4+1 = 0 (A BIG ZERO) – என்றாகி விட்ட புதிய கே.வி…. கூட்டணி…..!!!

நேற்றைய –
” கேப்டன் கூட்டணிக்கு வரவேற்பும் / எதிர்ப்பும் ….!!!”
என்கிற தலைப்பிலான இடுகைக்கு கிடைத்திருக்கும்
வரவேற்பு பிரமிக்க வைக்கிறது…!

இந்த வலைத்தளத்து வாசக நண்பர்கள் என்னை விட
படு ” உஷார் “-ஆக இருக்கிறார்கள்.

பின்னூட்டங்களில் நண்பர் டுடேஅண்ட்மீ அனுப்பி இருக்கும்
வீடியோ க்ளிப்புங்குகள் அருமை…
விலா நோகச் சிரிக்க வைக்கின்றன…!!!
அன்று மிக சீரியசாக பேசியவர்களும், ரசித்தவர்களும்
இன்று காமெடி பொருளாகி விட்டார்கள் என்பதை
ஆதாரபூர்வமாக நிரூபித்திருக்கிறார் நண்பர் டுடேஅண்ட்மீ.

அவற்றை பின்னூட்டங்களில் பார்க்காத நண்பர்களும்
அவசியம் பார்த்து “யாம் பெற்ற அனுபவத்தை ” அவர்களும் பெற வேண்டும் என்கிற ” பரந்த ” நோக்கத்துடன்
இங்கே பதிவு செய்கிறேன்.

வழக்கமாக எரிச்சலையும், கோபத்தையும் உண்டு பண்ணும் அரசியலே – இங்கு அற்புதமான நகைச்சுவை
அனுபவங்களைத் தருகிறது.

இந்த சுயநலவாத அரசியல்வாதிகள் மக்களை எல்லாம்
“முட்டாள்கள்” என்றே தீர்மானித்து விட்டதைப் பார்த்தால்,
நமக்கு உண்மையில் யார் தான் முட்டாள் என்கிற
சந்தேகம் எழுகிறது.

விஜய்காந்த்தின் ஓட்டுக்களை கவர்ந்து கொள்வதற்காகவென்றே,
வைகோவும், திருமாவும் பிரமாதமாக நாடகமாடி இருக்கின்றனர்.
ஆனால், சற்று ” ஓவர்-ஆக்டிங் ” ஆகி விட்டதால், அது
“expose ” செய்யப்பட்டு, நகைப்புக்கு இடமாகி விட்டது.
இனி இவர்களது செயல்பாடுகள், கூட்டங்கள் எல்லாம்
நகைச்சுவையாகவே ( with comedy effect ) பார்க்கப்படும்…!!!

( ஒரே ஒரு ஆறுதல்- “விஜய்காந்த் கூட்டணி” என்கிற
பெயரை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் – என்று கூறியுள்ள
தோழர் நல்ல கண்ணு அவர்கள்….! )

சிறந்த நகைச்சுவையாகி விட்ட வீடியோக்களை பாருங்கள்
இவைகளை தேடியெடுத்துத் தந்த நண்பர் டுடேஅண்ட்மீ அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றிகள்….!

திருமாவின் போன மாச முகம்

திஇந்துவின் காமெடி மீம்-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to 4+1 = 0 (A BIG ZERO) – என்றாகி விட்ட புதிய கே.வி…. கூட்டணி…..!!!

 1. thiruvengadam சொல்கிறார்:

  நம் கருத்துக்களை பதிவுசெய்ய தற்கால ஊடகங்கள் பெரிதும் உதவுகின்றன. தங்களின் முந்தைய பதிவில் எழுத்தாளர் பாலமுருகன் அவர்களின் முகநூல் பதிவை நண்பர்கள் பார்வைக்கு இட்டுள்ளேன். புலிவால் பிடித்த நிலையில் எல்லா அரசியல்வாதிகளும் செயல்களும் முன்னுக்கு பின் முரணாகவே உள்ளன. காங்கிரஸ் ஆட்சிக்குபின் வந்த திராவிடக்கட்சிகட்சிகளை முழுதும் நீக்க முடியாவிட்டாலும் இந்த முயற்சி ஒரு ஆரம்பமாக பார்ப்போமே.

  • today.and.me சொல்கிறார்:

   திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் மாற்றாக
   எப்படி இன்னொரு தே. திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கமுடியும் என்று தேதிராவிட முன்னேற்றக கழகத்தலைவர் நினைக்கிறார் என்பதை கொஞ்சம் விளக்கமுடியுமா?

   சீமான் சொல்வது போல திராவிடத்திற்கு மாற்று என்பதை (மட்டுமே) கணக்கில் கொண்டீர்களானால், நாம் திராவிடர் அல்லர், தமிழர் தான் என்பதுதானே மாற்றாக இருக்கமுடியும்?

   • thiruvengadam சொல்கிறார்:

    பாலகுமாரின் பதிவின் மீதான டூ அன்ட் மீ அவர்களின் கருத்து ?

    • today.and.me சொல்கிறார்:

     உங்களுடைய முந்தைய கேள்வியில் எனது கேள்விகளைப் பார்க்கவும்.

     • thiruvengadam சொல்கிறார்:

      வழக்கமாக என் பதிவுகள் தான் குழப்பமாக இருக்குமென நண்பர்கள் பதிவிடுவார்கள்.நான் பாலகுமாரின் கருத்தை காண்பித்து திராவிடக்கட்சிகளுக்கு ஒரு செக்காக இம்முயற்சியை பார்ப்போம் என்று மட்டுமே பதிவிட்டிருந்தேன். கேள்வி எதுவும் இல்லை. தங்க்ள் பதிவு தேமுதிக பற்றி மட்டுமே இருந்ததால் பாலகுமார் பதிவின் மேலான தங்கள் எண் ணம் கோருகிறேன்.

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      திருவாளர் திருவேங்கடம்,

      பாலமுருகன் என்ற பெயருடன் ஒருவர்
      வேறு ஏதோ ஒரு தளத்தில் எழுதியதை
      அவர் பெயரைச் சொல்லாமல் நீங்கள் இங்கே
      எடுத்துப் போட்டது ஏன் ?

      அந்த பாலமுருகன் வெளியிட்டிருக்கும் கருத்துக்களுடன்
      நீங்கள் ஒத்துப்போகிறீர்களா இல்லையா என்பதைப்பற்றியும்,
      அந்த கருத்துக்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
      என்பதையும் எழுதக்கூடிய துணிச்சல் உங்களுக்கு ஏன் இல்லை ?

      நீங்கள் நேர்மையான முறையில் கருத்து சொல்வதாக இருந்தால்,
      இது குறித்து உங்கள் கருத்து என்ன என்பதையும்
      சொல்லி இருக்க வேண்டும்.

      ” நான் வித்தியாசமான முறையில் கருத்து சொல்பவன் ”
      என்று நீங்கள் இந்த தளத்தில் பின்னூட்டங்கள் எழுத ஆரம்பித்த
      காலத்தில் எழுதி இருந்ததாக நினைவு.

      “வித்தியாசமாக” என்றால் –

      ஒன்றையும் சரியாக சொல்லத் தெரியாமல்
      தானும் குழம்பி, என்ன சொல்கிறீர்கள் என்று தெரியாமல்
      மற்றவர்களையும் குழப்புவதோ அல்ல – இது ஏற்கெனவே,
      சில தடவைகள், என்னாலும் மற்ற நண்பர்களாலும்
      உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது.

      இருந்தாலும் –
      நீங்கள் தொடர்ந்து இதைச்செய்து வருவதால்,
      வேண்டுமென்றே இப்படிச் செய்கிறீர்கள் என்று தான்
      கருத வேண்டியிருக்கிறது.

      இதை சொல்வதற்காக நான் வருத்தப்படுகிறேன் –

      “நீங்கள் தொடர்ந்து இதே ஸ்டைலில் தான்
      எழுதுவீர்கள் என்றால், தயவுசெய்து இந்த தளத்தில்
      பின்னூட்டங்கள் எழுதுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
      இது நீங்கள் மற்றவர்களை சோதித்துப் பார்க்கும்
      இடம் அல்ல- அதை நான் அனுமதிப்பதற்கும் இல்லை.”


      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

 2. gopalmohan சொல்கிறார்:

  yes nice

 3. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  நீ திமுக-வா என்றால் சிலருக்கு பெருமையாகவும் சிலருக்கு அருவெறுப்பாகவும் இருக்கும்.
  அதேபோல அதிமுக-காரரையோ காங்கிரஸ்-காரரையோ பிஜேபி-காரரையோ கேட்டாலும் இதே பதில் கிடைக்கும். ஆனால் கேநகூ-வான்னு கேட்க்கததான் முடியுமா? இல்லே கேட்டால்தான் அவரால் பதில் சொல்ல முடியுமா? (கேணக்கூ… ஸாரி, கேநகூ – கேப்டன் நல கூட்டணி)

 4. CHANDRAA சொல்கிறார்:

  Premalathas recent statement that since v>kanth is thoroughly known to tamilnadu village voters this alliance is termed as v>kanth alliance>>>>>is far from truth
  Both vaiko and thiruma are known to all in tamilnadu
  soon i predict THIRUMAS PARTY WORKERS would reveal or
  protest this move much to the embarassment
  of vaiko premalatha

 5. thiruvengadam சொல்கிறார்:

  முதலில் கா.மை. அவர்களின் வலைத்தளம். எதை அனுமதிப்பது என்பது அவரின் உரிமை. முதலிலேயே எழுத்தாளர் பாலகுமாரின் முகநூலபதிவு என்று போட்டிருந்தால் கருத்தின் தாக்கம் குறைந்து அவரைப்பற்றிய விமர்சனமே முன்னிற்கும். அரசியல் & திரைத்துறை பிரபலங்களில் பலரும் ஆரம்பகாலங்களில் முழுத்திறமையுடன் இருந்தவர்கள் இல்லை. என் பதிவின் ஆரம்பத்திலேயே பலரும் இதை படித்திருப்பார்கள் என்றும் என் கருத்தாக திராவிடகட்சிகளுக்கு இம்முயற்சி ஒரு செக்காக எடுத்துக்கொள்வொமென எழுதியுள்ளது கவனிக்கபடவில்லை. தளங்களில் பதிவு அனுமதிப்பது தங்கள் முழு உரிமை. தங்கள் & டுடெஅன்மி அளவு ஞானம் குறைவானவன் நான். To smooth a situation i refer a very old wit : In a country a new ministry assumed power after winning first time. All were going in their official cars. That was the when Rear Engine introduced & all of that model. A short while a car met with a break down. The next new minister stopped & enquired. The other minister informed that his had no engine & stopped. Immediately the other told he has a Spare Engine in his stepney tyre place. –

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   திரு.திருவேங்கடம் அவர்களுக்கு,

   ஒரு வேண்டுகோள்…..

   என்னை சங்கடத்திற்கு உள்ளாக்காமல்,
   தயவுசெய்து இனி இந்த வலைத்தளத்தில்
   பின்னூட்டம் எழுதுவதை நீங்களாகவே
   நிறுத்திக் கொள்ளுங்கள்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. செல்வ பாண்டியன் சொல்கிறார்:

  உம்..ஹூம்..
  திருத்தவே முடியாத கேசு இது.

  • thiruvengadam சொல்கிறார்:

   Many thnks to Mr. Selvapandian for his drop out case. Anyway i request him to once again go thro & decide accordingly.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    திரு.திருவேங்கடம் அவர்களுக்கு,

    ஒரு வேண்டுகோள்…..

    என்னை சங்கடத்திற்கு உள்ளாக்காமல்,
    தயவுசெய்து இனி இந்த வலைத்தளத்தில்
    பின்னூட்டம் எழுதுவதை நீங்களாகவே
    நிறுத்திக் கொள்ளுங்கள்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.