பிரதமருக்கு தேவையா இந்த “கேவலம்…” ?

Modiji kolkatta

மேற்கு வங்கத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில்,
பாஜக வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போயிருக்கிறார்
பிரதமர் மோடிஜி.

பாஜக கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட –
தான் இந்த நாட்டின் அனைவருக்கும் பொதுவான “பிரதமர்”
பதவியை வகிக்கிறோம் என்கிற நினைப்பே இன்றி,
நாலாந்தர அரசியல்வாதிகளைப் போல் மே.வங்க முதல்வர்
மம்தா பானர்ஜியை சகட்டுமேனிக்கு தனிப்பட்ட
முறையில் வசைபாடி இருக்கிறார்.

கொல்கத்தாவில் அண்மையில் பெரிய பாலம் ஒன்று சரிந்து
விழுந்து 21 பேர் மரணமடந்த விஷயத்தை கூட தனக்கு
சாதகமாக பயன்படுத்தி –

“இந்த விபத்து கடவுள் மேற்கு வங்க
மக்களுக்கு அனுப்பி இருக்கும் செய்தி – மம்தா பானர்ஜியை
மீண்டும் பதவியில் அமர்த்தாதீர்கள் என்று சொல்லும் சேதி” –

– என்று ஒரு சாதாரண ஆர்.எஸ்.எஸ்.
பிரச்சாரக் போல் உளறி இருக்கிறார்.

மற்றொரு கூட்டத்தில் மம்தா பானர்ஜியின் திரினமூல்
காங்கிரஸ் கட்சியை –

“Now TMC [Trinamool Congress] stands for –
T for terror,
M for Maut (death) and
C for corruption,”

என்று வர்ணிக்கிறார். வர வர – தேர்தல் கூட்டங்கள் என்றால், நம்ம ஊர் வைகோவுக்கும், டெல்லி மோடிஜிக்கும்
மொழி ஒன்றைத்தவிர வேறு வித்தியாசமே இல்லை…!

இங்கு இரண்டு விஷயங்களை குறிப்பிட வேண்டும்..

ஒன்று – ” பிரதமர் ” என்கிற அரசியல் சட்டப்படியான
பதவியில் இருந்து கொண்டு,
“மாநில முதலமைச்சர் ” என்கிற அரசியல் சட்டப்படியான
பதவியில் இருக்கும், மரியாதைக்குரிய மற்றொரு நபரை
இப்படி வசை பாடுவது எந்த விதத்தில் சரி …?

( பதிலுக்கு, கடுப்பில், அந்த கட்சியின் சாதாரண தொண்டன்
ஒருவன் பிரதமரை வசை பாடத் துவங்கினால், இந்த நாட்டு
பிரதமரின் மரியாதை எங்கே பறக்கும்…? )

இரண்டு – மாநில அரசியலில் பிரதமர் தலையிடுவதால்,
பிரதமரை ஆதரிக்கா விட்டால், மாநிலத்திற்கு தேவையான
( சட்டப்படி உரிமையுள்ள ) மத்திய உதவிகள் கிடைக்காமல்
போகும் என்று பயமுருத்துவது எந்த விதத்தில் சரி …?

மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே நிதியை
பகிர்ந்து கொள்வது, அரசியல் சட்டப்படியான கூட்டாட்சி
தத்துவத்தின்படியா அல்லது பிரதமர் மனம் போன போக்கில்
எடுக்கும் முடிவின்படியா …?

ஏற்கெனவே, முதலில் டெல்லி தேர்தலின் போது,
அர்விந்த் கெஜ்ரிவாலுடன் கேவலமான குழாயடி சண்டைகளில்
இறங்கி, பாஜகவுக்கு வரலாற்றுப் புகழ் ‘ரிசல்ட்’ கிடைத்தது…!

அடுத்து பீஹார் தேர்தலில், நிதிஷ்குமாருடன்
தெருச்சண்டையில் இறங்கி, மரியாதையை
காற்றில் விட்டாகி விட்டது. அங்கும் ரிசல்ட் அப்படியே…!

இப்போது அடுத்தது அஸ்ஸாமிலும், வங்காளத்திலும்
நடந்து கொண்டிருக்கிறது. அடுத்து தெற்கே திரும்பி,
கேரளாவிற்கும், தமிழகத்திற்கும் வரக்கூடும்.

ஏன் – பாஜகவில் பிரதமரை விட்டால், பிரச்சாரத்திற்கு
வேறு ஆளே இல்லையா என்ன ..? இனி கார்பரேஷன்,
பஞ்சாயத்து யூனியன் தேர்தலுக்கெல்லாம் கூட பிரதமரைத்தான்
அழைப்பார்களோ ?

அழைத்தால் – பிரதமர் பதவிக்குரிய கௌரவம் தான்
காற்றில் பறக்கும்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to பிரதமருக்கு தேவையா இந்த “கேவலம்…” ?

 1. Ganpat சொல்கிறார்:

  மோடியை புரிந்துகொள்ளவே முடியவில்லை..ஆனால் நடப்பது எதுவும் நல்லதற்கல்ல என்பது தெரிகிறது.

 2. CHANDRAA சொல்கிறார்:

  Well it goes to prove these old men i refer modi ji vaiko ji are not
  fit to campaign
  they lose their mental balance…….
  Already they have little physical energy only………
  km ji also INDESCRIMINATELY uses IMPERTINENT
  words against our P M
  May be because of KM JIS advanced age
  he just throws his arrows
  against politicians…….

  • Gopal சொல்கிறார்:

   Well Mr.Chandra,

   You have the answer in the above blog itself :

   // ” பிரதமர் ” என்கிற அரசியல் சட்டப்படியான
   பதவியில் இருந்து கொண்டு,

   “மாநில முதலமைச்சர் ” என்கிற அரசியல் சட்டப்படியான
   பதவியில் இருக்கும், மரியாதைக்குரிய மற்றொரு நபரை
   இப்படி வசை பாடுவது எந்த விதத்தில் சரி …? //

   // பதிலுக்கு, கடுப்பில், அந்த கட்சியின் சாதாரண தொண்டன்
   ஒருவன் பிரதமரை வசை பாடத் துவங்கினால், இந்த நாட்டு
   பிரதமரின் மரியாதை எங்கே பறக்கும்…? //

   //பிரதமர் பதவிக்குரிய கௌரவம் தான்
   காற்றில் பறக்கும்…!!! //

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப சந்திரா,

   அவர்கள் இருவருக்கும் “எனர்ஜி” நிறையவே இருக்கிறது.
   “ஆசை” (ambitions)-யும் நிறையவே இருக்கிறது.
   அவர்கள் பேசுவது சுயநலம் கருதி …

   நான் (அவர்களையும் விட) வயதானவன் தான்…
   எனக்கு “எனர்ஜி”யும் இல்லை தான்…

   ஆனால், நான் எழுதுவது – சுயநலத்தால் அல்ல…
   எந்த சுய பலனையும் எதிர்பார்த்தல்ல.

   இது என் கடமை என்று நினைத்து எழுதுகிறேன்.

   நான் எடுத்துச் சொன்ன பிறகாவது,
   இந்த கிழவர்களுக்கிடையே உள்ள –
   இந்த வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்
   என்று நம்புகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   ———————————–

 3. paamaranselvarajan சொல்கிறார்:

  தி.மு.க தேர்தல் அறிக்கை … ! ஆகா … ஓகாே … வா இருக்கும் என்று கூறினார்கள் … ஆனால் …?

 4. LVISS சொல்கிறார்:

  When Mr Modi is assigned the job of campaigning for the party by the President of the party he becomes a campaigner , a party man and makes it a point to wear the party symbol–it may be nice to say he belongs to the nation and all this bunkum but the fact is basically he is a BJP member and a product of the RSS – –In Bengal he was only commenting on the TMC rule —
  When he addresses an official audience as a PM abroad or in business seminars you can hear a completely different PM examples — his first address in UN , his address in Afghanistan Parliament , his address to the members of the British Parliament and his first speech in ISRO —
  Others can say whatever they want., call him a psychopath a coward etc , but he, as a campaigner for his party has to maintain silence and dignity –Is this what you are trying to tell us –He has been called by various names and one person wrote something which cannot be repeated here –One lady refers to him as a “poor chap” and another lady writes some thing worse about him which cannot be reproduced here — But Mr MOdi doesnt react to personal attacks by others but takes on only his political opponents —

 5. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  ஒரு பொருளை அளவுக்கு அதிகமாகப் புழங்கவிடுவது பொருளின் மதிப்பைக் கெடுக்கும். எதுக்கெடுத்தாலும் மோடியை முன்னிறுத்துவது பாஜகாவுக்கே நல்லதல்ல.

  அளவுக்குக் கீழான விமரிசனம் செய்வது (low quality campaign) மோடி அவர்களின் மதிப்பைக் குலைக்கும். அவருக்கு என்று ஒரு இமேஜ் அவர் மெயின்டைன் பண்ணுவது அவருக்கு நல்லது. நாட்டுக்கும் நல்லது.

  சமூக ஊடகங்களில் யாரும், யாருக்கும், எந்தப் பதவிக்கும் மரியாதை தருவதில்லை (மிகப் பெரும்பான்மையாக). அதே சமயம் அவர்கள் மற்றவர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள். நான் அறிந்த வரையில், சோ, எப்படிப்பட்ட விமரிசனம் செய்தாலும் அதில் personal attach தனிமனிதத் தாக்குதல் இல்லாமல் பார்த்துக்கொள்கிறார். அவர் இந்திரா அம்மையார் இறந்தபோது அவர் எழுதிய இரங்கலில், சோவின் வெறுப்பை மறைக்க முடியவில்லை. சோவின் இந்த தனிமனிதத் தாக்குதல் இல்லாத விமரிசனம், பொது இடத்தில் எல்லோருடனும் நட்பாகவும் உண்மையான அன்போடும் இருப்பது போன்ற குணத்தினால்தான், அவரின் விமரிசனத்தை வெறுக்கும் கட்சியினரும், அவரிடம் நட்பு வைத்திருக்கின்றனர்.

  • LVISS சொல்கிறார்:

   Mr Nellai Thamizhan sir –You are absolutely right –The BJP is using the PM excessively for the campaign—It is neither good for him nor the party –He is being over worked and it shows in his tired face — He has already delivered a few states for the party—What more do they want from him- They should be happy with it —
   Two admirable things stand out about Mr Cho , one that he doesnt comment about personal matters of any leader and two what the leaders of the parties tell him stays with him —He doesnt use it in his writings —So any leader can confide any matter to him and be sure that it wont be broadcast to others —

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்ப எல்விஸ்,

  பிரதமரை யாரோ கட்டாயப்படுத்துவதாக நீங்கள்
  நினைத்துக் கொண்டிருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

  தான் எதைச்செய்ய வேண்டும்,
  எதைச் செய்யக்கூடாது என்று தீர்மானிக்க கூட
  முடியாத நிலையில் பிரதமர் இருக்கிறார் என்று
  நீங்கள் நினைப்பது அபத்தம். ஒருவேளை உங்களுக்கு
  அந்த நினைப்பு சௌகரியமாகவும், சமாதானமாகவும்
  இருக்கக்கூடும். அது நிச்சயம் நிஜமாக இருக்க முடியாது.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • LVISS சொல்கிறார்:

   Mr K M sorry you didnt get me right –P M is willing to shoulder the responsibility but what I am saying is that party on its own should consider standing him down for Kerala and T Nadu campaign where it does not have much stake and give him the much needed rest –He can come back for the U P election next year —The P M is also attending to his official work in between —He was in Kerala in the morning and came back to meet the Maldives President in the evening —

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.