” தேர்தல் அறிக்கை ” சஸ்பென்ஸ் – காமெடி …!!!

.

.

இரண்டு முக்கிய கட்சிகளும், தமது தேர்தல் அறிக்கையை
எப்போதோ தயார் செய்து விட்டன. ஆனால் இரண்டுமே
இன்னமும் வெளியிடப்படவில்லை….!

15 நாட்களுக்கு முன்னரே திமுகவின் தேர்தல் அறிக்கை
தயாராகி விட்டது. திரு. டி.ஆர்.பாலுவின் தலைமையில்,
திருமதி கனிமொழி உட்பட பலர் அடங்கிய குழு, பல்வேறு
கவர்ச்சித் திட்டங்களை –

முக்கியமாக மதுவிலக்கையும்,
பல இலவச அறிவிப்புகளையும் –

உள்ளடக்கி – தயார் செய்து விட்டது. பல்வேறு நிலைகளில்,
கலைஞர், ஸ்டாலின் ஆகியோரின் ஆலோசனைகளையும்
பெற்றுத்தான் அது தயாரிக்கப்பட்டது.
அதை “ரிலீஸ்” செய்ய இதுவரை மூன்று ” சுப முகூர்த்தங்கள்”
தீர்மானிக்கப்பட்டு பிறகு கைவிடப்பட்டன.

“ரிலீஸ்” தள்ளிப்போக முக்கிய காரணம் –
அதிமுக வின் தேர்தல் அறிக்கையில்
என்ன முக்கிய விஷயங்கள் கூறப்படுகின்றன என்பதை
பார்த்து, தேவைப்பட்டால், அதற்கான – counter strategy –
முறியடிப்புக்கான விஷயங்களையும் சேர்ப்பதற்காகவே
திமுக காத்திருக்கிறது.

அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிடும் என்று
திமுக தலைமையால் எதிர்பார்க்கப்பட்ட கடந்த மூன்று முக்கிய
“சுப முகூர்த்த தேதி”களையும் அதிமுக “கம்”மென்றே
கடந்து விட்டது. கடைசியாக அமாவாசை தினமான நேற்று
ரிலீஸ் ஆகுமென்று எதிர்பார்த்து, திமுகவும் தங்கள்
அறிக்கையை வெளியிட தயாரானது.

athuvum manjal ....

“அமாவாசை” – தேர்தல் அறிக்கை “மஞ்சள் கலர் ” பைல் அட்டை….!!!!

கடைசியில் அமாவாசை அன்றும் வெளியாகவில்லை என்றதும். திமுக சார்பில், அறிக்கையை அண்ணா அறிவாலயத்திலிருந்து கோபாலபுரம் வரை எடுத்துச்சென்று கலைஞரிடம் ஒப்படைக்க அமாவாசை முகூர்த்தத்தை பயன்படுத்த நேரிட்டது.

இப்போது, இறுதியாக, சனிக்கிழமை (9-ந்தேதி) அதிமுக
தேர்தல் பிரச்சார துவக்க நிகழ்ச்சியில் ஜெ. வெளியிடுவாரென்று
நம்பி, அதற்கடுத்த நாள் (10-ந்தேதி) ஞாயிறு மாலை
( நாலரை -ஆறு ) ராகு காலம் முடிந்த பிறகு மீண்டும்
திமுக அறிக்கையை கோபாலபுரத்திலிருந்து, அண்ணா
அறிவாலயம் கொண்டுவந்து, “ரிலீஸ்” செய்வதாக
இன்று அறிவிக்கப்பட்டு விட்டது…!

ஒரு வேளை சனிக்கிழமை மாலை ஜெ. அவர்கள் தேர்தல்
அறிக்கையை பற்றி ஒன்றும் பேசாமலே பிரச்சாரத்தை
துவக்கி விட்டால் …..?
தொலைந்தது திமுகவின் ஞாயிறு “ரிலீஸ்” திட்டம்…!!!

அதிமுக வேண்டுமென்றே தேர்தல் அறிக்கையை
வெளியிடுவதை தாமதிப்பதற்கும், ரகசியம் காப்பதற்கும்
காரணம் இருக்கிறது…!

கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்னரே,
முதல்வரின் ஆலோசனைப்படி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை
அமுல்படுத்துவதற்கான முறையான திட்டத்தை கோட்டையில்
மூத்த அதிகாரிகள் தயார் செய்துகொண்டிருந்தனர்…

அது கடைசிகட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது,
கலைஞருக்கு வேண்டப்பட்ட ஒரு மூத்த அதிகாரியின்
மூலம் கலைஞருக்கு “லீக்” செய்யப்பட,

இரவோடு இரவாக
ராத்திரி ஒன்பதரை மணிக்கு கோபாலபுரத்தில், கலைஞரின்
இல்லத்திலேயே வெற்று பேப்பரில், ஒரு நாலுவரி
அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஸ்டாலினால் செய்தியாளர்களின்
முன்னிலையில் வாசிக்கப்பட்டது –

“திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும்….. கலைஞர் பதவியேற்றவுடன் போடும் முதல் கையெழுத்தே, மதுவிலக்கு கொண்டு வரப்படுவது”
குறித்ததாக இருக்கும்…..!!!

திமுக தலைவரின் அறிவிப்பின் விளைவு,
தமிழக அரசு தயாரித்து வந்த திட்டம் குப்பைக்கூடைக்கு
சென்றது.

அன்று பிடித்த சனி தான் இன்னமும் தமிழகத்தை
ஆட்டிப் படைக்கிறது. என்றோ அமுலுக்கு வந்திருக்க
வேண்டிய மதுவிலக்கு திட்டம் இன்னமும் ஒளிந்துகொண்டு
இருக்கிறது.

இந்த அனுபவம் தந்த பாடம் – அதிமுக வின் தேர்தல்
அறிக்கையை ஒளித்து வைத்து, திமுக தலைமையை
திண்டாட விடும் காமெடியில் வந்து நிற்கிறது…..!!!

பார்ப்போம் – 10ந்தேதியாவது கைகூடுகிறதா என்று…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to ” தேர்தல் அறிக்கை ” சஸ்பென்ஸ் – காமெடி …!!!

 1. CHANDRAA சொல்கிறார்:

  Unnalaley naan kettten
  Ennaley nee ketttoy……..

 2. Antony சொல்கிறார்:

  //
  “திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும்….. கலைஞர் பதவியேற்றவுடன் போடும் முதல் கையெழுத்தே, மதுவிலக்கு கொண்டு வரப்படுவது”
  குறித்ததாக இருக்கும்…..!!!

  திமுக தலைவரின் அறிவிப்பின் விளைவு,
  தமிழக அரசு தயாரித்து வந்த திட்டம் குப்பைக்கூடைக்கு
  சென்றது.//

  What is the co-relation between these events?
  Does it mean that to avoid the credit going to DMK only, ADMK has dropped the plan??

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப அந்தோணி,

   ஐந்து முறை முதல்வராக இருந்து தங்கள் பைகளை மட்டுமே நிரப்பிக்கொண்டு
   மக்களைப் பற்றி, குறிப்பாக இப்போது இவர்கள் கவலைப்படுவதாக நடிக்கும் குடிமகன்களின் மனைவிகளை மகள்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல்
   யாரோ ஒரு முதல்வர், அதுவும் ஒரு பெண்
   அசாத்திய துணிச்சலோடு கொண்டுவர நினைக்கும் (அட்லீஸ்ட் தேர்தலில் வெற்றிபெறவாவது) மதுவிலக்கை, அதனால் வரும் பெயரை
   திருடிக்கொள்ள நினைக்கும்
   திருடர் முன்னேற்ற கலகம்
   செய்வது சரியென்று உங்களுக்குத் தோன்றுகிறதா?

   சரி என்றே உங்கள் தரப்பில் இருந்துவிட்டுப்போகட்டும்
   அந்த வேலையைச் செய்பவர்கள் அதற்கான புகழை மற்றவர்களுக்கு அதுவும் தங்கள் பரம எதிரிகளுக்கு விட்டுக்கொடுக்கவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்.

   பி.கு. நான் இந்தவிஷயத்தில் பூரண மதுவிலக்குக்கு எதிர்கட்சி. 🙂
   என் கோப்பை என் உரிமை ரகம்.

   • Antony சொல்கிறார்:

    Hi today.and.me,
    I never argued who is right or who is wrong. That particular point was a news to me. So I just wanted to clarify my understanding. Have you found anything offensive in that?

    • today.and.me சொல்கிறார்:

     நண்ப அந்தோனி,

     அஃபென்சிவ் ஆக இருக்கலாமோ என்று நீங்கள் ஏன் கருதவேண்டும். அது ஆளுங்கட்சியின் ( அது திமுகவோ அதிமுகவோ காங்கிரஸோ ) உரிமையாக இருக்கக்கூடாதா? உங்களுடைய புரிதல் இந்த இடத்தில் தவறு என்றே நான் கருதுகிறேன்.

     யார் தப்பு யார் சரி என்பதை விட
     சரியாகச் செய்ய நினைப்பதை
     யார் தப்பாக ஆக்க முயல்கிறார்கள் என்பதுதான் இடுகையின் கருத்து என நான் நினைக்கிறேன்.

     • today.and.me சொல்கிறார்:

      சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால்
      தன் மகன் (மக்கள்) செத்தாலும் பரவாயில்லை
      மருமகள் (ஆட்சி) தாலியறுக்கவேண்டும்
      என்ற கொள்கை.

 3. today.and.me சொல்கிறார்:

  இணையத்தில் வாசிக்கும் தமிழர்கள், இந்தியர்கள், எல்லாருமே
  முட்டாள்கள் என்று எண்ணிக்கொண்டு
  இன்னொரு பைத்தியக்காரத்தனம்,

  பேசியவனே பதிவு செய்து வெளியிட்டிருக்கிறானே, இந்த அசிங்கத்தை எங்கே கொண்டு கழிப்பார்கள்?

  வைகோ சொன்னமாதிரி இவர்கள் இந்தத் தொழில் செய்வதற்குப் பதில் வேறு ஏதாவது செய்யப்போகலாம். தவறாகச் சொல்லவில்லை, எத்தனையோ ஏமாற்றுத் தொழில்கள் உலகத்தில் உண்டு.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப டுடேஅண்ட்மீ,

   லிங்க் – கொடுத்தமைக்கு நன்றி.
   தனியே பதிவு போடுகிறேன்…!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    டு.டே.அன்ட்.மீ – சரியான சமயத்தில் இந்த லிங்க்கை அளித்துள்ளீர்கள் நன்றி. “வைகோ சொன்னமாதிரி இவர்கள் இந்தத் தொழில் செய்வதற்குப் பதில் வேறு ஏதாவது செய்யப்போகலாம். தவறாகச் சொல்லவில்லை” – சர்க்காரியா அப்போதே விஞ்ஞானபூர்வமான கொள்ளைக்காரர்கள் என்று சரியாகத்தான் கணித்திருக்கிறார். கட்டுமரத்துக்கு என்ன ஒரு வில்லத்தனம்.

 4. Sella சொல்கிறார்:

  “திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும்” – தூ……… (உபயம் விஜயகாந்த்). இவர்கள் இருவருமே செய்வார்கள் என்ற நம்பிக்கை இல்லை. ப.ம.க அல்லது நாம் தமிழர் வந்தால் ஒருவேளை வாய்ப்புண்டு

 5. NS RAMAN சொல்கிறார்:

  Kamaraj opened schools in every village. MK and JJ opened liquor shop in every Street. JJ introduced new business technique elite shop and target and incentives for tasmac sales. Both of them fooling around people for prohibition as tasmac revenue and distillary businesses key revenue for govt and party.
  Regarding election manifesto, both parties completing each other who will be great lier!!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.