அசிங்கமான அரசியல் நிகழ்வுகள் – திருமதி பிரேமலதா வி.காந்த்தை சுயநலத்திற்காக முன் நிறுத்தும் வைகோ & கோ…..

vaiko-1

இன்று தமிழக அரசியல் மிகவும் அசிங்கமான, தரம் தாழ்ந்த ஒரு நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.
இதற்கு முக்கியமான காரணங்களாக
திருமதி வி.காந்தையும் திரு.வைகோவையும் தான்
சொல்ல வேண்டும்.

நான் என் கருத்துக்களை சொல்லும் முன்பு,
மூத்த பத்திரிக்கையாளர் திரு.R.மணி அவர்களின்
கட்டுரையிலிருந்து சில பகுதிகளை விமரிசனம் நண்பர்கள்
அவசியம் படிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.
எனவே அவற்றை கீழே தந்திருக்கிறேன் –

————————————–

இன்று திரும்பிய இடமெல்லாம் கேப்டன் விஜயகாந்த் அணியின்
சார்பில் பிரேமலதா தான் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்.
தேசிய முற்போக்கு திராவிடர் கழக மேடைகளில் முழங்கிக்

கொண்டிருக்கிறார். தேமுதிக வின் மகளிர் அணித் தலைவர்
என்ற முறையில் இந்த முன்னுரிமை ‘அண்ணியாருக்கு’ –
( இப்படித்தான் இவரை தேமுதிக தொண்டர்கள் அழைக்கிறார்கள் -)
கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்தால்
நீங்கள் இந்திய அரசியலின் அடிச்சுவடியும், குடும்ப அரசியிலின்
அடிப்படைக் கோட்பாடுகளும் கிஞ்சித்தும் அறியாதவர்கள்
என்று அர்த்தம். கேப்டனின் மனைவி என்ற அந்தஸ்து உள்ளதால் மட்டுமே இந்த முன்னுரிமை ‘அண்ணியாருக்கு’ தேமுதிக வில் தாரை வார்க்கப்பட்டிருக்கிறது.

கடந்த மார்ச் 23ம் தேதி தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி
உதயமானது. அன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,
இந்திய கம்யூனிஸ்ட் தமிழ் நாடு பொதுச் செயலாளர் முத்தரசன்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ் நாடு பொதுச் செயலாளர்
ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்
தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோருடன் சேர்ந்து
காமிராக்கள் முன்னின்று பொது மக்களுக்கு
அருள் பாலித்தார் விஜயகாந்த்.

சில நிமிடங்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன் பிறகு சுமார் ஒரு வார காலம் தேமுதிக சார்பில்
தனியாகவும் மற்றும் மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்தும்,
தமிழகம் முழுவதும் நடைபெற்ற எந்தவொரு கூட்டத்திலும்
விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை. மாறாக பிரேமலதாவோ
அல்லது விஜயகாந்த் மைத்துனரும், தேமுதிக வின் இளைஞர்
அணித் தலைவருமான சுதீஷோதான் கலந்து கொள்ளுகின்றனர்.

இன்று ஊர், ஊராகப் போய் தேமுதிக கூட்டங்களில் பேசிக்
கொண்டிருக்கிறார் பிரேமலதா. அவரது பேச்சு
ஆக்ரோஷமாகத்தான் இருக்கிறது. கொச்சையான மொழியில்தான்
அவர் பேசுகிறார். ஆனால் கோர்வையாகப் பேசுகிறார்.
மக்களுக்குப் புரியக் கூடிய மொழியில் பேசுகிறார்.
அடிக்கடி ஆங்கிலத்திலும் பேசுகிறார். தமிழ் நாட்டில் கடந்த
ஐம்பதாண்டுகளில் எந்த வளர்ச்சியும் இல்லையென்கிறார்.

தமிழ் நாடு காவல் துறைக்கே கேப்டன்தான் ரோல் மாடல்
என்றெல்லாம் சராமாரியாக, புளுகு மூட்டைகளை
அவிழ்த்து விட்டு தம்பட்டம் அடித்துக் கொள்ளுகிறார்.
தமிழ் நாட்டு மக்களை ரட்சிக்க வந்த புண்ணிய புருஷன்தான்
கேப்டன் என்றும் அவரது வாழ்க்கையே மக்களின் வாழ்க்கையை
உய்விக்க வந்த தவ வாழ்க்கைதான் என்றும் கூச்ச நாச்சமில்லாமல்
பேசுகிறார்.

கேப்டனை விட்டால் தமிழ் நாட்டிற்கு
வேறு நாதியில்லை என்ற தொனியில் பிரேமலதா பேசுவது
கருணாநிதியும், ஜெயலலிதா வும் ஏன் கேப்டனின் இன்றைய
நிலைய வித்வான்கள் குழுவின் தளகர்த்தரான புரட்சிப் புயல்
வைகோ வும் கூட பேசாத பேச்சுத்தான்.

பிரேமலதா வின் பேச்சு பெருமளவு எரிச்சல் தரும் வகையில்
இருந்தாலும், சிலருக்கு அதிலும் ஒரு விதமான ஈர்ப்பு
இருப்பதை மறுக்க முடியாது. அவர் ஜெயலலிதாவை
குறி வைத்து தாக்கும்போது அது மக்களால் கவனிக்கப்படுகிறது.

மக்கள் நலக் கூட்டணியிருந்தாலும், விஜயகாந்த்தான் இந்தக்
கூட்டணியின் தலைவர் என்பதை நிறுவவதற்கு அவர்
தயங்குவதே இல்லை. மேலும் முக்கிய பிரச்சனைகளில்
தங்களது கருத்துத் தான் இறுதியானது, வலுவானது
என்பதையும் ஒவ்வோர் சந்தர்ப்பத்திலும் அவர் நிறுவிக்
கொண்டிருக்கிறார். ‘இது கேப்டன் விஜயகாந்த் அணி’ கிடையாது, மாறாக மக்கள் நலக் கூட்டணிதான் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு சொன்ன போது,

‘இல்லை இது கேப்டன் விஜயகாந்த் அணிதான்.
அப்படிச் சொன்னால்தான் கிராமத்து மக்களுக்குப் புரியம்’
என்று நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல பதில் சொல்லுகிறார்
பிரேமலதா.

‘தேமுதிக கூட்டணிக்கு திமுக 500 கோடி பேரம் பேசியது’
என்று வைகோ சொன்ன போது, சில மணி நேரங்களிலேயே
‘இல்லை பேரம் எதுவும் பேசப்படவில்லை’ என்று பகிரங்கமாக
வைகோ வுக்கு பதிலடி கொடுக்கிறார் பிரேமலதா.

ஆகவே ஒவ்வோர் கட்டத்திலும் தன்னுடைய சொல்தான்
இறுதியானது என்ற செய்தியை உடனுக்குடன் ‘அண்ணியார்’
பதிவுப் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

பாஜக வுடன் தங்களுக்கு எந்த மனஸ்தாபமும் இல்லை
என்றும், கம்யூனிஸ்ட் இருப்பதால் பாஜக இந்தக் கூட்டணியில்
இடம் பெற முடியவில்லை என்றும், வேறு பிரச்சனை எதுவும்
தங்களுக்கு பாஜக வுடன் இல்லை என்றும் சொல்லுவதன் மூலம்
காவிக் கட்சியுடனான தங்களது பாலத்தை நிரந்தரமாக
உடையாமல் காப்பாற்றிக் கொள்ளுகிறார்.

மதச் சார்பின்மையைக் காப்பாற்றுவதற்காக தாங்கள் நடத்திக்
கொண்டிருக்கும் தர்ம யுத்தத்தில் தங்களுக்கு கிடைத்த ஐஎஸ்ஓ
முத்திரை பொறித்த தரச் சான்றிதழாக ‘பொது உடைமைத்
தங்கங்கள்’ இதனை கவ்விக் கொள்ளலாம்.

பிரேமலதா இன்று நன்றாக தன்னை தமிழக அரசியல் களத்தில்
நிலை நிறுத்திக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.
ஆங்கிலத்தில் இதனை “Political Positioning” என்று
சொல்லுவார்கள், அதாவது அரசியல் ரீதியாக தன்னுடைய
பாத்திரத்தை வரையறுத்துக் கொள்ளுவது.

ஜெயலலிதா மற்றும் கருணாநிதிக்கு எதிராக தன்னை மாற்றாக
முன்னிறுத்தவது. பிரேமலதா அவரது கணவரை முதலமைச்சர் வேட்பாளராக மக்கள் மன்றத்தில் முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் கேப்டன் இதுவரையில் களத்தில் இல்லை.

இது ஒரு வகையில் மறைமுகமாக தன்னுடைய இமேஜை
பிரேமலதா நன்கு திட்டமிட்டு, ஆங்கிலத்தில் சொன்னால்
‘focused’ ஆக, அதாவது குறிப்பாக வரையறுத்து உயர்த்திக்
கொள்ளும் வேலைதான். திரும்ப, திரும்ப கேப்டன் கேப்டன்
என்று பிரேமலதா சொன்னாலும், மக்கள் மன்றத்தில்
‘அண்ணியார்’ தான் களத்தில் நின்று கொண்டிருக்கிறார்.

இது கேப்டனை ஊடகங்களிடம் இருந்தும், மற்ற கட்சிகளிடம்
இருந்தும் காப்பாற்ற மநாகூ வும், தேமுதிக வும் வகுத்த
வியூகம்தான். ‘என்னைத் தாண்டித்தான் விஜயகாந்த்’ தை
எவரும் அணுக முடியும் என்கிறார் கூட்டணியின்
ஒருங்கிணைப்பாளர் வைகோ. இது ஊடகங்களிடம் இருந்து
கேப்டனை காப்பாற்றும் வார்த்தைகள்.

அதாவது ஊடகங்கள் கேப்டனை அணுகி ஏதாவது கேட்டு,
அதற்கு அவர் வழக்கமான தன்னுடைய பாணியில்,
‘நயத் தகு நாகரீக மொழியில்’ வார்த்தைகளை உதிர்த்தாலோ
அல்லது வேறு சில அதி நாகரீக உடல் மொழிகளில்
எதிர் வினை ஆற்றினாலோ வரும் சிக்கல்களைத்
தவிர்க்கத்தான் இந்த ஏற்பாடு. இது தேர்தல் காலம் பாருங்கள்,
அதனால்தான் இந்த முன்னெச்செரிக்கை.

இன்று முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்
களத்தில் இல்லை. அவர் எங்கேயிருக்கிறார் என்று
தெரியவில்லை. ‘கேப்டன் சிங்கப்பூர் போகவில்லை.
அவர் தேமுதிக அலுவலகத்தில் அமர்ந்து திட்டங்களை
வகுத்து வருகிறார். நான் இல்லாமல் கேப்டன் எங்கும்
போக மாட்டார்’ என்று திருவாய் மலர்ந்தருளுகிறார் பிரேமலதா.

விஜயகாந்த் பேசுவது புரியவில்லை என்று பரவலாக மக்கள்
உணருவது பற்றிய பிரேமலதா வின் கருத்து ஆணவத் தெறிப்பாக
இருக்கிறது. ‘எம்ஜிஆர் சுடப்பட்டார். அதன் பிறகு
அவர் பேசியது யாருக்காவது புரிந்ததா?
கேப்டன் பேசுவது புரியவில்லை என்று சொல்லுகிறீர்கள்….
என்னா புரியவில்லை… எனக்குப் புரியவில்லை.
கேப்டன் பேசுவது என்னா புரியவில்லை…. சொல்லுங்க …” என்று விஜயகாந்த்தை விமர்சிப்பவர்களை ஒண்டிக்கு ஒண்டி வா என்று அழைக்காத குறையாக சவால் விடுகிறார் பிரேமலதா.

கருணாநிதியின் பேச்சிலும், ஜெயலலிதா வின் பேச்சிலும்
இல்லாத ஒரு விதமான ஆணவத் தொனி பிரேமலதா பேச்சில்
இருக்கிறது. கருணாநிதி மண்ணிலிருந்து வந்தவர்.
அவரது பேச்சில் இந்தத் தொனி என்றைக்குமே இல்லாததில்
ஆச்சரியமில்லை.

ஆனால் ஜெயலலிதாவின் பேச்சிலும் கூட, 1982 ல் அவர்
அரசியிலுக்கு வந்த காலத்திலிருந்து இன்று வரையில்
இந்த ஆணவத் தொனி இருந்தது கிடையாது. ஜெயலலிதா வின்
நடவடிக்கைகளில் சற்றே தான்தோன்றித் தனம் இருக்கும்.
ஆனால் பொது வெளியில் அவரது பேச்சில் இந்த
ஆணவத் தொனி என்றும் இருந்தது கிடையாது.

விஜயகாந்த் இன்று களத்திலேயே இல்லை.
இனியும் களத்துக்கு வருவாரா, அல்லது கோயம்பேடு
அலுவலகத்திலேயே தேர்தல் வரை திட்டங்கள் வகுத்துக்
கொண்டிருப்பாரா தெரியவில்லை. தேமுதிக வினரை வழி
நடத்திக் கொண்டிருப்பவர் கமாண்டர் பிரேமலதா. தேமுதிக
இன்று முழுக்கவும் அவரது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

பிரேமலதாவின் மேடைப் பேச்சுக்களில் தென்படும்
அவரது உடல் மொழி அவரது அரசியல் கனவுகளின்,
எதிர்ப்பார்ப்புகளின் வெளிப்பாடாகவும் தான் இருக்கிறது.
பிரேமலதாவே தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகவும் கூட ஒரு கட்டத்தில் அவரது கட்சியாலும், மநாகூ வாலும்கூட
முன்னிறுத்தப் படலாம்.

தனி மனித வழிபாட்டிலும், துதி பாடலிலும்,
குடும்ப அரசியலிலும், கடந்த ஐம்பதாண்டு கால இந்திய
வரலாற்றில் புதிய சகாப்தத்தை படைத்துக் கொண்டிருக்கும்
தமிழகம் இன்று மற்றுமோர் சரித்திர சாதனைக்குத் தயாராகிக்
கொண்டிருக்கிறது.

————————————————

இந்த நிகழ்வுகளுக்கு யார் காரணம்…?
எது காரணம் …?
யார் ஊக்கப்படுத்துகிறார்கள்…?
இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்….?

தமிழ்நாட்டு அரசியலில் திடீரென்று
திருமதி பிரேமலதா வி.கா.
முன்னுக்கு வந்தது எப்படி …?
எத்தனை ஆண்டுகளாக அவர் அரசியலில் இருக்கிறார்…?
எத்தனை போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்…?
திருமதி பி.லதாவின் பின்னணி குறித்து மக்களுக்கு
எதாவது தெரியுமா …?
அவரது குறிக்கோள் – டார்கெட் என்ன …?

தான் இளைஞராக இருந்தபோது சில அதிரடியான படங்களில்
ஹீரோவாக நடித்ததன் மூலம் கிடைத்த பாப்புலாரிடியை
வைத்துக் கொண்டு, தனது திரை வாழ்க்கை ஏறக்குறைய
முடிவடந்த பிறகு, தனது எதிர்கால பிழைப்பிற்காக
அரசியல் இயக்கத்தை துவங்கினார் வி.கா.
இன்று அவரது ஆதரவாளர்கள் எனக்கூறப்படுவோர் யார்…?
சற்று யோசித்து பார்தால் உங்களுக்கே தெளிவாகப் புரியும்..

குடிப்பழக்கம் முற்றியதாலும், உட்கொண்ட போதை
மருந்துகளின் விளைவாகவும் ஹீரோ செயலற்றுப்
போகின்ற கட்டத்தில்,
தாங்கள், அரசியலில் போட்ட முதலை மீட்டெடுக்கவும்,
மேற்கொண்டு தொழிலை லாபகரமாகத் தொடரவும்-
உள்ளே நுழைகிறார் நமது கதாநாயகி.

அவருக்கு துணையாக ஒரு குடும்பப் பட்டாளம்.
” மச்சானை பார்த்துக்கொள்வதை ” தவிற வேறு எந்த
தொழிலும் இல்லாத தம்பி, படிப்பும் ஏறாமல், வேறு எந்த
தொழில் செய்யவும் லாயக்கில்லாத ஒரு மகன் –
சுயநலம் மிக்க ஒரு “அடியார்” திருக்கூட்டம்.

இந்த கூட்டத்தை அப்படியே விட்டிருந்தால் – தேர்தலில்
4-5 % ஓட்டுக்களை வைத்துக்கொண்டு ஒரு இடத்தில் கூட
ஜெயிக்க முடியாமல், கிட்டத்தட்ட இந்த தேர்தலுடன்
கடையை மூடிவிடக் கூடிய நிலையில் இருந்த நிலை…

ம.ந.கூ. – மக்களிடையே ஓரளவு வரவேற்பை பெறத்துவங்கி
யிருந்த காலத்தில், அது அப்படியே தொடர்ந்திருந்தால்,
ஆதரவு கூடி இருக்கலாம். ஜெயிக்கக்கூடிய அளவு
பலம் பெருகி இருக்கா விட்டால்கூட, அடுத்தடுத்த
தேர்தல்களிலாவது ஒரு நல்ல மாற்று அணியாக உருவாக
வாய்ப்பு இருந்தது.

ஆனால், திருவாளர் வைகோ,
தனது அளவு கடந்த சுயநலம் காரணமாக,

தனது அண்ட் கோ -வுக்கு ஆசை காட்டி,
வி.காந்தின் 5-6 சதவீத ஓட்டை எப்படியாவது
தங்களுடன் இணைத்துக் கொண்டால், கணிசமான
அளவிற்கு இடங்களை பெறலாம். தேர்தலுக்கு பிறகு,
ஒருவேளை தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டால், தங்களுக்கு
வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பில் –
வி.காந்தை முன் நிறுத்தி, சகலவித ஆபாசங்களுக்கும்
அடி கோலினார்.

கலைஞரின் குடும்ப அரசியலுக்கு மாற்று –
திருவாளர் விஜய்காந்தின் குடும்ப அரசியலா …?

ஜெ.யின் சர்வாதிகார அரசியலுக்கு மாற்று –
திருமதி பிரேமலதாவின் சர்வாதிகார பிதற்றலா …?

வெட்கம் கெட்டுப்போய் அலைகிறார் வைகோ.
நேற்று வி.காந்தை அவரது கோயம்பேடு அலுவலகத்தில்
பார்த்த பிறகு, உடனடியாக கதவு இழுத்து சாத்தப்பட்டு,
வைகோ குழுவினர் வெளியேற்றப்படுகின்றனர்.

vaiko-2

நூறடி சாலையில், படைபதைக்கிற உச்சி வெய்யிலில்,
பின்னால் பஸ்கள், லாரிகள், பற்பல வாகனங்கள் செல்ல,
அவற்றின் ஓசைகளுக்கிடையே, தூசியிலும், புழுதியிலும்
நின்று கொண்டு வைகோ தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு
பேட்டி கொடுக்கும் அவல நிலை.

வைகோவுக்கு சற்றும் உறைக்கவில்லை.
அவரே விரும்பி ஏற்றுக் கொண்டது தானே….!

அடுத்து வைகோ அண்ட் கோ-வும், திருமதி வி.காந்தும்
சேர்ந்து ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யும் காட்சிகள்
வரும்போது இன்னும் பல பரிதாப நிகழ்வுகளை பார்க்கலாம்.
திருவாளர் வைகோ, வி.கா. குடும்பத்திற்கு வெண்சாமரம்
வீசுவதையும் “கேப்டன்” டீவியில் பார்க்கலாம்.
(ஆண்டாள், அழகர் கல்லூரி வளாகத்திற்குள் – மற்ற
தொலைக்காட்சி சேனல்களை அனுமதிக்க மாட்டார்களே…! )

அசிங்கமாக இருக்கிறது…..
வி.காந்தின் குடும்ப அரசியல் மட்டுமல்ல….
அதை தாங்கிப் பிடித்து, தூக்கி முன் நிறுத்தும்
வைகோ அண்ட் கோ-வின் செயல்பாடுகளும் கூடத்தான்.

எப்படியாவது, வரவிருக்கும் தேர்தலில் ஒரு கூட்டணி
ஆட்சி அமைத்து, அதில் முக்கிய இடத்தில் அமர்ந்து விட
துடியாய்த் துடிக்கும் திருவாளர் வைகோ –
அதற்காக –

போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி,
சுயநினைவே அற்று,
பொது மேடையில் 10 நிமிடங்கள் கூட
நின்று, கோர்வையாக பேச முடியாத ஒருவரை –
தமிழ் நாட்டுக்கு முதல்வராக பரிந்துரை செய்யும்
அளவிற்கு துணிந்து விட்டார்.

ஒரு காலத்தில், ஹீரோவாகவும் தியாகியாகவும் தெரிந்த
திருவாளர் வைகோ, இன்று காமெடியனாகவும்,
வில்லனாகவும் தெரிவது மிகக் கொடுமை….

இன்று மட்டுமல்ல – எதிர்கால தமிழ்ச்சந்ததி கூட

இவரை –
மறக்காது….
மன்னிக்காது….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

20 Responses to அசிங்கமான அரசியல் நிகழ்வுகள் – திருமதி பிரேமலதா வி.காந்த்தை சுயநலத்திற்காக முன் நிறுத்தும் வைகோ & கோ…..

 1. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  That is called RAJA YOGAM Luck for Mr Vijayakanth.kaalathin kattayam,fate of Tamil nadu.

 2. avudaiappan சொல்கிறார்:

  d m k support article ….do not care

 3. R.Srinivasan சொல்கிறார்:

  It looks like a biased article against MDMK and PWF alliance.

 4. Sanmath AK சொல்கிறார்:

  KM Sir,

  I feel “the person u r talking abt” is pretty clear in what he is doing……He must have understood very well that he could not come to power or could take up any key posts both in state and central…… He is using this chance to damage the chances of a party which completely destroyed his political progression…… After this election, he would ensure to tarnish the image of the person for whom he was sent out……. This might start after the death of the bigger leader……. This is just my guess…..

 5. paamaranselvarajan சொல்கிறார்:

  அய்யா… ! ஆங்கிலத்தில் ஒரு ” விமரிசனம் ” தளம் ஒன்றை நீங்கள் விரைவில் ஆரம்பித்து விடுவது ஆங்கிலத்தில் பின்னூட்டம் இடுபவர்களுக்கு இன்னும் வசதியாக இருக்குமல்லவா …!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   🙂 🙂

   நண்ப செல்வராஜன்,

   வருத்தத்திற்கான ஸ்மைலி -ஐ போடுவது எப்படி
   என்று தெரியவில்லை…..!!!
   முடிந்தால் சொல்லிக் கொடுங்களேன்….

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    காமைஜி,

    😦

    ஒரு கோலன் (:) , ஒரு ஹைபன் (-) , ஒரு ஓப்பன் ப்ராக்கெட்( ( ), ஒரு ஸ்பேஸ் ( ) அல்லது எண்டர். :

    வருத்தப்படுவது ரொம்ப ஈஸி சார். 🙂

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்ப டுடேஅண்ட்மீ,

     மிக்க நன்றி, நண்பரே.

     இனி நான் சிரிக்கலாம் – 🙂 🙂

     வருத்தப்படலாம் – 😦 😦

     அழுதுகொண்டே சிரிக்கலாம் – 😦 😦 🙂 🙂

     சரிதானே…!!!

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

   • Antony சொல்கிறார்:

    KM,
    Do you mean that you feel sad about comments in English?
    If it is so, sorry for that. I am using mobile and don’t know an easier way to comment in Tamil. And I don’t like Thanglish too.. 😦

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்ப அந்தோனி,

     தமிழில் எழுத முடியாத சூழ்நிலையில் ஆங்கிலத்தில்
     எழுதுபவர்களை நான் அறிவேன் – அவர்களது
     பிரச்சினைகளையும் அறிவேன்.
     எனவே, எனது வருத்தம்
     அவர்களைக் குறித்து அல்ல…

     தமிழில் எழுத வழியிருந்தும், ஏற்கெனவே
     பல முறை தமிழில் எழுதியிருந்தும், சிலர் சற்றே சோம்பல்
     காரணமாக ஆங்கிலத்தில் எழுதுவதை
     தவிர்த்தால் மகிழ்ச்சியடைவேன்….

     அவ்வளவே …

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

 6. SELVADURAI MUTHUKANI சொல்கிறார்:

  நன்றி, திரு.காவிரி மைந்தன் அவர்களே!! சரியான நேரத்தில் எழுதப்பட்ட மிகச்சிறப்பான பதிவு. என்னுடைய உள்ளக்குமுறல்களை அப்படியே எழுத்தில் வடித்துவிட்டீர்கள். ஆனால் இது போய்ச்சேரவேண்டியவர்களுக்கு போய்ச்சேருமா? சமீபத்தில் வாட்சாப்பில் வந்த ஒரு வீடியோ கிளிப்பிங்கைப் பார்த்தேன். அதை எப்படி உள்ளீடு செய்வது எனத் தெரியவில்லை. அதில் ஒரு நபர் படித்த இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்கள் பலரிடம் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் பற்றி மிக எளிய கேள்விகள் கேட்கிறார். அவர்கள் ஒருவருக்கும் அது பற்றி ஒன்றுமே தெரியவில்லை. அதுபற்றி அவர்கள் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை. இவர்கள் எல்லாம் செய்தித்தாள்கள் வாசிக்கவோ அல்லது தொலைக்காட்சி நியுஸ் பார்க்கவோ மாட்டார்கள் போல் இருக்கிறது. இவ்வாறான விழிப்புணர்வே இல்லாத ஜென்மங்களை வைத்துக்கொண்டு நம் ஜனநாயகம் என்ன பாடுபடப் போகிறதோ தெரியவில்லை. சென்ற மாதம் நான் அமெரிக்காவில் இருந்த போது சாதாரண மக்கள் கூட அவர்களின் ஜனாதிபதி தேர்தலில் அன்றன்றைக்கு நடக்கும் நிகழ்வுகளில் என்ன பேசுகிறார்கள் என்ன நடக்கிறது என்பதில் கருத்தாகப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவ்வளவு ஒரு ஆர்வம், விழிப்புணர்வு!!!
  நீங்கள் ஆயிரம் பதிவுகள் போட்டாலும் நமது மக்களை அது சென்றடையப்போவதில்லை.

  • ஸ்ரீனிவாசன் சொல்கிறார்:

   பதிவுகள் மக்களைச் சென்றடைவது, இந்த பதிவுகளை படிக்கும் நம் கையில் தான் உள்ளது. ஏதோ ஒர் வகையில் மக்களை சென்றடையும், ஆனால் அந்த மக்களிடம் மிகப்பெரிய மாற்றம், ஒற்றுமை மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றை அதிகபட்சமாக எதிர்பார்ப்பதுதான் கேள்விக்குறி.

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப செல்வதுரை முத்துக்கனி.

   நீங்கள் மட்டும் பார்த்து ரசித்த
   நீங்கள் குறிப்பிட்டுள்ள புதியதலைமுறை க்ளிப்பிங், மற்ற நண்பர்களும் பார்த்து ரசிக்க.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்ப டுடேஅண்ட்மீ,

    இது நண்பர் செல்வதுரை முத்துக்கனி எழுதியிருப்பது –

    //அதில் ஒரு நபர் படித்த இளைஞர்கள், மாணவர்கள் மற்றும்
    புதிய தலைமுறை வாக்காளர்கள் பலரிடம் தமிழ்நாட்டு அரசியல்
    கட்சிகள் மற்றும் தலைவர்கள் பற்றி மிக எளிய கேள்விகள்
    கேட்கிறார். அவர்கள் ஒருவருக்கும் அது பற்றி ஒன்றுமே
    தெரியவில்லை. அதுபற்றி அவர்கள் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை. இவர்கள் எல்லாம் செய்தித்தாள்கள் வாசிக்கவோ
    அல்லது தொலைக்காட்சி நியுஸ் பார்க்கவோ மாட்டார்கள் போல் இருக்கிறது. //

    ஆனால், நீங்கள் பதிவிட்டிருக்கும் வீடியோ க்ளிப்பிங்-ல்
    இதற்கு நேர் மாறாக இருக்கிறதே…!!!

    இளைய சமூகம் விஜய்காந்த் அவர்களை மிகச்சரியாகவே
    புரிந்து கொண்டிருக்கிறதே…!!!

    நீங்கள் நண்பர் செல்வதுரைக்கு இதைத்தான் தெளிவாக்க
    விரும்பினீர்கள் என்று நினைக்கிறேன்.

    நண்பர் வேறு எதாவது க்ளிப்பிங்கை சொல்கிறாரோ என்னவோ..?
    அவர் சொல்கிற விதத்திலும் நிறைய இளைஞர்கள்
    இருக்கத்தானே செய்கிறார்கள்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 7. CHANDRAA சொல்கிறார்:

  The v>kanth alliance is helping the tamil nadu electorate in the following ways
  The chances of DMK forming the ministry is ruled out
  Another MGR TYPE ninaivagam in the stretch of that road
  may not spring in the next five years
  Terrorising incidents near arivalayam
  gopalapuram oliver road chittaranjan salai
  may not happen in the next five years
  gruesome murders of those who indulged in
  walking may not happen
  AND MUCH MORE KM JI

 8. selvarajan சொல்கிறார்:

  // வித்தியாசமான வைகோ ….
  Posted on மார்ச் 21, 2011 by vimarisanam – kavirimainthan // வை.கோ. — வை.கோ — வை.கோ — ? { மிகவும் சுவாரஸ்யமான ஒரு இடுக்கை } அந்த ” வித்தியாசமான ” வை.கோ. எங்கே ….? ” எப்படி இருந்த நான் — இப்படியாயிட்டேன் ” — ! // மனிதன் மாறிவிட்டான்
  ஓ..ஓ…….நிலைமாறினால் குணம் மாறுவான் பொய்
  நீதியும் நேர்மையும் பேசுவான் தினம்
  ஜாதியும் பேதமும் கூறுவான் அது
  வேதன் விதியென்றோதுவான் // … தற்போதைய நிகழ்கால வை. கோ — வருங்காலத்தில் …… ???

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   உண்மை தான் செல்வராஜன்.

   திரு.வைகோ அவர்களின் விஷயத்தில் நான்
   ஏமாந்து தான் போய் விட்டேன்.
   அவர் தான் மாறி விட்டாரா அல்லது
   நான் தான் (முன்பு ) அவரை தப்பாக எடைபோட்டிருந்தேனா –
   என்பதும் தெரியவில்லை.

   அதனால் தான் –

   // ஒரு காலத்தில், ஹீரோவாகவும் தியாகியாகவும் தெரிந்த
   திருவாளர் வைகோ, இன்று காமெடியனாகவும்,
   வில்லனாகவும் தெரிவது மிகக் கொடுமை….//

   என்று எழுதியிருந்தேன்.

   எப்படி இருந்தாலும், இன்று வில்லனாகவும்,
   காமெடியனாகவும் -( கிட்டத்தட்ட டி.எஸ்.பாலய்யா ரோல்….)
   இருப்பதென்னவோ உண்மை.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 9. srinivasanmurugesan சொல்கிறார்:

  திருமதி.வி.கா. அவர்கள் தான் வருங்கால முதல்வராக வருவதற்கு திட்டமிட்டு செயல் படுவதாக என்க்கு படுகின்றது.திரு்விஜயகாந் திரைப்படங்களில் நல்லவராகவும் வல்லவராகவும்(நிஜத்தில் இல்லை)நடித்ததை வைத்து ஆட்சியை பிடிக்கும் திட்டமிது.தங்கள் குடும்பத்தின் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் கும்பலால் ஒருகாலத்திலும் நல்லாட்சி தர இயலாது.எனது மற்றொரு சந்தேகம் திரு.விஜயகாந் வலுக்கட்டாயமாக தன்னிலை மறக்க வைக்கப்பட்டிருக்கிறாரா என சந்தேகம்.

 10. SELVADURAI சொல்கிறார்:

  நான் கூறிய வீடியோவுக்கான லிங்க்: https://youtu.be/J58yYbAfPHA

 11. Prakash சொல்கிறார்:

  இப்பொழுதுதான் வைகோ ஒரு முழுமையான அரசியல்வாதி ஆகி இருக்கிறார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.