கலைஞர் கருணாநிதி குறித்து சிவாஜி பேசிய … ஒரு (ஆறு நிமிட) சுவையான வீடியோ …!!!

.

.

நடிகர் திலகம் சிவாஜி, திரைப்படத்தில் அல்லாமல்
தனி விழாவில் பேசியது, அரிதாகவே வீடியோவில்
கிடைக்கிறது. 1998-ல், கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக
இருந்த சமயத்தில், ( வழக்கம் போல் ” பாசத்தலைவனுக்கு “…!)
ஒரு பாராட்டு விழா நடைபெற்றது.

அந்த விழாவில் கலந்துகொண்டு சிவாஜி ஆற்றிய உரை –
இப்போது பார்க்கும்போது / கேட்கும்போது – எவ்வளவோ
நினைவுகளைக் கிளறுகிறது.

கலைஞரும், சிவாஜியும் திரைப்படத்தில் முதல் முதலாக
இணைந்தது “பராசக்தி”யில் தான். அதற்கு முன்பாகவே
சில திரைப்படங்களுக்கு கலைஞர்
வசனம் எழுதி இருந்தாலும் கூட,
பராசக்தியில் சிவாஜியின் உச்சரிப்பு காரணமாக –
படம் சூப்பர் ஹிட் ஆனதோடு, இருவரையுமே புகழின்
உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதன் பிறகு இருவரும்
இணைந்து சில படங்களைக் கொடுத்தனர்.
அந்த கால கட்டங்களில் – சிவாஜியும் திமுகவில் இருந்தார்.

அப்போதெல்லாம் நிறைய விவாதங்கள் நடக்கும்.
கலைஞரின் வசனம் காரணமாக சிவாஜி புகழ் பெற்றாரா …?
அல்லது சிவாஜியின் அற்புதமான உச்சரிப்பு காரணமாக
கலைஞரின் வசனத்தின் உயர்வு வெளியே தெரிந்ததா …?
என்கிற மாதிரி.

கலைஞரின் ஈகோ உச்சகட்டத்தில் இருந்தபோது –
தன் வசனம் காரணமாகவே உயர்ந்த சிவாஜி,
தனக்கிணையாக திமுகவில் புகழுடன் இருப்பது அவருக்கு
பிடிக்கவில்லை.

அந்த சமயத்தில் சிவாஜி திருப்பதி சென்று சாமி கும்பிட்டுவிட்டு
வந்தார். பகுத்தறிவாளர் கட்சியான திமுகவில் இருந்துகொண்டு
சிவாஜி திருப்பதி சென்றதை கண்டித்து திமுகவுக்குள்ளாகவே
ஒரு கூட்டம் “திருப்பதி கணேசா” என்று சிவாஜியை
தாக்க ஆரம்பித்தது. ( அதில் கலைஞரின் பங்கும் உண்டு
என்று சொல்லவும் வேண்டுமா…? ).

இதனால் வெறுப்படைந்த சிவாஜி திமுகவை விட்டு
விலகிச் சென்றார். பின்னர் அவர் காமராஜர் பால் பற்று
கொண்டு காங்கிரசில் இணைந்தது பின்னாள் வரலாறு.
பின்னாட்களில், ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும், பிரச்சார கூட்டங்களில் சிவாஜி, திமுகவை சாடுவதும்,
கலைஞர் உட்பட திமுகவினர் சிவாஜியை சாடுவதும்
தொடர்ந்து கொண்டிருந்தன.

இந்த பிணக்குகள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட,
பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது, இருவரும்
நட்புறவுடன் சகஜமாக பேசிக்கொண்டிருப்பது வழக்கம்.

இந்த வீடியோவை காணும்போது, ஓரளவு வயதான
நண்பர்களுக்கு, என்னைப்போலவே இந்த பழைய நினைவுகள்
எல்லாம் மீண்டும் வரலாம்……

இந்த நிகழ்ச்சியில் பேசும்போது, சிவாஜி கூறுகிறார்…

” நீ இன்னும் நீண்ட நாட்கள் வாழ வேண்டும்…
நண்பனே, என் வயதில் இரண்டை நீ எடுத்துக் கொள் –
அதற்கு மேலும் என்னால் கொடுக்க முடியாது –
ஏனெனில், அதுவரை நானே இருப்பேனோ –
இல்லையோ – என்று. ( உண்மையில் சிவாஜி, கலைஞரை
விட 7-8 வயது சிறியவர்…! )

இதைச் சொன்ன 3 வருடங்களில் சிவாஜியின் உயிர்
பிரிந்து விட்டது….!

இனி சிவாஜியின் உரை –

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to கலைஞர் கருணாநிதி குறித்து சிவாஜி பேசிய … ஒரு (ஆறு நிமிட) சுவையான வீடியோ …!!!

 1. D. Chandramouli சொல்கிறார்:

  Yes, this was one of the finest and emotion-packed speeches of Sivaji Ganesan. I adored Sivaji during his life time, and I still do. I was not only a great fan of Sivaji but considered him more than a family member. After seeing ‘Thillana Mohanambal’ in a theater a few decades back, only yesterday, I saw this iconic film again on youtube. I wonder if any one else could have brought Kothamangalam Subbu’s character Sikkil Shanmugasundaram to silver screen as Sivaji did. In one small scene, where Sivaji goes to his Guru Nagaiah for his blessings, the way Sivaji ties his angavasthiram around his waist speaks volumes for his acting ability. This movie must be surely digitized for posterity. Men may come and men may go. But, Sivaji would live forever in our hearts. Btw, as a young boy, I distinctly remember seeing Sivaji’s picture on Kalki’s cover extolling him for his generous contribution of Rs.1 lac for Kamaraj’s Mid-day Meals Scheme.

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நன்றி நண்ப சந்திரமௌலி,

  இன்றைய தலைமுறைக்கு
  முந்தைய தலைமுறையில் –
  சிவாஜியால் கவரப்படாத
  மனிதர்களே இருக்க முடியாது….
  நீங்களும், நானும் – இன்னும் எண்ணற்ற மற்றவர்களும்…!

  நல்ல வேளையாக, அவரது நினைவாக எண்ணற்ற
  திரைப்படங்களும், சில வீடியோ நிகழ்வுகளும் யூட்யூபில்
  பத்திரமாக இருக்கின்றன. அவ்வப்போது பார்த்து,
  நினைவுகொண்டு, அவர் புகழைச்சொல்லி மகிழ்வோம்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.