அதிமுக அரசை குறை கூறி, திட்டி, இணையத்தில் எழுதினால் பணம் கிடைக்குமா….? வலைப்பதிவர்களை மனசாட்சி இல்லாதவர்கள் என்று நினைத்துக்கொண்ட ஒரு கட்சி ….!!!

monachis

வலைப்பதிவுகளில் எழுதுபவர்களை எல்லாம்,
காசு கொடுத்தால் எதை வேண்டுமானாலும் எழுதுவார்கள்
என்று நினைத்துக்கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம்
என்கிற ஒரு சாக்கடைக் கட்சி முயற்சி செய்வதை
என்ன வார்த்தை சொல்லி விமரிசிப்பது என்று எனக்கே
புரியவில்லை….

எனவே செய்தித் தளங்களில் வந்துள்ள செய்திகளின்
சில பகுதிகளை மட்டும் கீழே தொகுத்து தந்திருக்கிறேன்….
இந்த கட்சிக்கும், அதன் தளபதியின், தளர்கர்த்தரான
சபரீசனுக்கும் என்ன தண்டனை கொடுப்பது என்பதை
தமிழ் நாட்டு மக்களே தீர்மானித்துக் கொள்வார்கள் –

——————————————————–

இது தினமணியிலிருந்து –
http://www.dinamani.com/tamilnadu/2016/04/08/

வலைப் பதிவர்களை வளைக்கும் திமுக: அதிமுகவைத் திட்ட நாள்தோறும் ரூ.300 –

தமிழக வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களில் 25 சதவீதம் பேர் 30
வயதுக்கும் குறைவானர்கள். அதிலும் பலர், முதல்முறையாக வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர்.

இந்த இளைஞர்களில் பெரும்பாலானோர் சமூக வலைத்தளங்களில்
தீவிரமாக இயங்குபவர்கள். டுவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக
வலைத்தளங்களிலும், தங்களுக்காக தனியாக வப்பக்கங்கங்களையும் உருவாக்கி, தங்களது கருத்துகளையும் எழுதி வருகின்றனர்.

இவர்களை குறிவைத்து மும்பையை தலைமையிடமாகக் கொண்டு
செயல்படும் ‘பிராண்ட் மோனாசிஸ்’ நிறுவனம் ஒரு இமெயில் அனுப்பியுள்ளது.

‘உங்களது ஒவ்வொரு பதிவுக்கும் பணம்’ என்ற தலைப்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில்,

நாள்தோறும் அவர்கள் தரும் அதிமுக அரசின் தோல்விகள்
குறித்த புள்ளி விவரங்கள் மற்றும் செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டும்.

அவர்கள் தரும் அதே செய்தியை அப்படியே நகல் செய்து (Copy) ,
சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டுமாம் (Paste). இதற்காக
நாள்தோறும் ரூ. 300 வரை வழங்கப்படும் என்றும், வாரந்தோறும் பணம் பரிமாற்றம் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அவர்கள் குறிப்பிட்ட தொலைபேசியை தொடர்புகொண்டால் இன்னும் அதிர்ச்சி ரகம்! ஆமாம். இந்தப் பணிக்காக 10 பேரை அழைத்து வந்தால், அழைத்து வருபவருக்கான சம்மானம் இரட்டிப்பாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

————————————–

இது விகடன்.காம். செய்தி தளத்திலிருந்து –
http://www.vikatan.com/news/coverstory/62117-

parties-believe-in-social-media-than-principle.art

ஃபேஸ்புக்கில் ஒரு பகிர்வுக்கு ரூ. 200… அரசியல் கட்சிகளின் கேவலமான யுக்தி!

பிரபல ஆங்கில நாளிதழ், அண்மையில் ஒரு கட்டுரையையும், அதற்கு வலுசேர்க்கும் வண்ணம் ஒரு ஆடியோவையும் வெளியிட்டது. அதன் சாரம் இதுதான்.

அதாவது மும்பையை தலைமையிடமாக கொண்ட ஒரு
பிராண்டிங் நிறுவனம், ஒரு வலைப்பதிவரிடம் பேசுகிறது.

“நாங்கள் தினமும், தற்போது இருக்கின்ற ஆட்சிக்கு எதிரான தகவல்கள் அடங்கிய கட்டுரையை தருவோம். அதை நீங்கள், அப்படியே உங்கள் வலைப்பூவில் பகிர்ந்தால் ரூ100, உங்கள் ஃபேஸ்புக்கில் பகிர்ந்தால் ரூ. 200 தரப்படும். அது போல் நாங்கள் ஒரு நாளைக்கு மூன்று கட்டுரைகள் தருவோம்” என்பதாக நீள்கிறது அந்த உரையாடல்.

அந்த நிறுவனம்
திமுகவிற்கு ஆதரவாக வேலைப்பார்ப்பதாக அந்த ஆங்கில நாளிதழ் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது இன்றைய தமிழக அரசியல், எந்த அளவிற்கு மோசமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை அப்பட்டமாக காட்டுகிறது. அதாவது,

இன்றைக்கு கட்சிகள் மக்கள் தளத்தில் இறங்கி வேலை பார்க்காமல், ஆட்சிக்கு எதிரான கட்டுரைகளை பிரபல வலைப்பதிவர்கள், முகநூல் பிரபலங்கள் கணக்கில் வெளியிடுவதன் மூலம், ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நினைப்பது மக்களை முட்டாளாக்கும் செயலன்றி
வேறென்ன…?

‘இதில் என்ன தவறு இருக்கிறது, மக்களிடம் தகவலை கொண்டு போய் சேர்ப்பதில், இதுவும் ஒரு யுக்தி தானே…?’ என்கிற வாதத்தை ஒத்துக் கொள்ள முடியாது. ஒரு கட்சியின் கொள்கைகள் பிடித்து, அந்த கட்சிக்காக பிரசாரம் செய்வதென்பது வேறு. வெறும் பணத்திற்காக பிரசாரம் செய்வதென்பது வேறு. அங்கு உண்மை இருக்காது, பொய்யும் புரட்டும் மட்டும்தான் இருக்கும். இது சாமான்ய மக்களை முட்டாளாக்கும் செயல்.

என்ன தலைவர்கள், கட்சிகளின் ஆஸ்தான பேச்சாளர்கள் மேடையில் முழங்குகிறார்களே, அது மட்டும் என்ன உண்மையா,

தேர்தல் பிரசாரம் என்பதே பொய்யால் கட்டமைக்கபட்டதுதானே? என்பதற்காக அந்த சாக்கடையில் இன்னொரு கிளை சாக்கடையும் சங்கமிக்க இசைவு தரமுடியாது. இது துர்நாற்றம், இன்னும் அதிகமாக வீசவே வழிவகை செய்யும்.

இன்றைய தேதிக்கு அனைத்து கட்சிகளும் தனியாக தகவல் தொழில்நுட்ப பிரிவை வைத்திருக்கிறார்கள். கட்சிகளுக்கென்று தனி வலைத்தளங்கள் இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் முகநூலில், ட்விட்டரில் தனி பக்கம் வைத்திருக்கிறார்கள். தங்கள் சாதனைகளை, திட்டங்களை, அதில்
பகிர்வதில் எந்த தவறும் இல்லை. அது போல் எதிர்கட்சிகளும், தங்கள் சமூக ஊடகப் பக்கத்தில் ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டலாம்.

ஆனால், அதை விடுத்து பணம் கொடுத்து தங்கள் கருத்தை பகிர சொல்வதிலிருந்தே தெரிகிறது, இந்த கட்சிகளுக்கு மக்கள் நலனை விட வேறு ஏதோ முக்கியமென்று.

—————————————-

இது ஆங்கில நாளிதழ் நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் –

http://www.newindianexpress.com/states/tamil_nadu/Pai
d-News-Pass%C3%A9-its-Now-Paid-
Views/2016/04/08/article3368981.ece

————-

get paid for blog

“Here is an opportunity for getting paid for your blog. All you need is to copy paste the content and get paid
weekly. This is a political campaign we are running where
we provide facts and figures that features the existing
government in Tamil Nadu.”

With the election campaign increasingly moving online to
match the age of technology where a quarter of the
electorate is under 30, can the dirty tricks experts be far
behind? A Mumbai-based brand consultancy firm has
entered the murky waters ahead of the Assembly poll in
Tamil Nadu in search of digital daily-wagers who can take
on the incumbent government by ‘playing around with
facts and figures’.

mail by Brand Monachis.
On Wednesday, a group of about 100 bloggers, who are
part of a Chennai-based online blogging community,
received a group mail from Brand Monachis, a Mumbai-
based company that has worked with national and
regional political parties,

with the subject, ‘Get paid for
your blog’. The deal was rather simple: every morning, it
will provide the content which the blogger has to post on
their blog, without making any changes, and share on the
social media space. “You just have to copy and paste the
content we send you. In return, we will pay you about Rs
300 per day at the rate of Rs 100 per article that we
provide alon
g with data against the existing State
government,” a representative of the firm told this
reporter on phone after responding to the initial mail. The
wages will be paid weekly, with a blogger willing to do the
job standing to earn Rs 2,100 a week, it added.
The campaign was run for the DMK against the incumbent
government, the person added, though Express could not
independently verify the identity of the client.

xx
xx

The person at the other end of the line gave two contact
numbers if interested in taking up the job — it included
one that is the number for the Mumbai firm as given in its
official webpage. When called the number feigning
interest, the offer became sweeter: bring in 10 more who
would be willing to do this and become a coordinator for
the group. In return, this reporter was offered double the
money for each post — Rs 200 per post.
Such efforts to enlist bloggers are not unusual. Firms
spend money to build presence and promote brands
online through bloggers who have a substantial number of
captive audience and are able to mould opinion thro-ugh
informal channels. But doing it for political parties is
unusual, at least in Tamil Nadu. The bloggers in TN, who
received the invite, said popular ones among them were
earlier approached by another party strongly associated
with an influential community in northern TN for a similar
campaign where they would give the content to be posted
on their blog space.

While repeated attempts to reach the leaders of DMK, for
whom the campaign is allegedly being run, failed,
Chief
Electoral Officer Rajesh Lakhani said, “We will take action
as per MCC and IPC against any violation.”

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to அதிமுக அரசை குறை கூறி, திட்டி, இணையத்தில் எழுதினால் பணம் கிடைக்குமா….? வலைப்பதிவர்களை மனசாட்சி இல்லாதவர்கள் என்று நினைத்துக்கொண்ட ஒரு கட்சி ….!!!

 1. today.and.me சொல்கிறார்:

  கா.மைஜி
  மற்ற மீடியாக்கள் இதை வெளியிட்டவுடன்
  திமுக சார்பு விகடனும் நாமும் இதை வெளியிட்டாகவேண்டுமே அப்பொழுதுதானே நடுநிலை என்று இன்னமும் இனாவானா தமிழர்கள் நம்புவார்கள் என்று தலைப்பிலே ஒரு திரிப்போடு வெளியிட்டிருப்பதை கவனித்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்.

  அதென்ன? அரசியல் கட்சிகள்..
  திமுக என்று வெளிப்படையாகத்தான் தெரிகிறதே.

 2. today.and.me சொல்கிறார்:

  https://fbcdn-photos-f-a.akamaihd.net/hphotos-ak-xfl1/v/t1.0-0/p173x172/12923199_10207930328569753_47647166308303337_n.jpg?oh=19933f3307173159420760528f909d2e&oe=5780FDED&__gda__=1468075248_a22f54a96c343371d263850f0161a703

  அரசியல்கட்சிகளின் என்று பன்மையில் எழுதுவது
  விகடனின் எவ்வளவு கேவமான யுக்தி

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே,

   அது தான் விகடனின் ஸ்பெஷாலிடி….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. Sella சொல்கிறார்:

  Dear KM
  It is hard to believe. Because if this particular call, say, accidentally reaches an ADMK member it can be exposed clearly. In such a case it will backfire. In another angle why it can’t be a strategy of ADMK?

 4. balumahendran சொல்கிறார்:

  நானும் செல்லாவை வழி மொழிகிறேன்.
  சும்மாவே திமுக வை online ல் கழுவி ஊற்றுகின்றனர். இந்த மாதிரி ஏதாவது செய்தால் அது அவர்களுக்கே back fire-ஆகி விடும் என்பது தெரியாதவர்கள் அல்லர் திமுகவினர்.?!
  அதாவது, ஏன் இவர்களே (ie anti-DMK) ஒரு fake call ஐ தயார் செய்து இருக்கக் கூடாது. (my wild guess. If something can be right, I could be!)
  இப்படி இந்த கும்பல் நூற்றுக் கணக்கான blogger களை canvas செய்கிறது என்கிற பட்சத்தில் இந்த விமரிசனம் வலைதளத்தை படிக்கிறவர்களில் யார் யாருக்கெல்லாம் அழைப்பு அல்லது மெயில் வந்தது? Can someone reading this blog witness that they or their friends personally got such an offer?
  காவிரி மைந்தன்ஜி,
  உங்களை விட ஒரு பெரிய பிளாக்கர் வேண்டுமா? உங்களுக்கு அழைப்பு வந்ததா? அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் யாருக்கேனும்?

 5. R.Gopalakrishnan சொல்கிறார்:

  I will be thankful if somebody tell me what should I do to type in tamil in my existing key board

  • கொண்டித்தோப்பு கடாகுமார் சொல்கிறார்:

   http://www.google.com/intl/ta/inputtools/try/
   பெட்டியில் ஆங்கிலத்தில் adimai என்று டைப்
   செய்து space bar அழுத்த தமிழில் அடிமை என்று
   மாற காணலாம்.வாழ்க தமிழ்!

   • today.and.me சொல்கிறார்:

    அழகுத்தமிழில் ஆயிரம் வார்த்தைகள் இருக்க
    அடிமை மட்டும்தானே கண்ணுக்குத் தெரியும்.

    kothththadimai என்றால் கொத்தடிமை என்று கூட வரும்தானே நண்ப கடாகுமார்.

 6. CHANDRAA சொல்கிறார்:

  Well such diabolical move by dmk ……soon dmk will be losing even deposits
  The common man feel that VAIKOS OUTBURST
  is not totally wrong……….
  I am afraid that aiadmk will get brutal majority …..which is not good
  though i prefer aiadmk to form the ministry in 2016
  with number of seats go to dmk as a strong opposition
  in the assembly…….

 7. கொண்டித்தோப்பு கடாகுமார் சொல்கிறார்:

  பொலம்பி சாவுங்க மாப்பிள்ளைகளா!

 8. கொண்டித்தோப்பு கடாகுமார் சொல்கிறார்:

  நல்ல விசயத்தை சொல்வதற்கு சம்பளமா?
  கரும்பு தின்ன கூலி எனில் நல்ல விசயம்தானே?

  நெஞ்கில் உரமின்றி நேர்மை திறமின்றி
  வஞ்சனை செய்வாரடி கிளியே
  வாய்ச்சொல்லில் வீரரடி!

  • today.and.me சொல்கிறார்:

   //நல்ல விசயத்தை சொல்வதற்கு சம்பளமா?
   கரும்பு தின்ன கூலி எனில் நல்ல விசயம்தானே?/

   நீங்கள் உடனடியாகத் தொடர்புகொள்ளவேண்டிய இடம்
   விமரிசனம் அல்ல.
   உங்கள் காப்பிபேஸ்ட் மூளையையும்,
   தமிழ் டைப்பிங் அறிவையும் அடகுவைக்க உடனே கிளம்புங்கள்,
   திமுக அலுவலகம் அல்லது Brand Monachis அலுவலகம்.,

 9. ravi சொல்கிறார்:

  மொபைல் டாப்அப் , பெட்ரோல் கூப்பன், புடவை , வேட்டி , எவர்சில்வர் குடம், கட்டிங்…. இப்படி, ரெண்டு கழகமும் கொடுத்து பார்த்து இருக்கிறேன் .
  ஆனால், பணம் கொடுக்க இப்படி ஒரு வழியா !! யப்பா .. தலிவர் கில்லாடிதான் .

 10. seshan சொல்கிறார்:

  Enthe sire, eppadi aaachuu….is it Game over….

  Quote “ஒரே கையெழுத்தில் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது; படிப்படியாக அமல்படுத்தப்படும்’ …. ” என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

  http://www.dinamani.com/tamilnadu/2016/04/09/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/article3371908.ece

  vadai is gone…..

 11. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  “வலைப்பதிவர்களை மனசாட்சி இல்லாதவர்கள் என்று நினைத்துக்கொண்ட கட்சி” – இந்த மாதிரி நெகடிவ்வாக ஜெ செய்து ‘நான் பார்த்ததில்லை. மோடியை ஊதி ஊதிப் பெரிதாக்கிவிட்டார்கள் என்பதனால், அதே கம்பெனியை தமிழ் நாட்டில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்ற கனவுடன் ஸ்டாலின்-சபரீசன் கூட்டணி நினைத்தால் இதுதான் நடக்கும். கள நிலவரம் தெரியாமல், யாரைப் பிடிப்பது என்று தெரியாமல், வண்ட வாளம் தண்டவாளத்தில் ஏறும்படியாக இத்தகைய மெயில்கள்தான் வரும். ஆனாலும், அந்த அந்தக் கட்சியின் ஜால்ராக்களுக்கு, விஷயம் யாராகிலும் சப்ளை பண்ணினால் நல்லதுதானே.. காபி பேஸ்ட் பண்ணினால், எலெக்ஷனுக்கு அப்புறம் அந்த ஜால்ரா கோஷ்டிகளின் பிளாக்கை அவர்களே படித்துக்கொண்டால்தான் உண்டு. எல்லாம் நன்மைக்கே.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.