மதுவிலக்கு – ஜெ.அறிவிப்பு – எப்போதோ வந்திருக்க வேண்டியது….!!!

tasmaac

இன்று மாலை தீவுத்திடலில், முதலமைச்சர் ஜெ. அவர்கள் கூறிய ” பூரண மதுவிலக்கு ” பற்றிய அறிவிப்பு எப்போதோ வந்திருக்க வேண்டியது…..!!!

அப்போது அது வராததற்கு காரணம் –
நேற்று இதே வலைத்தளத்தில் வெளிவந்த –
” தேர்தல் அறிக்கை ” சஸ்பென்ஸ் – காமெடி …!!!” யை
படித்தால் புரியும்….

அந்த இடுகையிலிருந்து, அந்த பகுதி கீழே –

——————-

அதிமுக வேண்டுமென்றே தேர்தல் அறிக்கையை
வெளியிடுவதை தாமதிப்பதற்கும், ரகசியம் காப்பதற்கும்
காரணம் இருக்கிறது…!

கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்னரே,
முதல்வரின் ஆலோசனைப்படி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை

அமுல்படுத்துவதற்கான முறையான திட்டத்தை கோட்டையில்
மூத்த அதிகாரிகள் தயார் செய்துகொண்டிருந்தனர்…

அது கடைசிகட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது,
கலைஞருக்கு வேண்டப்பட்ட ஒரு மூத்த அதிகாரியின் மூலம்
கலைஞருக்கு “லீக்” செய்யப்பட, இரவோடு இரவாக
ராத்திரி ஒன்பதரை மணிக்கு கோபாலபுரத்தில், கலைஞரின்
இல்லத்திலேயே வெற்று பேப்பரில், ஒரு நாலுவரி
அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஸ்டாலினால் செய்தியாளர்களின்
முன்னிலையில் வாசிக்கப்பட்டது –

“திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும்….. கலைஞர் பதவியேற்றவுடன் போடும் முதல் கையெழுத்தே, மதுவிலக்கு கொண்டு வரப்படுவது”
குறித்ததாக இருக்கும்…..!!!

திமுக தலைவரின் அறிவிப்பின் விளைவு,
தமிழக அரசு தயாரித்து வந்த திட்டம் குப்பைக்கூடைக்கு
சென்றது.

அன்று பிடித்த சனி தான் இன்னமும் தமிழகத்தை
ஆட்டிப் படைக்கிறது. என்றோ அமுலுக்கு வந்திருக்க
வேண்டிய மதுவிலக்கு திட்டம் இன்னமும் ஒளிந்துகொண்டு
இருக்கிறது.

——————

இன்றைக்கு முதலமைச்சர் ஜெ. அவர்கள் இந்த அறிவிப்பை
வெளியிடுவார் என்று என் உள்மனம் சொல்லிக்கொண்டே
இருந்தது.

நடந்து விட்டது.
மகிழ்ச்சி…..!

இனி மதுவிலக்கை வைத்து யாரும் அரசியல் பண்ண முடியாது.
தமிழகத்தின் அசிங்கமான கலாச்சாரம் விரைவில் தொலையும்
என்று எதிர்பார்க்கலாம்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

20 Responses to மதுவிலக்கு – ஜெ.அறிவிப்பு – எப்போதோ வந்திருக்க வேண்டியது….!!!

 1. Surya சொல்கிறார்:

  ADMK is the current ruling government. If they didn’t do in their 5 year period, let’s not give reasons for not achieving. The reason given by you does not consider the people, and just thinks about getting all the credits.

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப சூர்யா,
   இதிலே அச்சீவிங் எங்கே வந்தது?

   ஏற்கெனவே கொடுக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில் நம்பிக்கையூட்டி திருவாளர் முத்துவேல் கருணாநிதி போல் ஆட்சிக்கு வந்ததும் அம்போவென்று தூக்கிப்போட்டுவிட்டு மதுக்கடைகளை திறந்திருந்தால் சொல்லலாம்.

   ——–

   நன்றி : ஆ. நோபிள்.

   1991 ல் கள்ள சாராயத்தை ஒழித்தே தீருவேன் என்று அறிக்கை கொடுத்தார். ஒழித்து காட்டினார்.

   2001 – ல் முதல் அறிக்கையாக ‪#‎லாட்டரி‬ சீட்டு ஒழிக்கப்படும் என்றார் ஒழித்தார்…!!!

   2011 – ல் முதல் அறிக்கையாக ‪#‎மின்வெட்டை‬ ஒழித்தே தீருவேன் என்றார் ஒழித்தார்…!!!

   2016 – ல் முதல் அறிக்கையாக ‪#‎மதுவை‬ ஒழிப்பேன் என்றார் கட்டாயம் ஒழித்துகாட்டுவார்…!!!

   நான் ஒரு அறிவிப்பை வெளியிட்டால் அதை நடைமுறை படுத்தாமல் விடமாட்டேன் என்பது உங்களுக்கே தெரியும்.
   மதுவிலக்கு படிப்படியாக கொண்டு வந்து பூராண மதுவிலக்கு கொண்டு வரப்படும் – முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவிப்பு.
   .
   ————-

   • Dhanapal சொல்கிறார்:

    2011 – ல் முதல் அறிக்கையாக ‪#‎மின்வெட்டை‬ ஒழித்தே தீருவேன் என்றார் ஒழித்தார்…!!!

    Really???? Sivakasi must be out of TN since powercuts are continuing here

 2. selvarajan சொல்கிறார்:

  ஓட்டு பொறுக்க … இனி யார் எப்படி மதுவிலக்கை வைத்து புலம்பினாலும் — முதல் கையெழுத்து போட்டாலும் சரி — இரண்டாவது கையெழுத்து போட்டாலும் சரி — கை – நாட்டு வைத்தாலும் சரி — தன்னுடைய நிலைப்பாட்டை ” உறுதியாக ” தைரியமாக சொல்லிவிட்டார் — முதலமைச்சர் ஜெ . அவர்கள் … சபாஷ் — சரியான செயல் … !!!

 3. balumahendran சொல்கிறார்:

  ஆறு மாதத்திற்கு முன்னரே அதிமுக அரசு மது விலக்கை அமல்படுத்த முனைந்ததாம். திமுக அறிக்கை விட்டதால் பின் வாங்கி விட்டதாம். இதை வேறொரு இடத்திலும் கூட படித்தேன்.
  Let’s talk facts. You are not what you say, you are what you do.
  ஆறு மாதத்திற்கு முன்னரே படிப்படியாக மது விலக்கை அமல்படுத்த ஆரம்பித்திருக்கலாமே? அடுத்த ஆட்சி வரை எதற்கு காத்திருக்கணும்?
  And, the problem is not only reducing the shop timing and number of shops but also to give quality liquors.
  கா.மை. ஜி,
  மீண்டும் சொல்கிறேன். அதிமுக என்றால் தட்டிக் கொடுத்தும், பிற கட்சி என்றால் தலையில் கொட்டியும் எழுதுகிறீர்கள். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளில் அதிமுகவை மட்டும் விமரிசனம் செய்வதில்லை. விமரிசனம் என்ற உங்கள் ப்ளாக் பெயருக்கே இது முரணாக இல்லையா?

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப பாலுமகேந்திரன்

   மீண்டும் முந்தைய பதிவைப் படித்துப் பார்த்துவிட்டு இங்கே வரவும். ஏன் என்பது உங்களுக்கே புரியும்.

   மேலும் பூரண மதுவிலக்கு என்பது ஒரே கையெழுத்திலேயோ, முதல் கையெழுத்திலேயோ, உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான பரந்து விரிந்த இந்தியாவில் தக்குண்டு தமிழகத்தில் மட்டுமோ சாத்தியமே இல்லை என்பதுதான் என் கருத்து.

   ———–
   மற்றபடி,
   மீண்டும் எனது பதிவை இங்கே மீள்பதிவிட உதவிய உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. 😀
   அனுமதித்த காமைஜிக்கு நன்றி.

   92 வயது சாணக்கியர் – மதுவிலக்கு காய் நகர்த்தலில் ஏமாறுவாரா என்ன …?

   1. 92 வயது சாணக்கியரை மட்டுமில்லை,

   2. குடியில் ஊறிப்போன உடல்களோடு உயிர்வாழும், மனிதர்களையும் மனிதர்களாகப் பார்க்கவேண்டிய மருத்துவம் படித்த, சுகாதரத்துறை அமைச்சராகப் பணியாற்றிய, முதல்கையெழுத்தாக மதுவிலக்கு என்று ஒரு பச்சைப் பொய்யான வாக்குறுதியைத் தந்த ஒரு மருத்துவரையும்

   3. சதா தண்ணியிலே மிதக்கும் ஒரு தரைதட்டிய கப்பலின் கேப்டனையும்

   4. தண்ணியைப் போட்டுவிட்டு வந்து மேடையில் தொண்டை நரம்பு புடைக்க கத்திவிட்டு மீண்டும் தண்ணியைப் போட்டுத்தூங்கும் சிவப்புத் தமிழரையும்

   ஒரேயடியாய் தலையால் தண்ணி குடிக்கவைத்து
   தண்ணிகாட்டிக்கொண்டிருக்கும்
   ஜெஜெயின் சாணக்கியத்தனம்
   சிம்பிளி சூப்பர்ப்.

   —————

   என்னுடைய பல கேள்விகளுக்கு இன்று முதல்வர் அளித்த மதுவிலக்கு குறித்த உரை விளக்கமளிக்கிறது.
   ஆரோக்கியமான தமிழக எதிர்காலம் கண்ணுக்குத் தெரிகிறது.

   https://todayandme.wordpress.com/2015/07/23/92-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/#comment-23

   • balumahendran சொல்கிறார்:

    today.and.me,
    1. எந்த முந்தைய பதிவு? உங்களுடையதா அல்லது கா.மை.னுடையதா?
    2. பூரண மது விலக்கை ஒரே நாளில் அமல்படுத்தவேண்டும் என்று நான் சொல்லவில்லையே!
    3. உங்கள் லின்க்கை படித்தேன். சில கருத்துகளில் உங்களுடன் உடன்படுகிறேன். உங்களுடைய ஐந்தாவது பாயிண்ட்-ஐ நினைத்து சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை!

  • B.Venkatasubramanian சொல்கிறார்:

   விமரிசனம் என்பது எழுதுபவரின் பார்வையில் சரி, தவறு
   என்று தோன்றுவதை எழுதுவது தான்.
   உங்கள் பார்வையில் தோன்றுவதை அல்ல.
   ஏன், நீங்கள் திரு. கருணாநிதிக்கு வக்காலத்து வாங்குவதை
   எப்படி நியாயப்படுத்துவது ?

 4. NS RAMAN சொல்கிறார்:

  TASMAC CEO JJ developed the business for past 5 years with new ideas like elite bars and target schemes. Now she is promising prohibition. So called intelligent administrator ?? doesn’t know liqor is harmful before expanding tasmac? Both parties playing with life of people of Tamil Nadu and fooling around with prohibition policy.

  • B.Venkatasubramanian சொல்கிறார்:

   Mr.Raman,

   If you are so much worried about prohibition
   not being implemented, WHY NOT YOU SUGGEST
   YOUR BJP BOSSES at the Centre to implement
   it on all India level. ( Prohibition is included in the
   Constitution as Directive Principle of State Policy )
   You will not answer and runaway like your Fuse I know.
   Mr. Fuse is yet to answer the questions put to him
   by the TN news reporters . Your BJP fellows are
   fit for nothing except talking.

   • Surya சொல்கிறார்:

    The question is why ADMK did not implement. Since you do not have an answer, you folks are pointing fingers on DMK, BJP and all others.

    Can ADMK supporters accept you folks are not capable first?

    This article talks about an info leak 6 months back and points that as the reason for delay. Let’s stick to that point and not talk of other items to deviate the topic. This applies to TODAY.AND.ME as well.

   • LVISS சொல்கிறார்:

    it is for the state govt to enforce prohibition in a state –thats why the states like kerala and bihar are doing it on their own and not asking the central govt to do it for them – — –the directive principles are guidelines given to central and state govts —

   • NS RAMAN சொல்கிறார்:

    Mr B VENKATADUBRAMANIAN

    I am not an employee or slave to any political party like you. First try learn how to write in a blog with out personal attack. If some one not supporting your views he need not be called as BJP BAKTHAR. So please come out of narrow political mentality.

    As I a social responsible person I am supporting prohibition and any party implement I will support. Since excise on liquor is state revenue center cannot do anything. My view is State selling liquor as a business model is not acceptable and cannot be called as welfare state.

 5. CHANDRAA சொல்கிறார்:

  mr cho had suggested the SAME a few weeks back
  jaya is not wrong in her proposals
  all know that she never talks or promises what she cannot do
  just observe stalins MEGA PLANS nowadays
  all know that how he functioned as deputy c m
  there were many occasions when he skipped many
  important files issues…… and suggested CMS NAME
  JAYA never shifts her responsibility to others
  Regarding the opening of ELITE LIQUORS
  I have to tell that all capitals in india have this
  elite liquors……….

 6. LVISS சொல்கிறார்:

  now all parties are saying the same thing ,that they will enforce prohibition — if aiadmk doesnt say it they will be left behind –as they have announced it can be done only in stages – any way it is a good decision — the country seems to be moving towards prohibition — gujarat is already having it , recently kerala joined and bihar has also brought in prohibition —
  which govt lifted prohibition in tamil nadu that was in place for many years –those who wanted to drink went to the nearby state —because of the revenue aspect subsequent govts did not want to enforce –now there seems to be some consensus on this issue in all parties —

 7. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  பாமக ஆரம்பித்துவைத்தது. மதுவிலக்கு அல்லது மதுபானக் கடைகளைக் குறைப்பது என்று யார் செய்தாலும், ராமதாசுக்கு மட்டுமே அந்தக் கிரெடிட் போய்ச் சேரவேண்டும். வேறு எந்தக் கட்சியும் இந்த விஷயத்தில் அரசியல் மட்டும்தான் செய்கிறது. பாமகவுக்கு இது ஒரு கொள்கையாகவே இருக்கிறது. “முதல் கையெழுத்து” என்பது யோசனை இல்லாமல் சொல்லப்படுவது. இதை திமுக காப்பி அடித்துள்ளது. (கருணானிதி ஒருபோதும் இதைச் சொன்னதில்லை. அவ்வப்போது ஸ்டாலினும் கனிமொழியும் மட்டும்தான் இதைப் பற்றிப்பேசுகிறார்கள். இதில் கருணானிதியின் கள்ளத்தனம் இருக்கிறது). இதை சாராயம் தயார் செய்யும் திமுகவும், சிகரெட் விற்கும் வைகோவும் சொல்வது காமெடியின் உச்சம்.

  இது (மதுவிலக்கு) பெரும் தாக்கத்தை மக்கள் மத்தியில் உண்டுபண்ணியிருப்பதாலும், அரசியல் உத்தியாக இருப்பதாலும், இளையோர்கள் மனதில் கடைகள் மிகவும் குறைக்கப்படவேண்டும் என்ற எண்ணம் இருப்பதாலும், ஜெ அவர்கள் படிப்படியாகக் குறைக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். லாட்டரிச்சீட்டைத் தடை செய்தது ஜெ. லாட்டரி மார்ட்டினிடம் கதை வசனம் எழுதியதற்காக 50 லட்சம் மற்றும் பாராட்டுவிழா பெற்றுக்கொண்டது (வேறு என்ன.. சட்டப்படியான லஞ்சம்தான்) கருணானிதி. அவர் சொன்னதைச் செய்வார். இதற்கு முன்னால் செய்யாததற்குக் காரணம், சொன்ன இலவசங்களைக் கொடுத்தாக வேண்டிய கட்டாயம்; மற்றும் கடைகள் குறைப்பிற்கு முற்றிலும் அவருக்குப் பெருமை சேராது; வாக்கினை அளிக்காது என்ற காரணம். இல்லாவிட்டல் பாராளுமன்றத் தேர்தலின்போதே, ஜெ அறிவிப்பார்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். அவரும் ஒரு கட்சியின் தலைவி; அரசியல் காரணங்களுக்காகச் செயல்படுவது புரிந்துகொள்ளக்கூடியதுதான்.

  ஜெ சொன்னால் செய்வார் என்பது நிச்சயம் மக்கள் நம்புவது. செம்பரம்பாக்கம் கதை, மத்தியக் குழுவின் அறிக்கையினால் கலைந்துவிட்டது. இப்போது எதிர்க்கட்சிகள் வேறு காரணத்தை ஆராயவேண்டியதுதான். திமுக “ஊழல்” என்று கூக்குரலிட்டால் அவர்கள் கட்சித் தொண்டர்களும் மேடையில் இருக்கும் மற்ற தலைவர்களும் சிரிப்பு வருவதைத் தடுக்கமுடியாது. கருணானிதி இனி நம்புவது ஒன்றே ஒன்றுதான். “60 வருடம் அரசியலில் மக்களுக்காக சேவை செய்துவிட்டேன். இது கடைசித் தேர்தல். 93 வயதில் உழைக்கும் எனக்கு வாய்ப்பு தாருங்கள் என்பதுதான்”

 8. SELVADURAI சொல்கிறார்:

  ஐந்து வருடங்கள் ஆட்சி செய்த அம்மா கடைசி நாள்வரை தமிழ்நாட்டில் மட்டும் மதுவிலக்கு சாத்தியம் இல்லை என்று கூறிக்கொண்டுதான் இருந்தார். இப்போது தேர்தல் ஜுரம் வந்துவிட்டதால் எங்கே பின்தங்கிவிடுவோமோ என்கின்ற பயத்தில் “படிப்படியாக” இறங்கிவிட்டார் என்பதே உண்மை. உண்மையிலேயே மதுவிலக்கில் ஆர்வம் இருந்தால் அவர் கூறியுள்ள படிகளில் ஒன்றிரண்டாவது தனது ஆட்சியின் கடைசிக் காலங்களில் எடுத்து இருக்கலாமே. அன்றே கருணாநிதி மற்றும் ஏனையோருக்கு நாடகமாட ஒரு சந்தர்ப்பம் இல்லாது போயிருக்கும். திட்டம் தயாரித்து குப்பையில் போடுவதுதான் அம்மாவின் திராணியா? நண்பர் காவிரிமைந்தன் அவர்களே உங்களைப் போன்ற அறிவு ஜீவிகள் கூட இவ்வாறு சப்பைக்கட்டு கட்டி ஒரு சார்பாக பதிவு இட்டால் யாரிடம் சென்று முறையிடுவது?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப செல்வதுரை,

   எனக்கு “அறிவுஜீவி” பட்டமெல்லாம் வேண்டாம்…
   நான் ஒரு “இதயஜீவி”…
   மூளை மட்டும் கொண்டு யோசிக்காமல்
   இதயத்தூடும் யோசிக்கிறேன் – அவ்வளவே…
   நீங்களும் திறந்த மனதோடு யோசித்தால்
   கீழ்க்கண்ட உண்மைகள் புலப்படும்…

   கோட்டையில் போடப்பட்டு வந்த மதுவிலக்கு குறித்த
   திட்டங்களை, சார்பு அதிகாரிகள் மூலம் அறிந்து
   அவசர அவசரமாக இரவு ஒன்பதரை மணிக்கு கலைஞர்
   ” அம்மாவுக்கு முந்தி “அறிவிக்கச் செய்தது அரசியல்.

   அதனால், கலைஞர் மேல் கொண்ட சினத்தால்,
   மதுவிலக்கு சாத்தியமில்லை என்று அம்மா சொல்லி
   வந்ததும் அரசியல்.

   தேர்தல் சமயத்தில், யாரும் மதுவிலக்கை வைத்து
   வியாபாரம் செய்யாமல் இப்போது தடுத்தது அம்மாவின்
   புத்திசாலித்தனம் ….

   பெண்களுக்காகவும், நலிந்த மக்களுக்காகவும் பல
   திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெ. என்பதை
   யாரும் மறுக்க முடியாது.
   அவர் சாராயக்கடைகள் தொடர்வதை விரும்புவார்
   என்று இன்னமும் சொல்லி வருவது ஒன்று பேதைமை
   அல்லது பகைமை.

   அரசியலை ஆழ்ந்து கவனித்து வருபவர்கள்
   கட்சி வேறுபாட்டிற்கு அப்பாலும் இதை உணர்வார்கள்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.