எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி திரு.மாலன் ……!

mgr meets people

mgr samathi

எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றிய இன்னொரு செய்தியையும் இங்கு பகிர்ந்து விட்டு, அடுத்த தலைப்பிற்கு நகரலாமென்று தோன்றுகிறது.

எத்தனையோ வள்ளல்களைப் பற்றி நாம் படித்திருக்கிறோம்,
கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், நம் காலத்திலேயே
வாழ்ந்த ஒரு நிஜமான வள்ளல் எம்.ஜி.ஆர். மட்டுமே.

தான் சம்பாதித்த அத்தனை பணத்தையும், மற்றவர்களுக்காகவே
செலவழித்த, இவரைப்போன்ற இன்னொரு மனிதரை
என் வாழ்வில் நான் காணவில்லை.

எத்தனை பெரிய கோடீஸ்வர கொடை வள்ளல்
ஆனாலும், தன் எதிர்காலத்திற்கென்று பத்திரமான அளவிற்கு
சேமித்து வைத்துக் கொண்டு, மீதியைத் தான் அறச்செயல்களுக்கு
செலவழிப்பதை பார்க்கிறோம்.”தனக்கு மிஞ்சித்தான் தான தருமம்”
என்பது தானே வழக்கு வார்த்தை…?

மூத்த பத்திரிக்கையாளர் திரு.மாலன் – எம்.ஜி.ஆர். பற்றி, தன் அனுபவங்களை அண்மையில் ஒரு கட்டுரையில் பகிர்ந்து
கொண்டார். இன்றைய இளைஞர்கள் பலருக்கும் இதெல்லாம்
தெரிந்திராத விஷயம் என்பதால் அதை இங்கே
பகிர்ந்து கொள்கிறேன்.

 

malan-1

malan-2

malan-3

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி திரு.மாலன் ……! க்கு 12 பதில்கள்

  1. today.and.me சொல்கிறார்:

    காமைஜி
    நீங்களாகவே எம்ஜிஆரைப் பற்றி இங்கே எழுதியிருந்தால் இந்நேரம் பொங்கியிருப்பார்கள் நடுநிலைப் பொங்கல்கள். 😐

    நல்லவேளை … தப்பித்தீர்கள்…🙂

    எழுதத்தூண்டிய
    அந்த நாலுபேருக்கு நன்றி.😀

  2. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    எம் ஜி யாரைப் பற்றி எவ்வளவோ படித்திருக்கிறேன். அவர் எழுதிய “உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை”, அவரது தனிப்பட்ட செக்யூரிட்டியாகப் பணியாற்றிய எஸ்.இராமகிருஷ்ணன், எம்ஜியார் இறந்த வெகுகாலம் கழித்து எழுதிய புத்தகம், வாலியின் எம்.ஜி.ஆர் அனுபவங்கள், வலம்புரிஜானின் அனுபவங்கள், நடிகர் சிவகுமாரின் அனுபவங்கள், தேவரின் அனுபவங்கள் (தேவர் பிக்சர்ஸ்),சேலம் ராஜாராம் (அமைச்சராக இருந்தவர்) அனுபவங்கள் என்று பலவற்றைப் படித்துள்ளேன். அவைகள் பெரும்பாலும், எம்ஜியார் மறைந்த வெகுகாலம் கழித்து எழுதப்பட்டவை. அவர் பிறரின் ஏழ்மையைக் கண்டு வருந்தி நல்லது செய்யவேண்டும் என்று உண்மையாகவே ஆசைப்பட்டவர். கேட்டவருக்கு இல்லை என்னாது, தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து அள்ளிக்கொடுத்தவர். வருபவர் எல்லோருக்கும் வயிராற உணவு அளித்தவர். (வாலி சொல்கிறார். ஒரு படப்பிடிப்புத் தளத்தில், உணவு நேரம். வாலியைப் பார்த்ததும், எம்.ஜி.யார் உள்ளே கூப்பிடுகிறார். தன்னுடன் சாப்பிடச் சொல்கிறார். வாலி தயங்கி, தன்னுடன் ஒரு நண்பர் வந்துள்ளார். அவரை வேறு இடத்தில் சாப்பிட அனுப்பிவிட்டு வருகிறேன் என்’கிறார். உடனே எம்ஜியார் எழுந்து வெளியில் சென்று, இங்கு யார் வாலியுடன் வந்தது என்பதைத் தானே விசாரித்து அவரைத் தன் பக்கத்தில் இருத்தி சேர்ந்து சாப்பிடுகிறார். முதலமைச்சர் நிதிக்காக, கோட்டையில் தன் அம்மாவைக் கூட்டிச்சென்று பணம் கொடுக்க சிவகுமார் செல்கிறார். முதலமைச்சர் எம்ஜியார், தான் படி இறங்கி அவசர அவசரமாக வந்து, சிவகுமாரின் தாயாரை அழைத்துச்செல்கிறார். பொதுஜனங்களில் ஒருவர் (பெண்), ஏமாற்றும் எண்ணத்துடன் எம்ஜியாரைக் காண கோட்டைக்கு வருகிறார். ராமகிருஷ்ணனைத் தாண்டி அவர் எம்.ஜியாரிடம் சென்று உதவி கேட்கிறார். எம்ஜியாரும் பணம் கொடுக்கிறார். பிறகு அந்தப் பெண் பொய்யுரைத்து பணம் வாங்கிச் சென்றார் என்பதை அறிந்து இராமகிருஷ்ணனிடம் “ஏன் தெரிந்தும் சொல்லவில்லை” என்று கேட்கிறார். அதற்கு ராமகிருஷ்ணன், நீங்கள் அவருக்கு உதவி செய்கிறீர்கள். அதைத் தடுக்க நான் யார்? எங்கிறார். எம்ஜியார், இந்த நல்ல குணத்தை என்றைக்கும் விட்டுவிடாதே என்று இராமகிருஷ்ணனிடம் சொல்கிறார். எம்ஜியார் தாயாரின் அன்பை, அவரை அண்டிய எல்லோருக்கும் காண்பித்தவர். அதனால்தான் இன்றும், அவர் காண்பித்த இரட்டை இலைக்கு, யார் நிற்பது என்பதை எண்ணாமல், வாக்களிப்பது தன் கடமை என்று வாக்களிக்கும் மக்கள் பெருவாரியாக உண்டு. தன் உண்மையான நேசத்தின்மூலம் மக்களின் அன்பைப் பெற்றவர் எம்ஜியார். “கொடுத்துச் சிவந்த கரம்” என்பது அவருக்கு மட்டும்தான் பொருந்தும். அவர் உதவிகள் செய்தபோது, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்தவர். விளம்பரப் படுத்தியதில்லை. அவரது குறையெல்லாம், நிலவில் உள்ள களங்கம் போன்றது. அவரளவுக்கு சாதாரண மனிதர்களை, எளிய மனிதர்களை நேசித்தவர்கள் இல்லை. அரசியலில் சுத்தமாக இல்லை.

  3. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    எம்ஜியாருக்கு பாரத ரத்னா, தானாகவே கொடுக்கப்பட்ட விருது. அவர் இலங்கைத் தமிழர்களுக்குச் செய்த நன்மைகளும் (தன்னால் முடிந்த அளவு, மத்திய அரசின் கொள்கைகளையும் பகைத்துக்கொள்ளாமல்) மிகவும் குறிப்பிடத்தகுந்தவை.

    • Antony சொல்கிறார்:

      //அவர் இலங்கைத் தமிழர்களுக்குச் செய்த நன்மைகளும்//
      SL tamil’s political strategist late Anton Balasingham wrote about MGR in his book. It was written that he gave Prabhakaran 6 crores or something at those days without a second thought.

  4. selvarajan சொல்கிறார்:

    அய்யா … ! நமக்கு நன்கு அறிமுகமான ஒரு சிலரின் ஊடகங்களில் வந்த ” சொத்துக்களின் பட்டியலை ” படிக்கவே ஒரு நாளுக்குள் முடியுமா என்கிற நிலையில் உள்ளது …. ஆனால் நடிப்பு — மற்றும் அரசியல் இரண்டிலும் கோலோச்சிய ஒருவரின் மொத்த சொத்து பட்டியலை படிக்க வெறும் ஐந்து நிமிடங்கள் போதும் — அவர்தான் திரு.எம்.ஜி.ஆர்/ அவர்கள் …. அவரின் உயிலின்படி அவரது மொத்த சொத்துக்களின் பட்டியல் :– சென்னை தேசிகாச்சாரி ரோட்டில் 24 எண் உள்ள வீட்டில் குடியிருக்கும் மூத்த வழக்கறிஞர் என்.கி.ரங்கசாமியின் குமாரரான என்.சி.ராகவாச்சாரி மற்றும் சென்னை வீனஸ் காலனியில் குடியிருக்கும் எனது மருமகன் ராஜேந்திரன் அவர்களையும் இந்த உயிலை நிறைவேற்றுபவராக நியமிக்கிறேன்.
    அவர்கள் காலத்திற்கு பிறகு சட்டப்படி சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி நிறைவேற்றுபவர்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அடியில் கண்ட அசையாத மற்றும் அசையும் சொத்துக்கள் எனக்கு சொந்தமானவை. அவைகளில் வேறு யாருக்கும் எந்த பாகமும், எந்த உரிமையும் கிடையாது.
    ” 1) நான் குடியிருக்கும் மணப்பாக்கம் கிராமத்தில் ராமாவரத்தில் என் பெயரிலுள்ள “எம்.ஜி.ஆர். கார்டன்” என்னும் பங்களாவும், தோட்டமும்.
    2) சென்னை தியாகராயநகர் ஆற்காடு சாலையில் 27_வது எண்ணில் இருக்கும் கட்டிடமும், அடி மனையும்.
    3) சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் சத்யா தோட்டம்.
    4) ஆலந்தூர் மார்க்கெட் சந்தில் எண் 43_ல் இருந்து 47 வரை உள்ள கட்டிடங்களும் அடிமனையும்.
    5) நான் குடியிருக்கும் ராமாவர தோட்ட பங்களாவில் உள்ள அசையும் சொத்துக்களான எனக்கு சினிமா துறையில் கிடைத்த விலை உயர்ந்த பரிசுகளும், மற்றபடி கிடைத்த விலை உயர்ந்த பரிசுகளும். என் சொந்த மர, இரும்பு சாமான்கள், வெள்ளி பாத்திரங்களும், மோட்டார் வாகனங்கள், பசு முதலிய கால்நடைகள்.
    6) சத்யா படப்பிடிப்பு நிலையத்தில் என் பெயரில் உள்ள பங்குகள்.
    7) இவைகள் எல்லாம் என் சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்டவை. எனக்கு சர்வ சுதந்திரமாக பயன்படுத்தப்பட்டவை ஆகும். ” என்பதே …. அதையும் பல பொது நல காரியங்களுக்கு மட்டுமே பயன் படும் படியும் — யாரும் விற்கவோ வேறு விதங்களில் பயன் படுத்தவோ முடியாத படி அமைத்த அவரைப்போல ஒரு நடிகரையோ — அரசியல் தலைவர்களையோ காண்பதரிது … ” பல தலைவர்களுக்கு பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரது நினைவு இல்லங்கள் எல்லாம் தமிழக அரசின் செலவிலேயே ஏற்படுத்தப்பட்டன. அரசுக்கு இந்த செலவை தவிர்த்திட என்னுடைய வீட்டையே இந்த நினைவு இல்லமாக ஏற்பாடு செய்து இருக்கிறேன்.” என்று அரசுக்கு எந்த செலவையும் வைக்க கூடாது என்று நினைத்தவர் திரு .எம்.ஜி.ஆர் .. அவர்கள் … எப்படி தனது இறுதி காலத்திலும் ” ஏழை எளியோர் — அனாதைகள் –ஊமைகள் –செவிடர்கள் — குருடர்கள் போன்றவர்களுக்காக தன சொத்து முழுவதையும் எழுதி வைத்தவர் திரு .எம்.ஜி.ஆர் . ஒருவராகத்தான் இருக்க முடியும் — ஆனால் என்னவோ ” பெரிய சாதனை போல ” தன்னுடைய ஒரு சிறு சொத்தான ஒரு வீட்டை மட்டும் உயில் மூலம் எழுதிய ஒருவரின் ” தமாஷான உயிலும் ” நமது நினைவுக்கு வந்து — வேதனை படுத்துவது — இயல்பு தானே … ? ” இருந்தாலும் — மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் — இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் ” என்று ஒரு திரைப்பட கவிஞன் கற்பனையில் கூட — அவருக்காக எழுதும் போது வார்த்தைகளை அமைத்து கொடுத்த இறைவனை என்னவென்று துதிப்பது — ? அதனால் மாலன் போன்றோர் கூறுவதில் வியப்பு ஒன்றும் இல்லையல்லவா … ?

  5. புது வசந்தம் சொல்கிறார்:

    தனக்கென வாழாத தன்னிகரில்லா மனிதன்,வாரியார் வார்த்தைகளில் “பொன் மனச் செல்வன்”.

    • today.and.me சொல்கிறார்:

      நல்லவேளை வாரியாரின் வார்த்தைகள் என்று சொல்லிவிட்டீர்கள்.

      இல்லையென்றால், இந்தப் பட்டத்தை எனது நண்பருக்கு நான்தான் அளித்தேன் என்று கிளம்புவார் நான் நீ நாம் என்ற கருத்துகளைக் கொள்ளையடித்த முக.

  6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    பின்னூட்டம் எழுதிய நண்பர்கள் எல்லாருக்கும் சேர்த்து –

    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
    எம்.ஜி.ஆர். அவர்களை நன்கு புரிந்து கொண்ட உள்ளங்கள்
    இத்தனை பேர் இந்த வலைத்தளத்தில் இருப்பீர்கள் என்று
    நான் எதிர்பார்க்கவே இல்லை. இது எனக்கு மிகுந்த
    மகிழ்ச்சியை தருகிறது. இந்த இடுகைக்கும், பின்னூட்டங்களுக்கும்
    காரணமாக இருந்தவர்களுக்கு நன்றி.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

  7. selvarajan சொல்கிறார்:

    அய்யா …. ! // கருணாநிதியுடன் அழகிரி திடீர் சந்திப்பு… // இது சமிபத்திய செய்தி —-
    சென்ற பாராளுமன்ற தேர்தலின் போது ” அழகிரியை வை.கோ. சந்தித்து கட்டி தழுவி ஆதரவு கேட்டார் ” … { இது பற்றி தாங்களும் ஒரு இடுக்கை பதிவிட்டு இருந்திர்கள் — அது : — // ஸ்ரீலஸ்ரீ அழகிரி சுவாமிகள் -புதிய மதுரை மகா சந்நிதானம்…..!! (தேர்தல் வெற்றி ஸ்பெஷலிஸ்ட் ..)
    Posted on மார்ச் 27, 2014 by vimarisanam – kavirimainthan …..// } — அழகிரியும் தி.மு.க. வெறுப்பின் காரணமாக ஆதரவு அளித்தார் …. தற்போது விஜயகாந்தும் கை [ பழம் ] நழுவி வை.கோ.& கோ விடம் சேர்ந்து விட்டவுடன் — தலீவருக்கு பயம் வந்து — மீண்டும் அழகிரி — வைகோ சந்திப்பு ஏற்பட்டு ஆதரவு அந்த கூட்டணிக்கு என்று கூறி விட்டால் — தன் ” டப்பா ” மோசமாக டான்ஸ் ஆடிடும் என்பதால் — அழகிரியை அழைத்து — பாசம் காட்டி அணைத்துக்கொண்டு கண்ணீர் பனிக்க இருக்கும் இந்த நேரத்தில் — சில // அழகிரி எதிர்ப்பாளர்கள்
    கருணாநிதி எச்சரிக்கை // — என்று இன்றைய தினமலர் செய்தி — அதனால் அழகிரிக்கு எதிர்ப்பு என்பதை எப்படி ஏற்றுக்கொள்வார் — தானை தலீவரு … ? எல்லாமே ” நாடகம் தான் ” — பதவி வெறி படுத்தும் பாடு …. ? அப்படி தானே …. ?

  8. ravi சொல்கிறார்:

    his greatest achievement was providing full government support for the noon meal scheme, which benefitted many.. .. and firmly establishing 2 leaves symbol in tamilnadu as a major political force….

  9. A.K. Srinivasan சொல்கிறார்:

    Ever green Hero, so God prized the green leaves ( 2 leaves symbol) for him.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.