சிரிப்பை வரவழைத்த தேர்தல் அறிக்கை..

dmk manifesto

நேற்று மாலை கலைஞரால் படாத பாடுபட்டு வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையை விரிவாக விமரிசனம் செய்யும் கஷ்டம் நமக்கு வேண்டாம். அதை விரைவில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் பார்த்துக் கொள்வார்…!

சிரிப்பை வரவழைத்த சில விஷயங்களை மட்டும் இங்கு
சொல்லலாம் என்று தோன்றியது.

முதலில் கலைஞர், தேர்தல் அறிக்கையை தயாரித்த
திருவாளர் டி.ஆர்.பாலு அவர்களைப் பாராட்டி விட்டு,

” நிறைவேற்றக்கூடிய திட்டங்கள் எல்லாவற்றையும்
அறிவித்து அவற்றை எத்தனை நாட்களுக்குள் நிறைவேற்ற
முடியும் என்பதை யெல்லாம் எண்ணிப் பார்த்து,

அவற்றை உடனடியாக நிறைவேற்றுகின்ற அரசு தான் திராவிட
முன்னேற்றக் கழக அரசு என்பதை நீங்கள் எல்லாரும்
உணற வேண்டும்….

என்று கூறியதே இதன் துவக்கம்.

———————–

– மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு திட்டம்
கொண்டுவரப்படும்

– டாஸ்மாக் நிறுவனம் கலைக்கப்பட்டு
அதில் பணியாற்றுவோருக்கு மாற்றுப்பணி வழங்கப்படும்.

– மது அடிமைகளுக்கு சிறப்பு சிகிச்சை மையங்கள்
ஏற்படுத்தப்படும்.

———-
– முதல் கையெழுத்தே மதுவிலக்கு தான் என்ற திமுக
இப்போது ” திட்டம் கொண்டு வரப்படும் ” என்கிற
“மெது” நிலைக்கு சென்றது ஏன் என்று மக்கள்
கஷ்டப்பட்டு யோசிக்க வேண்டாம்….

– தேர்தல் அறிக்கையை தயார் செய்த
குழுவின் தலைவர் தஞ்சாவூரில் மகன் பெயரில்
சாராய உற்பத்தி தொழிற்சாலை வைத்திருக்கும்
” தொழிலதிபர் ” திரு.டி.ஆர்.பாலு என்பதை
நினைத்துக் கொண்டால் போதும்…. பாலு
அவர்களின் சாமர்த்தியம் புலப்படும்…..!!!

—————

“சேது சமுத்திரம் திட்டம்” விரைவில் நிறைவேற்றப்படும்…

முன்னாள் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சராக
இருந்தவர் திரு.டி.ஆர்.பாலு என்பதையும், அவர் காலத்தில்,
சுமார் 850 கோடி ரூபாய் கடலில் ( அல்லது சிலருடைய
பையில் ) கொட்டப்பட்டது என்பதையும் நினைவில்
கொண்டால் இதன் இப்போதைய அவசர அவசியம் புலப்படும்.

( இது மத்திய அரசின் திட்டம் என்பதையும்,
மத்திய பாஜக அரசு எப்போதோ இதற்கு நீரூற்றி விட்டது
என்பதும் வேறு விஷயம்….!!!

—————-

கீழ்க்காணும் உறுதிகளுக்கு விமரிசனமே வேண்டாம்….
படித்த மாத்திரத்திலேயே சிரிப்பு பொத்துக் கொண்டு வரும்….!!!!

-மத்திய அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழியாக
தமிழ் இடம்பெற நடவடிக்கை ….!!!

-ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்படும்…

– சிறு, குறு விவசாயிகள், தொழிலாளர்களுக்கு
வேட்டி, சேலையுடன் பொங்கல் பரிசு
ரூ.500 ரொக்கமாக வழங்கப்படும்.

– நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய்,
நாட்டுச் சர்க்கரை விற்கப்படும்.

– ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மானிய விலையில்
3 எல்இடி பல்புகள்.

-அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு பேறுகால
விடுமுறை 9 மாதங்களாக உயர்வு.

-வசதியற்றவர்களுக்கு ( ??? )
அரசு செலவில் கைபேசிகள் வழங்கப்படும்.

– இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள்,
போர்க் குற்றங்கள், இனப் படுகொலை ஆகியவை குறித்துச்
சுதந்திரமானதும்,

நம்பகத் தன்மை வாய்ந்ததுமான சர்வதேச விசாரணையை
மேற்கொள்ள இந்திய அரசு உலக நாடுகளை வலியுறுத்திச்
செயல்படுத்த வேண்டுமென மத்திய அரசை திமுக தொடர்ந்து
வலியுறுத்தும்.

– ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா பந்தயம்
நடைபெற நடவடிக்கை….!!!

– கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான
முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

– ஏழைகளுக்கு உணவு வழங்க
அறிஞர் அண்ணா உணவகம். (“அம்மா உணவகங்கள்” –
” அண்ணா உணவகங்கள்” ஆகும் என்பதை சொல்லாமலே
உணர்க….!!!)

– சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுவதும்
தள்ளுபடி செய்யப்படும்.

( சென்ற மாதம் திரு.துரைமுருகன், தன்னுடைய காட்பாடி
தொகுதியில் ஒரு கட்சிக்காரர் வீட்டு நிகழ்ச்சியில் பேசும்போது,
” ஏய் – விவசாயக்கடன் வாங்காதவங்க யாராவது
இருந்தா ஒடனே வாங்கிக்குங்கடா – நம்ம ஆட்சி வந்தவொடனே
அத்தனையும் தள்ளுபடி ஆகப்போகுது ” என்று பேசியதாக
அப்போது படித்த அப்போதே சிரிப்பு வந்தது…..!!!)

————————-

மற்றவற்றை டாக்டர் ராமதாஸ் பார்த்துக் கொள்வார்
என்கிற நம்பிக்கையில் …..இத்துடன் விடை பெறுகிறேன் ….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to சிரிப்பை வரவழைத்த தேர்தல் அறிக்கை..

 1. today.and.me சொல்கிறார்:

  courtesy: Dhanabal A.

  திமுகவின் வெற்று தேர்தல் அறிக்கையும் நமது கேள்வியும்.

  கச்சத்தீவை மீட்போம்
  # கொடுத்தது யாரு..??

  சல்லிக்கட்ட நடத்த முயற்சிப்போம்
  ‪#‎நடத்தவிடாம‬ பண்ணினது யாரு..??

  அண்ணா உணவகம் அமைப்போம்
  ‪#‎அம்மா‬ உணவகத்தை ஏமாற்று வித்தை விகடன் ல சொன்னது யாரு..??

  விவசாய கடனை தள்ளுபடி செய்வோம்
  ‪#‎விவசாயிக்கு‬ காவிரியிலும், முல்லைப்பெரியாறு விலும் துரோகம் செய்தது யாரு..?? மீதேனில் கை எழுத்து போட்டதாரு..??

  தமிழ் ஆட்சி மொழியாக்கப்படும்
  ‪#‎ஒன்பது‬ வருசமா மத்தியர்சில் இருந்து பொழுது ஒன்பது துவாரத்தையும் மூடி கிட்டு யிருந்தது யாரு..??

  ஏரிகள் தூர்வாரப்படும்
  ‪#‎ஏரியை‬ வளைச்சி வளைச்சி ஆட்டையைப் போட்டது யாரு..??

  மதுபான விற்பனை முற்றிலும் நிறுத்தம்
  ‪#‎அதை‬ முதன் முதலில் அறிமுகப்படுத்திய அயோக்கியன் யாரு..??

  மீனவர்களுக்கு 5 லட்சம் வீடுகள்
  ‪#‎அந்த‬ மீனவர்களை பேராசை பிடித்தவர்கள் ன்னு சொல்லி அசிங்கப்படுத்தியது யாரு..??

  ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா அமைக்கப்படும்
  ‪#‎உலகமகா‬ ஊழல் செய்த கொபசெவும், திருட்டு பிள்ளையும் யாருடையது..??

  இன்னும் என்னென்ன காமிடி பண்ணப்போரானுங்களோ 😛
  ______________________

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பிரணமாதம்… 🙂 🙂

   நன்றி நண்ப டுடேஅண்ட்மீ.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. selvarajan சொல்கிறார்:

  paamaranselvarajan சொல்கிறார்:
  3:06 பிப இல் ஏப்ரல் 10, 2016
  // தி.மு.க தேர்தல் அறிக்கை … ! ஆகா … ஓகாே … வா இருக்கும் என்று கூறினார்கள் … ஆனால் …? // நேற்றைய தினமே பின்னூட்டத்தில் கேட்டதற்கு இன்று — விளக்கமாக கூறியதற்கு நன்றி —- ! ஜெயலலிதாவின் சில — பல நடைமுறையில் உள்ள திட்டங்களை கொஞ்சம் ” பாலிஷ் ” செய்து புதுசு போல பாவ்லா காட்டியுள்ளார் —- ஜெயலலிதா – நாராயணசாமி நாயுடுவுக்கு ” நினைவு மண்டபம் ” என்று கூறி உள்ளதை பார்த்து — இவர் நம்மாழ்வாரை துணைக்கு அழைத்துக்கொண்டார் … விவசாயிகளின் மீது பாசம் பொங்கி வழியுது —- ” மீத்தேன் — கெயில் — காவிரி — முல்லை பெரியாறு — நதி – நீர் பிரச்னை போன்றவைகளை பற்றி ஒரு வார்த்தையும் காணோம் — இலங்கை தமிழர் — மீனவர் — கட்ச தீவு — ஜல்லிக்கட்டு எல்லாம் இவரது ” நினைவுக்கு ” தேர்தலின் போது வருவதில் ஒன்றும் — ஆச்சர்யம் யாருக்கும் இருக்காது … டி. ஆர் பாலு தயாரித்த அறிக்கையில் ” சேது சமுத்திர திட்டம் பற்றி ” இல்லாமல் போனால் தான் ஆச்சர்யம் —- ” சிரிப்பு ” வந்தாலும் — அது உடனே காணாமல் போய் — வேறு ஒன்று …. வருகிறதே — அதற்கு யார் பொறுப்பு …?

 3. Antony சொல்கிறார்:

  So, this time free mobile phones. When are they going to lead the public to earn themselves instead of freebies..
  BTW KM,
  Have you gone through manifesto of NTK.
  Can we expect your criticism on that from you? Just a request.

 4. g.vijayaragavan சொல்கிறார்:

  ethanai kaalam thaan emartruvargal evargal

 5. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  கருணானிதி சொல்வதை (திமுக தேர்தல் அறிக்கையை) அவரே நம்பமாட்டார். கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் காண்பிப்பேன் என்பது போல்தான் இந்தத் தேர்தல் அறிக்கை.

  1. திமுக 2004-2012 வரைதான் மிகவும் பலம் பொருந்தியதாகவும், மத்திய அரசில் நல்ல பிடி உள்ளதாகவும் இருந்தது. அப்போதெல்லாம், கொள்ளை அடிப்பது ஒன்றே குறி என்று செயல்பட்டார்கள். அது 2ஜி ஆகட்டும், தொலைத்தொடர்பு/தொலைக்காட்சி சம்பந்தப்பட்டதாகட்டும், அமைச்சரவை இடங்களாகட்டும். தமிழ் நாட்டுக்கு என்று ஒன்றுமே செய்யவில்லை. (அண்ணா நூலகம் ஒரு விதிவிலக்கு என்று நினைக்கிறேன்).
  2. 2016ல் திமுக ஆட்சிக்கு வந்தாலும், எந்தக் காரணம் கொண்டும் இன்னும் 3 ஆண்டுகளுக்கு மத்தியில் ஒரு அதிகாரமும் இருக்காது. பாஜக அதிமுகவை விட்டு விலகாது. அதனால், பாஜக மேல் பழி சொல்லிக்கொண்டு ஆட்சி நடத்தலாம், தேர்தல் அறிக்கையில் சொல்லிய முக்கியமான ஒன்றையும் நிறைவேற்றவேண்டாம் என்று நினைத்துள்ளார்கள்.
  3. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும், இனி முக்கியத்துவம் ராகுலுக்குத்தான். அவருக்கு திமுகா செய்த கொள்ளையால் காங்கிரஸும் பாதிக்கப்பட்டது என்ற எண்ணமும், இயல்பாகவே திமுக மேல் வெறுப்பும் இருக்கிறது. அவர் கருணானிதியை ஒரு முறை கூடப் பார்ப்பதற்கு வரவில்லை (ஜனாதிபதி முகர்ஜி போன்றோ, சோனியா போன்றோ). இந்த வெறுப்பு அவருக்கு எப்போதும் மாறாது. அதேபோல் இனி திமுக 25 எம்பிக்களுக்கு மேல் வைத்திருக்கும் காலமும் வராது.

  கருணானிதி, தன் செய்கைகளினால், திமுக வெறுப்பை ஆழமாக மக்கள் மனத்தில் பதிவு செய்திருக்கிறார் என்றே நான் நம்புகிறேன்.

 6. CHANDRAA சொல்கிறார்:

  T mji and Nellai tamizhan iyyah had thoroughly analysed the dmks election manifesto
  at present i have nothing more to say…….
  Incidentally jayajis story in VRIDDHACHALAM
  Is very much appreciated in PMKS CIRCLES even…….JI

 7. செந்தில் - கோவை. சொல்கிறார்:

  கே.எம். ஜி அவர்களே,

  அரசாங்க ஊழியர்களை கவர்வதற்காக அறிக்கையில் சில அம்சங்கள் உள்ளன. அதனால் அரசாங்க ஊழியர்களின் ஓட்டு கலைஞருக்கு தான்.

  இதனால் அதிமுக – விற்கு பின்னடைவா…

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப செந்தில்,

   இது குறித்து நாளை விரிவாக எழுதுகிறேனே…

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 8. மெய்கண்டான் சொல்கிறார்:

  ஐயா காவிரி மைந்தன்,
  /– இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள்,
  போர்க் குற்றங்கள், இனப் படுகொலை ஆகியவை குறித்துச்
  சுதந்திரமானதும்,…../

  ஒரு மனிதன் இவ்வளவு கடைகெட்ட கேவலமானவனாக இருக்க முடியுமா என நினைக்கையில் ஆற்றாமையால் இது எனக்கு வாந்தியை வரவழைத்தது.

  அண்மையில் நோர்வே தூதுக்குழு/போர்நிறுத்த கண்காணிப்புக்குழு அங்கத்தினராக இலங்கையில் சேவையாற்றிய நோர்வேஜியரை கண்டு பேசிக்கொண்டிருந்தபோது அவர்களது கையாலாகத்தனம், இந்தியாவின் ”விளையாட்டு” போன்றவற்றைப்பற்றிப் பேச்சுவரும்போது அவரது முகம் இருண்டது. மெளனமாக வேதனைப்பட்ட முகத்துடன் இருந்தார் அவர். உண்மையான மனிதன் அவர்.

  ஆனால் தமிழ் தமிழ் என வாழ்க்கையை ஓட்டியவர் பேசும் பேச்சைப்பாருங்கள்.
  தூ..நாயே !

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.