ப்யூஸ் போன அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்….

piyushgoyal

யோசித்துச் செயல்பட முடியாதவரை ப்யூஸ் போனவர்
என்று தானே சொல்வது வழக்கம்….?

மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் திருவாளர் பியூஷ் கோயல்,
நேற்றைய முன் தினம் வரம்பு மீறி பேசி இருப்பது,
மத்திய அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்
பேசக்கூடியதாக இல்லை…

இந்தியா மன்னர் ஆட்சியில் இல்லை.
மத்திய அரசு சொல்வதை எல்லாம் கேட்டு ஆட வேண்டிய
அவசியம் மாநில அரசுகளுக்கு இல்லை.

இந்திய அரசியல் சட்டம், மிகத்தெளிவாக, மத்திய, மாநில
அரசுகளுக்கிடையேயான அதிகாரங்களை பிரித்து
அளித்திருக்கிறது. அரசியல் சட்டத்தையும் மீறி, தனக்கு
எல்லா அதிகாரமும் இருப்பதாக நினைத்துக் கொண்டு
வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி இருக்கிறார்
திருவாளர் ப்யூஸ்…..

காரணம்……?
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக சார்பில்
பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள இருவரில்
ப்யூஸ்-உம் ஒருவர்.
மற்றொருவரான திருவாளர் ஜவடேகர்
பலமுறை ரகசிய விசிட்-கள் அடித்தும் எந்த கூட்டணியும்
கைகூடாத நிலையில்,

இப்போது அடுத்த ஆட்டக்காரராக (ப்ளேயராக), ப்யூஸ் களத்தில்
இறங்கி இருக்கிறார். நேற்று முன் தினம் இதற்கான
துவக்கமாக அவர் தேர்ந்தெடுத்தது delhi -Confederation
of Indian Industries மீட்டிங். டெல்லியில் இந்த
கூட்டத்தில் அவர் தமிழகத்தைப் பற்றி பேச வேண்டிய
அவசியம் என்ன …?

தேசிய அளவில், தமிழகத்தை செயல்படாத மாநிலம் என்று
சொல்லி பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை துவக்குகிறார்கள்…!

ப்யூஸ் பேச்சின் முழு விவரம் செய்தித்தாள்களில்
வந்திருக்கிறது….. எனவே, நான் இந்த இடுகைக்கு தொடர்புடைய
பகுதிகளை மட்டும் கீழே தருகிறேன்.

———–

“தமிழகத்தை பற்றி நிறைய விஷயங்களை பேசலாம்.
ஆனால், தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால்,
சிலவற்றை மட்டும் கூறுகிறேன்.

( தேர்தலை மனதில் வைத்துக் கொண்டே
இந்த உரையை ஆற்றுகிறார் என்பதற்கு
இதைவிட வேறு சாட்சியே தேவையில்லை….)

அந்த கட்சி எம்.பி.,க்கள், பார்லிமென்டில், வாயை திறப்பதில்லை.
அவர்கள் சென்னையில், தணிக்கை செய்து அனுப்பப்பட்ட
அறிக்கையை, அப்படியே வாசிக்கின்றனர்.

( தமிழக அதிமுக எம்.பி.க்கள் எப்படி உரை ஆற்றுகின்றனர்
என்பதைப்பற்றி இவர் இங்கு விமரிசனம் செய்ய வேண்டிய
அவசியம் என்ன…? இவருக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் ? )

தமிழக மின் துறை அமைச்சரிடம் பேசினேன்.
அவர், ‘நான் அம்மாவிடம் பேசிவிட்டு, திரும்ப அழைக்கிறேன்’
என்றார். ஆனால், பதில் வர வில்லை.

( அரசு எந்திரம் இருக்கவே இருக்கிறது. அதை ப்யூஸ்
பயன்படுத்தினாரா …? எரிசக்தி துறை செயலர், தமிழக அரசின்
தலைமைச்செயலருக்கு இதுகுறித்து இதுவரை எத்தனை கடிதம்
எழுதி இருக்கிறார்…? எந்தெந்த தேதிகளில் ? என்ன பதில் வந்தது ? அமைச்சர் அந்த புள்ளி விவரங்களை ஏன் தரவில்லை…? )

தெரிந்தவர், அறிந்தவர் மூலமாக சந்திக்க முயற்சித்த பின்,

( அரசு திட்டத்திற்கு, அரசு எந்திரத்தை பயன்படுத்தாமல்,
தெரிந்தவர் அறிந்தவர் வழியெல்லாம் அமைச்சர்
பயன்படுத்தியது ஏன்…? யார் அந்த தெரிந்தவர், அறிந்தவர்…?
அதையும் சொல்லி இருக்கலாமே … )

ஒரு வழியாக அவர் (ஜெ.,), என்னை தொலைபேசியில்
தொடர்பு கொண்டார்.

( ஆக, தமிழக முதலமைச்சர் தானாகவே மத்திய எரிசக்தித்துறை
அமைச்சரை தொலைபேசியில் அழைத்து தொடர்பு
கொண்டிருக்கிறார்…. தொடர்பு கொள்ளவே முடியவில்லை
என்கிற குற்றச்சாட்டு இங்கே என்ன ஆகிறது….? )

அப்போது, நாங்கள் பரிந்துரைத்த திட்டம் குறித்து விவாதிக்க,
ஒரு குழுவை அனுப்புவதாக தெரி வித்தார்.
அதன்படி, அந்த குழு வந்தது.

( முதலமைச்சர் விவாதித்திருக்கிறார். குழுவையும் அனுப்பி வைத்திருக்கிறார். அவர்களும் விவாதித்து விட்டுச்
சென்றிருக்கிறார்கள்… பிறகு என்ன குறை …..?)

மின் துறை சீர்திருத்தம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
ஆனால், இன்று வரை, ஒப்பந்தத்தில்,
தமிழகம் கையெழுத்து இடவில்லை.

( ஆக, ப்யூசின் குறை இவர் காட்டும் ஒப்பந்தத்தில் தமிழகம்
கையெழுத்து போடவில்லை – அதாவது ஒப்புதல் தரவில்லை….
இது தானே உண்மையான குறை….?
ஒப்பந்தத்தை ஏற்பதும், மறுப்பதும் அரசியல் சட்டம்
தமிழ்நாடு என்கிற மாநிலத்திற்கு தந்திருக்கும் உரிமை.
இவர் யார் அதை வற்புறுத்த….? )

ஆனால், தமிழகத்தில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான், இது சாத்தியமாகும் போல் உள்ளது”

( இங்கே வெளுக்கிறது இவரது சாயம்….. !!!
மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் பதவியில் இருந்துகொண்டு,
இவர் இதைக் கூறலாமா….? இவர் இத்தனை குற்றச்சாட்டுகளையும்
கூறியதன் பின்னணி -காரணம் என்ன என்பதை இந்த
கடைசி வார்த்தை நிரூபித்து விட்டதே….. )

ஒன்று திருவாளர் பியூஷ் கோயல் அவர்கள்
மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும்
அல்லது –
தமிழக பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்
பதவியிலிருந்து விலக்கப்பட வேண்டும்….

இரண்டிலும் இவர் நீடிக்க அனுமதிக்கப்பட்டால் –
சட்டமன்ற தேர்தல்களில் பாஜக தோற்று விட்டால் –
அந்த வெறுப்பிலேயே இவரது அமைச்சகத்தால்
தமிழகத்திற்கு பெரும் கேடு விளையும்.

பின் குறிப்பு –

தமிழக அரசிடமிருந்தோ,
அதிமுக பொறுப்பாளர்களிடமிருந்தோ
இது குறித்து விவரமான விளக்கங்களும்,
பதிலடியும் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.
இது என்னுடைய நோக்கில் உண்டாகும்
உடனடி re-action மட்டுமே.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

37 Responses to ப்யூஸ் போன அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்….

 1. Surya சொல்கிறார்:

  The issue raised by the central minister is that the TN minister was never responding, other than CM once responding (but then no response post that). If the state is not willing to sign the agreement, they should say “not interested” than keeping mum. The only way to get a response is to raise it doing election time, so that TN govt can respond. And don’t think the respective state minister (dummy) will respond even now. Of course, election time is used.

  This article is very much ADMK biased I think.

  • Tamilian சொல்கிறார்:

   The idea of BJP is to paint a picture of inaction by TN Government with incomplete statements and data. If they want to do that all papers must be placed on the table. Then what is central minister doing by doing a suggestio falsi? Mr. Goel’s idea is to fill in the blanks ourselves. He talked like P Chidambaram. So this posting speaks of the shortcomings. I agree with it though I may have some reservations against Jaya government.

   • Surya சொல்கிறார்:

    If 28 states can sign the agreement, how is that this can be an issue with the central government. I agree that the central minister did not give full evidence for this statement, but we should agree to the fact that the TN ministers do not have any power than waiting for CM’s nod. This resulting in growth issue on state level. And this is very bad example for a state government setup.

    • செஞ்சட்டைத் தோழன் சொல்கிறார்:

     ப்யூசுக்கு வக்காலத்து வாங்குபவர்களெ இதுக்கு பதில் சொல்லுங்கள்;

     …………….இந்த திட்டத்தின் கீழ் மின்வாரிய கடனை மாநில அரசுகளே ஏற்று கொள்ள வேண்டும் …மாநில அரசின் கடன் பத்திரங்கள் மூலம் கடனை அடைக்கவேண்டும் …விவசாய இலவச மின் வழங்குதல் கடுமை ஆகும் … UDAY திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணத்தை திருத்திக்கொள்ள (உயர்த்திக்கொள்ள ) முடியும் … உலக வங்கியின் அழுத்தம் காரணமாக இதை செய்ய துடிக்கிறான் …… ஏன் முதல்வரை பார்க்க வேண்டும் ? எரிசக்தி செயலரையும் தலைமை செயலைரையும் பார்த்தால் போதாதா ??

     அடிமை சாசனத்தில் கையெழத்து போட கட்டுமரமும் , …… இருக்கும் போது வாங்கடா

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப செஞ்சட்டைத் தோழன் –

      சில வார்த்தைகள் வரம்பு மீறி இருந்தபடியால் நீக்கி விட்டேன்.
      உங்கள் அடிப்படைக் கருத்து அப்படியே இருக்கிறது.

      நண்பர்களுக்கு,

      மத்திய அமைச்சர் பெருமையாக விவரித்திருக்கும் திட்டத்தைப்பற்றியும்,
      தமிழக அரசு ஏன் அதை இதுவரை ஏற்கவில்லை என்பதையும்
      புரிந்து கொள்ள கீழ்க்காணும் தகவல் உதவியாக இருக்கும்…

      சுருக்கமாகத் தந்திருக்கிறேன். தேவைப்பட்டால்
      பின்னர் இது குறித்து
      நாம் விரிவாக விவாதம் செய்யலாம்.
      எதையும், எப்போதும்
      கட்சிக் கண்ணோட்டத்துடனேயே பார்க்கும் நண்பர் சூர்யா
      போன்றவர்களுக்கு
      இப்போது காரணம் விளங்குமென்று நம்புகிறேன்….

      ———-
      At present there are 12 power distribution companies
      which have joined the Ujwal Discom Assurance Yojana (Uday).

      But, Tangedco, one of the discom which has
      highest accumulated losses,

      refused to join the scheme
      due to stringent conditions

      which includes revision of tariff every quarter.

      ————–

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப சூர்யா,

   அதிமுக வுக்கு ஆதரவாக எழுதுவது
   என்று நான் தீர்மானித்தால்,
   இன்னும் நிறைய points இருக்கின்றன.
   தமிழக பாஜகவின் ” தமிழ் வசை” உட்பட யாராலும்
   தற்காத்துக் கொள்ள முடியாத அளவிற்கு அதில்
   விஷயங்கள் உள்ளன.

   ஆனால், இந்த இடுகையை நான் எழுதியது முழுக்க முழுக்க
   “சுயமரியாதையுள்ள ஒரு தமிழனாக / இந்தியனாக ” த்தான்….!

   //The issue raised by the central minister is that
   the TN minister was never responding, //

   தமிழக முதல் அமைச்சர் தானே முன்வந்து தொலைபேசியில்
   மத்திய அமைச்சரை தொடர்பு கொண்டு பேசிய பிறகு,

   அதற்காகவென்றே ஒரு குழுவை டெல்லிக்கு அனுப்பி,
   விவரமாக விவாதித்த பிறகு –

   இப்போது இந்த குற்றச்சாட்டு
   எந்த லாபத்தைக் கருதி இது கூறப்படுகிறது …?
   அது எந்த விதத்தில் பொருந்தும் ..?

   // If the state is not willing to sign the
   agreement, they should say “not interested”
   than keeping mum.//

   ஏன் – உடனே பதிலைச் சொல்ல வேண்டும்….?
   அதில் மத்திய அமைச்சருக்கு என்ன லாபம் ?
   சிறிது காலம் கழித்து இந்த திட்டத்தை
   பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம்
   என்று மாநில அரசு நினைத்திருக்கலாமே…

   அது என்ன திட்டம்…?
   அதில் உள்ள சாதக பாதகமான அம்சங்கள் என்ன … ?
   இந்த விவரங்களை அமைச்சர் தெரிவிக்காமலே
   குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசுவது ஏன் …?

   அவர் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் என்பதால் தானே ..?

   தமிழக எம்.பி.க்கள் செயல்படும் முறையைப் பற்றி
   எந்த தகுதியில் இந்த அமைச்சர் விமரிசிக்கிறார்…. ?
   பாஜக எம்.பி.க்களை போல் இவர்களும் தறிகெட்டு ஆடி/உளறி,
   மதக் கலவரங்களையும், சாதிக்கலவரங்களையும்
   உண்டு பண்ண வேண்டும் என்கிறீர்களா ?

   பாஜக எம்.பி.க்களிடையே இல்லாத கட்டுப்பாடு,
   தமிழக எம்.பி.க்களிடையே இருக்கிறதே என்கிற ஆத்திரமா ?

   தமிழகத்தில் ஆட்சி மாறினால் தான்
   செயல்படும் அரசு உருவாகும் –
   என்று டெல்லியில் –
   Confederation of Indian Industries கூட்டத்தில்
   பேசினால் அதற்கு என்ன அர்த்தம் …?

   அது என்ன தமிழக பாஜக தேர்தல் கூட்டமா ?

   உடனே பதில் உடனே பதில் என்கிறீர்களே –
   தமிழக முதல்வர் கூடத்தான் –
   தமிழகத்தின் உடனடி தேவைகள் குறித்து,
   இதுவரை 87 plus கடிதங்கள் பிரதமருக்கு எழுதி இருக்கிறார்.
   ஒன்றுக்கு கூட இன்னமும் பதில் வரவில்லை…..

   ஏன் – பிரதமரும் முடியும் அல்லது முடியாது என்று
   சொல்ல வேண்டியது தானே …?
   ஏன் பதிலே சொல்லாமல் இழுத்தடிக்கிறார் …?
   பிரதமரை இதே போல் விமரிசிக்க உங்களுக்கு
   தோன்றாதது ஏன்….?

   எழுத வேண்டும் என்றால், இன்னும் எத்தனையோ
   இருக்கின்றன. அதை மற்ற பின்னூட்ட நண்பர்கள்
   பார்த்துக் கொள்வார்கள்……என்ற நம்பிக்கையுடன்
   நான் நிறுத்திக் கொள்கிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Surya சொல்கிறார்:

    >>> ஏன் – உடனே பதிலைச் சொல்ல வேண்டும்….?
    There is no information shared on timeline. With the way the issue was raised, I believe this was something going on for past several months. I am hoping TN govt’s response would bring some clarity.

    >>> அது என்ன திட்டம்…?
    >>> அதில் உள்ள சாதக பாதகமான அம்சங்கள் என்ன … ?
    Since the TN govt had enough discussion on this, this should be at least known to the TN govt authorities.

    >>> தமிழக முதல்வர் கூடத்தான் –
    >>> தமிழகத்தின் உடனடி தேவைகள் குறித்து,
    >>> இதுவரை 87 plus கடிதங்கள் பிரதமருக்கு எழுதி இருக்கிறார்.
    Valid. I think CM should just arrange to meet up the reporters (or through other means) and raise this as a major concern. We can expect at least a response from Modi’ govt when this is raised as an issue. If not, they will be bashed for sure. Letter sending is not just enough, but someone from TB govt needs to pick up a phone Or just go and meet. Today’s condition is CM will not do (ego) and ministers cannot do (no power).

    Though I raise the above concerns, if someone from TN govt (minister or CM) can smash the concerns raised by Piyush by giving a convincing response, I would be very glad to see it as a Tamilian.

 2. selvarajan சொல்கிறார்:

  // என்னாலும் முதல்வரை பார்க்க முடியலையே…. பொன். ராதாகிருஷ்ணன் By: Essaki Updated: Monday, March 28, 2016, 9:55 [IST]
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/i-can-t-see-jayalalitha-says-pon-radhakrishnan-249912.html …. // அங்கே — திருவாளர் பியூஷ் கோயல், இங்கே — பொன்.ராதாகிருஷ்ணன் — மற்றும் // பியுஷ் கோயலை முதல்வர் சந்திக்க மறுத்தது தமிழகத்திற்கு இழப்பு: தமிழிசை — தினமணியில் // முழு விவரம் தெரிந்தும் — தெரியாதது போல இவர்களின் இந்தஅறிக்கைகளினால் தமிழகத்தில் ” பா.ஜ.க. ” வெற்றி பெற்று விடுமா … ? தேர்தல் நேரத்தில் எப்படியாவது – எதையாவது பேசி ஜெயாவின் ஆட்சிக்கு கெட்டபெயர் ஏற்படுத்த முயலும் செயலா … ? // பியுஸ் கோயல் புகாருக்கு என்ன சொல்லப் போகிறார் ஜெ?… கருணாநிதி கேள்வி
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-questions-jayalalithaa-249900.html …// ஐந்து முறை முதல்வராய் இருந்தவர் இப்படி ஒரு அறிக்கை விடுகிறார் — இதையெல்லாம் விட : தொலைகாட்சி விவாதங்களில் கலந்து கொண்டு பேசும் மற்ற கட்சியினர் அனைவருமே ” பொது எதிரி ஜெயலலிதா ” என்று தினமும் கூறுவதும் — அவரை இந்த தேர்தலில் வீழ்த்துவதே நோக்கம் என்று கூறுவதும் — ஜெயாவின் மக்கள் ஆதரவை பார்த்தா — இல்லை வேறு என்ன காரணம் …. ?

  • ravi சொல்கிறார்:

   சார், ஒரே ஒரு சந்தேகம் .. .. நீங்கள் அதிமுக கட்சியில் ஏதாவது பதவியில் இருக்கிறீர்களா

   • ravi சொல்கிறார்:

    வீடி தேடி அப்புறம் ஆட்டோ வந்து விடபோகிறது , எனக்கு எதற்கு பொல்லாப்பு !!

    • selvarajan சொல்கிறார்:

     செய்தி தாள்களில் வந்த செய்திகளையும் — அன்றாடம் டி . வி . விவாதங்களில் நடப்பதையும் குறிப்பிட்டால் — // நீங்கள் அதிமுக கட்சியில் ஏதாவது பதவியில் இருக்கிறீர்களா // என்றும் — // வீடி தேடி அப்புறம் ஆட்டோ வந்து விடபோகிறது , எனக்கு எதற்கு பொல்லாப்பு !! // என்றும் நீங்கள் பதிவிட்டு உள்ளீர்கள் — இவ்வாறான கேடு – கெட்ட செயல்களை புரிய ” வேறு ஒரு கூட்டம் ” இருக்கிறது — அது எது என்று எல்லோருக்கும் தெரியும் …. நீங்கள் எனக்கு எந்தவித பதவி முத்திரையையும் குத்த வேண்டிய தேவை இல்லை … உங்களின் மறுமொழியை பாத்தவுடனே நீங்கள் யார் …. உங்களின் நிலைப்பாடு என்ன என்பது நன்கு புரிகிகிறது … சார் … உங்களுடைய எந்த மறுமொழியும் எனக்கு — தேவையில்லை …. !!!

 3. நெல்லைக்கு தமிழன் சொல்கிறார்:

  ப்யூஷ்கோயல் ஆழ்ந்த நித்திரையில் இருந்து விழித்துக்கொண்டிருக்கிறார், தன்னை தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு பாஜக இன்சார்ஜாக நியமித்திருப்பதால். ஜெவைக் குறை சொன்ன உடனே விளக்கம் கேட்கும் கருணாநிதி, திகார் ஜெயில் விசிட் மற்றும் மந்திரி பதவி பேரம் தவிர எதற்கு டெல்லி சென்றிருக்கிறார்? மீனவர் கைது, தமிழர் விடுதலை போன்ற அவசரக் கடிதங்களுக்கு பதிலளிக்காமல் சுற்றுப்பயணத்தில் பிஸியாக உள்ள மோடியே ஈஸியாகச் சந்திக்கும்போது இவர் சந்திக்க என்ன தடை? தேர்தல் நெருங்குகிற சென்ற ஆறுமாத்த்தில் அதிமுகவுடன் கூட்டு சேரும் எண்ணத்தில் சந்திக்க எண்ணினால் நிச்சயம் மறுக்கத்தான் செய்வார்கள் (ஒருவேளை உண்மையாயிருந்தால்). ஆனால் ஜெ கருணா மாதிரி தமிழக நலனை எந்தக் காரணம் கொண்டும் சொந்த லாபத்துக்கு காவு கொடுக்க மாட்டார். அது கெயில் ஆகட்டும் காவிரி ஆகட்டும் வால்மார்ட் ஆகட்டும்.

  இதில் எரிச்சல் வருவது ஏதோ ஜெ ஆட்சியில்தான் சாக்கடை தூர் வாராத பிரச்சனை எல்லாம் இருந்ததுபோல் எழுதுவது. இந்த ஆட்சியில் ரௌவுடிகள் தொல்லையில்லை. அடாவடி நில அபகரிப்பு இல்லை. வெறும்ன பாராட்டு மழையில் நனைய சூப்பர் ஸ்டார்களையும், கலைஞானிகளையும், தல, தளபதியையும் கழுத்தில் கத்தி வைக்காத குறையாக அழைத்துப் பொழுதன்னைக்கும் பாராட்டுக்கூட்டங்கள், கவர்ச்சி நடனங்கள் நடப்பதில்லை. இதற்காகவே ஜெ நலத்துடன் இன்னும் பத்தாண்டு இந்த ஆட்சி நடந்தால் தமிழகத்துக்கு நல்லது.

 4. CHANDRAA சொல்கிறார்:

  Today mr muralidar rao had also joined the issue
  he had branded jaya as unfit to be the C M
  Well bjp had just begun to accuse aiadmk because of
  political compulsions……
  All know well that the centre also never responds to the genuine problems that the tamilnadu has been facing now and then……
  jeya never complained so far in a bitter tone and never accused the bjp at the centre for the delay>>>>

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இடுகைக்கு சம்பந்தம் இல்லாமல்,
  வேண்டுமென்றே விதண்டாவாதமாக திரு.ரவி
  எழுதிய பின்னூட்டங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.

  காவிரிமைந்தன்

 6. mani சொல்கிறார்:

  BJP on its own cannot make inroads in Tamil nadu. Even when the so called Modi wave cannot
  do anything in Tamilnadu as AIADMK has won 37 seats in the last parliament elections. Frustrated
  that they cannot form alliances either with MDMK or their erstwhile partners of NDA they too
  have taken anti Jaya stand like all the political parties. State governments need not accept what
  ever that has been thrust upon them, they have got the right to accept or reject any proposals.
  This is strictly seen as an Election gimmick as the same minister had praised the TN government
  just 10 months ago in Parliament..

 7. selvarajan சொல்கிறார்:

  // 5 வது முறை தேசிய விருது வென்றார் இளையராஜா… தாரை தப்பட்டைக்காக விருது
  Read more at: http://tamil.filmibeat.com/awards/ilaiyaraaja-bags-national-award-5th-time-039466.html // …. அய்யா… திரு இளையராஜாவின் 1000 — மாவது ” ருத்ர தாண்டவம் ” பட்டையை கிளப்பிடிச்சா … வாழ்க … வாழ்க … அப்படி தானே … ?

 8. srinivasanmurugesan சொல்கிறார்:

  மிக சரியான பதிலடி

 9. thiruvengadam சொல்கிறார்:

  பியூஸ் போன மத்யஅமைச்சர் அனுகூலசத்ரு என்று கூறும் நிலையில் ஓ.பி.எஸ். க்கு உதவி. சமீபத்தில் பொதுதொடர்புகளில் டிஸ்கனெக்ட் ஆகியிருந்தவர் , மறுப்பு அறிக்கை கொடுக்க அனுமதிக்கப்பட்டதன் மூலம் பிரகாசம் பெறுகிறார்.

 10. LVISS சொல்கிறார்:

  During election time all these things are likely to be brought up –It has become a fashion to demand resignation for utterances made by any leader –You hear this day in and day out —Nobody is going to resign for trivial reasons –If ministers are to resign for expressing their views there wont be any minister in the states or the centre –I do not know whether the minister had in mind the UDAY scheme when he said this -15 states have joined this scheme —

 11. LVISS சொல்கிறார்:

  What is this UDAY SCHEME

  http://www.firstpost.com/business/govt-launches-uday-scheme-to-rescue-state-bankrupt-discoms-2497108.html
  The scheme is optional so the minister cannot force it on any state —-

 12. today.and.me சொல்கிறார்:

  நன்றி ஆ. நோபிள், முகநூலில்.
  ————–

  இன்றைக்கு குற்றச்சாட்டை அரசியல் ஆதாயத்திற்காக வீசும் பியூஸ் கோயல் கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரில் தான் சார்ந்திருக்கும் துறையின் சார்பில் திருச்சி சிவா அவர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்,

  இன்றைய தமிழக அரசு முதல்வர் அம்மா அவர்கள் தலைமையில் சீரிய மின் திட்டங்களை செயல்படுத்தி இன்றைக்கு தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாக இருக்கிறது. கர்நாடக அரசுக்கு உபரி மின் அளவை சுமார் 5 சதவீதம் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் கொடுக்க ஒப்புக் கொண்டு செயல்படுத்தி வருகிறார். அவர் ஒரு சிறந்த administrator என்று கூறியுள்ளார்.

  அம்மா என்று இரண்டு முறை பியூஸ் கோயல் பேசியது பாராளுமன்ற அவைக்குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.. இதற்கு இதுவரை பியூஸ் கோயல் மறுப்பு தெரிவிக்க இயலவில்லை. நேற்று கூட இதைப்பற்றி சென்னையில் பேட்டி அளித்த பாஜக தமிழக பார்வையாளர் முரளிதரராவிடம் ஒரு நிருபர் கேள்வி கேட்க முயலும் போது அவரால் பியூஸ் கோயல் பேசியதை மறுக்க முடியவில்லை..

  இதே பொன்னார் பிப்ரவரி 13 ம் தேதி சென்னை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் அவரின் ஆட்சியை பற்றி சுமார் நான்கே கால் நிமிடங்கள் பாராட்டு பத்திரத்தை மூச்சு விடாமல் வாசித்தார். சுமார் ஒரு மாதத்தில் நிலைப்பாடு மாறுகிறது என்றால் கூட்டணியில் சேர்க்காததின் வெளிப்பாடு என்று தான் அர்த்தம்..

  இன்றைக்கு பியூஸ் கோயல் பேசியது சரி என்று பொங்குகிறவர்கள் கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரில் தமிழக அரசை பற்றி பியூஸ் கோயல் பேசியதை ஒப்புக் கொண்டதாகதான் அர்த்தம்..
  ———————

 13. today.and.me சொல்கிறார்:

  நன்றி ஆ. நோபிள்
  —————————
  தன்னால் தமிழக முதல்வரை சந்திக்க இயலவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே தமிழகத்தில் மத்திய அரசால் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும் -பியூஸ் கோயல்

  எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற பழமொழிக்கேற்பதான் மாநில சுயாட்சி கொள்கையில் மாறுபட்ட உடன்பாடு உடைய கருத்தாகத்தான் இந்த அமைச்சரின் பேட்டியை காண முடிகிறது.

  2015 நவம்பர் மாதம் கான்பூரில் நடைபெற்ற மின் முதலீட்டாளர்கள் கருத்தரங்கில் இதே பியூஸ் கோயல் பேசியது, 2011 ல் தமிழக மின்சார வாரியத்திற்கு இருந்த கடன்தொகை 5,27567 கோடி. ஆனால் இன்றைய தேதியில் அந்த கடன் தொகை 76 000 கோடி. ஆகவே தமிழக அரசின் மின்துறை கொள்கையால் தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாக உருவெடுத்து வருகிறது என்று கூறியவர் கடன்தொகையை குறைக்க முயற்சி செய்த முதல்வரையும் பாராட்டி பேசி இருக்கிறார். இதே கருத்தை கடந்த பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இதை உறுதி செய்ததை பாராளுமன்ற குறிப்பில் இடம்பெற்று உள்ளது. ஒரு துறை மீது மத்திய நிதி அமைச்சர் தகவல்களை தெரிவிக்கிறார் என்றால் அந்த துறை சார்ந்த அமைச்சகத்தின் அறிக்கையின் அடிப்படையில் தானே.

  2015 ஆகஸ்ட் மாதம் 18 ம் தேதி இதே பியூஸ் கோயலிடம் மும்பை விமான நிலையத்தில் தி டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை நிருபர் மோடி வெளிநாட்டு பயணம் பற்றிய சர்ச்சை மீது கருத்தை கேட்டபோது கூறிய பதில், பிரதமர் என்பவர் தினமும் நாட்டு மக்களை தெருவில் போய் சந்தித்து கொண்டு இருந்தால் நாட்டை எப்படி வளர்ச்சி பாதைக்கு அழைத்து கொண்டு போக முடியும்? மக்களின் அனைத்து கோரிக்கை மனுக்களையும் அலுவலகத்தில் இருந்து பார்க்கிறார். அயல்நாட்டில் இருந்தால் இணையதளம் மூலம் பதில் அளிக்கிறார். பிரதமரால் வீட்டில் இருந்து கொண்டு நிர்வாகத்தை நடத்த கூடிய திறமை பெற்றவர். டீ விற்றவனுக்கே இவ்வளவு திறமை என்றால் தமிழக முதல்வருக்கு அதைவிட பன்மடங்கு திறமை இருக்கும் என்று பியூஸ் கோயல் அன்றைக்கே ஒப்புக் கொண்டு உள்ளார்.

  இதே தமிழக முதல்வரை பிரதமர் மோடி வீடு போய் சந்திக்கிறார். கடந்த ஆண்டில் மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு, பிரகாஷ் ஜவ்டேகர், பொன்னார் போன்றோர் சந்தித்து பேசினார்கள். அவர்கள் மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பற்றி தமிழக அரசின் புரோட்டோகால் மூலம் முதல்வரை சந்திக்கிறார்கள்.

  ஆனால் பியூஸ் கோயல் சந்திக்க நேரம் கேட்டது தன்னுடைய நண்பரின் நிறுவனம் சார்ந்த டெண்டரை கேட்டு பெறுவதற்கே தவிர மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைக்காக அல்ல. தமிழக அரசின் சார்பில் தென்மாவட்டத்தில் சோலார் ஸ்கிரிட் அமைக்கும் பணி சம்பந்தமாக கடந்த ஐனவரி மாதம் டெண்டர் இறுதி செய்யும் நேரத்தில் அந்த டெண்டர் தன்னுடைய பால்ய கால நண்பர் நிறுவனத்திற்கு தான் தரவேண்டும் என்று நெருக்கடி கொடுக்க அந்த டெண்டர் வேறு ஒரு நிறுவனத்திற்கு தமிழக அரசு கொடுக்கிறது. அந்நேரத்தில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் மத்திய பாஜக இணையமைச்சர் உறவினர் மூலம் தமிழக முதல்வரை தனிப்பட்ட முறையில் சந்திக்க நேரம் ஒதுக்கி கேட்கிறார். அனுமதி மறுக்கப்படுகிறது. நிர்வாக முறையில் தமிழக முதல்வர் அலுவலக புரோட்டோகால் மூலம் மற்றுமே சந்திக்க முடியும் என்று பதில் அளிக்கப்படுகிறது. பின்னரும் அது சம்பந்தமாக முதல்வரை சந்திக்க முயற்சித்து அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைகிறது.

  அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்கள் குறைந்தது ஒரு வருடத்தில் தான் பேசியதை நினைவில் வைத்துக் கொள்வது அவசியம் என்று தான் இதில் இருந்து புரிகிறது.

  ——————————

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப டுடேஅண்ட்மீ,

   நிறைய தகவல்களை திரட்டி தந்திருக்கிறீர்கள்.
   உங்கள் உழைப்பும், ஆர்வமும் மகிழ்ச்சியளிக்கிறது.
   இந்த வலைத்தளத்து நண்பர்களுக்கும்
   பல செய்திகள் கிடைக்கின்றன. நன்றி.

   பரபரப்பைத் தூண்டும் விதத்தில் தொலைக்காட்சிகளிலும்,
   வலைத்தளத்திலும் செய்திகளைப் பார்க்கும் நண்பர்களுக்கு
   பல சமயங்களில் –
   அதன் பின்னர் ஒளிந்திருக்கும் நிஜப் பின்னணி தெரிவதில்லை.

   முழுக்க முழுக்க சுயநலத்தையும், சொந்த கட்சியின் நலத்தையும் அடிப்படையாக வைத்து
   எத்தனை பெரிய அபாண்டங்கள் எல்லாம் சுமத்தப்படுகிறது
   என்பதற்கு இதெல்லாம் உதாரணங்கள்.
   உண்மைகளை வெளிக்கொண்டு வரும்
   உங்கள் முயற்சியை மனதார பாராட்டுகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 14. selvarajan சொல்கிறார்:

  // லோக்சபாவில் ஜெ.வை பாராட்டிய பியுஷ் கோயல் இப்போது குறை கூறுவது நாலாந்தர அரசியல்: நத்தம் விஸ்வநாதன்
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/natham-visiwanathan-condemns-union-power-ministers-250050.html ….// இதில் கடைசியாக // இந்த திட்டத்தில் பங்கு பெறவில்லை என குறை கூறும் எதிர்கட்சியினர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணங்கள் மாற்றியமைக்கப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கின்றனரா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினரை கேட்டுக் கொள்கிறேன்” என்று நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.// —- பதில் சொல்லுவார்களா …. ஓட்டு பொறுக்கிகள் … ? மொட்டையா ஜெயா அரசை குற்றம் கூறி — மக்களை குழப்புபவர்கள் — என்ன கூற போகிறார்கள் —? அமைதியா ” திருடக்னுக்கு தேள் கொட்டியது போல ” கப் -சிப் ஆகி விடுவார்கள் தானே ….. ?

 15. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  “தன்னால் தமிழக முதல்வரை சந்திக்க இயலவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே தமிழகத்தில் மத்திய அரசால் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும் -பியூஸ் கோயல்”

  பியூஸ் கோயல் சொல்வதை நாம் உண்மை என்று நம்பும் காலத்தை உடனே வரவழைப்பதற்கு பாஜக செய்யவேண்டியதெல்லாம் ஒரு சிறிய வேலைதான். அதற்கப்புறம் யாரும் (கா.மை ஜி முதற்கொண்டு) பியூஸ் கோயல் சொல்வதைச் சந்தேகப்பட மாட்டார்கள் (‘நான் உட்பட).

  உடனே, கறுப்புப் பணத்தை இந்தியாவிற்கு, அவர்கள் வாக்களித்தமாதிரிக் கொண்டுவந்து, எங்கள் ஒவ்வொருவருடைய வங்கிக்கணக்கிலும் 15 லட்ச ரூபாய் வரவு வைத்துவிடுங்கள் (ஒவ்வொரு வாக்காளர் கணக்கிலும் அல்லது கையிலும்). உடனே நாங்கள் எல்லோரும் சேர்ந்துகொண்டு ஆட்சிமாற்றம் ஏற்படுத்தித் தருகிறோம்.

 16. today.and.me சொல்கிறார்:

  Thanks Ravi Nag from FB

  _______________________

  WTH – 7 and Half questions to Piyush Goyal – பியூஷ் கோயலுக்கு ஏழரை கேள்விகள்

  1. மூன்று மாதம் முன் சந்திக்க வில்லை என்று தற்போது கூறுவது ஏன்?

  2. போன மாதம் கூட பிரதமர் வந்து கோயம்புத்தூரில் பேசும் போது தமிழக ஆட்சி குறைப்பாடை ஒரு வரி கூட பேசாதது ஏன்?

  3. நெய்வேலி நிலக்கரி நிறுவன 1300 தற்காலிக உறுப்பினர்களை பர்மெனெட் செய்ய சொல்லி சுப்ரிம் கோர்ட் தீர்பளித்தும் தாங்கள் அந்த துறை மந்திரியாய் இருந்து நிறைவேற்றாதது ஏன்?

  4. நெய்வேலி லிக்னைட் கார்ப்ரேஷன் என்ற ஒன்றை லிக்னைட் கார்ப்ரேஷன் லிட்டட் என்ற மாற்ற முனைந்த நீங்கள் அதை பற்றி அந்த மானிலத்தில் இயங்கும் அமைச்சர் அல்லது முதல்வரை கலந்து ஆலோசிக்காதது ஏன்?

  5. கூடங்குளம் மின் தொகுப்பு அனைத்தும் தமிழகத்துக்கே அல்லது கூடுதல் அலாட்மென்ட் கேட்டும் இன்னும் வரை மவுனிப்பது ஏன்?

  6. தமிழக முதல்வர்கள் சார்பில் வந்த தமிழ்க அமைச்சர்களை பிரதமர் இரு முறையும் சந்திக்காமல் சுஷ்மாவை பாருங்கள் என்று கூறியது ஏன்?

  7. இந்தியாவின் மொத்த நட்டமான மின்சார வாரிய கணக்கில் 25% தமிழ் நாடு மின்சார வாரியம் என்று தெரிந்தும் இன்று வரை அதற்க்கு நீங்கள் எடுத்த முயற்ச்சி – அதாவது ஒரு லட்சம் கோடி வரை நட்டம் வரும் என கனக்கிடப்படுகிறது (2016 முடிய).

  7 1/2. கடைசியாக நீங்கள் முதல்வர் சந்திக்கவில்லை அல்லது அவரை நெருங்க முடியவில்லை என கூறும் நீங்கள் அதானி, அம்பானி மற்றும் இன்னும் மூன்று மார்வாடீ குஜறாத்தி முதலாளிகளுக்கு இங்கு முன் நிலையம் தொடங்க டென்டர் கோரவில்லை என்பது தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும், அப்படியும் பெல் நிறுவனம் டென்டர் போட்டும் அதை கேன்சல் செய்து விட்டு இந்த முதலாளிமார்களுடன் திரும்பி சென்று விட்டு 90 நாள் கழித்து பேச வேண்டிய அவசியம் அதிலும் – கடைசியாக இதனால் தான் கூறுகிறேன் பாஜாக ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் நடக்கும் என்று தமிழ் நாட்டை அரசியல் காரணத்துக்காக ரேன்சம் ஆக்கும் நோக்கம் ஏன்?

  ___________________

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப டுடேஅண்ட்மீ,

   திருவாளர் “ப்யூஸ் கோயல்” தமிழ் நாட்டிற்கு வந்து
   செய்தியாளர்களை சந்திக்கும் நிகழ்வில்,
   நம் போன்றவர்களையும் அனுமதித்தால்
   நன்றாக இருக்கும்….. 🙂

   தமிழக செய்தியாளர்களுக்கு வேட்டை தான்…!!!

   ஆனால், திருவாளர் ” ஒளிந்து பார்த்த ஜவடேகர் ”
   அவர்களை விட்டு விட்டார்களே…
   அடுத்த ‘விசிட்’டிலாவது பார்த்துக் கொள்வார்களென்று
   நம்புவோம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 17. today.and.me சொல்கிறார்:

  ப்யூஸ் போன Fuse Go Yell 🙂

  தில்லா நின்னு பதில் சொல்ல வேண்டாமா?
  என்னையா இப்படி ஓடறாரு ?

  Courtesy: SS and BN.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பிரணமாதம்….!!!

   பொருத்தமானதை எடுத்துப் போட்டதற்காக
   மிக்க நன்றி நண்ப டுடேஅண்ட்மீ.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    பியூஸ் கோ யெல் அலுவலகத்தில் இருந்து தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்கப்படவே இல்லை….

    பாஜகவின் தேர்தல்கால பைத்தியக்காரத்தனங்களுக்கு,,,, வேறு ஏதாவது
    ( ஏமாற்றுத் )தொழில் செய்யப்போகலாம்..

    ——————–
    நன்றி நண்ப க. கண்ணன்.

    முதலமைச்சரை சந்திக்க முடியவில்லை என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேசியதில் உண்மை இல்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி காஞ்சிபுரத்தைசேர்ந்த ஒருவர் கேட்ட கேள்விக்கு பியூஸ் கோயலின் அலுவலகம் தமிழக முதல்வரை சந்திக்க மத்திய அமைச்சர் கோயல் நேரம் ஒதுக்கித்தர சொல்லி கடிதம் மூலமோ, தொலைபேசி மூலமோ கேட்கவில்லை என பதில் கொடுத்துள்ளது – நியூஸ் 7 தொலைக்காட்சி

    தேர்தல் நாடகத்திற்காக பாஜக வழக்கமாக நடத்தும் பொய் பித்தலாட்டம் இது.

    இந்த பொழப்புக்கு?
    ———————-

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.