“வீட்டப்பம் ஓட்டைச் சுடும்” – பி.லதா, வி.காந்த்…!!!

pancha pandavas-2

கிட்டத்தட்ட 3 மாதங்கள் – தமிழ் நாட்டில் உள்ள அத்தனை
அரசியல் கட்சிகளையும், அரசியல்வாதிகளையும்,
பத்திரிகைகளையும், தொலைக்காட்சி விமரிசகர்களையும்,
பொது மக்களையும் பைத்தியமாக்கி வேடிக்கை பார்த்து
சிரித்தனர் திருமதி பிரேமலதாவும் திரு.விஜய்காந்த்தும்.

தமிழ்நாட்டின் மூன்று முக்கிய எதிரெதிர் கூட்டணிகளிடமும்
ஒரே சமயத்தில் பேச்சு வார்த்தை நடத்தி, யாரிடம் கூடுதல்
” பேரம் ” படிகிறதோ, அவர்களோடு போகத்தயார் என்று
வெளிப்படையாகத் தெரியும்படியே நடந்து கொண்டனர்.

“தங்களுக்கு எது அதிக லாபகரமானதோ, எது அதிக பயன்
தருகிறதோ ” அதை தேர்ந்தெடுப்பதில் என்ன தவறு …? –
என்று ஒரு புதிய அரசியல் கோட்பாட்டை “புதிய தர்மத்தை”
உருவாக்கினர் தர்மரும் அவரது தர்ம பத்தினியும்.

pancha pandavas

விளைவு …?
அவர்களால் உருவாக்கப்பட்ட, அவரது சீடர்கள், அவர்களது
அதே கொள்கைகளை கடைப்பிடித்து “எது அவர்களுக்கு
அதிக லாபகரமானதோ, எது அதிக பயன் தருகிறதோ ”
அந்த வழியில் போய்க்கொண்டிருக்கின்றனர்.
( வைகோ சொல்கிறபடி “ஆளுக்கு மூன்று கோடி” !!! –
ஒருங்கிணைப்பாளர் சொன்னால் – சரியாகத்தானே இருக்கும்..! )

இந்த சந்திரகுமார் கும்பல் வெளியேறுவதால், திருவாளர்
தர்மருக்கு எந்த ஓட்டு நஷ்டமும் வராது… ஏனென்றால்,
தேமுதிக வுக்கு வரும் ஓட்டுக்கள் அனைத்துமே
“தர்மராசா”வின் முகத்துக்காக ( ! ) வருபவையே…!!!

ஆனால், இந்த பிளவால்,
வெளியேற்றத்தால் –
தருமரும், அவரது தர்மபத்தினியும்
அனுபவிக்கப்போகும் அவமானங்கள்,
உரிய சந்தர்ப்பம் பார்த்து மற்றவர்களால் வெளிவரப்போகிற,
இவர்கள் நடத்திய “பேரங்கள்” குறித்த செய்திகள் –
அதனால் ஏற்படப்போகும் மனக்கொதிப்புகள் ( டென்ஷன் ),

– எல்லாமே, தருமரும், தர்மபத்தினியும் தாமாகவே
உருவாக்கிக் கொண்டவை தான்.

“ராஜா” ஆக வேண்டும் என்கிற விருப்பம் புதிதானதல்ல …
திமுக கூட்டணியில், இவர்களை “ராஜா”வாக ஏற்றுக் கொள்வர்
என்று கனவுகூட காண முடியாது. அத்தகைய நிலையில்,
திமுகவுடன் இரண்டு மாதங்கள் நடத்திய பேச்சு வார்த்தைகள்
எதற்காக நடந்தன ….?

அர்ச்சுனர் சொன்னாரே –
ஒரு பக்கம் –
500 கோடி, 80 சீட்டுக்கள்…..!
மறுபக்கம் –
ஒரு அமைச்சர் பதவி, ஒரு ராஜ்ய சபா உறுப்பினர்,
தேவைப்படும் அளவிற்கு நிதியுதவி…!
என்றெல்லாம் ” பேரங்கள் ” நடந்தனவென்று….

அந்த பேரங்கள் எல்லாம் உடனிருந்த உத்தமர் ச.குமாருக்கு
தெரியாமலா போயிருக்கும்….?
அதான் “குரு”வின் பாதையில் “சிஷ்யரு”ம்
போய் விட்டார் போலும் மூன்று கோடிக்கு ….!!!

பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் எல்லாருமே
பெண்டாட்டி, மைத்துனர், மகள், மகன், பேரன் என்று –
நெருங்கிய உறவினர்களை கட்சியில் கூடவே
வைத்துக் கொள்வது எதற்கு என்பது இப்போது
நிறைய “மக்களு”க்கு புரிந்திருக்குமே…!!!

“சந்திர குமார்”கள் –
உருவாகாமல் இருப்பதற்காகத்தான்…என்று…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to “வீட்டப்பம் ஓட்டைச் சுடும்” – பி.லதா, வி.காந்த்…!!!

 1. today.and.me சொல்கிறார்:

  பாலிமர்-டிவில போட்டு மட்டும்தான உலகம் முழுவதும் காட்டமுடியுமா?

  அண்ணனை போட்டுத் தாக்கும் அன்புத்தம்பியின் இன்னொரு முகம்.

 2. selvarajan சொல்கிறார்:

  “வீட்டப்பம் ஓட்டைச் சுடும்” — சுட்டுவிட்டது ..! ” தேமுதிக “இரண்டு” பழமாகிறது ” — ஆகிவிட்டது … ! ” கலைஞர் பாவம் பொல்லாதது – விஜய்காந்த் சீக்கிரமே அனுபவிப்பார் ” — அனுபவித்துக்கொண்டு இருக்கிறார் ..! உம் … உம் … அப்புறம் — // முதிர்ச்சி … என்பது இது தானா !!
  Posted on நவம்பர் 8, 2009 by vimarisanam – kavirimainthan // — ” விமரிசனம் ” தளம் ஆரம்பித்து — நான்கு மாதங்களுக்கு பின் வந்த இடுக்கை — இதில் கலைஞர் யாருக்காக இந்த வயதிலும் உழைத்துக்கொண்டு இருக்கிறார் என்று கேட்டு வந்தது — ஆறு வருடங்களுக்கு பிறகும் — வயது கூடிய நிலையிலும் கொஞ்சம் கூட மாறாமல் இன்னமும் அதே நிலையில் இருந்து மேலும் சேர்ப்பதற்கும் — பதவியில் நீடிக்கவும் தனது கைவந்த ” சூத்திரத்தை ” மற்ற கட்சிகளின் மீது பிரயோக்கிப்பது — அதே உழைப்பிற்கு தானா … ? ” தன்னப்பம் தன்னை சுடும் ” என்பது — சும்மாவா … ? இல்லை …. எப்போ சுடும் …. ?

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  தேர்தல் சமயம் என்பதால்,
  மீடியா எதையும் cover செய்ய
  தயாராக இருக்கிறது. எல்லா தலைவர்களின் பின்னாலும்
  அலைந்து கொண்டிருக்கிறது.

  அதை, வைகோ தவறாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.
  மீடியா தனக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து
  கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டு, வரம்பு மீறிய
  செயல்களில் ஈடுபடுகிறார். வாய்க்கு வந்தபடி எல்லாம்
  பேசுகிறார். நேற்று கோவில்பட்டி ரெயில் நிலையத்தில்
  அந்த போலீஸ் அதிகாரியிடம் வீண் வம்புக்கு அலைந்தார்.
  “ப்ராடு பண்றியா” என்று கேட்கிறார்….
  தானாகவே “லத்தியால் அடிப்பியோ, அடி பாக்கலாம்”
  என்று கூட்டத்தின் நடுவே நின்று கொண்டு கத்துகிறார்.

  தேர்தல் களத்தில் – உச்ச கட்ட விளம்பரம் பெற வேண்டும்
  என்பதற்காக எதையும் செய்யத் துணிந்தவராக இருக்கிறார்.

  இன்னார் தான் என்றில்லாமல், சகட்டுமேனிக்கு
  எவரைப்பற்றியும் மிகக்கீழ்த்தரமாக பேசுகிறார்….

  அதன் ஒரு எடுத்துக்காட்டு தான் இன்று கலைஞரைப் பற்றி
  பேசியதும், பிறகு, மீடியா முழுவதுமாக பதிவுசெய்து,
  வெளியிட்டு விட்டதால்,
  தான் செய்த தவறை மறைக்க வழியில்லை என்கிற நிலையில்,
  மன்னிப்பு கேட்கிறார்….

  அளவு கடந்த திமிரும், ஆணவமும் அவரது பேச்சிலும்,
  உடல்மொழியிலும் வெளிப்படையாகத் தெரிகிறது.

  வைகோவின் பேச்சும் செயலும் கண்டிக்கத்தக்கது.

  -காவிரிமைந்தன்

  • today.and.me சொல்கிறார்:

   //தான் செய்த தவறை மறைக்க வழியில்லை என்கிற நிலையில்,
   மன்னிப்பு கேட்கிறார்….//
   ஜி நான் இதை வேறுவிதமாகப் பார்க்கிறேன்.
   இதற்கு முன்னர் மற்ற கட்சித்தலைவர்களை, தனி மனிதர்களை, நிருபர்களைப் பேசியபோதெல்லாம் மன்னிப்புக் கேட்காதவர்,

   பேசி இரண்டுமணிநேரத்திற்குள்ளாக அங்கமெல்லாம் பதறி மன்னிப்புக்கேட்கவேண்டிய அவசியம் என்ன?

   யாருக்காகவும் வாயைக் கட்டுப்படுத்துபவர் அவர் இல்லையே? யார் அந்த அவசியத்தை வைகோவுக்கு ஏற்படுத்தினார்கள்? எப்படி ஏற்படுத்தினார்கள்?

   என்பது வைகோ தினமும் வணங்கும் அவர் அன்னை மாரியம்மாளுக்குத்தான் வெளிச்சம்.

   தமிழக அரசியலில் சில சைக்கோக்கள்.

   https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/12439166_1219050051446370_7392564881931415465_n.jpg?oh=17801299a073b0aeec1903415d0a3b11&oe=577D8090

   • எழில் சொல்கிறார்:

    நேற்று முழுவதும் சமூக வலை தளங்களில் வைகோவின் பிதற்றலுடன் அதிகம் பேசப்பட்டது/விவாதிக்கப்பட்டது கருணாநிதி இதற்கு முன் யார் யாரை எப்படி எல்லாம் கேவலப்படுத்தினார் என்பது தான். ‘இந்திரா புடவை ரத்தம்’, ‘பனை மரம் ஏறி’, ‘பாவாடை நாடா’ போன்ற, இப்போதைய தலைமுறையினர் அறிந்திராத பல எடுத்துக்காட்டுகளை மேற்கோள் காட்டி பல சுவையான பதிவுகள் அரங்கேறின. ஒரு அளவுக்கு மேல் ‘உபி’ கள் – என்னடா இது, வைகோ தேரை இழுத்து தெருவில் விட்டு மன்னிப்பு கேட்டு கழண்டு கொண்டது இப்போது இது நம்மையே திருப்பி தாக்குகிறதே என்பது போல் ஆனார்கள். அந்த ஆள் மன்னிப்பாவது கேட்டார். உங்க ஆள் என்னைக்காவது கேட்டிருக்கிறாரா என்று ‘ரர’க்கள் சீண்டி கொண்டிருந்தனர்.

    இவ்வாறு நேற்றைய தேர்தல் சர்கஸ் தினம் இனிதே முடிந்தது. 😉

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     வருக எழில்,

     நீங்கள் கூறுவது போல், கலைஞரும்,
     திமுகவின் முன்னாள் முன்னணி
     தலைவர்களில் பலரும் கூட “அந்த நாட்களில்”
     பயன்படுத்தாத –
     கண்டு பிடிக்காத –
     வசவு வார்த்தைகளே இல்லை எனலாம்.

     அவர்கள் என்றும் அதற்கு மன்னிப்பு கேட்டதும் இல்லை
     என்பதும் நிஜமே…

     ஆனால், கலைஞர் புத்திசாலி, வசவு வார்த்தைகளைப்
     பயன்படுத்துவார் – ஆனால் உணர்ச்சி வசப்பட மாட்டார்.
     வைகோ வுக்கு உணர்ச்சிகளை கட்டுப்படுத்தத் தெரியவில்லை.
     பல சமயங்களில் உணர்ச்சி வசப்பட்டவர் போல்
     நடிக்க வேறு செய்கிறார்…

     எது எப்படி இருந்தாலும் கூட “ஜாதி” உணர்வுகளை
     கிளப்புவது, அதன் அடிப்படையில் ஏசுவது ஆகியவற்றை
     என்னால் சுத்தமாக சகித்துக் கொள்ள முடியவில்லை.
     அத்தகைய மனிதர்களை காட்டுமிராண்டிகளாகவே நான்
     கருதுகிறேன்.

     இதையெல்லாம் துடைத்துப் போட்டு விட்டு, நாளையே
     திரும்பவும் ஆரம்பித்து விடுவார் பாருங்கள்…

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

   • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    1. It created lot of negative impact. தன் கட்சியில், வி.சி மற்றும் கம்யூனிஸ்ட் மூலமாக 2. கொடும்பாவி எரிப்பு – இது திமுகவினரின் ‘நேரடி எதிர்ப்பு. கலைஞரை நேரடியாக எதிர்த்தாலோ, வெறுப்பை உமிழ்ந்தாலோ, கருணானிதிக்கு அப்புறம் திமுகவிலிருந்து அவருக்கு வரக்கூடிய chunk வராது. இது அவரது அரசியல் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. இதே காரணத்தால்தான் அழகிரி, கருணானிதியை எப்போதுமே அண்டியிருக்கிறார். ஸ்டாலினைத் தள்ளுகிறார். இதை மனதில்கொண்டுதான் ஸ்டாலின் அழகிரியை உள்ளே சேர்க்க அனுமதி மறுக்கிறார். 3. அவரின் ஜாதி சார்பற்ற இமேஜ் (அவர் கட்டிவைத்துள்ளது) உடனடியாக அழிந்துவிடும். அவரின் credibility will disappear, as media had the video to play continuously. உடனே மன்னிப்பும், உணர்ச்சிபூர்வமான வருத்தமும் தெரிவித்தால் தன் இமேஜைக் காப்பாற்றிக்கொள்ளலாம்.

    இந்தக் காரணம் போதாதா, வைகோ உடனே பம்முவதற்கு?

  • Sella சொல்கிறார்:

   நான் இவ்வளவு நாளாக இவரை ‘டம்மி பீஸ்’ என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் சேர்த்த கூடாரத்தை காலி செய்யும் குணம் படைத்தவராக மாறியிருக்கிறார். எல்லாம் பரிணாம வளர்ச்சி. ஒரு வழக்குரைஞர் தெரியாம பேசவில்லை. விளம்பரத்துக்காக பேசியிருக்கிறார் அல்லது கருணாநிதிக்கு ஆதரவாக இந்த செயலை செய்திருக்கிறார். சந்திரகுமாருக்கு சொன்னதை இவர் செய்யலாம்.

 4. gopalmohan சொல்கிறார்:

  vaiko is known for,in right time taking wrong decsions

 5. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  சந்திரகுமார் போன்றவர்களால், விஜயகாந்துக்கோ அவரின் சொந்தங்களுக்கோ ஒரு சங்கடமும் இல்லை. பேரங்களில், சந்திரகுமார் போன்றவர்கள் நேரிடையாக இருந்திருக்க ஒரு வாய்ப்பும் இல்லை. விஜயகாந்த், அவர்களுடன் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டிருக்கலாம். வெளியேறியவர்கள் இவற்றைச் சொன்னாலும், கூட இருப்பவர்கள் (இன்னும் விஜயகாந்துடன்) அதை மறுத்துவிடுவார்கள். (சந்திரகுமார் ம.’ந’கூவைப் பாராட்டிச் சில நாட்கள் முன்பு மேடையில் பேசியதைப்போல்). சந்திரகுமார் & co சொல்வதை யாரும் நம்பப்போவதில்லை. எல்லோரும், திமுக, ஸ்டாலின், சபரீசன் போன்றவர்கள் 2ஜி காசு கொடுத்து அவர்களை விலைக்கு வாங்கிவிட்டார்கள் என்பதைத் தான் நம்புவார்கள். நீராராடியா டேப் பேசினவர்களே அதை மறுத்துப் பேசும்போது, ஆதாரமில்லாது சந்திரகுமார் சொல்வதை யார் நம்புவார்கள்? ஒருவேளை, கூட்டணி அறிவித்தவுடனேயே வெளியேறி, ஏதாகிலும் சொல்லியிருந்தால் impact இருந்திருக்கக்கூடும்.

  ஆனால் உண்மை இப்படி இருந்திருக்கக்கூடும். திமுகவுடன் – 55-60 சீட், தொகுதிக்கு 5 கோடி, 25% உள்ளாட்சித் தேர்தலில் ஒதுக்கீடு. அமைச்சரோ, அரசில் கூட்டோ நிச்சயம் கிடைக்காது என்று தெரியும். பாஜக – இது பிரேமலதாவின் சாய்ஸாக இருக்கலாம். இதில், 1 ராஜ்யசபை எம்பி, 1 மந்திரி (வேறு யாருக்கு.. தம்பி, அக்காவுக்குத்தான்), முதலமைச்சர் என்ற அறிவிப்பு, 120 சீட், 300 கோடி கேட்டிருக்கலாம். இதை நிரூபிப்பது யாருக்குமே இயலாது. கருணானிதி, ஜவடேகர் முதற்கொண்டு.

  வைகோ உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவது அவருக்குக் கைவந்த கலை. மற்றவர்களுக்கு அது நல்ல நகைச்சுவை. சசிபெருமாள் இறந்ததற்காக வைகோ பெரும் உணர்ச்சியுடன் பேசியதையும், சிகரெட் ஏஜென்சி வெளியே வந்ததும் தன் கோரமுகத்தைக் காட்டியதையும் நாம் அனைவரும் பார்த்தோம். இவர் ‘நாஞ்சில் சம்பத் போன்றவர். அந்த சந்தர்ப்பத்துக்காக, தன் பேச்சுத் திறமையை நாடக பாணியில் உபயோகிப்பது. இவர் தேசத்துக்கு எதிராகப் பேசி, அந்தக் குரலையே தன் குரல் இல்லை என்று மறுத்தவர். திராவிட அனுதாபிகளால் தப்பியவர். வைகோ, தன்னை ரொம்பக் கீழிறக்கிக்கொள்கிறார். அவர் இனி எந்த நிலையும் எடுக்கமுடியாது (ஒபாமா கட்சியில் சேருவதைத் தவிர). தன் நிலை மறந்ததால், திருமாகூட கண்டிக்கும் நிலைக்குத் தன்னைத் தாழ்த்திக்கொண்டுவிட்டார்.

  VAIKO taking wrong decision – இது சரியான கருத்து அல்ல. இந்தத் தேர்தலில் வைகோவுக்கு வேறு வழியில்லை. திமுகவுடன் 10 இடங்களில் போட்டியிட்டாலும், ஒரு இடத்திலும் வெற்றிபெறாத அளவுக்கு (அல்லது, சந்திரகுமார், எல் கணேசன் போன்ற characterகளை மட்டும் விட்டுவிட்டு மற்றவர்களுக்கு) திமுக தன் தொண்டர்கள் மூலமாகத் தன் முகத்தைக் காட்டும். இந்தத் தேர்தலில் ஸ்டாலினுக்கு வெற்றி என்பதை விட (கருணானிதி வெற்றி பெற்றால், ஸ்டாலினுக்கு என்ன லாபம்? அதிகாரத்தில், கருணானிதி ஸ்டாலினுக்கு என்ன என்ன கட்டையைப் போடுவார் என்பது யாருக்குத் தெரியும்), கட்சி தன் கட்டுப்பாட்டில் வரவேண்டும் என்பதே ஸ்டாலினில் அஜென்டா. அதனால், குஷ்பு, வைகோ போன்றவர்களைப் பக்கத்திலேயே சேர்க்கமாட்டார்.

  “பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் எல்லாருமே பெண்டாட்டி, மைத்துனர், மகள், மகன், பேரன் என்று – நெருங்கிய உறவினர்களை கட்சியில் கூடவே வைத்துக் கொள்வது” – மாப்பிள்ளையை விட்டுவிட்டீர்களே.. வரலாறு மிக முக்கியம் அமைச்சரே.

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்ப நெல்லைத்தமிழன்,

  நல்ல அலசல்…!!!

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 7. CHANDRAA சொல்கிறார்:

  I have heard karuna ji when he was with his trusted party men he freely
  used all abusive words against political opponents
  Even his conversations with alagiri had that mixture of indecent
  vulgar element………
  Even some of the lady members of karunajis
  family were the targets of karunajis
  foul languages ALL KNOW THAT
  Doctors telll that senior citizens above seventy years of age
  do suffer from certain nervous problems that result in
  incoherent irrevalent sometimes indecent talks
  Vaiko ji should immediately consult a good physician
  K M JI

 8. R.Gopalakrishnan சொல்கிறார்:

  It will be good for MNK if vaiko restrained his tongue at least in public platforms till elections.
  Otherwise, the alliance may even break..

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப கோபாலகிருஷ்ணன்,

   அப்படியெல்லாம் வைகோ பப்ளிக்கில் நாவை அடக்குபவர் அல்ல. அவருக்கு ஒரு மைக்கைப் பார்த்துவிட்டால், அது தன்கையில் இருந்தாலும் சரி, எதிரில் இருப்பவர் கையில் இருந்துவிட்டாலும் சரி, உடனே காமரா தன்பக்கம் திரும்பியாகவேண்டும்.

   அதற்காக என்ன விலைவேண்டுமானாலும் தருவார்.

   விஷம் விஷம் உடம்பெல்லாம் விஷம்.

 9. Ns raman சொல்கிறார்:

  Vaiko was a full time employee of LTTE and ditched his own country. Indulging all kind of anti national activities with narrow minded goals. Since his old company was closed and now no more srilankan issues to make business now trying to get some political mileage!!!! It is very unfortunate for us have such leaders.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.