திமுக தேர்தல் அறிக்கைக்கு டாக்டர் ராமதாஸ் நன்றி…..!!!

dr.ramdas

இன்று காலை பதிவில், காமெடி விஷயங்களைப் பற்றி
மட்டும் கூறி விட்டு, சீரியஸான விஷயங்களை டாக்டர்
ராமதாஸ் அவர்கள் கவனித்துக் கொள்வார் என்று
எழுதி இருந்தேன். எதிர்பார்த்த மாதிரியே டாக்டர் அய்யா
அமர்க்களமாக ” கவனித்து ” கொண்டிருக்கிறார்…
டாக்டரின் விவரமான, விளக்கமான அறிக்கை கீழே –

———————————————–

பா.ம.க. திட்டங்களை ஏற்றுக் கொண்ட தி.மு.க.வுக்கு நன்றி!
என்று கூறுகிறார் டாக்டர் ராமதாஸ்….

பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல்அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கலைஞர் சென்னையில் நேற்று வெளியிட்டிருக்கிறார்.

நல்லவை எங்கிருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற
எண்ணமோ, என்னவோ… 8 மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்ட
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த திட்டங்களையெல்லாம் தி.மு.க.வின் திட்டங்களாக அறிவித்திருக்கிறார்

கலைஞர். அந்த வகையில் பா.ம.க. திட்டங்களை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி!

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு ஏற்படுத்தப்படும், வேளாண்
துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்,

நீர்ப்பாசனத்திற்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு
தனி அமைச்சர் நியமிக்கப் படுவார்,

ஊழலை ஒழிக்க லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும்,

பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் இயற்றப்படும்,
பொருளாதார விஷயங்களில் முதலமைச்சருக்கு ஆலோசனை
வழங்க வல்லுனர் குழு அமைக்கப்படும்,
மக்கள் தொகை அடிப்படையில் பெரிய மாவட்டங்கள் இரண்டாக
பிரிக்கப்படும்,

சிறு&குறு விவசாயிகளின் பயிர்க்கடன்கள்
தள்ளுபடி செய்யப்படும், விவசாயிகளுக்கு உதவும் வகையில்
சந்தை அமைப்பு ஏற்படுத்தப்படும், விதை நெல் இலவசம்,
உழவுக் கருவிகளை வாங்க உதவி, ஆறுகளின் குறுக்கே
தடுப்பணை கட்டும் திட்டம், சேலம் மேச்சேரி நீரேற்றுத் திட்டம்,
தோனி மடுவு பாசனத் திட்டம், கல்வித்தரத்தை மேம்படுத்த வல்லுனர் குழு, கிரானைட் – தாது மணல்
விற்பனையை அரசும், தனியாரும் இணைந்து மேற்கொள்ளுதல்,

தற்காலிகப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு, வள்ளலார்
நினைவிடம் உள்ளிட்ட தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கியமானத் திட்டங்கள் அனைத்தும் பா.ம.க.வின் வரைவுத் தேர்தல் அறிக்கையிலிருந்து எடுத்தாளப் பட்டவையாகும்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்பது
அண்ணாவின் கொள்கை.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மட்டுமே மணமுண்டு
என்பது அவர் வழி வந்த கலைஞர் கொள்கை.

அதனால் தான்
சிறிதும் யோசிக்காமல் பா.ம.க.வின் திட்டங்களை அப்படியே
காப்பியடித்து வெளியிடச் செய்திருக்கிறார். மதுவிலக்கை
வலியுறுத்தி பா.ம.க. நடத்திய போராட்டங்களின் பயனாக
மக்களிடம் எழுச்சி ஏற்பட்ட நிலையில், அதைப் பயன்படுத்திக்
கொள்வதற்காகவே தி.மு.க. ஆட்சியில்
மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று கலைஞர்
அறிவித்தார்.

லோக் அயுக்தா, பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டம்
ஆகியவற்றை பா.ம.க. வலியுறுத்தியதும் தான், திமுகவும்
அவற்றைப் பற்றி பேசத் தொடங்கியது. அப்போதே திமுகவின்
தேர்தல் அறிக்கை பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கையின்
பிரதியாகத் தான் இருக்கும் என்று எண்ணினேன்.
எனது எண்ணம் அப்படியே நடந்தேறியிருக்கிறது.

மது ஒழிப்பு தொடங்கி ஊழல் ஒழிப்பு வரை அனைத்து
திட்டங்களுக்கும் பா.ம.க. மட்டும் தான் ராயல்டி வாங்கி
வைத்திருக்கிறதா? மற்ற கட்சிகள் அவற்றை
பயன்படுத்தக்கூடாதா? என்ற கேள்வி தி.மு.க.வினரால் எழுப்பப்படலாம்.

அந்த வினா நியாயமானது தான்.

அதேநேரத்தில் இந்தத் திட்டங்கள் எதுவும் புதுமையானவை
அல்ல. பல ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருபவை தான்.

தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்த பெருமைக்குரிய கலைஞர் இத்திட்டங்களை தமது முந்தைய ஆட்சிகளிலேயே
நிறைவேற்றியிருக்கலாம்.

உழவுக்கு தனி நிதிநிலை அறிக்கை,

நீர்ப்பாசனத்துக்கு தனி அமைச்சர், முழு மதுவிலக்கு ஆகியவற்றை
செயல்படுத்தும்படி கலைஞரிடம் நானே
பலமுறை நேரில் வலியுறுத்தி உள்ளேன்.

ஆனால், அப்போதெல்லாம் அவற்றை நிறைவேற்றாமல்,
இப்போது பாட்டாளி மக்கள் கட்சி அந்த திட்டங்களை வாக்குறுதியாக அளித்த பிறகு, அதை தி.மு.க.வும் அப்படியே பின்பற்றுவதால் தான்

பா.ம.க.வின் திட்டங்களை திமுக
காப்பியடிப்பதாக கூறவேண்டிய கட்டாயம் உருவெடுக்கிறது.

ஊழலை ஒழிப்பதற்கான லோக் அயுக்தா சட்டம், சேவை பெறும் உரிமைச் சட்டம் ஆகியவை பற்றி 6 மாதங்களுக்கு முன்பு
திமுகவுக்கு தெரியாதா? அப்போதெல்லாம் அவற்றை வலியுறுத்தாதது ஏன்?

1973 ஆம் ஆண்டிலேயே லோக் அயுக்தாவுக்கு இணையான
பொது ஊழியர் (குற்ற நடவடிக்கை) சட்டம் கொண்டு
வந்ததாகவும், பின்னர் முதல்வராக வந்த எம்.ஜி.ஆர் அதை
ரத்து செய்து விட்டதாகவும் கலைஞர் அடிக்கடி கூறுவதுண்டு.

உண்மையாகவே ஊழலை ஒழிக்கும்
நோக்குடன் அச்சட்டத்தை அப்போது கலைஞர் கொண்டு
வந்திருந்தால், அச்சட்டப்படி தண்டிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

அச்சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்பாகவே கலைஞருக்கு எதிராக முன்வைக்கப்பட்டு, பின்னாளில் சர்க்காரியா
ஆணையத்தால் விசாரிக்கப்பட்ட வீராணம் ஊழல், பூச்சி மருந்து ஊழல்,

கோதுமை பேர ஊழல் உள்ளிட்ட புகார்கள்
குறித்து அந்த சட்டத்தின்படி விசாரணை நடத்த ஆணையிட்டு,
நீதியின் முன் தம்மை நிறுத்திக் கொண்டாரா?

என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு கலைஞர் விடையளிப்பாரா?

தமிழ்நாட்டில் மதுவிலக்கைக் கொண்டு வருவதாக கடந்த
காலங்களில் 5 முறை வாக்குறுதிகளை வழங்கி அத்தனை
முறையும் தமிழக மக்களை ஏமாற்றியவர் கலைஞர்.

தமிழ்நாட்டில் முதல் நாள்… முதல் கையெழுத்து முழு மதுவிலக்கு என்ற முழக்கத்தை பா.ம.க முன்வைத்தவுடன்,

அதே முழக்கத்தை தி.மு.க.வும் முன்வைத்தது. ஆனால்,
இப்போது அதிலிருந்தும் தி.மு.க. பின்வாங்கி விட்டது.
முதல் நாளில் முதல் கையெழுத்தில் மது விலக்கை
ஏற்படுத்துவதாக கூறிவந்த கலைஞர், இப்போது தனிச் சட்டம் கொண்டு வந்து மதுவிலக்கை ஏற்படுத்தப்போவதாக கூறுகிறார்.

டாஸ்மாக் நிறுவனத்தின் பணிகளை மாற்றியமைப்பதற்கு வேண்டுமானால் சட்டத் திருத்தம் தேவைப்படலாம்;
அதை பின்னாளில் கூட செய்து கொள்ளலாம். மதுவிலக்கை நடை முறைப்படுத்த சட்டத் திருத்தம் தேவையில்லை.

ஆனால், இப்போது சட்டம் கொண்டு வந்து மதுவிலக்கை
நடைமுறைப்படுத்தப்போவதாக கூறுவதன் மூலம் மதுக்கடைகளை மூட கூடுதல் கால அவகாசம்
கோருகிறார் கலைஞர்.
இப்போது கூடுதல் அவகாசம் வாங்கிக் கொண்டு, பின்னாளில்
மதுவிலக்கை கிடப்பில் போடுவது தான் தி.மு.க.வின் திட்டம்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களின் திட்டம்
தமிழக மக்கள் மத்தியில் அம்பலமாகிவிட்டது.

1989 ஆம் ஆண்டு வரை முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் இருந்த தாது மணல் விற்பனையை தனியாருக்கு தாரை வார்த்தது கலைஞர் தான். அதேபோல், கிரானைட் கற்களை
வாங்கி விற்பனை செய்யும் உரிமையை 1989 ஆம் ஆண்டில்
தமது மகன் மு.க. அழகிரி, முன்னாள் மருமகன் அதிபன் போஸ்
ஆகியோருக்கு வாரி வழங்கியது கலைஞர் தான்.

அப்படிப்பட்ட கலைஞர் இப்போது கிரானைட், தாது மணல்
ஊழலை தடுக்கும் வகையில் அவற்றின் விற்பனையை
இளைஞர்களைக் கொண்டு நடத்தப்போவதாக கூறுவது
நல்ல நகைச்சுவை.

மக்களின் மறதியை மட்டுமே மூலதனமாகக் கொண்டு
50 ஆண்டுகளாக மக்களை திராவிடக் கட்சிகள் ஏமாற்றி வந்தன
என்பதற்கு இதுவே உதாரணமாகும்.

பா.ம.க. தேர்தல் அறிக்கையிலிருந்து இத்தனைத் திட்டங்களை
காப்பியடித்த தி.மு.க. தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு
வழி வகுக்கும் கல்வி, சுகாதாரம் மற்றும் வேளாண்மைக்கான
இடு பொருட்களை இலவசமாக வழங்கும் திட்டத்தை
மட்டும் அறிவிக்கவில்லை.
தமிழகத்தின் முன்னேற்றத்தில் திமுகவுக்கு அக்கறையில்லை,
கல்வி நிறுவனங்களின் வருமானத்தையும், அதன்மூலம்
ஆட்சியாளர்களுக்கு வரும் வருவாயையும் இழக்க தயாரில்லை
என்பதைத் தவிர இதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

மக்கள் பிரச்சினைக்காக முதலில் குரல் கொடுப்பதுடன்
பிரச்சினைக்கான தீர்வையும் முன் வைக்கும் கட்சி எது
என்பதை மக்கள் அறிவார்கள்.
தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும்
சிறப்பான செயல் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தும்
திறன் கொண்ட கட்சி எது என்பதையும் மக்கள் அறிவார்கள்.
அந்தக் கட்சி பா.ம.க. தான் என்பதை மே 19 தேர்தல் முடிவுகள்
நிரூபிக்கும்.’’என்று தெரிவித்துள்ளார்.

( http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?
N=163925 )

—————————————-

பின் குறிப்பு – விலாவாரியாக கருத்து சொன்னதன் மூலம்
திமுக தேர்தல் அறிக்கையின் பின்புலத்தை பிட்டுவைத்து,
தன் முத்திரையை பதித்துள்ள டாக்டருக்கு வாழ்த்துக்கள்…!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to திமுக தேர்தல் அறிக்கைக்கு டாக்டர் ராமதாஸ் நன்றி…..!!!

 1. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  டாக்டர் ராமதாஸ் சொல்வது உண்மை. அவர்தான் (மட்டும்தான்) மதுவிலக்குக்கு ரொம்ப காலமாகக் குரல் கொடுத்து வந்தார். திமுகவின் தேர்தல் அறிக்கை காப்பி அடிக்கப்பட்டது மட்டுமல்ல (பேறுகால விடுமுறை போன்ற சிலவற்றைத்தவிர), திமுக சொல்வதாலேயே அவர்கள் மீது சுத்த நம்பிக்கை வரவில்லை. ஸ்டாலின் சொல்வது முதல் நாள் முதல் கையெழுத்து (கனிமொழியும் இதையே தெரிவித்தார்). திமுகவின் தேர்தல் அறிக்கையில் நழுவல் பாணி தெரிகிறது. வேளாண்துறைக்கு தனி ‘நிதி நிலை அறிக்கை என்பது பாமக பல காலமாகச் சொல்லிவருவது. எதையாவது சொல்லி ஏமாற்றி வாக்குகளை வாங்கிவிடுவோம் என்றுதான் திமுக எண்ணியுள்ளது. அவர்கள் மீது நம்பிக்கை வரவேண்டுமானால், முதலில், அவர்களது ஆலையில் இருந்து டாஸ்மாக்குக்கு சரக்கு அனுப்பக்கூடாது. கிரானைட் போன்ற வியாபாரங்களிலிருந்து அவர்கள் வெளியேறவேண்டும். இதைச் செய்யாமல், அவர்கள் என்ன அறிக்கை கொடுத்தாலும், திமுகவினர் தவிர யாரும் நம்பமாட்டார்கள். ஆவின் பாலுக்கு 7 ரூபாய் விலை குறைப்பு என்பதுதான் நான் பார்க்கும் கவர்ச்சியான திட்டம்.

 2. CHANDRAA சொல்கிறார்:

  Cho ji used to give credit to PMK party for
  vigorously probagating against liquor shops…….
  An exclusive special budget ……..i remember PMK only
  emphasised this……
  This time sabareesan group had simply copied
  PMKS policies
  The HUGE CROWD that gathered in
  chennai theevu thidal and today in
  VRIDDACHALAM may not disappoint
  jaya ji She may get one hundred fifty seats atleast……
  it seems……..

 3. SELVADURAI சொல்கிறார்:

  தேர்தல் அறிக்கை பற்றி தளபதியின் பேட்டி
  செய்தியாளர்: நேற்று வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை எப்படிப்பட்ட தாக்கத்தை உருவாக்கி இருப்பதாக நினைக்கிறீர்கள் ?
  மு.க.ஸ்டாலின்: ஏற்கனவே தலைவர் கலைஞர் அவர்களால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையை தேர்தலின் “ஹீரோ” என்று சொல்வார்கள். இந்த தேர்தல் அறிக்கை “சூப்பர் ஹீரோ” வாக இருக்கிறது.

  செய்தியாளர்: தாங்கள் அளித்த வாக்குறுதிகளையே திமுகவும் வெளியிட்டு இருப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளாரே ?
  மு.க.ஸ்டாலின்: அவர் எப்போதும் இப்படித்தான் தேவையற்ற வகையில் எதையாவது சொல்வார். அதற்கெல்லாம் பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை.
  நன்றி: நக்கீரன்
  ஆனாலும் தளபதி காமெடியாகத்தான் சமாளிக்கிறார்!!!

 4. today.and.me சொல்கிறார்:

  காமைஜி,
  மதரீதியிலான பின்னூட்டம் அல்ல இது என்பதை முதலியே கூறிவிடுகிறேன்.
  திமுக மதரீதியில் தமிழர்களை எப்படிப் பார்க்கிறது என்பதற்காகவே இது.

  திமுகவின் 2016 தேர்தல் அறிக்கையில்
  295ஆவது ஐட்டம்
  வக்ஃபு வாரிய சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

  ஆனால் ஐட்டம் 419
  கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் நீண்டகாலமாகக் குடியிருப்போர், அந்த மனைகளைத் தங்களுக்குக் கிரையம் செய்துதரவேண்டுமென்று கேட்டுவருவது குறித்து, சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டுப் பரிசீலிக்க ஒய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் உயர்நிலைக்குழு ஒன்று அமைக்கப்படும்.

  ——-

  சிறுபான்மையினரின் காவலர் என்று சொல்லி(யே)கொல்லும் இவர்கள்

  அதெப்படி கொஞ்சம்கூட சிறுபான்மையினரும் யோசிக்கமாட்டார்கள், இந்துக்களும் யோசிக்கமாட்டார்கள்,
  தமிழர்கள் முட்டாள்கள் என்று எண்ணிக்கொண்டு இப்படி ஒரு அறிக்கையைத் தருகிறார்கள்?

  வக்பு போர்டுடையது என்றால் மீட்பார்கள்.
  அதேமாதிரியான நிலை இந்துக்கோவில்களுடையது என்றால் ஆக்கிரமித்திருப்பவர்களிடமே சட்டரீதியாக ஒப்படைக்க ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து பரிசீலிப்பார்கள்.

  • today.and.me சொல்கிறார்:

   நன்றி: அபு ராஹிணா

   திருச்சி கலைஞர் அறிவாலயம் இருப்பதே வக்ப் இடத்தில்தான் ஆக்கிரமிப்பின் மூலம். முதலில் அரசிடம் அதை ஒப்படைத்துவிட்டு தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கவேண்டும். நல்லவர்களாக இருந்தால்.

   • today.and.me சொல்கிறார்:

    வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்படும்…..
    திமுக தேர்தல் அறிக்கை.

    திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் உள்ள வக்பு வாரிய சொத்தை பல வருடங்களாக அபகரித்து வைத்திருந்தவர் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சம்பந்தி.

  • ravi சொல்கிறார்:

   இது ஒன்னுதுகாகவே இவங்களுக்கு ஒட்டு கிடையாது .. ஊரான் வீட்டு நெய்யே ……

 5. karthi சொல்கிறார்:

  திமுகவின் தேர்தல் அறிக்கை:
  பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்படும் – கொளுத்துனது யாரு? கச்சத்தீவு மீட்கப்படும் – கொடுத்தது யாரு? ஜல்லிக்கட்டு நடத்தப்படும் – கெடுத்தது யாரு? ஏரிகள் தூர்வாரப்படும் -ஆட்டையைப் போட்டது யாரு..?? மதுபான விற்பனை முற்றிலும் நிறுத்தம் -அறிமுகப்படுத்தியது யாரு..?? தமிழ் ஆட்சி மொழியாக்கப்படும் -ஒன்பது வருசமா மத்தியரசில் இருந்து யாரு..??

 6. today.and.me சொல்கிறார்:

  நம்மாழ்வார் பெயரில் ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும்
  – திமுக தேர்தல் அறிக்கை
  நம்மாழ்வார் யார்னு தெரியுமா..?
  நம்மாழ்வார் எப்படி செத்தார்னு தெரியுமா..?நீங்க கொண்டுவந்த மீத்தேன் திட்டத்தை எதிர்த்துதான்யா கத்தி கத்தி போராடி செத்து போனாரு அந்த மனுசன்….அந்த மனுசன் செத்ததுக்கு ஒரு அஞ்சலியாவது செலுத்தியதுண்டா..?

  Courtesy: Madankumar

 7. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  COPY &PASTE IS VERY COMMON NOWADAYS

  • today.and.me சொல்கிறார்:

   உண்மைதான்.
   கம்ப்யூட்டரில் மட்டும் பயன்படுத்தப்படுகிற வார்த்தைகள் இன்று பாமக மற்றும் அதிமுக அலுவலக வாசல்களிலிருந்து,

   திமுக அலுவலக உள்ளறை வரை போயிருக்கிறதே.

 8. today.and.me சொல்கிறார்:

  1996லேயே காவிரி தமிழ்நாட்டுக்கு வந்த கதையை விட்டுட்டேன்..

  நன்றி: ராவணன்

  9 .10 .1996 அன்று நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் ,
  தன் மகன் ஸ்டாலினை
  சென்னை மேயராக வெற்றி பெறச் செய்ய ,
  ஒரு நாடகம் நடத்தினாா் கருணாநிதி ;
  29 .9 .1996 அன்று இராஜாஜி மண்டபத்தில்
  அன்றைய ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு ,
  கிருஷ்ணா நீரை குடத்தில் ஏந்தி ஊற்ற ,
  அதை கருணாநிதி அண்டாவை நீட்டிப் பிடித்தாா் ;
  கிருஷ்ணா நீரை வரவழைத்து , சென்னை மாநகர மக்களின்
  கடும் குடிநீா்ப் பிரச்னையைத்
  தீா்த்து விட்டதாக ,
  பத்திாிக்கை,தொலைக்காட்சிகள் வாயிலாக
  மக்களை நம்ப வைத்து ஏமாற்றினாா் கருணாநிதி !
  கிருஷ்ணா நீா் அன்றும்
  வரவில்லை ………..
  அவா் ஆட்சிக் காலம் முடியுமட்டும் வரவில்லை…………
  இப்படி எல்லாம் ஏமாற்றுவதில் சாதனை படைப்பவா்தான்,
  கதை வசனகா்த்தா கருணாநிதி !

  https://fbcdn-photos-e-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-0/s480x480/13007179_1821588978068605_5184082183290724151_n.jpg?oh=76fc2c09aa81745fffa21bd2fab07e57&oe=5777B94B&__gda__=1468352071_3e0e7703d92335c0476357078653175a

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப டுடேஅண்ட்மீ,

   முன்பு கலைஞர் தனியாக செய்து வந்ததை இப்போது
   ஒரு பெரிய டீமே ( ஸ்டாலின், சபரீசன், கேடி ப்ரதர்ஸ் …) செய்கிறது.
   துணைக்கு டெக்னாலஜியும், பண மூட்டைகளும் வேறு ….
   இவர்களை ஜெயிப்பது லேசுப்பட்ட காரியம் இல்லை..

   ஆமாம்.. எப்படித்தான் இவ்வளவு “சமாச்சாரங்களை” எல்லாம்
   கண்டு பிடிக்கிறீர்கள்…. உங்கள் “வழி” தனி வழியாக இருக்கிறதே….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.