கலைஞர் அப்படி என்ன தவறு செய்து விட்டார்…?

.

.

” தொடர்ந்து கலைஞருக்கு எதிராகவே எழுதி வருகிறீர்களே… அப்படி என்ன தவறு செய்து விட்டார் கலைஞர்..? “ என்று கேட்டு ஒரு நண்பர் எனக்கு தனிப்பட மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார். கலைஞர் மீது அவருக்குள்ள பற்று காரணமாக எழுதினாரா அல்லது தமிழகத்தின் சரித்திரம் தெரியாமல் எழுதினாரா என்பது எனக்குத் தெரியவில்லை.

விமரிசனம் தளத்திற்கு எழுதுவது தவிர,
தனிப்பட்ட முறையிலும் சில நண்பர்கள்
எனக்கு இந்த மாதிரி அவ்வப்போது எழுதுவது உண்டு.
சில நண்பர்கள் நல்ல பல செய்தித் தொடர்புகளையும்
கொடுப்பதுண்டு. வலைத்தளத்தில் நான் பார்க்கத்தவறிய
சில செய்திகள், நல்ல கட்டுரைகளும் அவற்றில் அடக்கம்.

அப்படி இன்னொரு நண்பர் எனக்கு அனுப்பி இருந்த
மின்னஞ்சலில், கார்ட்டூனிஸ்ட் பாலா அவர்கள் 02/04/2016
அன்று எழுதியிருந்த ஒரு கட்டுரையும் அடக்கம்.

கலைஞர் – தனது சொந்த நலனுக்காக,
தன் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக –
தன் பதவியை காப்பாற்றிக்கொள்ள,
மேலும் மேலும் சொத்து, சுகம் தேடிக்கொள்ள –


-தமிழ் நாட்டை,
தமிழர்களை –
வஞ்சித்த சம்பவங்கள் எத்தனை எத்தனையோ உண்டு.
தவறுகள் அல்ல அவை ….மன்னிக்க முடியாத குற்றங்கள்.
அவற்றில் ஒன்றினை நண்பர் கார்டூனிஸ்டு பாலா அவர்கள்
இந்த கட்டுரையில் எடுத்துரைத்திருக்கிறார்.

அந்த கட்டுரையை இந்த தளத்தில் பதிவதன் மூலம்
கலைஞர் தமிழர்களுக்கு செய்த, இது போன்ற மன்னிக்க
முடியாத, மறக்கவே முடியாத பல துரோகங்கள் தான்
நமது கோபத்துக்கான காரணம் என்பதை தெரிவித்துக்
கொள்கிறேன்.

நண்பர் பாலாவின் உணர்வுகளில் ஆழ்ந்த துயரத்துடனும்,
கோபத்துடனும் – நாமும் பங்கு கொள்கிறோம்.
——————————————————–

வற்றாது எமது வன்மம்!
————————————-

சில நினைவுகள் நம் வாழ்நாளில் மறக்க முடியாததாக
மாறிவிடும். பிஸ்கெட் சாப்பிட்டபடி அமர்ந்து வெறித்து
பார்க்கும் பாலச்சந்திரனின் கண்கள்..
முத்துகுமாரின் கடிதம்.. கர்ப்பிணி தாயின் வயிறு கிழிந்து வெளியே தொங்கும் சிசுவின் கால்பாதங்கள்
என்று மங்காத சில நினைவுகள் எனக்குண்டு.

அதில் ஒன்று மே 19 அன்று வெளியான தினத்தந்தியின்
இந்த முதல் பக்கம். முதல் பக்கத்தில் இரண்டே இரண்டு
முக்கியச்செய்திகள் இடம்பெற்றிருந்தன. இரண்டுமே
தமிழினத்திற்கு மறக்க முடியாத செய்திகள்.

thina thanthi front page on prabakaran...and mk

பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தளபதிகளின் வீர மரணத்தை
சொல்லும் செய்தி தலைப்பு செய்தியாக இடம்பெற்றிருந்தது.

முள்ளிவாய்க்காலில் ஒரு இனத்தின் பெரும் கனவு
கலைக்கப்பட்ட செய்தி அது.

அதற்கு கீழ் ஒரு செய்தி இருக்கிறது. அது அந்த இனத்தின்
பெரும்கனவு கலைக்கப்பட துணை நின்றதற்காக
கிடைக்கப்போகும் எலும்பு துண்டை பொறுக்க குடும்பத்துடன் டெல்லி சென்ற ஒரு ஈனத்தலைவனின் பதவிவெறி பற்றிய செய்தி.

ஆளும் கட்சிக்கு ஏற்ப மாறிக் கொள்வதுதான் தினத்தந்தியின்
பாலிஸி என்று பொதுவாக தினத்தந்தி குறித்து சொல்வார்கள்.

ஆனால் தமிழின வரலாற்றில் முக்கியத்துவம் பெறும்
இவ்விரு செய்தியையும் முதல் பக்கத்தில் வெளியிட்டதற்கு
அப்போதைய தினத்தந்தியின் செய்தி ஆசிரியரின்
மன உணர்வுகள் முக்கிய காரணமாக இருக்கும்.

ஒரு இனம் அழிக்கப்பட்டு நிற்கும்போது பதவிவெறிக்
கொண்டு டெல்லியில் முகாமிட்ட கருணாநிதியை
அம்பலப்படுத்த தனக்கு கிடைத்த வாய்ப்பாக
இந்த செய்தியை முதல் பக்கத்தில் பயன்படுத்தியிருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தினத்தந்தியின்
இந்த முதல் பக்கம் ஒரு வரலாற்றுச்சுவடு.

ஆண்டுகள் கடந்துவிட்டால் கருணாவின் கண்ணீர் நாடகங்கள் எல்லாம் மறந்துபோகுமா என்ன.

என்ன செய்தாவது போரை நிறுத்திவிட முடியாதா என்று
ஒவ்வொருவரும் ஏங்கி தவித்தபோது, கண்ணீர் அஞ்சலி..
மனிதசங்கிலி என்றெல்லாம் நடித்துப் பார்த்தும் முடியாமல் முதுகுவலி என்று மருத்துவமனைக்குள் ஓடி ஒளிந்து கொண்ட கபட நாடக நயவஞ்சகர் கருணா அவர்களே..

கவலைப்படாதீர்கள்.. உங்களை அத்தனை எளிதில்
தமிழர்கள் நாங்கள் மறந்துவிடமாட்டோம்.

எந்த நாற்காலிக்காக எமது இனத்தை பலி கொடுத்தீர்களோ..
அந்த நாற்காலி உமக்கு எத்தனை கடைசித் தேர்தல் வந்தாலும்
கனவாகவே போகும்.

பலரும் என்னை நோக்கி வைக்கும் குற்றச்சாட்டு
கருணாநிதியை அதிகம் விமர்சிக்கிறேன் என்பது.

உண்மைதான்..

நள்ளிரவு இரண்டு மணிக்கு மூலகொத்தளம் சுடுகாட்டில்
எரிந்து கொண்டிருந்த முத்துகுமார் உடலின் வாசனையை
நுகர்ந்து கொண்டிருந்தபோது எடுத்த முடிவு அது.

என் கோடுகள் இருக்கும் வரை வற்றாது அந்த வன்மம்..

-கார்ட்டூனிஸ்ட் பாலா
2-4-16

—————————————–

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to கலைஞர் அப்படி என்ன தவறு செய்து விட்டார்…?

 1. today.and.me சொல்கிறார்:

  //பலரும் என்னை நோக்கி வைக்கும் குற்றச்சாட்டு
  கருணாநிதியை அதிகம் விமர்சிக்கிறேன் என்பது.

  உண்மைதான்..

  நள்ளிரவு இரண்டு மணிக்கு மூலகொத்தளம் சுடுகாட்டில்
  எரிந்து கொண்டிருந்த முத்துகுமார் உடலின் வாசனையை
  நுகர்ந்து கொண்டிருந்தபோது எடுத்த முடிவு அது. //

  எனக்கும் பல காரணங்கள் உண்டு. அவற்றுள் இதுவும் ஒன்று.

 2. nparamasivam1951 சொல்கிறார்:

  உண்மை. இலங்கை என்ற நாடு உள்ளவரை முள்ளி வாய்க்கால் படுகொலை சரித்திரத்தில் இடம் பெற்று இருக்கும். கலைஞர் அவர்களும் இடம் பெறுவார், மத்திய காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர்களும் இடம் பெறுவார்கள்.

 3. வெ.க.சந்திரசேகரன் சொல்கிறார்:

  பதவிவெறி அதிகார வெறி அனைத்தையும் ஒருங்கே கொண்டவர் தான் முத்தமிழ் வித்தகர் டாக்டர் கலைஞர். அதன் சாட்சி தான் உண்மை கண்டறியும் குழு என்ற பெயரில் ராஜபக்சேவின் விருந்தோம்பலை ஏற்க அனைத்து கட்சி என்ற பெயரில் துரோகிகளின் கும்பலில் தனது மகளையும் பங்கேற்க்க அனுப்பியது. முள்ளிவாய்க்கால் என்பது பிரபாகரனை பொறுத்தவரை தன் வலியும் மாற்றான் வலியும் அறிந்து யுக்திகளை வகுக்க தவறியதன் விளைவு என்றால் தமிழகத்தை பொறுத்தவரை தலைவர்கள் என்று கூறிக்கொள்பவர்களின் சுயநலத்தால் அடைந்த தோல்வி.

 4. selvarajan சொல்கிறார்:

  கலைஞர் என்றால் சும்மாவா … ? எவ்வளவு ” நல்லவர் ” — அவர் குடும்பத்திற்கு … ! இந்த இடுகைகளை ஜாலியா படித்து பாருங்கள் — இந்த வயதிலும் யாருக்காக உழைக்க துடிக்கிறார் என்பது ஓரளவு புரியும் … !! — // 1 . .கலைஞர் காட்டும் பாதை !தலைவரே – பேட்டியாளரு கெடக்காரு பச்சா ! புச்சு புச்சா ரெட் ஜெயண்ட், க்ளொவ்டு நைன் …
  Posted on பிப்ரவரி 18, 2010 by vimarisanam – kavirimainthan — 2 . குடும்பமே கழகமானது ! போதுமா பதவிகள் !! ஒரு குடும்பத்திற்கு 5 பேர் மட்டுமே !
  Posted on மார்ச் 18, 2010 by vimarisanam – kavirimainthan — 3 .
  அசுர வேகத்தில் தப்பான செயல்கள் – கலைஞரின் புதிய மதுபான தொழிற்சாலைகள் !
  Posted on செப்ரெம்பர் 19, 2010 by vimarisanam – kavirimainthan —.4 . .பிழைக்கும் வழி – Posted on பிப்ரவரி 23, 2011 by vimarisanam – kavirimainthan — 5 .கலைஞர் – கலைஞர் தான் !
  Posted on ஜூன் 12, 2011 by vimarisanam – kavirimainthan // — இவை எல்லாவற்றையும் விட ” இது ஒன்றே ” போதும் // கலைஞர் அவர்களே கவலை வேண்டாம் – நீங்கள் நேற்று சொல்லி இருப்பதையும், சொல்லாமல் விட்டதையும் – சேர்த்தே நினைவு கூர்கிறோம்….
  Posted on ஒக்ரோபர் 14, 2013 by vimarisanam – kavirimainthan // கார்ட்டூனிஸ்ட் பாலா அவர்கள் இன படுகொலை என்கிற கலைஞர் அவர்களின் ஒரு முகத்தை மட்டுமே காட்டியுள்ளார் — ஆனால் திரு .கா.மை . அவர்கள் தளம் துவங்கியதில் இருந்து இன்று வரை ” தானை தலைவர் ” அவர்களின் பல முகங்களையும் { முகமூடி போட்டது — போடாதது } காலத்திற்கு ஏற்ப மாறும் ” பச்சோந்தி வண்ண ” முகங்களையும் — பல இடுகைகளில் — கலைஞர் ஆட்சியில் இருந்த போதும் — இல்லாதபோதும் எழுதி குவித்திருக்கிறார் … மேலே உள்ள சில இடுக்கைகள் சும்மா ஒரு ” சாம்பிள் ” தான் — நண்பர்கள் . இடுக்கையின் பக்கத்தில் உள்ள ” தேடு ” என்பதில் ” கலைஞர் என்று — டைப் செய்தால் — ” குடும்ப நல விரும்பியின் ” — அனைத்து பதிவுகளையும் வருட வாரியாக படித்து இன்புறலாம் … !!!

 5. gopalasamy சொல்கிறார்:

  1. Allowed Karnataka to construct dams in caveri river during 1971/74.
  2. Failed to renew the contract with Karnataka in 1974.
  3. acted as per Indra’s wish in Kachatheevu matter
  4. During initial period of emergency, acted against magazines and news papers.
  5. handling srilankan tamil people problem as per his benefit.6. there are so many question marks about his and his son’s personal life.
  6. in 1971 introduced liquor
  I don’t want to mention about political murders , his policy on hindi, his mega corruptions.

  • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

   கோபாலசாமி அவர்களே, கருணானிதியின் ஒவ்வொரு தவறுக்கும், அவருக்குப் பலன் அளிக்கும் மற்றொரு செயல் ஒளிந்திருக்கும். இதை நான் சேலஞ்சாகவே நண்பர் டு.டே.அன்ட்.மீக்கும், மற்றவர்களுக்கும் தெரிவிக்கிறேன். நான் எல்லாவற்றையும் சொல்ல விரும்பவில்லை. மற்றவர்கள் கண்டுபிடித்து எழுதவேண்டும் என்று விழைகிறேன்.

   Karnataka to construct dams – பெங்களூரில்ல் சொத்து சேர்த்தல். நிலம் வாங்குவது
   சர்க்காரியா கமிஷன் – Not to table and not to proceed with any further case against – கச்சத்தீவு கண்டுகொள்ளாமை
   During emergency acted against magazines/newspapers – இது கருணானிதி செய்ததல்ல. அவர் இந்திராவுக்கு எதிராக அவரின் உயிருக்கு அச்சுருத்தல் செய்ததற்கு (மதுரையில்), எமெர்ஜன்ஸியின்போது, மத்திய அரசாங்கத்தின் ஆர்டரின் பேரில், கருணானிதி கண் முன்பாகவே, ஸ்டாலினுக்கு பூசை விழுந்தது. அவரும் கைதுசெய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்திராவின் பதிலடியையும் அவரின் சக்தியையும் புரிந்துகொண்ட கருணானிதி, சரணாகதி அடைந்து சட்ட சபைத் தேர்தலில் பாதி இடங்களைப் பகிர்ந்துகொண்டார். (Analogy – 2G மற்றும் கலைஞர் தொலைக்காட்சி வழக்கு காரணத்தில் அடித்துப் பிடித்து 63 சீட்டுக்கள் காங்கிரஸ் 2011ல் வாங்கியது)

 6. srinivasanmurugesan சொல்கிறார்:

  கலைஞர் தமிழகத்தில் என்று மதுவிலக்கை ரத்து செய்தாரோ அன்றிலிருந்து இன்று வரை அவரை எதிர்த்து வருகிறேன்.

 7. CHANDRAA சொல்கிறார்:

  Why i do not like karunaji to come to power
  Karunas hatred against hindus hindu festivals
  Karunas channels do not even mention the names of hindu festivals VIDUMURAI KALA SIRAPPU NIGAZZHHCCHI
  Karunas glorification in public functions
  Karuna would sit hours and listen HIS GREATNESS from
  speakers
  I had once heard a meeting chaired by veeramani of dk
  I was shocked tonote his IMMENSE JOY>>>
  When veeramani was abusing a community
  womenfolk in that community………
  i do not belong to that community
  but such hatred upon your fellow human beings
  is to be condemned by all
  there are many mor…………e reasons

  • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

   எம்ஜியார் அவர்கள் கருணானிதியைக் காரணமில்லாமல் திருக்குவளைத் தீய சக்தி என்று சொல்லவில்லை. கருணானிதி சொல்வதோ செய்வதோ, தன்னுடைய சொந்த நலத்துக்குத்தானே தவிர, அவர் அந்தக் கொள்கையை நம்புவதாலல்ல. ஒவ்வொரு சமயத்திலும் தனக்கு ஏற்றவாறு திரித்துச் சொல்லுவார். அவருடைய அரசியல் வாழ்க்கை முழுவதும் இந்தப் பொய், புனைசுருட்டுக்களைப் பார்க்கலாம். அவர் ஒரு கொள்கையைப் பின்பற்றினார் என்று சொல்வதற்கு ஒரு உதாரணமும் கிடையாது.

   1. பிராமண எதிர்ப்பு – அவருடைய ஆடிட்டரிலிருந்து, யோகா குருவிலிருந்து, டாக்டரிலிருந்து, அவர் வழக்குகளை நடத்துபவரிலிருந்து எல்லாம் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கேட்டால், பிராமணீயத்தை எதிர்க்கிறேன், பிராமணர்களை அல்ல என்ற வியாக்யானம்.
   2. தீவிர இந்து எதிர்ப்பு – இது பிராமண எதிர்ப்பின் விரிவு. இதனால் தனது சுப வீரபாண்டியன், வீரமணி போன்ற அல்லக்கைகளின் ஆதரவு, இஸ்லாமிய கிருத்துவ ஆதரவு போன்றவற்றைப் பெறுவது நோக்கம். இது பாஜக வளர வழிசெய்துவிடும் என்பதை அறிந்து, இப்போது ஸ்டாலின் மூலமாக 90 சதவிகிதம் திமுகவில் இந்துக்கள் என்று அறிக்கை விடுவது.
   3. கடவுள் இல்லை – ஆனால் அவரின் குடும்பமே கடவுள் பக்தியிலும் யாகத்திலும் திளைப்பது. வீட்டுக்கே சத்ய சாயிபாபா வந்தவுடன் அவர் காலில் குடும்பத்தினர் விழுவதை ஆதரிப்பது. இதற்கு அல்லக்கைகள் வியாக்யானம்.
   4. ஹிந்தி எதிர்ப்பு – தயானிதிக்கு இந்த வயதில் கேபினட் அமைச்சர் பதவி கொடுத்ததற்கு, அவருக்கு ஹிந்தி தெரியும் என்ற விளக்கம். அப்புறம் எதற்கு தமிழும் தெரியாத அழகிரிக்கு மந்திரி பதவி வாங்கிக்கொடுத்தார் என்று கேட்பதற்கு ஒருவருக்கும் வாயில்லை (including அல்லக்கைகள்)
   5. கூடா நட்பு என்று சொல்லி கடைசி நேரத்தில் காங்கிரஸை விட்டு விலகியது – அவர்களிடமே சரணாகதி அடைந்து தன் மகளின் எம்.பி பதவிக்காக கொள்கையை அடமானம் வைத்து காங்கிரஸ் ஆதரவைப் பெற்றது. இப்போது சட்டசபைத் தேர்தலுக்காக கூட்டு சேர்ந்தது. இவர் எத்தர் என்றால், காங்கிரஸ் எத்தர்களுக்கு எத்தர் என்பது இன்னும் அவருக்குப் புரியவில்லை. இதன் விளைவு பாராளுமன்றத் தேர்தலில் தெரியும்.

   தினத் தந்தியில் இந்தப் பக்கமும், ஏசி கூலர்களின் துணையோடு, துணைவி, இணைவி ஆகியவர்களுடன் கடற்கரையில் 2 மணி நேரம் உல்லாசமாகப் படுத்துறங்கிய படமும், கனிமொழி/திருமா போன்றவர்கள் காலில் விழாத குறையாக ராஜபக்ஷேவிடம் பல்லைக் காட்டிப் பேசி, அவர் தந்த பரிசை வாங்கிக்கொண்டுவந்த வீடியோவும், அவர் காலம் முடிந்தபின்பும் கருணானிதியின் பெருமையைச் சொல்லிக்கொண்டிருக்கும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.