திமுக, அதிமுக, தேமுதிக, பாமக கட்சிகளின் நன்கொடை வசூல் விவரங்கள்….!!!

voting

தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளின் நிதி நிலை,
நன்கொடை வசூல் ஆகியவை பற்றி கிடைத்த சில சுவையான
தகவல்கள் கீழே –


அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்கள் செலவுகளை,
பெரும்பாலும் நன்கொடை வசூல் மூலமாகவே சமாளிக்கின்றன
என்பது தெரிந்த விஷயமே.

தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெற்ற கட்சிகள், ஆண்டுதோறும்
தங்கள் கட்சியின் வரவுசெலவுகளை தணிக்கை செய்து,
அதன் விவரங்களை தேர்தல் கமிஷனுக்கு சமர்ப்பிக்க வேண்டும்
என்பது சட்டவிதி. நன்கொடை விவரங்களை சமர்ப்பிக்கும்போது,
20,000 ரூபாய்க்கு மேல் பெறப்படும் நன்கொடைகளைப் பற்றிய
விவரங்களில் மட்டும், கொடுப்பவரைப் பற்றிய தகவல்கள்
தெரிவித்தால் போதுமானது என்பதால் –

பெரும்பாலான வசூல், 20,000-க்கு கீழே என்றே கணக்கு
காட்டப்படுகிறது. ஆயிரம், ஐயாயிரம் – என்று கூப்பன் அச்சடித்து,
வசூல் செய்யப்படுவதாக சொல்லி, அப்படி சேரும் தொகையை
மொத்தமாக காட்டி விடுகின்றன.

அதன்படி, தேர்தல் கமிஷனால் வெளியிடப்பட்ட சில விவரங்கள்
நண்பர்களின் பார்வைக்காக கீழே தரப்படுகின்றன.

2010-11 தொடங்கி 2014-15 வரையிலான ஐந்து
நிதியாண்டுகளுக்கான
மொத்த விவரங்கள் இவை….

திமுக – நன்கொடை வசூல் விவரங்கள்
(above Rs.20,000/- only )

2013-14 Rs.78.79 கோடி
2012-13 Rs.25.76 கோடி
2011-12 Rs. 3.16 கோடி
2010-11 Rs. 4.86 கோடி
2009-10 Rs. 4.94 கோடி

மற்ற இனங்களையும் சேர்த்து
மொத்த வருமானம் – Rs. 158.52 கோடி.
————————

அதிமுக – நன்கொடை வசூல் விவரங்கள் –
(above Rs.20,000/- only )

2013-14 Rs. 1,03 கோடி
2012-13 (விவரம் இல்லை )
2011-12 Rs. 0.62 கோடி
2010-11 Rs. 2.52 கோடி
2009-10 Rs. 5.04 லட்சம்

மற்ற இனங்களையும் சேர்த்து
மொத்த வருமானம் – Rs.119.24 கோடி

————————-
தேமுதிக – நன்கொடை வசூல் விவரங்கள் –
(above Rs.20,000/- only )

2013-14 49 லட்சம்
2012-13 0.5 லட்சம்
2011-12 35.5 லட்சம்
(மற்ற விவரங்கள் இல்லை )

மற்ற இனங்களையும் சேர்த்து
மொத்த வருமானம் – 21.29 கோடி

—————————-

பா.ம.க. – நன்கொடை வசூல் விவரங்கள் –
(above Rs.20,000/- only )

2013-14 – 3.44 கோடி
(மற்ற விவரங்கள் இல்லை )

மற்ற இனங்களையும் சேர்த்து
மொத்த வருமானம் – 8.98 கோடி-

—————————-

இதில் முக்கியமாக சொல்லப்பட வேண்டிய விஷயம்.
கட்சிகளில், மாவட்ட செயலாளர்களின் பொறுப்பில்
நன்கொடை வசூல் செய்யப்படுகிறது. மொத்த வசூலும்
அவரது பெயரிலேயே வரவு வைக்கப்படுகிறது
(20,000- ரூபாய்க்கு குறைவாக நன்கொடை கொடுத்தவர்களின்
மொத்த தொகை என்று கூறப்பட்டு )

திமுக வில் இதில் ரெக்க்கார்டு ப்ரேக் செய்திருப்பவர் –
திருவண்ணாமலை மாவட்ட செயலரும்,
முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு –
இவர் வசூல் செய்த தொகை – Rs 7.12 crore.
( இப்போது – கல்வியரசர், சொந்தமாக பல கல்லூரிகள்
வைத்திருக்கிறார்…! அரசியலுக்கு வரும் முன்னர்
-பஸ் கண்டக்டராக, பஸ் சொந்தக்காராக,
அச்சக உரிமையாளராக என்றெல்லாம் அனுபவம் பெற்றவர்… )
அவர் தற்போது கட்சியில் மிகவும்
செல்வாக்குடன் உலவி வருவது
எப்படி என்பது நண்பர்களுக்கு இப்போது புரியலாம்….!!!!

இன்னும் ஒரு சுவையான தகவல் –

கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில்
வேட்பாளராக நின்று களத்தில் வெற்றி கண்ட கீழ்க்கண்ட
தலைவர்கள், தங்களின் தனிப்பட்ட தேர்தல் செலவாக
கணக்கு கொடுத்திருக்கும் தொகை –

திரு.எம்.கே.ஸ்டாலின் – கொளத்தூர் – Rs.3, 32,709-

செல்வி ஜெ.ஜெயலலிதா – ஸ்ரீரங்கம் – Rs.9,50,109-

திரு.எம்.கருணாநிதி – திருவாரூர் – Rs.4,47,615-

———————————————————

பின் குறிப்பு –

இந்த தகவல்கள் எல்லாம் தேர்தல் கமிஷனிடம்
சம்பந்தப்பட்ட கட்சிகளால் தரப்பட்டவை……!

அசலில், எவ்வளவு வசூல் / செலவு செய்யப்பட்டது என்பது,
ஆண்டவனுக்கும், பலனைப்பெற்ற மக்களுக்கும்
மட்டுமே தெரிந்திருக்கும்…!!!

மக்கள் எவ்வளவுக்கெவ்வளவு விழிப்புணர்வுடன்
இருக்கிறார்களோ – அவ்வளவுக்கவ்வளவு ஜனநாயக
நடைமுறைகள் நெறிப்படும்.

எது எப்படி இருந்தாலும் –
இறுதியில் ஜனநாயகம் வெற்றி பெறுவது என்பது
மக்கள் கையில் தான் இருக்கிறது.

100 சதவீதம் ஓட்டுப்பதிவை கிட்டத்தட்டவாவது
தொட்டுவிட அனைவரும் சேர்ந்து முயற்சிப்போம்…

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to திமுக, அதிமுக, தேமுதிக, பாமக கட்சிகளின் நன்கொடை வசூல் விவரங்கள்….!!!

 1. ravi சொல்கிறார்:

  100 கோடியெல்லாம் ஜுஜுபி .. ஒரு ரோடு காண்டிராக்டில் இதை விட அதிகம் அள்ளிவிடுவார்கள்.. மணல் ஒரு லோடு என்ன விலை, நாம் வாங்குவது என்ன விலை , அதற்கெல்லாம் முன், இந்த 100 கோடி எல்லாம் டிபன் செலவு தான் ..
  ——————————
  திரு.எம்.கே.ஸ்டாலின் – கொளத்தூர் – Rs.3, 32,709-

  செல்வி ஜெ.ஜெயலலிதா – ஸ்ரீரங்கம் – Rs.9,50,109-

  திரு.எம்.கருணாநிதி – திருவாரூர் – Rs.4,47,615-
  ———————————————————
  பாவம் , இவ்வளவு ஏழைகளா இவர்கள் !! என்ன கொடுமை ..

  • today.and.me சொல்கிறார்:

   இதிலே ஏழைகளா? என்ற கேள்வி ஏன்?

   • ravi சொல்கிறார்:

    பாவம் சார் . கட்சியில் கோடி ருபாய் இருந்தாலும் தேர்தல் செலவுக்கு பாருங்கள் .. 9 லட்சம், 5 லட்சம் .. செலவழிக்க வழி இல்லாதவர்கள்.. இவர்கள் ஏழைகள் தானே .. சரி,உங்களுக்காக வேண்டுமானால் பணக்கார ஏழைகள் என்று சொல்லலாம்.
    வஞ்ச புகழ்ச்சி அய்யா.. .
    சார், போன பதிவில் அந்த 5 லட்சம் கோடி நியூஸ் !! 2ஜி விட பெருசா இருக்கும் போல ..!! தகவல் எங்கு உள்ளது . pls !!

 2. today.and.me சொல்கிறார்:

  கா.மைஜி,
  நாம் தமிழர் விவரம் கிடைக்கும்?
  வரும் ஆண்டுகளில் இந்த 2016 சட்டமன்றத் தேர்தல் செலவுகளை ஒப்பிட்டுப்பார்க்க வசதியாக இருககும்.

 3. selvarajan சொல்கிறார்:

  // கிரானைட் வழக்கில் பி.ஆர்.பி விடுதலை; முன்னாள் கலெக்டர் அன்சுல் மிஸ்ரா மீது நடவடிக்கை – ஷாக் தீர்ப்பு
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/pr-palanisamy-acquits-granite-case-250057.html …. // இதுவும் ” நல்லாத்தான் ..?” இருக்கு … ?

  • ravi சொல்கிறார்:

   தஞ்சாவூர் கல்வெட்டில் எழுதி வைக்க வேண்டிய தீர்ப்பு..
   தீர்ப்பு கொடுத்தவருக்கு திருஷ்டி சுத்தி போடவேண்டும்

 4. CHANDRAA சொல்கிறார்:

  The verdict was amost expected…
  already a high court judge had pulled this judge of having not examined
  scrutinised all angles of this case
  soon the chief justice might take action against this melur judge…
  let us hope that better wisdom prevails……..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.