திரு. வி.காந்த்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் இதையும் சொல்லி விட்டால் தேவலை..

.

.

தேர்தல் நடந்து முடிந்து, முடிவுகள் வெளியாகி,
பெரும்பான்மை கட்சியின் எம்.எல்.ஏ.- க்கள்
கூடி, தங்கள் சட்டமன்ற கட்சித் தலைவரை தேர்ந்தெடுத்து,
அதன் பின்னர் தான் முதலமைச்சர் யாரென்பது அதிகாரபூர்வமாக
அறிவிக்கப்படும் என்று நாமெல்லாம் முட்டாள்தனமாக
நினைத்திருந்தோம்.

ஆனால், கோயம்பேடு வி.கா.அலுவலகத்திலேயே,
ஒருங்கிணைப்பாளர் திரு.வைகோ – அடுத்த முதலமைச்சர்
திரு.விஜய்காந்த் தான் என்று அறிவித்து விட்டார்.

சரி, பதவியேற்பு விவரங்கள் பற்றிய அறிவிப்பாவது
கவர்னர், முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரை
பதவியேற்கும்படி கேட்டுக் கொண்ட பிறகு தான் நடக்கும்
என்று நினைத்திருந்தோம்.

ஆனால் திருமதி பிரமலதா வி.கா. அவர்கள் இரண்டு நாட்கள் முன்னர் மதுரை கூட்டத்தில் பேசும்போது, “கேப்டன் விஜய்காந்த் மதுரையில் தான் அடுத்த முதலமைச்சராக பதவி ஏற்பார்” என்று அறிவித்து விட்டார்.

சரி – அமைச்சரவை, இலாகாக்கள் பொறுப்பு போன்ற
விவரங்களையாவது – புதிய முதலமைச்சர் அறிவிப்பாரென்று
நினைத்திருந்தோம் –

ஆனால், புதிய முதல் அமைச்சராக
தேர்ந்தெடுக்கப்படுவாரென்று
வைகோ அவர்களால் அறிவிக்கப்பட்டவரின் –

மைத்துனரே அதையும் நேற்று அறிவித்து விட்டார்….!

—————————–

( ஆதாரம் – நக்கீரன் செய்திகள் –

http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?
N=163209 )

விஜயகாந்த் முதல்வர் ; வைகோ துணை முதல்வர்

மக்கள் நலக்கூட்டணி வென்றால் ஆட்சியில் அமைச்சரவையில்
யார் யாருக்கு என்னென்ன இலாக்காக்கள் என கோவில்பட்டி
கூட்டத்தில் சுதீஷ் அறிவித்தார்.

முதல்வர் -விஜயகாந்த்
துணை முதல்வர் ; வைகோ,
நிதி அமைச்சர்; ஜி.ராமகிருஷ்ணன்
கல்வி அமைச்சர் ; திருமாவளவன்
உள்ளாட்சி; முத்தரசன்.

——————————–

இப்படி நாம் எதிர்பார்க்காமலே எல்லாம் நடக்கும்போது,
நாம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இதையும்

அறிவித்து விட்டார்கள் என்றால் – நாம் தேர்தலை மறந்து,
டென்ஷன் எதுவும் இல்லாமல் – நிம்மதியாக
வேறு வேலைகளைப் பார்க்கப் போகலாம்….

புதிய அரசில், புதிய அமைச்சரவையில் –
கீழ்க்கண்டவர்களுக்கு என்ன பொறுப்பு /இலாகாக்கள்
கிடைக்கப் போகின்றன என்பதையும்
அறிவித்து விட்டால் போதும்…..!
நாம் ………………………. போய்க்கொண்டே இருக்கலாம்…..!

Premalatha-Vijayakanth

lk sudheesh

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to திரு. வி.காந்த்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் இதையும் சொல்லி விட்டால் தேவலை..

 1. kalakarthik சொல்கிறார்:

  அக்காவும் தம்பியும் எந்த register office ல் தமிழ் நாட்டை (விலைக்கு வாங்கி ) தங்கள் பெயரில் பட்டா செய்து கொண்டனர்?
  இத்தனை நாள் தமிழ்நாடு எனக்கும் சொந்தம் என்று முட்டாள்தனமாக நினைத்து கொண்டிருந்திருக்கிறேன்.
  karhik amma
  kalakarhik

 2. Bhashyam.K. சொல்கிறார்:

  thiru.Kavirimainthan,

  I find a Junior CHO in you.
  Your articles are satirical and at the same time meaningful.
  May God bless you.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   திரு.பாஷ்யம் அவர்கட்கு,

   இந்த தளத்தில் முதல்முறையாக உங்கள் பின்னூட்டத்தை
   பார்க்கிறேன்…வருகைக்கு நன்றி.

   ஆசிரியர் “சோ” எவ்வளவோ உயரத்தில் இருப்பவர்.
   He is un-comparable. அவருடன் வேறு யாரையும்
   ஒப்பிடவே முடியாது.

   நான் மிகச்சிறிய, சாதாரண மனிதன்.
   ஆனால், சோ அவர்களைப் பார்த்து,
   தூரத்திலிருந்து ரசித்து, சில விஷயங்களை
   விரும்பி, ஏகலைவன் போல் ஏற்றுக் கொள்பவன்.

   ஆனால், ஒரு விஷயம். ஏகலைவன் தன் குருவிடம்
   சண்டை போட்டதில்லை. நான் பலமுறை சோ அவர்களைப்
   பற்றி இதே தளத்தில் விமரிசிக்கவும் செய்திருக்கிறேன்.
   ஆனால், அது ஒருவித உரிமையுடன்,
   அவர்மீது வைத்துள்ள அபிமானம் குறையாமலே
   போடும் சண்டை அது.

   Anyway – உங்களது நல்ல வார்த்தைகளுக்கும்,
   வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Ganpat சொல்கிறார்:

    காவிரிமைந்தன்=சோ மைனஸ் சோவிடம் இருக்கும் மூர்க்க குணம். ஆகவே காவிரிமைந்தன் is better than CHO

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     கண்பத்,

     இது என் மீது உங்களுக்கு இருக்கும் அன்பைக் காட்டுகிறது.
     மிகுந்த நன்றியுடன் உங்கள் அன்பை நான் தாங்குவேன்…

     ஆனால், நான் இந்த வார்த்தைகளுக்கு –
     நான் சற்றும் தகுதியானவன் இல்லை .

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

 3. CHANDRAA சொல்கிறார்:

  VaIKO RAMAKRISHNAN MUTHARASAN AND THIRUMA THOROUGHLY KNOW WELL
  THAT V.KANTH CAN NEVER BECOME C.M
  POOR V.KANTH BELIEVES THAT THE ABOVE FOUR REALLY BELIEVE THAT V.KANTH WOULD BE C.M
  ONE FEEL SORRY FOR V.KANTH

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப சந்திரா,

   இந்த விஷயத்தில் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  திருமாவையும், வைகோவையும் அரசியல் தலைவர்கள் என்று ஒத்துக்கொள்ள முடிகிறது. ஜி.ராமகிருஷ்ணனையும், நல்லக்கண்ணுவையும், தா பாவையும் (மகேந்திரன் போன்றோரையும்) ஒத்துக்கொள்ளலாம். முத்தரசன் மீது அத்தகைய மதிப்பு எழவில்லை. கட்சித் தலைவர் என்பதாலும், வாக்கு வங்கிக்குச் சொந்தக்காரர் என்பதாலும் விஜயகாந்தும் அரசியல் தலைவர் என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், தலையிருக்க வாலாடும் பிரேமலதாவையும், அல்லக்கை சதீஷையும் நினைக்கவே வெறுப்பாயிருக்கிறது.

  சதீஷ் இலாகாக்களைச் சொல்லும் நிலையில் வைகோ, திருமா, கம்யூனிஸ்ட் தலைவர்கள் கதி இப்படியாகிவிட்டதே. நிச்சயமாக இந்தக் கூட்டணி, தேர்தல் முடிவுக்குப்பின், மொத்தமாகப் பிளவுபடும். இதில் எனக்குக் கடுகளவும் சந்தேகம் இல்லை. ஸ்டாலின் எதிர்ப்பு என்ற ஒற்றை கோஷத்தில், ம.ந.கூ சேர்ந்திருப்பதுபோல் தெரிகிறது. எப்போது விஜயகாந்துடன் கூட்டணி வைத்தார்களோ, அப்போதே அவர்களின் கிரெடிபிளிட்டி பல்லிளிக்கிறது. அதுவும் வி.காந்த் பெரும்பாலும் கூட்டங்களில் பேசப்போவதில்லை. பிரேமலதா மட்டும் முழங்கப்போகிறார். (சத்தம் ரொம்ப ஜாஸ்தி).

  தமிழா… உன் பிறவிப் பயன், உனக்கு இத்தகைய தலைவர்களெல்லாம் கிட்டுகிறார்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நெல்லைத்தமிழன்,

   திருமதி வி.காந்த் பேசுவது பல சமயங்களில்
   எதிர்விளைவுகளையே உண்டு பண்ணுகிறது அல்லவா …?
   மக்கள் நல கூட்டணியின் மீது ஓரளவு பிடிப்பும்,
   நம்பிக்கையும் வைத்திருந்த
   நடுத்தர மக்களை இது எரிச்சல் கொள்ளச் செய்கிறது.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. ravi சொல்கிறார்:

  கனவு காணுங்கள் – திரு .கலாம் .. இதை சரியாக பின்பற்றும் தலைவர் இவரே ..

 6. SELVADURAI சொல்கிறார்:

  பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் திரு, அன்புமணி அவர்கள் மாற்றம் முன்னேற்றம் என்கின்ற கோஷத்துடன் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்கு சமூக வலைதளங்களில் பரவலான ஆதரவு பெருகி வருவதைக் காண்கின்றோம்.
  நடுநிலை வாக்காளர்களும் புதிய வாக்காளர்களும்தான் இந்த தேர்தலின் வெற்றியை தீர்மானிப்பவர்கள். இந்த நடுநிலை வாக்காளர்கள் பெரும்பாலும் படித்த மற்றும் விபரம் அறிந்தவர்களாகவே இருப்பார்கள். இவர்கள் ஒருபோதும் விஜயகாந்தை முதல்வராக ஏற்க மாட்டார்கள். சமீபத்தில் அவர் அடித்த கூத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. களத்தில் இருக்கும முதல்வர் வேட்பாளர்களில் படித்த மற்றும் விபரம் அறிந்த நடுநிலை வாக்காளர்களத் திறமையான தன் பரப்புரைகளால் கவரக்கூடியவர் பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் திரு அன்புமணி மட்டுமே. சமூக வலைதளங்களில் பரவலான ஆதரவு பெற்றுவரும் இவரின் பெருகிவரும் செல்வாக்கினை யாரும் புறக்கணிக்க முடியாது. பா.ஜ.க. வின் ஆர்.எஸ்.எஸ். பின்னணியை மறைத்து எப்படி மோடி முன்னிறுத்தப்பட்டாரோ அதைப்போன்றே இவரும் பா.ம.க. வின் சாதிக்கட்சி பிம்பத்தை மாற்ற முன்னிலைப் படுத்தப்படுகிறார். எது எப்படியாயினும் தமிழ் நாட்டின் தற்போதைய அவசியத்தேவை ஒரு படித்த விவரமான இளைஞர் ஒருவரின் தலைமையே. அ.தி.மு.க மற்றும் தி.மு.க. இவைகளுக்கு மாற்று வேண்டும் என்கின்ற கருத்து பரவலாக பேசப்படும் இத்தருணத்தில் இதற்குத் தகுதியான நபர் இவர் ஒருவர் மட்டுமே என்பது எனது கருத்து. இவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்ப்பதில் தவறேதும் இல்லை. ஒரு முறையேனும் மாறி வாய்ப்பளித்துக் காட்டினால்தான் ஆளுபவர்களுக்கு தவறு செய்யாதபடி நெஞ்சில் ஒரு பயம் இருக்கும்.

 7. NS RAMAN சொல்கிறார்:

  Let vijaykanth alliance get 20
  seats then they can dream about cabinet.

  Tamil Nadu people witenssed musical chair cabinet this time. Like cho’s Tuglak drama only and one CM rest all ministers without portfolio.

  We have to choose comedy or tragedy !!!!

 8. LVISS சொல்கிறார்:

  counting the chickens—-where are these leaders going to contest from —-they may change from their previous constituencies — the two persons can exrecise power without responsibility without being in the govt –we will have to wait and see whether they will contest at all —

 9. selvarajan சொல்கிறார்:

  // ” ஆபரேசன் ஸ்டாலின் ” ஆரம்பம்: தேமுதிக வடசென்னை மா.செ யுவராஜ் திமுகவில் இணைந்தார்
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmdk-north-chennai-district-secretary-jumps-dmk-250110.html … // இதுபற்றி பத்திரிக்கைகள் ” பெருமையாக ” எழுதுவது — ஊடகங்களில் விவாதிப்பது போன்ற செயலை எதில் சேர்க்க தகுந்தது …. ? —- ” விஜயகாந்த் — 2011 …. விஜயகாந்த் — 2016 ” சட்டமன்ற தேர்தல்களில் …. பெர்பார்மான்ஸ் ?

 10. CHANDRAA சொல்கிறார்:

  Regarding the comparison of cho ji with km ji i have to tell
  that whatever said against aiadmk Jaya and the party
  cho ji and kmji have the incredible uncanny knack of
  converting into aiadmks favour by their
  comments
  Historians know that how A C BRADLEY had supported
  the GREAT SHAKESPEARE
  in his writings…….

 11. mani சொல்கிறார்:

  ஜெயிக்க முடியாத கூட்டணிக்கு இப்போதே மந்திரி பதவிகளா ?
  தமிழக வாக்காளர்கள் முடிவு செய்யவேண்டியதை சுதீஷ்
  எப்படி முடிவு செய்யலாம்?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.