திருவாளர் விஜய்காந்த் குறித்து ……….. திருமதி ராதிகா …..

raadhika-

முந்தைய இடுகையில், எம்.ஜி.ஆர். அவர்களைக் குறித்த
திருமதி ராதிகா அவர்களின் பேட்டியை வெளியிட்டிருந்தேன்.
அதே பேட்டியில், திரு விஜய்காந்த் அவர்களைப் பற்றிய
கேள்விகளும் வருகின்றன.

அந்த கேள்விகளும் – பதிலும், நண்பர்களுக்காக – கீழே –

———-

கேள்வி – விஜய்காந்த் அரசியலில் நுழைந்து, ஒரு கட்சியை
ஆரம்பித்து, எட்டு சதவிகித ஓட்டுக்களை பெற்றார். இன்று
எதிர்க்கட்சித் தலைவராக அவர் தோல்வி அடைந்து விட்டதாக
கருதுகிறீர்களா ?

ராதிகா – கண்டிப்பாக எதிர்க்கட்சித்தலைவராக
அவர் படுதோல்வி அடைந்து விட்டதாகவே நான் கருதுகிறேன்.
எதிர்க்கட்சி தலைவராக எதுவுமே செய்யவில்லை.
ஏன், எதிர்க்கட்சித்தலைவராக சட்டமன்றத்திற்குள்ளே
கூடப் போகவில்லை.

“மின் பிரச்சினையைப் போக்குவதற்கு என்னிடம் வழி
இருக்கிறது. ஆனால், அதை இப்போது சொல்ல மாட்டேன்.
நான் ஆட்சிக்கு வந்தால் தான் சொல்லுவேன் ” என்று கூறுகிறார்.

ஒரு அரசியல் தலைவர் இதைவிட மோசமாக நடந்துகொள்ள முடியுமா ? உண்மையிலேயே அவர் கட்சி ஆரம்பித்தபோது,
இரண்டு திராவிடக் கட்சிகளும் வேண்டாமென்று நினைத்தவர்கள்,
அவரை ஒரு மாற்றாகவே நினைத்தார்கள்.

ஆனால், இன்று இதுவா மாற்று என்று
வெறுத்துப் போய் விட்டார்கள்….

கேள்வி – விஜய்காந்த் பொறுமையிழந்து
பல நேரங்களில் மீடியா முன்னால், மக்கள் முன்னால்,
ஏன் – சட்டப்பேரவையிலும்
கூட நடந்து கொண்டிருக்கிறார். அவருடன் நீங்கள் படங்களில்
நடித்தவர். அந்தக் காலங்களில் கூட அவர் இப்படித்தான்
இருந்தாரா …?

ராதிகா – ஆமாம். அவர் எப்போதும்
இப்படித்தான் இருந்திருக்கிறார். அவர் மாறவில்லை.
நான் பார்த்த நாள் முதல் அவர் இப்படித்தான் இருக்கிறார்.

அவருடன் சேர்ந்து இருபது படங்களுக்கு மேல் நடித்துள்ளேன்.
இப்படி எடுத்தெரிந்து பேசுவது, நாக்கைத் துருத்துவது
எல்லாம் ஷூட்டிங்கிலும் செய்வார். அங்கு செய்தபோது
வெளியே தெரியவில்லை. ஒரு அரசியல்வாதியாக
மாறியவுடன், வெளியே தெரிந்து விட்டது.

ஒரு அரசியல்வாதியாக மாறிய பிறகாவது அவர் தன்னுடைய
கோபத்தை மாற்றிக்கொள்ள முயற்சி செய்திருக்க வேண்டும்.
ஆனால், பத்து வருடங்களுக்கு முன்னால், எந்த இடத்தில்
இருந்தாரோ, இப்போதும் அதே இடத்தில் தான் இருக்கிறார்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to திருவாளர் விஜய்காந்த் குறித்து ……….. திருமதி ராதிகா …..

 1. சொல்வதை தவறு என்று சொல்ல முடியவில்லை ஐயா.

 2. Kamal சொல்கிறார்:

  Ippa ulla kevalam kedda aadchija vida Evan jeyichalum tamilnadukku nalam. Athu dmk, dmdk, pmk, seeman yaara vena irukkalam

  • சைதை அஜீஸ் சொல்கிறார்:

   திரு கமல்
   உங்களுக்கு ஏன் தமிழகத்தின் மீது இவ்ளோ கோபம்?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கமல்,

   உங்களை பலமுறை எச்சரித்து விட்டேன்.
   அநாகரிகமான பின்னூட்டங்களை இங்கே பதிவிட
   வேண்டாம் என்று. கொஞ்ச நாட்கள் பேசாமல் இருந்து விட்டு
   மீண்டும் துவங்கி இருக்கிறீர்கள்.

   மீண்டும் சொல்கிறேன். நீங்கள் இங்கு அநாகரிகமான
   பதிவுகளைப் போடுவது இதுவே கடைசி முறையாக இருக்கட்டும்.

   எதிர் கருத்து சொல்ல விரும்பினால், அதை
   பண்பாடு குறையாமல் சொல்லுங்கள்.

   -காவிரிமைந்தன்

   • Kamal சொல்கிறார்:

    KM,
    Unkal manasaadchija thoddu sollunkal. Naan naakareekamaka eluthija entha comment um neenkal entha pathilum sollamal remove pannijathillaja? Pathivukku sampantham irunthum….
    Udane nan kaduppil eluthija comments inai example ena thooki podaatheerkal. Nan kooruvathu athatku mun nadantha visayam.

   • Antony சொல்கிறார்:

    KM sir,
    I understand your reply to Kamal. But one of my comment (without any indecent words) to this post has been removed without any notice. Can you explain?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்ப அந்தோனி,

     நீங்கள் சொல்வது அநேகமாக துரியோதனன் என்பவரின் பெயரில்
     வந்த ஒரு பின்னூட்டத்திற்கு நீங்கள் எழுதிய பதில் பின்னூட்டம் என்று
     நினைக்கிறேன். முதல் பின்னூட்டம் bad taste/words காரணமாக நீக்கப்பட்டதால்,
     அதற்கு பதிலாக நீங்கள் எழுதியதும் தேவையின்மை காரணமாக நீக்கப்பட்டது.

     அந்தோனி, ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன்.
     இந்த வலைத்தளம் நல்ல முறையில் கருத்துப் பரிமாற்றங்களை
     செய்துகொள்ள உதவும் ஒரு தளமாக இருக்க வேண்டும் என்பதே
     என் விருப்பம்/குறிக்கோள்.

     அதற்கு மாறாக வரக்கூடிய எந்தவித பின்னூட்டங்களையும்
     நீக்கக்கூடிய உரிமை எனக்கு உண்டு. தனிப்பட்ட நபர்களின் ஈகோ
     காரணமாக உண்டாகும் விவாதங்களுக்கு நான் இடமளிக்க முடியாது.
     புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • Antony சொல்கிறார்:

      Dear KM,
      That comment was not reply to anybody’s comment. It was a comment on the post itself regarding Rahika. May be there were issues in posting as I typed it in mobile. Anyway thanks for clarification. Keep up the good work.

 3. Ganpat சொல்கிறார்:

  கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
  தானு மதுவாகப் பாவித்துத்-தானுந்தன்
  பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே
  கல்லாதான் கற்ற கவி.

  MGR & விஜயகாந்த் ஒரே மாதிரி என்று சொல்லக்கேட்ட எனக்கு தோன்றிய பதில்

  • Tamilian சொல்கிறார்:

   MGR was a very bad accident for TN in political sense. Had we had a good leader after DMK fall, people would have voted and TN would have progressed. But MGR prevented it by his immense popularity and TN fell into the ravine. All the way down afterwards. Till date we did not have a government that equalled Congress government till 1967.

 4. NS RAMAN சொல்கிறார்:

  Radhika very intelligently riding on both horses ADMK thro Sarathkumar and DMK thro SUN TV links. Vijaykanth failure is a known fact but what about Sarathkumar performance as a Tenkasi MLA and earlier as MP? I hope Tuglak will arrange for an interview with Nagma or Kushboo and ask questions about Sarathkumar to proof neutrality!!!

 5. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  ராதிகா விஜயகாந்தைப் பற்றிச்சொல்வது உண்மையாக இருக்கலாம். யார் ஆட்சிக்கு வந்தாலும் இப்போது உள்ளதைவிட நன்றாக இருக்கும் என்று சொல்வது ஜெ.மீது உள்ள வெறுப்பினால். இந்த ஆட்சியில் டேஞ்சபிளாக வளர்ச்சி நடக்கவில்லை என்று நான் நம்புகிறேன். இது எம்ஜியாருக்கும் ஜெவுக்கும் பொருந்தும். ஆனால், அவர்கள் மக்களைத் துன்புறுத்தவில்லை. கட்டப்பஞ்சாயத்தின் மூலம் அடித்தட்டு மக்களை அச்சுறுத்தவில்லை. நிலங்களை சுவாகா செய்யவில்லை. இது திமுகவுக்கும் அன்புமணி குரூப்புக்கும் நன்’கு பொருந்தும். (‘நிலத்தை அபகரித்தல்). கருணானிதி எதைச் செய்தாலும் அதில் அவருக்கு மிகுந்த லாபம் இல்லாததைச் செய்யமாட்டார். அது கமிஷனாகவோ, சொந்த ஆதாயமாகவோ, பழிவாங்குவதாகவோ மட்டும்தான் இருக்கும். இதைத் தவிர அவர் ஏதாகிலும் நல்லது செய்திருக்கிறார் என்று யாராவது சொன்னால் அது தவறு என்று குறிப்பிடத் தயாராக உள்ளேன். அதேபோல், எப்படி கருணானிதியின் சாம்ராஜ்யம் பெங்களூர், ஆந்திரா என்று விரிந்தது என்பதை நிரூபிக்க மற்றவர்களும் தயாராக இருக்க வேண்டும். எந்தத் தொழில் செய்து, 30 கோடி, ஸ்டாலினோ, கனிமொழியோ, உதயனிதியோ, தயாளு அம்மையாரோ, ராஜாத்தி அம்மையாரோ, மற்ற உறவினர்களோ கணக்குக் காண்பிக்கிறார்கள் என்பதையும் (அஃபீஷ்யலாக) நாம் புரிந்துகொள்ளவேண்டும். அன்புமணி கூட, அவர் சொத்து, டாக்டர் தொழிலால் வந்ததல்ல, ரியல் எஸ்டேட் தொழில் என்று கணக்கு காண்பிக்கிறார்.

  ஆட்சி செய்வது என்பது சுலபமல்ல. அதுவும் இத்தனை ஜாதீயச் சிந்தனைகள், வெறுப்பு, மத நல்லிணக்கத்துக்கு ஆபத்து போன்ற பல்முனைத் தாக்குதல்கள் இருக்கும்போது ஆட்சி என்பது சுலபமல்ல.

 6. sivakumar சொல்கிறார்:

  This is only a sample of how TN was governed in the last 5 years.
  http://tamil.oneindia.com/news/india/tn-part-the-country-i-cannot-reach-to-piyush-goyal-249899.html
  But people say that she is the best administrator and support her! How sad!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.