமதி வி.காந்தா அல்லது திரு வைகோவா …?

 1. today.and.me சொல்கிறார்:

  இதையும் பார்த்து வையுங்கள்
  பின்னொரு நாளில் உதவும்.

 2. today.and.me சொல்கிறார்:

  வைகோவின் பிரதானமான குணம்

  அவர் பெயர் வெளியே ரீச் ஆகவேண்டுமென்றால்
  யாரையாவது கூட்டத்தின் நடுவில் இழுத்து விட்டு
  உடுத்தியிருக்கும் கோமணத்தையும் உருவிவிடுவதுதான்

  இப்போது இன்னொரு சசிபெருமாளாக வி..காந்த்.

 3. today.and.me சொல்கிறார்:

  மதுப்பழககம் உள்ளவர்கள் கட்சியை விட்டுப் போகலாம் – வைகோ

  இதை யாரைப் பார்த்து சொல்லுகிறார்? தொண்டர்களுக்கு மட்டுமா?
  கே ந கூவின் தலைவருக்க்கும் சேர்த்தா?
  தேமுதிகவை கலைத்து மதிமுகவுடன் சேர்க்க நினைக்கிறாரா வைகோ?

  புகைப்பழக்கம் உள்ளவர்கள் எல்லாம் இவர் முகத்திலேயே வளையம் விடலாமா?

  விஜயகாந்த் பாணியில் சொல்லவேண்டுமென்றால்
  இதெல்லாம் எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா?
  த்த்த்தூதூதூதூதூதூ

 4. today.and.me சொல்கிறார்:

  விஜயகாந்துக்கு ரூ.500 கோடி தர திமுக பேரம் பேசியது என்ற வைகோ பேச்சு தொடர்பாக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் – ஸ்டாலின் பேட்டி

  விஜயகாந்துடன் பேரம் பேசபட்டதாக, பத்திரிக்கை செய்தியை பார்த்தே கூறினேன் – சைகோ அந்தர் பல்டி

  அந்த பயம் இருக்கட்டும் – கருணாநிதி மைன்ட் வாய்ஸ்

  என்னோட டவுட்:
  திமுகன்னா தில்லுமுல்லு கட்சின்னு பிரேமலதா பேசியபோது ஸ்டாலினுக்கு வராத கோபம் இப்பொது வருவது ஏன்?

  • Antony சொல்கிறார்:

   Unmaiya poddu nadu veethyla udaicha kovam varama enna varum?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப டுடேஅண்ட்மீ,

   எனக்கு வேறு “டவுட்” நண்பரே –

   1) ” பேரம் ” பேசியதை திருமதி வி.கா.
   மறுத்ததைக்கண்டு வைகோவுக்கு ஏன்
   கோபம் வரவில்லை….?
   (இந்த விஷயத்தில் வைகோவை விட
   திருமதி வி.கா. புத்திசாலியாக
   தென்படுகிறார் – இல்லையா…? )

   2) வைகோ பார்த்ததாக சொல்லப்படும்
   பத்திரிகையில் கூட 80 சீட்
   பற்றி மட்டும் தான் செய்தி வந்திருக்கிறது.
   500 கோடி என்று எங்கும் சொல்லப்படவில்லை…!

   வைகோ அதற்கு தனியாக “சுதீஷ்” தான்
   சொன்னார் என்று விளக்கம் சொல்லி விடுவாரோ …?

   தமிழக மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு….
   சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் –
   இன்னமும் நிறைய காமெடி சீன்கள்
   தேர்தலுக்குள்ளாக அரங்கேறுவதை
   பார்க்கலாம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. today.and.me சொல்கிறார்:

  முதல்வர் பதவிக்கு வேட்பாளரை அரிவிக்கும்போது ஒரு கரிஸ்மா இருக்கவேண்டும். அது வி.கா.வுக்கு இருக்கிறது (வைகோ, திருமா, முத்தரசன், ஜிஆர் நால்வருக்கும் அது இல்லை )

  புரட்சிபுயல். எழுச்சிதமிழர். தோழர். காப்டன் எல்லாம் சும்மா… ஒரு இதுக்கு தான். தொன்டர்களை உற்சாகப்படுத்துவற்காகத்தான்….

  உண்மையை வெளியில் கொண்டுவந்த ஆர் பாண்டே.

  அனேகமாக தேர்தலுக்குள்
  ம ந கூ காணாப்போனமாதிரி
  கே ந கூ வும் காணாப் போய்விடும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப டுடேஅண்ட்மீ,

   // முதல்வர் பதவிக்கு வேட்பாளரை
   அரிவிக்கும்போது ஒரு கரிஸ்மா
   இருக்கவேண்டும். அது வி.கா.வுக்கு
   இருக்கிறது

   (வைகோ, திருமா, முத்தரசன், ஜிஆர்
   நால்வருக்கும் அது இல்லை ) //

   திருமா சொன்னதை விட, சொல்லாதது
   (பிராக்கெட்டில் இருப்பது ) தான் உண்மை ….
   அல்லவா …? 🙂 🙂

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. RAMASAMY SAKTHIVELU சொல்கிறார்:

  அன்புள்ள காமை,
  அன்மைகாலமாக உங்களது இடுகைகள் அரசயல் நெடி அதிகமாகி வருவது அயர்ச்சி
  தருகிறது. உங்கள் அரசியல் சார்பு நெறி சார்ந்த நேர்மை சார்ந்த கருத்து
  பரிமாற்றமாக இல்லாதது மிக்க வருத்தம் தருகிறது.
  மிகுந்த வருத்துடன்
  இராம. சின்னதுரை
  திருச்சிராப்பள்ளி.
  On 25 Mar 2016 4:17 pm, வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் wrote:

  > vimarisanam – kavirimainthan posted: ” “பேரம்” என்றால் என்ன ? பேரம்
  > என்றால் என்ன அர்த்தம் என்றே தெரியாது எங்களுக்கு…. என்றெல்லாம் ஒயெம்சி
  > திடலில் நடந்த தேமுதிக மகரணியில் பேசினார் திருமதி பிரேமலதா விஜய்காந்த்.
  > கூடவே, கூட்டணிக்கு அழைப்பு விடுத்த அனைத்து கட்சிகளுக்க”
  >

  • Antony சொல்கிறார்:

   Ramasamy,
   not KM’s fault. Only political posts are supported by the readers. KM frequently writes general post also. 2 days ago also he wrote on pagath Singh.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப ராமசாமி சக்திவேலு,

   நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்
   என்பது தெளிவாக இல்லை.
   இருந்தாலும், அண்மைக்காலமாக நான் எழுதி வரும்
   இடுகைகள் அரசியல் சார்பு உடையதாக இருக்கிறது
   என்று நீங்கள் வருந்துகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

   சாதாரண காலங்களில் எழுதுவதற்கும்,
   தேர்தல் சமயத்தில் எழுதுவதற்கும் உள்ள
   வித்தியாசங்களை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

   என் கண்ணுக்குத் தெரியும் உண்மைகளை –
   என் மனதுக்கு தோன்றும் “சரி-தவறு”களை,
   இந்த சமயங்களில் நான் அவசியம் வலியுறுத்தி
   எழுத வேண்டியிருக்கிறது.

   சில சமயங்களில் அது சார்பு நிலை உடையதாக
   சிலருக்கு தோன்றலாம். ஆனால், என்னைப்பொருத்தவரை,
   என் மனசாட்சி சொல்வதைத்தான் நான் எழுதுகிறேன்.
   சிலருக்கு அது ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம்.
   நான் என்ன செய்ய முடியும் ?

   நான் சொல்வது உங்களுக்கு ஏற்புடையதாக
   இல்லையென்றால் – அதற்காக நீங்கள் அயர்ச்சி
   அடைய வேண்டியதே இல்லை.

   எல்லாவற்றையும் படியுங்கள்… பிறகு யோசியுங்கள்…
   பிறகு உங்கள் மனம் சொல்வதை நீங்கள் செய்யுங்கள்…
   அவ்வளவே…!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 7. selvarajan சொல்கிறார்:

  // தேமுதிக பேரம் பேசியதாக கூறிய வைகோவுக்கு எதிராக திமுக வக்கீல் நோட்டீஸ் !
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-chief-karunanidhi-issues-legal-notice-vaiko-249811.html // … தலீவரு எவ்வளவு யோக்கியர் பார்த்திர்களா … ? பழம் — பால் என்பது கூட சும்மா — ஜூ .. ஜூ .. பி … ! வி.காந்த் இவரை சந்தித்தது — பத்திரிக்கைகள் இத்தனை தொகுதிகள் தே . மு.தி.க. வுக்கு என்று பேரம் பேசியதாக போட்ட செய்திகள் கூட சும்மா தமாஷுக்கு … அப்படி தானே … ? அடுத்து ….. // விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக்கியதில் மதிமுகவினருக்கு பெரிய வருத்தமே…. வைகோ ஒப்புதல்
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/mdmk-cadres-upset-over-vijayakanth-as-cm-candidates-says-vaiko-249768.html .// …. பட்டாசு வெடித்து ஒரு இரண்டு நாட்களுக்குள் — ” ஆரம்பிச்சிட்டங்கய்யா …. ஆரம்பிச்சிட்டாங்க …. !!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.