கே.வி.கா.கூட்டணியின் பார்ட்-2 -ட்ரெயிலர் வெளியிடப்பட்டது….!!!

p.v.k.

-பார்ட்-1-ஐ விட பார்ட் 2- இன்னமும்
விருவிருப்பாகவும், ஆவலைத்தூண்டும் விதத்தில்
அமைந்திருக்கிறது…!!!

காஞ்சனா –1-ஐ விட காஞ்சனா-2 நன்றாக ஓடியது
நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். பேய்ப் படங்களில் இது
தான் வசதி. ஒரு பேய்ப்படம் ஓரளவு மக்களுக்கு
பழக்கமாகி விட்டால், அதே பேய்ப்படத்தின் பார்ட்-2-வை
இன்னமும் அதிக ஆவலோடு எதிர்பார்ப்பார்கள்.

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் கே.வி.கா. கூட்டணியின்
அடுத்த பகுதியாக, கே.வி.கா.கூ. பார்ட்-2 ட்ரெயிலர் நேற்று
சேலத்தில் திருமதி பிரேமலதா வி.கா. அவர்களால்
மக்களின் பலத்த கரகோஷங்களிக்கிடையே வெளியிடப்பட்டது.

கே.வி.கா கூட்டணி பார்ட்-1 படம் வெற்றிகரமாக
ஓடிக்கொண்டிருக்கையிலேயே, இந்தப் படத்தின்
பார்ட்-2 விற்கான ட்ரெயிலரை நேற்று வெளியிட்டிருக்கிறார்
திருமதி பி.வி.கா.

சேலத்தில் நடந்த கூட்டத்தில் –
திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததன்
மூலம் பார்ட்-2 பற்றிய அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.
வைகோ அண்ட் கோ வுடன் ஆலோசனைக்குப் பிறகு
வந்ததா அல்லது பத்திரிக்கைச் செய்தியை பார்த்த பிறகு தான்
அவர்களுக்கே தெரியுமா என்பது நமக்குத் தெரியவில்லை…

” ஸ்டாலின் அவர்களே, தொங்கு சட்டமன்றம்
அமையப்போகிறது. அப்போது ஆட்சி அமைக்க –
நீங்கள் கேப்டன் வீட்டு வாசலில் –
தொங்க வேண்டியிருக்கும் என்பதை
நினைவில் வைத்துக் கொண்டு பேசுங்கள் ” –

– ஸ்டாலினை எச்சரித்திருக்கிறார் திருமதி பி.வி.கா……!

இந்த ட்ரெயிலரில் இருந்து கே.வி.கா.கூ. கதை பற்றிய
சில முக்கிய திருப்பங்கள் தெரிய வருகின்றன.

– நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில்,
கேப்டன் விஜய்காந்த் கூட்டணிக்கு மெஜாரிடி கிடைக்காது
என்பது அவர்களுக்கே நன்றாக தெரிந்திருக்கிறது –

அந்த நிலையில் தான் –

முதல்மந்திரி- தருமர்,
துணை முதல் -வைகோ,
கல்வியமைச்சர்- திருமா என்றெல்லாம்
கதை விட்டிருக்கிறார்கள்….!!!

– இந்தப்படம் நன்றாக ஓடிமுடிந்த பிறகு, பார்ட்-2 பற்றிய
அறிவிப்பு வந்திருந்தால் பார்ட்-1 ஓரளவு நன்றாக
ஓடி முடிந்திருக்கும்…..

ஆனால், கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு, அவசரப்பட்டு –
பார்ட்-1 ஓடிக்கொண்டிருக்கும்போதே, பார்ட்-2 பற்றிய
முக்கிய அம்சங்களை அறிவித்து விட்டதால்,
மக்களுக்கு பார்ட்-1 கதையின் முடிவு தெரிந்து விட்டது.

எனவே, மக்கள் பார்ட்-2 வையே எதிர்நோக்கி நகர ஆரம்பித்து
விடுவார்களோ என்கிற ஐயம் தோன்றுகிறது.

அவசரப்பட்டு, பார்ட்-2 கதையை அறிவித்ததன் மூலம்
சில சஸ்பென்சான விஷயங்களை அவர்கள் இப்போதே
வெளியிட்டு விட்டது மாதிரி தெரிகிறது…..

– தேர்தல் முடிவில், அவர்கள் சொல்லிக்
கொண்டிருப்பது போல்,
கே.வி.கூட்டணி – பெரும்பான்மை பலம் பெறாது.

– திமுக, அதிமுக கூட்டணியும்
பெரும்பான்மை பலம் பெறாது என்று
பஞ்ச பாண்டவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

– ஆனால், அத்தகைய சூழ்நிலையில் கூட,
தங்களுக்கு அதிக சீட்டுகள் வருமென்று இவர்களுக்கே
தோன்றவில்லை.

– திமுகவுக்கு அதிக எண்ணிக்கையில்
(ஆனால் மெஜாரிடிக்கு குறைவாக )
சீட்டுகள் கிடைக்கும் என்றும்,
அப்போது ஆட்சி அமைக்க உதவி கோரி,
தங்களிடம் தான்
திமுக வரவேண்டும் என்றும்,

மீண்டும் நீங்கள் எங்களிடம் “பேரம்” பேச வேண்டிய நேரம்
வரும் …. ஜாக்ரதை….

என்று இந்த அவசர ட்ரெயிலரின் மூலம்
திருமதி பி.வி.கா. எச்சரிக்கை விட்டிருப்பதோடு –

தங்கள் குறி / லட்சியம் எல்லாமே
பார்ட்-2 தான் என்பதையும்
வெளிப்படுத்தி இருக்கிறார் என்று தோன்றுகிறது….!!!

———————–

இடையிலே கொஞ்சம் குறிப்பு –
இது காமெடி இடுகை என்று தீர்மானமாகி விட்டபடியால்,
இதற்கு மேலும் கொஞ்சம் தொடரலாமே…..

———————–

தேர்தல் முடிவில் திமுக கூட்டணிக்கு
எவ்வளவு சீட்டு வரும் ?
மெஜாரிடிக்கு எவ்வளவு குறைவாக இருக்கும் ?

குறைவாக இருக்கும் ஒவ்வொரு சீட்டுக்கும்
எந்த அளவு வரை “பேரம்” போகலாம் …?

தேமுதிக- வுக்கு எவ்வளவு தேறும் ?
ம.க.ந.கூட்டணிக்கு எவ்வளவு தேறும் ?
இரண்டும் ஒரே கூட்டணி தானே என்கிறீர்களா …?

அதான் அவர்களே சொல்லி விட்டார்களே –
இது வெறும் தொகுதி உடன்பாடு தான் –
தேர்தல் முடியும் வரை தான் இது செல்லும் என்று –
எனவே முடிவுகள் வரும்போது எல்லாரும் தனித்தனி தானே….!!!

அப்போது ஸ்டாலின் யாரை தன்வசம்
இழுத்துக் கொள்ள விரும்புவார்….?

வைகோ-வை – நோ சான்ஸ்….
திருமாவை …..50-50
கம்யூனிஸ்ட் தோழர்களை – ஓகே – ஓகே
வி.காந்தை …….?????????


மக்களைப் பொருத்த வரை –
இந்த தேர்தல் சினிமாவால்
பலன் எதுவும் விளையா விட்டாலும்,
கொஞ்சம் விருவிருப்பாகவும்,
சஸ்பென்ஸ், நகைச்சுவை கூடியும் இருந்தால் –

அதுவே பெரிய ஆறுதல் தானே.. ?….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to கே.வி.கா.கூட்டணியின் பார்ட்-2 -ட்ரெயிலர் வெளியிடப்பட்டது….!!!

 1. SELVADURAI சொல்கிறார்:

  விற்பனைக்கு இன்னும் குதிரையே ரெடி இல்லை- வரப்போவது குதிரையா இல்லை கழுதையா என்று கூட தெரியாது. ஆனால் பேரத்திற்கு வியாபாரி ரெடி. மக்கள் இளிச்சவாயர்களாக இருந்தால் முட்டாள் கூட பிசினஸ்மேன் தான். மக்கள் முட்டாள்கள் அல்ல. வைப்பார்கள் இவர்களைப்போன்ற வியாபாரிகளுக்கு சரியான ஆப்பு!!!!!

 2. KUMAR சொல்கிறார்:

  வைகோ பத்து நாள் முன்பாகவே சொன்னார்
  ” நாங்கள் ஒவ்வொரு தொகுதியிலும்
  ஒரு படை உண்டாக்கி இருக்கிறோம். ஓட்டுக்கு
  எவனாவது காசு கொடுக்க முயன்றால், அவன் கையை
  உடைத்து விட்டு, காசை பிடுங்கிக் கொள் என்று
  சொல்லி இருக்கிறோம். இந்த தடவை எவன் காசு
  கொடுக்கிறான் பார்ப்போம்.”
  இரண்டு நாட்கள் முன்னதாக ” சிறுதாவூரில் பத்து
  கண்டெயினர் நிறைய 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் வந்திருக்கின்றன. தேர்தல் நேரத்தில் செலவழிப்பதற்காக
  பாதாள அரைகளில் பதுக்கி வைக்கிறார்கள். தேர்தல் கமிஷன்
  ரெய்டு நடத்த வேண்டும்.” இந்த் கோமாளிக்கு விகடன்.காம்
  மற்றும் நக்கீரன் துணை போய் திரும்ப திரும்ப இதையே
  செல்லி வந்தன. யாரோ இரண்டு பேர் பைக்கில் போய் வீடியோ
  எடுத்து வந்து வேறு போட்டனர். காம்பவுண்டு உள்ளே
  2, 3 தேர்தல் பிரச்சார வேன் கள் அதிமுக விளம்பரத்துடன் நின்று கொண்டிருந்தன. அவ்வளவே.
  மறு நாள் விகடன் போடுகிறான். கண்டெயினர்கள்
  ஆந்திராவுக்கும் கேரளாவிர்கும் போய் விட்டன. கேழ்வவ்ரகில்
  நெய் வடிகிறதென்றால் கேட்பவனுக்கு எங்கே போயிற்று புத்தி ?
  வைகோ வைத்திருக்கிறாரே தொகுதிக்கு தொகுதி ஆள்படை.
  சேதி தெரிந்ததும் பங்களாவை சுற்றி ஆள் போட வேண்டியது
  தானே ? வேன் வெளியே வந்தால்
  நிறுத்தி பார்க்க வேண்டியது தானே ? ஏன் செய்யவில்லை ?
  வைகோ ஒரு புளுகுமூட்டை. வர வர அண்டப்புளுகு ஆகாசப்புளுகு
  விடுகிறார். மக்களை எல்லாம் மடையர்கள் என்றெ அவர்
  நினைத்துக் கொண்டிருக்கிறார். மக்கள் கற்றுக் கொடுப்பார்கள் பாடம்.
  மேலே திரு.செல்வதுரை சொன்னது போல்
  மக்கள் முட்டாள்கள் அல்ல. வைப்பார்கள் இவர்களைப்போன்ற வியாபாரிகளுக்கு சரியான ஆப்பு!!!!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   குமார்,

   கவலைப்படாதீர் நண்பரே.
   உமக்காகவே இன்றே இன்னொரு இடுகை
   வந்து கொண்டிருக்கிறது.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.