சாமியார்களும், சுஜாதா சாரும், நானும்…..!

poor1

சாமியார்களும், சுஜாதா சாரும், நானும்…..!

( தலைப்பு – ஒரு மலையாள சினிமா டைட்டிலின் பாதிப்பு …!)

கொஞ்ச நாட்களாகவே சாமியார்களைப் பற்றி ஒரு இடுகை
எழுத வேண்டும் என்றிருந்தேன். என்னுடைய கருத்தை
சொல்வதற்கு முன்னர், நீண்ட நாட்களுக்கு முன்னர் சுஜாதா
அவர்கள் எழுதியிருந்த ஒரு கட்டுரையையும் இதில்
சேர்க்க வேண்டுமென்று நினைத்திருந்தேன்.

இப்போது தான் அது கிடைத்தது.

ஒரு கேள்வி பதில் வடிவில் “சாமியார்கள்” குறித்து சுஜாதா
தன் கருத்தைக் கூறி இருந்தார். முதலில் அவரது கருத்து –

————

கேள்வி : ரமண மகரிஷி, ராமகிருஷ்ணர், சத்யசாயி பாபா,
ஓஷோ, மாதா அமிர்தானந்தமயி என்று எந்த ஆன்மீக
அமைப்பை எடுத்துக்கொண்டாலும் உலகெங்கும் கிளைகள்.
படிக்காத மற்றும் படித்த டாக்டர்கள், இஞ்சினீயர்கள்,
வெளிநாட்டவர்கள் போன்ற லட்ச கணக்கான மக்கள் கூட்டம்.
இதென்ன… மாஸ் ஹிஸ்டீரியாவா அல்லது
மாஸ் ஹிப்னாடிஸமா?

பதில்: இவை அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது
Domino effect என்ற சங்கதி அருகருகே இருக்கும்
டாமினோக்களில் ஒன்றை தள்ளிவிட்டால் மற்றது தொடர்ந்து
விழுமே… சைக்கிள் ஸ்டாண்டில் கூட பார்த்திருப்பீர்கள்.
அந்த வகைதான் இந்த இயக்கங்கள் பிரபலமடைவதும்!
யாரோ ஒருத்தர் தனக்கு நிகழ்ந்த நல்லதைச்சொல்ல,
அவர் மற்றொருவருக்குச் சொல்ல… மெள்ள மெள்ள
அது தேச அளவுக்கு ஏன், உலகளவுக்கு விரிகிறது.

இவற்றின் ஆதாரமான இயக்கு சக்தி மனிதன்.
என்னதான் இஞ்சினீயரோ, டாக்டரோ, வெளி நாடோ, உள் நாடோ,
தன் பிறப்பு ‍ இறப்பைப் பற்றி தெளிவில்லாமல் இருப்பதும் –

மரணத்துக்குப் பின் என்ன? என்கிற கேள்வி ‍ பதில்
அளிக்காமலேயே இருப்பதும்தான். இந்த uncertainity –
நிச்சயமின்மை அவனை இம்சிக்கிறது. ஏதாவது ஆணியில்
தன் நம்பிக்கையை மாட்டிவைக்க விரும்புகிறான்.
முழுக்க முழுக்க பகுத்தறிவு வாதமும் ஏன் ஏன் என்கிற
முடிவில்லாத கேள்விகளும் அவனுக்கு பிடிக்கவில்லை.
ஓர் எல்லைக்கு பிறகு, கேள்வி கேட்காமல் நம்பவே
விரும்புகிறான். அந்த எல்லை ஆளுக்கு ஆள் மாறுபடும்.
ஓர் எளிய மனதுக்கு தெருக்கோடி பிள்ளையாரில் துவங்கி,
அண்ட சராசரங்களையும் பிரபஞ்ச விசைகளையும் ஆராய்ந்த

ஐன்ஸ்டைனுக்கு இறுதியில் God என்ற ஓர் எளிய வார்த்தை
தேவைப்பட்டிருக்கிறது. ஸ்டீபன் ஹாக்கின் போன்றவர்கள் கூட
Determinism பற்றி பேசும் போது. ஆரம்ப கணத்தில்
ஓர் எல்லையற்ற சக்தியைச் சொல்ல வேண்டியிருந்தது.

தெருக்கோடி பிள்ளையாரா இல்லை க்வாண்டம்
இயற்பியலா இடையில் எத்தனையோ… மகான்கள்.
எல்லோருக்கும் பகுத்தறிவுக்கான எல்லை உண்டு.

என்னைப் பொறுத்தவரை இந்த நம்பிக்கைகளால்
நல்லது நிகழும்வரை போனால் போகிறது நம்பிவிட்டுப்
போகட்டும் என்று விட்டு விட வேண்டியதுதான்.

————-

நான் இதை வேறு கோணத்தில் பார்க்கிறேன்.

இவர்களை மூன்று விதங்களில் பார்க்கலாம்.

ரமண மகரிஷி, காஞ்சி முனிவர் போன்றவர்களை எல்லாம்
இந்த சாமியார்களுடன் சேர்த்து பட்டியல் போடுவது தவறு.
அவர்கள் முழுக்க முழுக்க ஆன்மிகவாதிகள். மனிதர்களின்
மனதில் உள்ள ஆசா பாசங்களை போக்கி, தூய வாழ்வு
வாழ்ந்து – பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்த முயற்சித்த
பெரியவர்கள் – நிஜமாகவே – சகலத்தையும் துறந்த சந்நியாசிகள்.

ராமகிருஷ்ணர் முற்றிலும் பக்தி மார்க்கத்தில் மூழ்கியவர்.

ஆனால், அவரது சீடரான விவேகானந்தரோ,
ஆன்மிக வளர்ச்சியை விட சமுதாய நலத்தை முக்கியமென்று
நினைத்தார்.

பல நூற்றாண்டுகளாக அடிமைத்தளையில் வீழ்ந்து
சிக்கி, சின்னாபின்னமாகி, சீரழிந்து கிடந்த இந்திய சமூகத்தை –
மீண்டும் அதன் உன்னத நிலைக்கு கொண்டு வர அரும்பாடு
பட்டவர். மக்கள் நல்ல கல்வியறிவும், உடல் ஆரோக்கியமும்
பெற வேண்டும் என்பதை முதல் நோக்கமாக கொண்டு
நாடு முழுவதும் தன் குருநாதர் ராமகிருஷ்ணரின் பெயரில்
கல்வி நிறுவனங்களையும், மருத்துவ மனைகளையும்
நிறுவினார். அந்த வழியில், ராமகிருஷ்ணா மடங்கள்
இன்றும் நாடெங்கும் கல்வித்துறையில்
அருமையான முறையில் தொண்டாற்றி வருகின்றன.
( தமிழ்நாட்டில், திருச்சி அருகே திருப்பராய்த்துறையில்
செயல்படும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் “குடில்” ஆற்றும்
அரும் பணிகள் பற்றி அண்மையில் இந்த இடுகையில்
ஒரு நண்பர் விவரித்ததை இங்கு நினைவில் கொள்ளலாம்…)

இந்த முதல் இரண்டு வகை “சாமியார்” களாலும்
சமுதாயத்தில் அளப்பரிய முன்னேற்றம் ஏற்படுகிறது.
மக்களிடையே மனவளர்ச்சியும், கல்வியறிவும், உடல்நலமும்
பல்வேறு சமூகத்தினரிடையே ஒற்றுமை உணர்வும் வளர
இவை உதவியிருக்கின்றன – இப்போதும் உதவுகின்றன.
இவை வரவேற்கப்பட, போற்றப்பட வேண்டிய விஷயம்….

——

ஆனால், தங்களது பேச்சாற்றல்,
பெரும் கூட்டத்தை திரட்டி தன்வசப்படுத்தும் ஆளுமை,
பெரிய அளவில் அடியார் கூட்டம் –

இவற்றைக் கொண்டு, தனித்தனியே கார்பொரேட்
நிறுவனங்களைப் போன்ற ஆசிரமங்களை உருவாக்கிக் கொண்டு
மேலும் மேலும் தங்கள் செல்வத்தையும், செல்வாக்கையும்
வளர்த்துக் கொள்வதை மட்டுமே முதல் நோக்கமாக
கொண்டு செயல்படும் “சாமியார்கள்” – மூன்றாம் வகையினர்.
இவர்களைக் கொண்டாடுவது – பெரும்பாலும் சமூகத்தின்
மேல்தட்டு மற்றும் நடுத்தட்டு மக்களே. அதற்கு காரணம்,
மேலே சுஜாதா அவர்கள் கூறியுள்ளவை தான்.

சுஜாதா அவர்கள் கூறியது போல் –

” இந்த நம்பிக்கைகளால் நல்லது நிகழும்வரை
போனால் போகிறது நம்பிவிட்டுப் போகட்டும்
என்று விட்டு விட வேண்டியதுதான் ” –

என்று சொல்லி விட்டு, கடந்து சென்று விட என் மனம்
ஒப்பவில்லை.

இத்தகைய சாமியார்களை எந்த விதத்திலும்,
நிஜமானவர்கள் என்று என்னால் ஏற்க முடியவில்லை.
தங்களது சுயநலத்திற்காக,
தங்களது சுயமுன்னேற்றத்திற்காக,
தங்களது செல்வத்தையும், செல்வாக்கையும்,
அடியார் திருக்கூட்டத்தையும் –
பெருக்கிக் கொள்வதற்காக,

இவர்கள் தங்களிடம் உள்ள “திறமை” களை ( skills )
பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
சுஜாதா அவர்கள் கூறியது போல் “பல்வேறு பலவீனங்களை
உடைய மக்களை ” இவர்கள் கவர்ந்திழுத்து தங்கள்
வசப்படுத்திக் கொள்கிறார்கள். “ஆன்மிகமா” “யோகாவா”
எதாக இருந்தாலும் சரி – இவர்களில் யாராவது
காசு வாங்காமல் மக்களுக்கு சேவை செய்கிறார்களா ?
எதையாவது கற்றுக் கொடுக்கிறார்களா ?

என்ன செய்தால் இவர்களை ஏற்றுக் கொள்ளலாம்….?
ஆறு மாதத்திற்கொரு தடவையாவது –

poor-1

poor-3

சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள் வாழும் சேரிகள்,
குடிசைகள், காலனிகள் இவற்றை ஒவ்வொன்றாக
தத்தெடுத்துக் கொண்டு, அங்கு குறைந்த பட்சம்
ஒரு மாதமாவது “முகாம்” இட்டு –
அந்த இடங்களை தூய்மைப்படுத்தி,
அந்த மக்களுக்கான அடிப்படை சுகாதார வசதிகளை
பாத்ரூம், நல்ல குடிதண்ணீர் வசதிகளை – ஏற்படுத்திக் கொடுத்து,
அங்குள்ள குழந்தைகளுக்கு, சிறுவர் சிறுமிகளுக்கு
அடிப்படைக் கல்விக்கான வசதிகளை உறுதிப்படுத்தி,
அவர்கள் உடல்நலனும், மனநலனும் மேம்பட
தேவையான “பயிற்சி” களையும் சொல்லிக் கொடுத்து விட்டு –

– பிறகு வழக்கம் போல் நடுத்தர, மேல்தட்டு மக்களிடம்
தங்களது வியாபாரத்தையும் தொடரட்டும் என்று –
விட்டு விடலாம்….!
( வேறு வழி …? )
பெரும்பான்மை மக்களின் கல்வி, சுகாதாரம், இருப்பிடம்,
வாழ்க்கை நிலை, மற்றும் அவர்களின் முன்னேற்றம் பற்றி
கவலை கொள்ளாத யாருக்கும் “சிறப்பு அந்தஸ்து ” கொடுக்க
மனம் மறுக்கிறதே…!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to சாமியார்களும், சுஜாதா சாரும், நானும்…..!

 1. CHANDRAA சொல்கிறார்:

  I had a personal shocking experience to see a very famous swamiji who was threatened abused by a goonda
  the swami was very verytired wanted to go inside or somewhere>>>
  thousands of the so called devottees were waiting to see this swamiji
  atleast five persons including me were terribly shocked
  to see this swamiji under A NOTORIOUS GANGS CONTROL..
  myself myfriends had just left the place
  after sometime these swamis are over powered
  and brought under the control of mafia gangs
  who swindle money more money…….more lands…..more
  trusts……………….

  • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

   பேரைச் சொல்லுங்கள் ஐயா.. தெரியாத விஷயத்தைத் தெரிந்துகொள்கிறோம்.

 2. CHANDRAA சொல்கிறார்:

  Pandit jawaharlal nehru had once remarked
  You cannot talk of god to a starving person
  You must give him food first………
  all these godmen should remember that……ji

 3. Antony சொல்கிறார்:

  I heard Sathya Sai Baba took care of water supply system of whole Chennai years ago. Not sure whether it is true or not. Can you confirm it KM?

  • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

   சத்ய சாயிபாபா, சமூகத்திற்காக நிறையப் பங்காற்றியிருக்கிறார். அது ஸ்பெஷாலிட்டி ஆசுபத்திரிகளாகட்டும் (இலவசம். No Priority. அவர் இருந்தவரை. ஏழை பணக்காரன் வித்தியாசம் கிடையாது. அதுவும்தவிர, அங்கு சேவை புரிய நிறைய சத்யசாயிபாபா மையங்களிலிருந்து வாலன்டியர்கள் periodicalஆகச் செல்வார்கள். அவர்களுக்கு பணி allocation எதுவேண்டுமானாலும் இருக்கும். ஆளைப் பொறுத்தல்ல. இது டாய்லட் சுத்தம் செய்யும் பணியாகவோ எது வேண்டுமானாலும் இருக்கும்), குடிதண்ணீர் வசதியாகட்டும், கல்வி வசதியாகட்டும், அவருடைய நிறுவனத்திலிருந்து முடிந்த அளவு செய்திருக்கிறார். இதுபோன்றே பலரும் செய்திருக்கலாம். (சென்னைக்கு கிருஷ்ணாவிலிருந்து தண்ணீர் வரும் குறிப்பிட்ட தூரத்தை அவர் அமைத்துக்கொடுத்தார்)

 4. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  “ரமண மகரிஷி, காஞ்சி முனிவர் போன்றவர்களை எல்லாம் இந்த சாமியார்களுடன் சேர்த்து பட்டியல் போடுவது தவறு. அவர்கள் முழுக்க முழுக்க ஆன்மிகவாதிகள். மனிதர்களின் மனதில் உள்ள ஆசா பாசங்களை போக்கி, தூய வாழ்வு வாழ்ந்து – பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்த முயற்சித்த பெரியவர்கள் – நிஜமாகவே – சகலத்தையும் துறந்த சந்நியாசிகள்” – இவர்கள்தான் என்று Qualify பண்ணுவது ஒவ்வொருவருடைய அபிப்ராயத்தைப் பொறுத்தது. சத்ய சாயிபாபா, மாதா அம்ருதானந்தமயீ போன்றவர்களையும் இந்தப் பட்டியலில் சேர்க்கலாம். எங்கு ஆன்மீகம் விற்கப்படுகிறதோ அங்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று பொருள். இதற்கு அந்த ஆன்மீக மையங்கள் (கார்ப்பொரேட் உங்கள் மொழியில்), தாங்கள் செய்யும் சமூகச் செயலுக்கு எங்கிருந்து பணத்தைப் புரட்டுவது என்ற கேள்வியும் எழும்.

  இத்தகையவர்களிடம் நாம் பெறும் அனுபவங்கள்தான் நம்முடைய Guiding factors. எப்போதும் நாம் நல்லனவற்றை மற்றும் எல்லாவித சாமியார்களிடமிருந்தோ ஆசிரமங்களிடமிருந்தோ எடுத்துக்கொள்ளும் வரை நமக்குப் பிரச்சனையில்லை.

 5. ssk சொல்கிறார்:

  அடுத்த மனிதரை எய்த்து பிழைப்பது சாமியார் தொழில். .எல்லாம் ஆகமத்தில் உள்ளது என்று புளுகி கொள்ளலாம். ஆகமத்தை எப்படி எப்போது வேண்டுமானாலும் எழுதி கொள்ளலாம். அனுராதா ரமணன் என்ற எழுத்தாளர் காஞ்சி குருவின் பெருமைகளை உலகுக்கு சொன்னார். இதற்கு மேலும் அவரை குரு என்று கொண்டாடுபவர் எவ்வளவு மோசமான மனிதராக இருப்பார். ஏன் அவரை தள்ளி விட்டு வேறு தகுதியான மனிதரை குருவாக போட இயலாதா? பெரும்பாலான சாமியார்கள் சுக வாழ்வு ஆசாமிகளே. வாழும் கலையெல்லாம் அடுத்த மனிதரை எதோதோ காரணம் கூறி அவர்களின் நியாய வாழ்வை பறித்து சுக வாழ்வில் தொப்பை வளர்த்த ஆசாமிகளுக்கு மட்டுமே.

 6. selvarajan சொல்கிறார்:

  // ஆசைப்படு – அதை நிச்சயம் அடைந்து விடு !
  Posted on மார்ச் 30, 2013 by vimarisanam – kavirimainthan // என்கிற இடுகையையும் — அதிலேயே உள்ள — [ ஏப்ரல் 5 — 2010 –ல் வந்த ] ” 20,000 கோடி சொத்துக்கு அதிபதி ! இந்தியாவிலேயே பெரிய பணக்கார – சாமியார் ! ” இடுகையையும் படித்தால் இன்னும் ” சாமியார்களின் நிலை ” பற்றி நன்கு விளங்கும் … !!!

 7. gopalasamy சொல்கிறார்:

  It is anybody’s right to believe Anuradha Ramanan. If you want to believe you can hear this news also. Her family got citizenship of USA through some ” friend” working in a newspaper. She praised Kanchi seer in a public function few moths before that incident.

 8. gopalasamy சொல்கிறார்:

  “பெரும்பான்மை மக்களின் கல்வி, சுகாதாரம், இருப்பிடம்,
  வாழ்க்கை நிலை, மற்றும் அவர்களின் முன்னேற்றம் பற்றி
  கவலை கொள்ளாத யாருக்கும் “சிறப்பு அந்தஸ்து ” கொடுக்க
  மனம் மறுக்கிறதே”
  ABSOLUTELY TRUE. But when a saint used to visit harijan colonies, what happened to him?

 9. D. Chandramouli சொல்கிறார்:

  Dear KM, you used the right word for current day Gurujis – Corporate Samiyars. That is what they are!

 10. வெ.க.சந்திரசேகரன் சொல்கிறார்:

  உண்மையிலேயே உங்களின் நோக்கம் ஆன்மீகத்தின் பின் உ்ள்ள வியாபாரத்தை அம்பலபடுத்துவதென்றால் உங்களின் பட்டியலில் குருடனை நடக்கவைப்பவர்களும் முடவனை பார்க்க வைப்பவர்களும் ஏன் வரவில்லை. ஆயிரம் ருபாய் பணத்திற்கும் ஐந்து படி அரிசிக்கும் மத மாற்றும் தரகர்கள் ஏன் வரவில்லை. உங்கள் கருத்து படி இவர்கள் அனைவரும் உண்மையிலேயே அடிதட்டு மக்களின் ஏற்றத்திற்காக பாடுபடுகின்றனரா.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப சந்திரசேகரன்,

   நான் மதமாற்றத்தைப் பற்றி இந்த இடுகையில்
   எதையுமே எழுத முற்படவில்லை – எனவே நீங்கள்
   கூறுபவற்றைப்பற்றி எழுத வேண்டிய அவசியம்
   நேரவில்லை.

   என்னைப்பொருத்த வரையில் –

   – “எல்லா சமயங்களும் கடவுளை வழிபட
   ஏற்பட்டவையே. எல்லா சமயங்களும்
   ” கடவுள் ஒன்றே ” என்றே சொல்கின்றன.
   “ஒருவரேயான அந்தக் கடவுள்”
   எந்த சமயத்தின் மூலம் வழிபட்டாலும் அதை
   ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார்.
   எனவே –

   எவருமே தாங்கள் பிறந்த சமயத்தை
   விட்டு வேறோரு சமயத்தை தழுவ
   வேண்டியது இல்லை. –

   என்பதே என் கருத்து.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 11. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்ப johan paris,

  மன்னிக்கவும். தங்களது சொற்பிரயோகங்கள் மிகவும்
  கடுமையாக இருப்பதாக நான் நினைப்பதால்,
  அவற்றை விலக்கி விட்டேன்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • johan paris சொல்கிறார்:

   அன்பரே! நீங்கள் படித்த பின்பே விலக்கியிருப்பீர்கள் என நினைக்கிறேன். விலக்குவது உங்கள் உரிமை! இதில் மன்னிப்பு கேட்க ஏதுமில்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.