திரு.எம்.ஜி.ஆர். குறித்து திரு எம்.ஆர்.ராதாவின் மகளாக – திருமதி ராதிகா பேட்டி…..!!!

mgr-1 b-w

MGR -2

அண்மையில் பின்னூட்டம் எழுதிய ஒரு நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களுடன், திரு.விஜய்காந்த்தை ஒப்பிட்டு எழுதி இருந்தார். சகிக்க முடியாத, ஒரு செயல் அது.

எம்ஜிஆர் மீது அவருக்கு இருந்த வெறுப்பு காரணமா அல்லது
விஜய்காந்த் மீது அவருக்கு இருந்த அளவுகடந்த ஈர்ப்பு
காரணமா தெரியவில்லை…!
இருந்தாலும், சகிக்க முடியாத, மிக மோசமான ஒப்பீடு அது
என்று இவர்கள் இரண்டு பேரையும் நன்கு அறிந்த யாரும்
ஒப்புக்கொள்வார்கள்.

சட்டென்று என் நினைவிற்கு வந்தது துக்ளக் இதழில்,
நான் அண்மையில் படித்த – திருமதி ராதிகா அவர்களின்
பேட்டியின் இடையே, இவர்கள் இரண்டு பேரைப்பற்றியும்
திருமதி ராதிகா கூறிய கருத்துக்கள்.

அவற்றை படிக்க வாய்ப்பில்லாத நமது வலைத்தள
நண்பர்களின் பார்வைக்காக அதை கீழே தருகிறேன்….

—————

கேள்வி – உங்கள் அப்பாவிற்கும், எம்.ஜி.ஆருக்கும்
பகை இருந்தது. நீங்கள் உங்களது சினிமா வாழ்க்கையில்
எம்.ஜி.ஆரைச் சந்தித்தது உண்டா ? அப்போது உங்கள்
மனநிலை எப்படி இருந்தது…?

ராதிகா – “சிறைச்சாலை சிந்தனைகள்” என்று
ஒரு புத்தகத்தில் தெளிவாக என்னுடைய அப்பா கூறியுள்ளார்.
அவர்கள் இருவரும் பகைவர்கள் இல்லை.
நல்ல நண்பர்களாகவே இருந்தார்கள்.

அவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த சண்டையில் அந்த
அசம்பாவிதம் நடந்து விட்டது. அந்த புத்தகத்தில் கூட
இதைப்பற்றி குறிப்பிட்டிருப்பார். “கையில் துப்பாக்கி கிடைத்தது.
சுட்டு விட்டேன். கம்பு கிடைத்திருந்தால் அடித்திருப்பேன்”
என்று எழுதி இருக்கிறார்.

“பெற்றால் தான் பிள்ளையா ” என்ற படத்தில் நடிக்கும்போது
தான் இருவருக்குள்ளும் சண்டை வந்திருக்கிறது. அந்தப்பட
ஷூட்டிங் சத்யா ஸ்டூடியோவில் நடந்தபோது நான் போயிருந்தேன்.
எங்களுடைய குடும்பத்தில் எல்லாருக்கும் எம்.ஜி.ஆரை ரொம்ப
பிடிக்கும். அவருடைய படங்களை விரும்பி பார்ப்போம். அந்த
ஷூட்டிங்கில் என்னை கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்தார்.
அதற்காக ரெண்டு நாள் நான் என்னுடைய முகத்தை கழுவாமல்
வைத்திருந்தேன். சின்ன வயதில் அந்த அளவுக்கு அவர் மீது
எனக்கு கிரேஸ் இருந்தது.

அவரை துப்பாக்கியால் என்னுடைய தந்தை சுட்டதற்குப் பிறகு
நாங்கள் யாரும் இங்கே இல்லை. அந்த சமயத்தில் தான்
ஸ்ரீலங்கா சென்று ஹாஸ்டலில் சேர்ந்து படித்தேன்.

நான் நடிகையான பீறகு, எம்.ஜி.ஆர். முதலமைச்சர் பொறுப்பு
ஏற்றவுடன் பாரதிராஜா ஒரு விழா எடுத்தார். அந்த நிகழ்ச்சியில்
நான் எம்.ஜி.ஆரை மீண்டும் சந்தித்தேன்.

பிறகு ஒரு சமயம், நான் சம்பந்தப்படாத ஒரு படத்தில்,
தயாரிப்பாளர் என்று என்னுடைய பெயரை யாரோ பயன்படுத்தி
விட்டதால், நான் ஒரு பெரிய நெருக்கடியில் சிக்கிக்கொண்டேன்.
அந்த சமயத்தில் யாரிடம் உதவி கேட்பது என்று யோசித்து,
கடைசியில் நேராக எம்.ஜி.ஆரின் ராமாவரம் வீட்டிற்கே சென்று
விட்டேன்.

என்னை அங்கு எதிர்பார்க்காத எம்.ஜி.ஆர். அதிர்ச்சி அடைந்து
விட்டார். என்னுடைய பிரச்சினையை அவருக்கு சொன்னேன்.
அவரால் பேச முடியாத காரணத்தால், சைகை செய்தார்.
பக்கத்தில் இருந்த நெடுஞ்செழியன், ” நீ வீட்டிற்கு போ;
நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் ” என்று சொன்னார்.

ராமாவரத்திலிருந்து, நான் தி.நகர் வருவதற்குள் அத்தனை
பிரச்சினையும் சரியாகி விட்டது. நெருக்கடி அளித்த அனைத்து
வினியோகஸ்தர்களும், என் வீட்டிற்கு வந்து மன்னிப்பு
கேட்டுச் சென்றார்கள்.

அந்த அளவிற்கு எம்.ஜி.ஆர். மிகவும் நல்ல குணம் கொண்டவர்.
என்னுடைய அப்பா எதையும் யோசிக்காமல் செய்யும் குணம்
உடையவர். இந்த புத்தகத்தை ( சிறைச்சாலை சிந்தனைகள் )
படிக்கும்போது, அது இன்னும் தெளிவாக எனக்கு புரிகிறது.
அவர், அவருடைய கண்ணோட்டாத்திலேயே வாழ்க்கையை
வாழ்ந்து முடித்து விட்டார்.

————

இதைத் தொடர்ந்து திருமதி ராதிகா- திரு விஜய்காந்த் குறித்து கூறியவை, அடுத்த இடுகையில் இன்னும் ஒரு மணி நேரத்தில் வரும்….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to திரு.எம்.ஜி.ஆர். குறித்து திரு எம்.ஆர்.ராதாவின் மகளாக – திருமதி ராதிகா பேட்டி…..!!!

 1. selvarajan சொல்கிறார்:

  // எம்ஜியார் உளறவில்லையா எச்சல் வழிய பேசவில்லையா. தமிழகம் பரிதாப்ப்பட்டது. இழிவு படுத்தவில்லை.
  மது அருந்துதல் சாதாரணமாகி விட்டது. குடிப்போர் சதவிகிதம உயர்ந்து விட்டது . இது குணக்கேடாகி விடாது..// …. இதை பதிவிட்ட நண்பர் : எப்போதுமே — தான் என்ன — எதை பற்றி எழுதுகிறோம் — யாரை பற்றி எழுதுகிறோம் — இடுக்கைக்கு உரித்தானது தானா — என்பதை பற்றியெல்லாம் தெரியாமலேயே எதையாவது எழுதுவதே வாடிக்கையான ஒன்று — எம்.ஜி.ஆரின் பேச்சு குழரியதற்கு காரணம் அவருடைய தொண்டையில் ஏற்பட்ட துப்பாக்கி குண்டின் தாக்கம் — ஆனால் வி.காந்த் மக்களை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் ” குடித்து விட்டு நாக்கு குழறி உலறுவதோடு ஒப்பிட்டதும் — குடிப்பதை நியாய படுத்தியதும் இவரது தரத்தின் தன்மையை நமக்கு பறை சாற்றி விட்டன — எம்.ஜி.ஆர் . அதே குரலோடு பல படங்களில் நடித்து வெற்றி வாகை சூடியவர் — அது அவரது தொழில் பக்தியையும் — ரசிகர்கள் மீது அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையையும் தெள்ளென காட்டுகிறது — அவர் மீது பரிதாபம் படவில்லை தமிழகம் — அவரது உழைப்பையும் — நேர்மையையும் — மனித நேயத்தையும் தான் பார்த்தது என்பது — உண்மை சரித்திரம் …. அவரை போல் இன்று ஒருவரை காண்பது அரிது — தற்போது நன்கு தமிழ் தெரிந்த நடிகர்களுக்கே ” டப்பிங் ” தேவை படுகிறது — ஆனால் அவர் அந்த டப்பிங் என்பதை ஏற்க மறுத்து ” சுய நம்பிக்கை ” யை நம்பியவர் … அவரை போய்— எதிலுமே சேர்த்தி இல்லாத ஒரு நபரோடு ஒப்பிட்டு கருத்து பதிவிட்டவரை … என்னவென்று சொல்வது … ?

  • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

   நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்து, யாரோ, “எம்ஜியார் உளரினார். சரியாகப் பேசத் தெரியவில்லை” என்று கருத்தூட்டம் இட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

   எம்ஜியார், ‘நிறையப் புத்தகங்களைப் படித்தவர். அவருக்குத் தமிழ் பேராசிரியர்கள் பலரின் நட்பு இருந்தது. விஷயம் நன்’கு தெரிந்தவர் அவர். ஆனால், சிறந்த பேச்சாளரா என்று கேட்டால் இல்லை என்பதுதான் உண்மை. நன்’கு பேசுவது என்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் வரவேண்டும் என்பது இலை. எம்ஜியார் நேசித்தது அவரது சினிமாத் தொழிலை. அதை அவர் முடிந்த அளவு நேர்மையாகச் செய்தார். சம்பாதித்ததைத், தான் சிறு வயதில் (35-40 வயது வரைகூட) அனுபவித்த வறுமையின் காரணமாக, எளியவர்களுக்கும் தன்னை நாடியவர்களுக்கும் அளவில்லாமல் பண உதவி செய்தார். இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு, வலம்புரிஜானுக்கு உதவுகிறேன் என்று வாக்களித்தார். இறந்தபின்பு, எம்ஜியாரின் அமைச்சரவை சகா, வலம்புரிக்கு ஒரு குறிப்பிட்ட தொகை தந்தார். “இலவச செருப்பு”, “இலவச பல்பொடி” போன்ற அவரின் திட்டங்கள் நகைக்கப்பட்டன. ஆனால் அதை அறிவித்த காரணம் அவரின் மனித நேயம். அதை, இப்போதுள்ள “விலையில்லா” மிக்சி, கிரைண்டர், டிவி போன்ற திட்டங்களோடு ஒப்பிடமுடியாது. இது வாக்காளரின் வாக்கைக் கவரும் தந்திரம் (அதுவும் ஜெ. செய்ததற்குக் காரணம், சரியான காரணம் இல்லாமல், அவருக்கு 2006ல் கிடைத்த தோல்வி. ப.சி. கருணானிதியின் தேர்தல் அறிக்கைதான் கதானாயகன் (டிவி இலவசம்) என்று சொன்னார். அதனால்தான் அவரும் அதே வழியை 2011ல் பின்பற்ற நேர்ந்தது). அவர்தான் மதிய உணவுத் திட்டத்தை மிகவும் விரிவுபடுத்தினார். (அதை ஆரம்பித்த காமராசரின் ஒரே எண்ணம், சாப்பாட்டின் காரணமாக, பள்ளிக்கு வராமல் எந்த ஏழைகளும் இருந்துவிடக் கூடாது என்பதுதான். அவரும் தமிழகத்துக்குக் கிடைத்த வரப்பிரசாதம். அவர் காலம் இல்லாமல் இருந்தால், தமிழகத்தில் இப்போது இருப்பதுபோல் ஏராளமான அரசுப் பள்ளிகள் இருந்திருக்கமுடியாது).

   எம்ஜியார், ப்ரூக்ளின் மருத்துவமனையில் மறு உயிர்பெற்றுத் திரும்பியபின் பெரிய பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். (ராதா அவர்கள் சுட்டபின்பு, மிகவும் கடுமையான முயற்சியின் பேரிலேயே ஓரளவு பேச்சு எம்ஜியாருக்குத் திரும்பியது. அந்த நிகழ்ச்சிக்குப் பின்பும், அவர், ராதா அண்ணன் என்றே எம்.ஆர்.ராதாவை விளிப்பார்கள்). மக்கள் அவரைப் பேசவேண்டாம் என்று சொல்கிறார்கள். (எளிமையான பொதுமக்கள். நீ பேசியது போதும் ராசா என்ற கூக்குரலும், உட்கார் என்ற சைகையும், பொதுமக்கள் தாமாகவே செய்தது அது). மக்களின் அன்பைப் பெற்றவர் அவர். அதைப் பற்றி ஒன்றும் தெரியாமல், குறைபட எம்ஜியாரைப் பற்றி எழுதுவது தவறு.

 2. புது வசந்தம் சொல்கிறார்:

  விஜயகாந்தை எம்.ஜி.ஆரோடு ஒப்பிடுவதா ?!, ஐயோ,ஐயோ..

 3. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  எம் ஜி ஆரை, யாருடனும் ஒப்பிடுவது அடுக்காது. தனக்குப் பெயர் வரும் என்பதற்காக வருடத்துக்கு ‘நோட்டுப் புத்தகங்களும் அயர்ன் பாக்சுகளும் வழங்கும் நடிகர்கள் மத்தியில் (விஜயகாந்த், விஜய் போன்றவர்கள்தான்), மக்களின்மீது, குறிப்பாக ஏழைகளின்மீது உண்மையான அன்பு கொண்டவர் எம்.ஜி.ஆர். அவருடைய மனித நேயம் யாருக்கும் வராது. இது இயல்பாக வரவேண்டியது. அவரைப்பற்றிப் பலர் சொன்னதையும், பல புத்தகங்களில் படித்ததையும் பட்டியலிடலாம். நேரமில்லை. தன் எதிரியையும் வெறுத்து ஒதுக்கும் எண்ணம் அவருக்கு அறவே வந்ததில்லை. கறுப்பு ஃஃபிலிம் போட்ட காரில் பயணம் செய்தபோதும் (உள்ளே எம்ஜியார் இருப்பதைக் காண இயலாது), அவருடைய கார் என்று மக்கள் அறிந்து வணக்கம் வைத்தபோதும், உள்ளிருந்து கைகூப்பியபடியே இருந்தவர் எம்ஜியார். வழியில் எந்த ஏழையைக் கண்ணுற்றாலும் உதவி செய்தவர் அவர். பெங்களூர் போகும் பாதையில் ஏழைத்தாயார் கால் செருப்பில்லாமல் செல்வதைப் பார்த்துத் தன் செருப்பைக் காரை நிறுத்தச்சொல்லிக் கொடுத்தவர். அவர் எதையும் எதிர்பார்த்துச் செய்தவரல்லர்.

  எம்ஜியாரின் கர்லாக் கட்டை தனக்குக் கிடைத்ததால், சத்யராஜ் அடுத்த எம்ஜியார் என்று சொல்வது எவ்வளவு நகைப்புக்குரியதோ அதைவிட நகைப்புக்குரியது விஜயகாந்தை கறுப்பு எம்ஜியார் என்று சொல்வது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.