திரு.வைகோ கூறியதாக வந்திருக்கும் செய்தியும், புகைப்படங்களும்…..

.

.

கே.வி.கா.அணியின் ஒருங்கிணைப்பாளர்
அர்ச்சுனனாகப்பட்ட திரு.வைகோ வெளியிட்டுள்ள
செய்தி/மிரட்டல் அறிக்கை கீழே –

( இன்று முழுவதும் காமெடி தான் என்பது
நமக்கு விதிக்கப்பட்டுள்ள விதி போலும்…..! )

———–

தேர்தல் ஆணையம் பணப் பட்டுவாடாவைத் தடுத்து விடும்
என்று, தேமுதிக- மக்கள் நலக் கூட்டணித் தொண்டர்கள்
நம்பி ஏமாற மாட்டார்கள். உரியவிதத்தில் நாங்களே பணப்
பட்டுவாடாவைத் தடுப்போம்; எதையும் எதிர்கொள்வோம்.

மார்ச் 25 ஆம் தேதி முதல் தமிழகத்தின் மாநகரங்களில்
தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள பிரேமலதா
விஜயகாந்த் பொதுக்கூட்டங்களுக்குப் பல்லாயிரக்கணக்கான
மக்கள் திரண்டு வருவதால் கலக்கமும் ஆத்திரமும் கொண்ட
முதல் அமைச்சர் ஜெயலலிதா, வழக்கம்போலத் தனது
குண்டர் படையை சேலத்தில் ஏவி இருக்கின்றார்.

பிரேமலதா தங்கி இருந்த விடுதிக்குள் உருட்டுக்
கட்டைகளோடும், அதிமுக கொடிகளோடும் நுழைந்த
ஜெயலலிதா கட்சியின் காலிகள், தேமுதிகவையும், அதன்
தலைமையையும் எதிர்த்துக் கூச்சல் இட்டதோடு,
‘இனியும் விமர்சித்தால் நடப்பதே வேறு’ என எச்சரிக்கை
விடுத்து ரகளை செய்துள்ளனர்.

தேமுதிக கட்சியையும் தலைமையையும் உயிருக்கு மேலாக
நேசிக்கும் அக்கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும்
நினைத்து இருந்தால் இக்காலிகளை உதைத்து விரட்டியடித்து
இருக்க முடியும். ஆனால் மிகுந்த கண்ணியத்துடன் கட்டுப்பாடு
காத்துள்ளனர்.

காவல்துறையை நம்பி ஏமாற நாங்கள் தயாராக இல்லை.
எங்கள் ஐந்து கட்சிகளின் தொண்டர் படையே தமிழகத்தின்
காவல்படையாக மாறும். ஏற்படும் விபரீதங்களுக்கு
முதல் அமைச்சர் பொறுப்பு ஏற்க வேண்டும்.

தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்
என்ற முறையில் நேற்று சேலத்தில் அதிமுகவினர் நடத்திய
அராஜகத்திற்குப் பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதுடன்,
இனி இந்தச் செயல்களை ஏவி விட முதல் அமைச்சர்
நினைத்தால், வினையை விதைக்கின்றார்; வினையைத்தான்
அறுவடை செய்வார் என வைகோ எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

– அராஜகம் செய்ததாக வைகோவால் கூறப்பட்ட,
உருட்டுக்கட்டைகளோடு வந்த குண்டர்களும், காலிகளும் –
இவர்கள் தான்….!!! அவர்கள் அராஜகம் செய்த காட்சியும் இது தான்…!!!

vaiko-3

( இந்த காலத்தில் வீடியோக்களும், புகைப்படங்களும்,
அடுத்த நிமிடமே உலகம் பூராவும் பரவி விடுகின்றன
என்கிற உண்மையை அர்ச்சுனராகப்பட்டவர்
மறந்து விட்டாரே….

தேர்தல் நெருங்க நெருங்க அர்ச்சுனரின் இத்தகைய
வாண வேடிக்கைகளும், புஸ்வாணங்களும் –
நிறைய பார்க்கக் கிடைக்கும் என்று நம்புவோமாக……..!

உம் …. எப்படி இருந்த தலைவர் …!!! )

( செய்தியும், புகைப்படங்களும் –

http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=163518

மற்றும்
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=163478

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to திரு.வைகோ கூறியதாக வந்திருக்கும் செய்தியும், புகைப்படங்களும்…..

 1. B.Venkatasubramanian சொல்கிறார்:

  Every action and talk of Mr.Vaiko make us laugh.
  Nowadays He has become a Sathyaraj’s
  full fledged “AMAVAASAI”

 2. Sridhar சொல்கிறார்:

  KM sir,

  May not be relevant to the contents of the Post, but wanted to highlight.

  In the protest photograph, we see children being used in the front, which is really a sad reality. Any untoward incident will put them at the receiving end, which will cripple their life.

  When will our local leaders realise (because people may say the party leaders cannot take responsibility for the action of the local leaders)

  Long way to go in political maturity 😦

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ஸ்ரீதர்,

  நூற்றுக்கு நூறு நான் உங்களுடன் உடன்படுகிறேன்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 4. selvarajan சொல்கிறார்:

  ஆர்வத்திற்கு வயது ஒரு அளவுகோலா … ? அன்றைய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட பல சிறுவர்கள் பின் மாபெரும் தலைவர்களாக உயரவில்லையா … ? தேர்தலில் சிறுவர்கள் கையில் தட்டிகளை ஏந்தி ” போடுங்கம்மா ஓட்டு …. சின்னத்தை பார்த்து ” என்று தெரு — தெருவாக பகலிலும் — இரவில் பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில் கூவிக்கொண்டு வந்தது எல்லாம் நடந்தது தானே — சிறுவரை வேலைக்கு அமர்த்த கூடாது என்று சட்டம் இருந்தும் — தொலைக்காட்சியில் பல கம்பெனிகளின் விளம்பரத்திலும் — சினிமாக்களிலும் நடிப்பது — வேலையா —- இல்லை பொழுது போக்கா … ? புது பட ரிலீசின் போது ” அபிமான நடிகருக்கு பாலாபிஷேகம் முதல் தோரணங்கள் கட்டுவது வரை செய்வது — யார் … ? இன்றும் மதுவிலக்கு போன்ற பல போராட்டங்களிலும் — அலுவலர்கள் குடும்பத்தோடு நடத்துகின்ற போராட்டங்களிலும் சிறார்கள் வருவது இல்லையா — ஆர்வத்திலும் — அபிமானத்திலும் வருவது தவறா … ? இவைகள் எல்லாமும் ” தவறு என்று ” இன்னுமும் நம்நாட்டில் உணராமலும் — அதைபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது — யாருடைய தவறு … ?

 5. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  வைகோவின் திறமையெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போன்றது. இவருக்கும் நாஞ்சில் சம்பத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்? கால்’நடைப் போராட்டங்களும் (உள் குத்து இல்லை.) குடல் வெளியே வந்துவிடும் அளவுக்கு இரைச்சலான மேடைப் பேச்சும், வெளியே தெரியாத ஊழலற்றவர் என்ற முகமும், விஜயகாந்தைப் பாதுகாக்க வீணாகிறதே..

  இதைவிட அவர், மக்கள் நலக் கூட்டணியும், தே.தி.முகவும் எப்படி மக்களுக்கு நன்மைகளை எல்லாம் செய்யும் என்று விளக்குவதற்கு அவரின் திறமையை உபயோகித்தால், கூடக் கொஞ்சம் வாக்குகளாவது வரும். “தலைவர்” என்ற நிலைக்கு உயராமல், “தலைவலி” என்ற நிலைக்கு உயர்ந்தது காலத்தின் கோலம்.

 6. paamaranselvarajan சொல்கிறார்:

  இன்றைக்கு ” அனல் ” கிளப்பியிருக்கும் ” பனாமா பேப்பர்ஸ் ” பற்றியும்…. அருண்ஜெடலியின் மாமூலான டயலாக் பற்றியும் …. அய்யாவின் … கருத்து …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   வெளிவந்துள்ள விவரங்கள் போதவில்லையே…
   இன்னும் கொஞ்சம் பொறுக்க வேண்டும்…
   ஆனால், இது ஸ்விஸ் அளவிற்கு
   மர்மங்கள் நிறைந்ததாக இல்லை என்று தோன்றுகிறது.
   இன்னும் கொஞ்சம் காத்திருப்போம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 7. NS RAMAN சொல்கிறார்:

  Vaiko is always an emotional person so he can be ignored. But AIDMK is famous for this kind of unlawful activities from the days subramiam swamy attack case, Dharmapuri bus burning case and recent 2014 attack on public properties during Bangalore court case verdict. None of the incidents no regrets from the party for the mistake on the contradictiry defending such persons and honoured with position in pary and government giving encourage to this kind of repeated incidents.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.